அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அமுல்பேபி மேக்கப்பில் அனகோண்டா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
அண்ணா பாத்து... சீப்பே அருவா மாதிரி இருக்கு...😟அப்புறம் காதுப் பூ பத்திரம்....
ம்ம்ம்ம்? சீப்பு இத விட பெருசா கிடைக்கல....தலல முடி வளர்க்கலாம் தம்பி, காடு வளக்கக் கூடாது.. (காதுல 🌸இப்போ ரொம்ம்ம்ம்ப முக்கியம்!😏)
சீப்பு மாட்டிக்கற மாதிரி ஒரு மெகா size ஜிமிக்கி வேற! (உனக்கு என்ன hair oil அம்மா use பண்றான்னு கேக்கணும்...)
ஓம் கணேசாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சரவண பவாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
எளிமையான அழகான நீல நிற காட்டன் புடவை, குறைந்த நகை இதுல நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா ராதா? ஆனா செருப்பு போட்டுட்டு வந்திருக்கலாம்...
Thanks கிருஷ்ணா.புடவை, நகை எல்லாம் பழசா போய்டுச்சு...அதையே கட்டிக்க, போட்டுக்க bore அடிக்குது. அதான் உன்னோட ஷாப்பிங் போலாம்னு..credit card வச்சிருக்க இல்ல? அப்படியே செருப்பும் ஒண்ணு வாங்கிடலாம்...no issue😊.
(அவள Please பண்ண ஒரு சின்ன bit டு போட்டது ஒரு குத்தமாடா?😧)
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
குழந்தை மடில படித்துண்டிருந்தாலும் அழகா கைய தலைக்கு அண்டக் குடுத்துண்டு தூங்கறான் பாருங்க நாதா,செல்லக்குட்டி, சமத்துக்கட்டி😘
(ஒட்டியாணம் உறுத்துதுன்னு கைய வச்சுக்கிட்டதுக்கு என்னா பில்டப்பு... ஏம்மா உன் பாசத்துக்கு ஒரு அளவே இல்லயோ....🤭)
ஓம் ஶ்ரீ விநாயகாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
என்னது மகேஸ்வரன் டமரு வ விட்டுட்டு flute அ கைல எடுத்திருக்காரு? இவரோட ஆபரணம் 🐍 வேற ஏதோ மகுடி சத்தம் கேட்ட மாதிரி கிடந்து ஆடுது... எதுக்கும் கொஞ்சம் தள்ளிப்போய் உக்காரலாம்.... ஒரு சமயம் போல இருக்காது....😧
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
*******
அதான் பச்சைக் கல் வெச்ச நெக்லஸ் போட்டு விட்டுட்டேன் இல்ல? அப்புறமும் ஏன் உம்முனு இருக்க சிம்மா?
பச்சை கலர் nail polish போட்டுக்கறதுக்கு முன்னால photo எடுத்துட்டான்... மடப்பய.. அது சரி, உங்களோட ஒரு வலது கைய காணலையே தேவி???
ம்ம்ம்? அது பின்னால புடவையை சரி பண்ணிக்கிட்டு இருக்கு...பாவம் உனக்குத்தான் எத்தனை கவலை சிம்மா...
ஓம் தேவ்யை நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
பின்னால தாராளமா உக்கார இடம் இருக்கில்ல மூஞ்சூரண்ணா? Safe?
இருக்கு....ஆனா நீ சந்தோஷத்துல எம்பி எம்பி குதிக்காம இருந்தா கொஞ்சம் நல்லது கணா..
வயிறு லேசா நசுங்கற மாதிரி இருக்கு...
ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
தமிழ்நாடு, கேரளா கோவிலுக்கெல்லாம் போயாச்சு.இனி அடுத்தது எங்க கிருஷ்ணா...
அங்கோர்வாட் பார்த்ததில்லை இல்ல? அங்கதான்...வீட்டுல சொல்லிட்டு வந்துட்ட இல்ல கணேசா?
ம்ம்ம்ம்,சொல்லியாச்சு... (முருகனுக்குத் தெரியாம)
என்னது கேள்வியே ஒரு மாதிரியா இருக்கு?😟
வாகனம் மூஞ்சூறா, கருடனா கிருஷ்ணா? மூஞ்சூறு கனம் தாங்குவான்… கருடன் எப்படி?? Safe தான?
ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
7 டிசம்பர் 2025








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....