புதன், 10 டிசம்பர், 2025

கதம்பம் - அப்பா - ஓவியம் - புடவை - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட முகநூல் இற்றைகள் - பேருந்துப் பயணம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


அப்பா - 6 டிசம்பர் 2025: 





5 மணிக்கு எழுந்து 7மணி வரை  படிச்சேன்! அப்புறம் வீட்டு வேலைகளை ஒவ்வொண்ணா பார்க்க ஆரம்பிச்சிட்டேன்! இன்னிக்கு shutdown வேற! வாஷிங்மெஷின் போட்டு, geyser போட்டு குளிச்சு இதோ சமைக்கவும் ஆரம்பிச்சாச்சு! கரண்ட் போறதுக்குள்ள மிக்சில குழம்புக்கும் அரைச்சுடணும்! 


சட்டென்று ஒரு எண்ணம்!


1950ல பிறந்திருந்தா இப்போ 75 கம்ப்ளீட் ஆகியிருக்கும் இல்ல! என்று என்னவரிடம் கேட்டதும்...!


ஆமா! யாருக்கு??


அப்பா!! டிசம்பர் 4! கிளாஸ், படிப்பு வேலைன்னு மறந்தே போயிடுத்து..! 


அப்பா இப்போ இருந்திருந்தா அவருக்கு 75 வயசு ஆயிருக்கும்! 


தலைமுடியெல்லாம் கூட அவருக்கு நரைச்சுப் போயிருக்கும்! தன்னோட காரியங்களை தானே பண்ணிண்டு இருந்திருப்பாரா! இல்ல யாராவது ஒத்தாசை பண்ண வேண்டி இருந்திருக்குமா தெரியல!! எல்லாமே perfect ஆக இருக்கணும்னு நினைப்பாரே! இப்பவும் அப்படி இருப்பாரா?? என்று மனதில் பல எண்ணங்கள் உண்டானது!


கண்கள் குளமானது!


அப்பா மாதிரியே தான் நான் இருக்கேன்! செய்யும் வேலைகளும் அப்பா மாதிரியே தான் செய்யறேன்! அப்பா ஏதோ ஒரு ரூபத்தில் என்னோடு தான் இருக்கிறார்! மனதை சமாதானம் செய்து கொண்டு அடுத்து ஆக வேண்டிய வேலைகளில் மூழ்கினேன்! இதுவே நிதர்சனம்!


******


ரோஷ்ணிகார்னர் - ஓவியம் - 10 டிசம்பர் 2025:





சமீபத்தில் மகள் வரைந்த ஒரு Glass Painting - உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்களேன். 


******


ரோஷ்ணிகார்னர் - புடவை - 10 டிசம்பர் 2025:



Indian dance forms என்ற தலைப்பில் மகள் கணினியில் வடிவமைத்த புடவை இது! புடவையின் பார்டர் முழுவதும் நடராஜர்! முந்தானையில் குறிப்பிட்டு சொல்லும் சில மாநிலங்களின் நடனங்கள்!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

10-12-2025


2 கருத்துகள்:

  1. ரோஷ்ணி கலக்கறாங்க!

    புடவை சூப்பர். glass painting superb!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரி

    பதிவும், இன்றைய வாசகமும் அருமை. ஆம். விதைத்ததே முளைக்கும். விதி(தை)த்த வினைகளுக்கேற்றபடிதானே ஒவ்வொருவரின் வாழ்க்கையும்.

    உங்கள் அப்பாவின் நினைவுகள் மறக்க முடியாதல்லவா..? அவர் உங்களுடன்தான் வாழ்கிறார் என்ற நினைப்பு ஒன்றுதான் மன தைரியத்தை தரும்.

    ரோஷிணியின் கண்ணாடி பெயிண்டிங் ஓவியமும், புடவை வேலைப்பாடும் அருமை. சிறப்பாக செய்திருக்கிறார். ரோஷிணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவியுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....