ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஐம்பத்தி ஐந்து - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட  காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******



அட பிரதோஷ special ஆசனமா நாதா? நம்ம கல்யாணத்துல ரிசப்ஷன், அதுல இது மாதிரி ஆசனம் எல்லாம் இல்லயே!  பக்கத்துல கொஞ்சம் இடம் விடுங்க, நானும் வரேன், ஆசையா இருக்கு...


வா தேவி உன்னைத்தான் எதிர் பாத்துக்கிட்டிருந்தேன்..


(இங்கயுமா??? ஒரு மனுஷன் நிம்மதியா தனியா சந்தோஷமா இருக்க முடியாதே, ஹ்ம்ம்ம்..)


ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻


*******



ரொம்ப பயப்படற மாதிரி நடிக்காத கிருஷ்ணா பண்றதெல்லாம் பண்ணிட்டு...


அது இல்லம்மா, உன்னோட தோடு இப்பிடி தொங்குதே, காது ஓட்டை கிழிஞ்சிடுமேன்னுதான்.... பாவம், அப்புறம் அப்பா (வை) கஷ்டப்பட்டு (படுத்தி) வாங்கிக் குடுத்த தோடெல்லாம் waste ஆயிடுமில்ல???


ஆஹா ரொம்ப அக்கறை! என்னை divert பண்ணாத கிருஷ்ணா....


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



அம்மா என் கைகள நல்லா பாத்துக்கோ. வெண்ணை, தயிர் ஏதாவது ஒட்டிண்டிருக்கா? இல்ல அந்த வாசன தான் வருதா? என் கை சுத்தமாக்கும்!.. ச்சும்மா ச்சும்மா என்னை குத்தம் சொல்றத நிறுத்து.. ok?

(Vim liquid நல்லாவே வேலை செய்யுது, ஒரு bottle தனியா வாங்கி ரகசியமா வெச்சுக்கணும்...)


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



இந்தா கணேசா அமுல் butter. அந்த தட்டை எங்கிட்ட குடு, நான் வெச்சுக்கறேன். நீ நிம்மதியா நான் ஊட்டி விடறத சாப்பிடு...


பரவாயில்ல கிருஷ்ணா வாய்க்குத்தான வேல. (உங்கிட்ட குடுத்தா, அப்புறம் ஏது நிம்மதி...😏)


ஓம் கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻

ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******


Super ஆ dress பண்ணிவிட்டாச்சு. வாகனமும் ready. நீ இனிமே கிளம்பலாம் சரவணா...


உன் மடில உக்காந்திருக்கற மாதிரி photos இருக்கு. இது மாதிரி நிக்கற மாதிரி இல்ல, 1, 2 snaps எடுத்துண்டு கிளம்பறேம்மா… pose சரியா இருக்கா? மயிலண்ணா அங்க பாருங்க… அண்ணா one minute please.....


(இவங்க அடிக்கற லூட்டி தாங்க முடியல, சர்வேஸ்வரா...)


ஓம் சண்முகாயை நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



இரு ராதா குடத்தை அப்படியே போட்டுட்டு தண்ணி கூட எடுக்காம எங்க அவசரமா போற?


பக்கத்து வீட்டுக்காரிக்கிட்ட இந்த புது நகைகளை காட்டணும் அவ ஊருக்குக் கிளம்பறதுக்குள்ள..


அவ்வளவு ஸ்நேகமா அவளோட உனக்கு?


இல்லல்ல போன மாசம் எங்கிட்ட அவ வாங்கினதக் காட்டி வெறுப்பேத்தினா இல்ல அதான் tit for tat...


(ராதா நீயுமா???? இவங்கள... ம்ஹும்..)


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



என்ன ராதா தாமரையை யாருக்கோ குடுக்கறமாதிரி வெச்சுக்கிட்டிருக்க?


அதுவா ஏதோ என்னைச் சுத்தி தேவர்கள் எல்லாம் இருக்கறமாதிரி இருக்கு கிருஷ்ணா.. அவங்களுக்கு சமர்ப்பிக்கத்தான்...


எனக்குப் பின்னாலயும் தேவதைகள் இருக்காங்க, நானும் குடுத்துடறேன்...


அதெல்லாம் உன் கற்பனை கிருஷ்ணா, இங்க கொண்டா அந்தப் பூவை...


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

1 ஃபிப்ரவரி 2026





1 கருத்து:

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....