புதன், 3 டிசம்பர், 2025

கதம்பம் - Ditwah - நிழலான நினைவுகள் - ஹர ஹர மஹாதேவ் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட பெண்ணை நம்பாதே; சன் - ஐயும் நம்பாதே பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


Ditwah - 29 நவம்பர் 2025: 



”13 நாடுகள் சேர்ந்து தான் இந்த புயலுக்கெல்லாம் பேர் வெப்பாங்களாம்! அப்படி நம்ம இந்தியாலேர்ந்து கூட 13 பேரு குடுத்திருக்காங்க! படிக்கிறேன் கேளு! அதுல நீர் ன்னு கூட ஒரு புயலுக்கு பேர் இருக்கு பாரேன்!” என்று  அதிகாலையில் எழுந்து வரப்போகும் பரீட்சைக்காக பாரதீய வைத்ய சாஸ்திரம் (Indian medical science) என்ற பாடத்தினைப் படித்துக் கொண்டிருந்த என்னிடம் அலைபேசி வழியே வந்த செய்தி ஒன்றினைச் சொல்லிக் கொண்டிருந்தார் என்னவர்!


ம்ம்ம்! நீங்க வாசிச்ச பேர்கள்ல 'அம்புன்' ஒண்ணு கூட சொன்னீங்களே! சமஸ்கிருதத்துல நவ+அம்பு = 'நவாம்பு'ன்னா fresh water, அதே உஷ்ண+ அம்பு = 'உஷ்ணாம்பு'ன்னா வெந்நீர்! இப்படித் தான் என் பாடத்துல ஒரு ஸ்லோகம் கூட.….!


சரி! சரி! நான் போய் குளிக்கட்டுமா? நேரமாச்சு! என்று அங்கிருந்து நகர்ந்து சென்றார் என்னவர்...🙂


__________


அப்பா! இன்னிக்கு போஸ்ட்ல ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குன்னு தோணறது!


என்னடா செல்லம்??


'சற்றேறக்குறைய'ன்னு போட்டிருக்கே?? இப்படி சேர்ந்து வராதுன்னு நினைக்கிறேன்ப்பா!! என்றாள் மகள்!


அப்பாவோட போஸ்ட்ல இந்த வார்த்தைய நீ பார்த்ததில்லையா கண்ணா! சற்றே + ஏறக்குறைய இந்த ரெண்டு வார்த்தைகளும் சேர்ந்தது தான் சற்றேறக்குறைய!! சமஸ்கிருதத்தில 'சந்தி'ன்னு சொல்லுவாங்க! இப்படி நிறைய வகை சந்தி இருக்கே! என்று சொல்லத் துவங்கினதும்.... முடியலடா சாமி! என்று இருவரும் கோரஸாகச் சொல்ல அத்துடன் முடித்துக் கொண்டேன்....🙂


சரி! சரி! நானும் இத்தோடு நிறுத்திக்கிறேன் ஃப்ரெண்ட்ஸ்! அடுத்த வாரம் பரீட்சை...🙂 அதனால இப்படித்தான் வீட்டுல பேசிட்டு இருக்கேன்...🙂


இங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது! உங்க ஊர்ல எல்லாம் எப்படியிருக்கு?? பத்திரமா இருங்க! 


******


நிழலான நினைவுகள் - 2 டிசம்பர் 2025:



இன்றைய காலைப்பொழுதில் மெமரீஸைப் பார்த்ததும் கண்ணில் பட்டதொரு புகைப்படம்! 2022 டிசம்பரில் வயதானோர் மூவரையும்  கவனித்துக் கொள்ள வேண்டிய சூழல்! அப்போது அம்மா மாடிப்படியிலிருந்து உருண்டு விழுந்து விட்டார்! என்னவர் அலுவலகத்தில் ஒரு Training programmeல் இருந்ததால் உடனே விடுப்பு எடுத்துக் கொண்டு வர முடியாத சூழல்!


காலம் தான் எத்தனை வேகமாக கடந்து செல்கிறது! அம்மாவும், அப்பாவும் உண்மையில் மறைந்துவிட்டதாகவே தோன்றுவதில்லை! அன்றாடம் செய்து கொண்டிருக்கும் வேலைகளிலும், உரையாடல்களிலும் இருவரையுமே நினைவில் கொள்வதுண்டு! 


அம்மா எப்போதுமே எனக்கு Inspiration ஆகத் தான் இருந்திருக்கிறார்! நிறை குறைகள் நம் எல்லோரிடமும் உண்டு தான்! சுறுசுறுப்பும், பாட்டும், தையல், கைவைத்தியம், கிச்சன் டிப்ஸ், பழமொழிகள் என தன் வாழ்நாளை பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டு தான் இருந்திருக்கிறார்! எத்தனையோ விஷயங்களை என்னிடம் பேசிக் கொண்டிருப்பார்! சொல்லும் விதத்தில் எப்போதும்  நகைச்சுவையும் மேலோங்கி இருக்கும்!


******


ரோஷ்ணிகார்னர் - ஓவியம் - 1 டிசம்பர் 2025:


மகளின் கைவண்ணத்தில் ஒரு ஓவியம் - உங்கள் பார்வைக்கு!



******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

3 டிசம்பர் 2025


1 கருத்து:

  1. இன்றைய வாசகம் அருமை.  புயலுக்கு பெயர் வைபபது பற்றி சுஜாதா கூட நகைச்சுவையாக சொல்லி இருந்தார்.

    இரண்டு வார்த்தைகளை இணைத்து எழுதுவது இலக்கணத்தையும் மீறி சமயங்களில் கதைகளின் வார்த்தைக் கட்டுப்பாடு கருதி சேர்த்து எழுதுவதுண்டு.

    ரோஷ்ணியின் ஓவியம் அருமை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....