ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஐம்பத்தி ஏழு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******



என்ன முருகா திருப்பரங்குன்றம்  தீர்ப்புக்காகவா இத்தனை சந்தோஷம்? உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்ல?

(Getup ஏ வேற மாறியிருக்கு - மயில் பீலி, நெத்தில நாமம் மாமா மாதிரி!)


நீ வேற, எனக்கு என்னம்மா அதனால? ஏதோ இந்த சந்தர்ப்பத்துல நம்ம ஜனங்க ஒன்று பட்டாங்களே அந்த சந்தோஷம்தான்… (நல்ல வேளை கைல வேல் இல்லாதத அம்மா கவனிக்கல,  எங்க போச்சு அது???.. தல கால் புரியாம வேகமா சுத்திட்டமோ...🤔)


ஓம் சண்முகாயை நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



கிருஷ்ணனோட வலக்கை என் தலையை வருடுது, இடக்கை அந்த கன்னுக்குட்டி மேல, கண்ணு ராதா  செய்வதை ரசிக்குது, மனசு, இவ அழகா dress பண்ணிக்கிட்டிருக்கா ஆனா ஏன் கழுத்துல மட்டும் ஒண்ணும் போட்டுக்காம வந்திருக்கான்னு யோசிக்குது, அடேயப்பா இதுதான் multi tasking ஆ..


கன்னுக்குட்டி செல்லம், உன் mind voice எனக்கு கேட்டுடுச்சு, ராதாவுக்கும் கேட்டுடப் போவுது… நிறுத்திக்கோ… credit card கொண்டு வரல.. necklace க்காக.. 


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



என்ன கணேசா விரலால ஒண்ணுனு காமிக்கற, வீட்டிலிருந்து கிளம்பும்போது எல்லாம் முடிச்சுட்டுதான கிளம்பினோம்...


இல்லப்பா இன்னும் ஒரு சீட் இருக்கான்னு கேட்டேன் என் வாகனத்துக்காக...


சும்மா இரு கணேசா அது வந்தா நம்ம சீட்டுக்கெல்லாம் சேதம் வரும்… யாரு fine கட்டறது???


(என்ன ஓரவஞ்சனை! முருகன் வாகனம் மட்டும் வந்தா பரவாயில்லையா,அது மூக்கு மட்டும் என்ன மொன்னையா...😡)


ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻


*******



என்னைக் கட்டிப் போடறதுக்கு வசமா ஏதாவது கிடைக்குதான்னு அம்மா தேடுவா.. பாவம்.. எதுக்கும் இதை உருட்டிண்டு வந்து இங்க போட்டுவைக்கிறேன்.

தாம்புக் கயிறையும் வாகா வெச்சாச்சு. (B)போர் அடிக்குது, அதனால ஏதோ கொஞ்சம் விஷமம் பண்ணிட்டு, முகத்த மட்டும் பாவமா, பயந்தமாதிரி  வெச்சுக்கணும்… அவ்வளவுதான்... சோலி முடிஞ்சுது...😌சாப்பிட்ட வெண்ணை செரிக்கணும் இல்ல??


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



ராதா அடிச்ச இந்த மொக்க ஜோக்குக்கு சிரிச்சு வெச்சுடலாம், இல்லன்னா joke புரியலையா கிருஷ்ணா ன்னு கேட்டுட்டு ஜோக்கை surgery பண்ணுவா. தாங்க முடியாது… 😟யாரோ  பின்னாடி சிரிக்கிறது கேக்குது… பாவம், ஏற்கெனவே அனுபவப் பட்டவங்க போல இருக்கு, என்னை மாதிரி....😒


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻



*******



ஏம்மா குமரனுக்கு அப்பா மாதிரியே மேக்கப் பண்ணி விட்டிருக்க, சந்திரப் பிறை மாதிரி clip வாங்க எத்தன கடை ஏறி இறங்கின? எனக்கு at least உன்ன மாதிரி ஜிமிக்கி, கிரீடமாவது வெச்சு விட்டிருக்கலாம் இல்ல? ஆமா இன்னொரு தேங்கா மூடிய எங்க காணோம்???


ம்ம்ம்? உன் வாகனத்தைக் கேளு. அதுதான் இங்க குறுக்க நெடுக்க போய்க்கிட்டிருந்துது.. (நீ குடுக்கற இடத்தில அதுக்கு இன்னொரு வாலே முளைச்சிடுச்சு...)


