அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
பாவம் கிருஷ்ணா அசதி, தூங்கிட்டான், மிச்ச கதைய நாளைக்கு சொல்லிக்கலாம்...
(அப்பாடா கொஞ்ச நேரம் இப்படியே maintain பண்ணுவோம்...)
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
அம்மா, அப்பா, ஓணம் ச(dh)த்யா சாப்பாட்டுக்கு எங்களைக் கூப்பிட்டிருக்காங்க... வரேன்... உங்களுக்கு ஏதாவது take home வேணுமா, புளியிஞ்சி தவிர?...
ஒண்ணும் வேணாம். இப்பத்தான் விநாயக சதுர்த்தி பலகாரமெல்லாம் சாப்பிட்டிருக்க... பாத்துக்கோ கணேசா....
கவலைப் படாதமா... கஷாயம் மிச்சமிருக்கு...
ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
ப்ப்பா ரொம்ப tired ஆ இருக்கு.இன்னிக்கி ரொம்ப hectic. அதனால நான் கொஞ்சம் தாச்சிக்கறேன். மூஞ்சூறுண்ணா, வேற எந்த எலியும் sweet கிட்ட வராம பாத்துக்கோ...
(அப்போ நான் போலாமா பக்கத்துல? ஐ....)
உன் வால்ல sensor இருக்கு… அதனால கவலையில்ல..
சே என்ன உலகம்டா இது.. நம்பிக்கையில்லாம...
ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
இடது கையில flute வெச்சுக்கிட்டு வாசிச்சுகிட்டே வலது கையால நம்ம வேலையை கவனிக்கிறது ஒண்ணும் லேசுபட்ட task இல்ல. எவ்வளவு நாள் practice வேண்டியிருந்தது!
அம்மா நான் flute வாசிச்சு practice பண்றேன்னுட்டு நிம்மதியா mobile பாத்துக்கிட்டிருக்கா... வர எப்படியும் ஒரு 2 மணி நேரம் ஆகும். எனக்கு அது ஏதேஷ்டம்....
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
வெண்ணை வாசனை வந்தாத்தான் தூக்கம் வருதாம்.நல்லாத்தான் அசந்து தூங்கறான் குழந்த. ஆனா காலைல பாதி பானை காலியா இருக்கு. பூனை நடமாட்டம் ஜாஸ்தி போல இருக்கு...
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
என்ன ராதா என் கைய உன் கைக்குள்ள lock பண்ணி கூட்டிக்கிட்டு போற? கூச்சமா இருக்கு...
இல்ல கிருஷ்ணா, இங்க யாருமே இல்லையா, பயமா இருந்தது, அதான்..
ஏதோ விட்டா நான் உன்ன விட்டு போயிடுவேன்னு நெனச்சியோன்னு பாத்தேன்..
சே சே என்ன கிருஷ்ணா?
(லேசா அந்த பயம் இருந்தது வாஸ்தவம்தான்..... ஆமா, கூச்சமா? உனக்கா... அடேயப்பா..🫢)
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
செடிக்கு கடல் தண்ணி வேண்டாம். நல்ல தண்ணியா கொண்டு வரேன்னுட்டுப் போனா ராதா.. ஹ்ம்ம் இருக்கற அத்தன சிப்பி, சங்கு எல்லாத்தையும் பொறுக்கியாச்சு… வழில friend அ பாத்திருப்பா.. flute கொண்டு வந்திருந்தா பொழுதாவது போகும்… செடி மரமாகறத்துக்குள்ள வந்துடுவா...
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
14 டிசம்பர் 2025








இன்றைய வாசகம் பார்த்து சிரித்துவிட்டேன் ஜி. நல்ல வாசகம் தான்.
பதிலளிநீக்குஆனா பாருங்க எருமை அப்படிப் பேசாமல் இருப்பதை புரியலைன்னு எடுத்துக்க முடியாது...புரிஞ்சும் இதுங்க கிட்ட சொல்லி நோ யூஸ்னும் எதிரில் இருப்பவங்களும் நினைக்கலாமோ!!!!!!
கீதா
முதல் படத்துக்கான வரி பார்த்துச் சிரித்துவிட்டு அடுத்ததுக்குப் போனா....அங்க
பதிலளிநீக்கு//ஒண்ணும் வேணாம். இப்பத்தான் விநாயக சதுர்த்தி பலகாரமெல்லாம் சாப்பிட்டிருக்க... பாத்துக்கோ கணேசா....//
ஆப்ட் விநாயகரின் முழியைப் பாருங்க!!!! ரொம்பப் பொருத்தம்!
சிரித்துவிட்டேன்
கீதா
அதுவும் மூஞ்சூர் அண்ணாவின் கையை டக்குனு விட்டுட மூஞ்சூர் அண்ணாவும் அவரைப் பார்க்கும் பார்வையும்!!!!!!
பதிலளிநீக்குகீதா
படங்களையும், வரிகளையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குராதை ஜப் வீ மெட் கரீனா கபூர் மாதிரி பேசிக்கொண்டே இருந்திருப்பாள் போல..
ஓணம் விசேஷத்துக்கு கணேசர் கொஞ்சமா லேட் போலவே... பலகாரம் கெட்டுப் போயிருக்காது?!!
பிள்ளையார் தூங்கறதைப் பார்க்கறப்போ கிருபானநத வாரியார் எம் ஆர் ராதாவுக்கு சொன்னதா சொன்ன பதில் ஒண்ணு ஞாபகத்துக்கு வருது!
யாராவது வந்தா கண்ணை மூடி லயிச்சு Flute வாசிச்சதுல கால் தட்டி விட்டு வெண்ணெய் கொட்டிடுச்சுன்னு சொல்லிக்கலாம்!
ஓவரா பொங்கலைக் கொடுத்து வயிறு 'டம்'முனு ஆகி தூங்க வேண்டியதாப்போச்சே, எப்போ வெண்ணெய் லபக்கறதுன்னு கவலையிலேயே தூங்கறாரோ கிருஷ்!
கடைசி படம்... ரெட்டை இலை நாலு இலை ஆகிடுச்சு போலிருக்கே....
சென்சர்!!!! // ஹாஹாஹா ஹைடெக் விநாயக லோகம்.
பதிலளிநீக்குபனி சூழும் மலையில் கிச்சாவும் ராதையும் டூயட் பாடுவது போல இருக்கிறதே!
ஸ்ரீராம்னா டக்குனு பாட்டு சொல்லிவிடுவார்....எனக்கு டக்குனு வரும் ஒரே பாட்டு பனிவிழும் மலர்வனம் தான்.
கீதா
"பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரில் திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே... புதுக் குரல் கொடுக்கட்டுமா "
நீக்குஃப்ளூட் கொண்டு வந்திருந்தா வாசிச்சு ராதைக்கு அலர்ட் கால் கொடுத்திருக்கலாமோ!!!
பதிலளிநீக்குகீதா
படங்களும் வரிகளும் அருமை விநாயகர் டிராலியுடன் வருவது அழகு
பதிலளிநீக்குஅனைத்து படங்களும் அதற்கு ஏற்ற வரிகளும் அருமை.
பதிலளிநீக்கு