அப்படியா?


ஆமா photo வை நல்லா zoom பண்ணிப் பாரு...


ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻


*******



என்ன ராதா உடையெல்லாம் வேற மாதிரி இருக்கு?


ஆமா கிருஷ்ணா ஒரே மாதிரி போட்டுக்கிட்டு bore அடிச்சிடுச்சு.. அதான் ஆன்லைன் ல வாங்கினேன், ஏன் நல்லா இல்லையா?


சே சே அருமையா இருக்கு.. ஆமா, இந்த கலர் கலரா papermesh இலையெல்லாம் அதுக்கு free யா? அதை வெச்சுக்கிட்டு என்ன பண்றது?


எது free யா கிடைச்சாலும் வாங்கிக்கணும் கிருஷ்ணா, பலனை எதிர்பார்க்ககூடாது....


(ஓ அதுக்கு இப்படி ஒரு angle இருக்கா...🙄.)


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

15 ஃபிப்ரவரி 2026


8 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சிவராத்திரி வாழ்த்துகள். இன்றைய வாசகமும் அருமை.

    படங்களும், அதற்கேற்ற வாசகங்களும் எப்போதும் போல் அருமை.

    எப்போதுமே எல்லா படங்களையும் ஜும் பண்ணித்தான் ரசிக்கிறேன். இதில் விநாயகரின் வளாகத்திற்கு ரெட்டை வால் உள்ள படத்தை விட்டு விடுவேனா.?

    ராதையின் ஆன்லைன் வர்த்தகத்தில் எடுத்த புடவையும் மிக அழகு.

    ஒவ்வொரு படத்திற்கும் அருமையான கற்பனை. ரசித்தேன். சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      படங்களும் அதற்கான வரிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்த தங்கள் ஆதரவிற்கு நன்றி.

      நீக்கு
  2. படங்களையும் வரிகளையும் ரசித்தேன்.

    என் வரிகள்!

    1. இந்த பெங்களூர் ரமணி அம்மாள் பாட்டைக் கேட்டா மட்டும் ஆட்டம் தானா வந்திட்டுது...  அதிலும் அந்த பம்மா பம்ம தா தைய்ய தைய்ய பாட்டும்,  என்னப்பனே என் ஐயனே பாட்டும் இருக்கு பாருங்க...

    2. இந்தப் பாட்டு இங்கே எப்படிம்மா பொருந்தும்...'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' ன்னு பாடறியே.....

    3.  மெட்ரோல கூட்டிட்டு போப்பான்னா ஏதோ வினோத வாகனத்துல கூட்டிட்டு போறியேப்பா...

    4.  பாஞ்சாலிக்கு சேலையையே நீளமா கொடுத்த எனக்கு நீ  கட்டும்  இந்தக் கயிறை தேவையான அளவு நீளமாக்கிக்க தெரியாதா?

    5.  இந்த வடிவேலு ஜோக்ஸ் மட்டும் எப்பவுமே என்னால் சிரிப்பை அடக்கவே முடியாது...  

    8.  இரட்டை இலையையே இப்போ பார்க்க முடியலை இல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களையும் அதற்கான வரிகளையும் ரசித்தமைக்கு நன்றி.

      படங்களுக்கான தங்கள் வரிகளையும் இங்கே தந்ததில் மகிழ்ச்சி. படித்து ரசித்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. என்னாச்சு? கிச்சா முருகனாயிட்டாரே! மாறு வேஷம் போட்டு சந்தோஷமோ பயமோ?!!!!!

    பஸ் - வசனத்தை வாசிச்சு சிரித்துவிட்டேன்!!! ஹப்பா ஏ ஐ என்னமா படங்களைக் கொடுக்குது!

    ரெட்டை வால் மூஞ்சூறு வரிகள் சிரிப்பு!!!

    கடைசிப்படம் ஃபெப்ருவரி 14 நேற்று கொண்டாடிட்டு ஃபோட்டோ எடுத்திருக்காங்க போல!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களுக்கான தங்கள் கருத்து மற்றும் தங்கள் சிந்தனைகள் நன்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. வாசகம் அருமை.
    படங்களும் வரிகளும் ரசிக்கும் படி உள்ளது பஸ் பயண வசனம் அருமை.
    ராதையின் உடையை ரசித்தேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      படங்களையும் அதற்கான வரிகளையும் நீங்கள் ரசித்ததில் மகிச்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....