அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
முருகா, அம்மா கோவிலிலிருந்து வரதுக்குள்ள நாம இந்த special dish ஐ பண்ணி முடிச்சு அவளை அசத்தணும். சீக்கிரம்...
இது பேரு என்ன அண்ணா?
அது நாம வெக்கறதுதான். இன்னிக்கி போகி இல்லையா? ஆபோகின்னு பேரு வைக்கலாம்… மியூசிக்கலா இருக்கும்.... மார்கழியாச்சே...
Wow super கணேசா, (dish எப்படி இருந்தாலும், பேரு நல்லா இருக்கணும்...🙂)
கூட்டு கொதிச்சிடுச்சு off பண்ணிடு அண்ணா.. கன்னத்தைத் தொடச்சிக்கோ, நாம கத்துக்குட்டின்னு பாக்கறவங்க நெனக்கக்கூடாது பாரு!
ஓம் கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சரவண பவாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
முருகா ஓடாத நில்லு... தண்ணில விழுந்துடப் போற... சாப்பிடறதுக்கு படுத்தாத.. வா...
நீ இப்படி தினம் ஒரே மாதிரி சமைச்சு படுத்தமாட்டேன்னு சொல்லு, நிக்கறேன். இன்னிக்கு மாட்டுப் பொங்கல். அதுகளுக்குக் குடும்மா...பாவம். (எங்கள விட்டுடு... கணுப்பிடி வெச்சுட்டு கலந்த சாதப் படுத்தல் வேற இன்னிக்கி...😟)
ஓம் சரவண பவாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
ஏண்டா, பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல்னு கத்தச் சொன்னா கரும்போ கரும்புன்னு கத்தறீங்க?
பூஜை முடியறதுக்குள்ள உங்களுக்கு யாரு கரும்ப குடுத்தா? (கணேசன் வேலையாத்தான் இருக்கும்.. இதுகள கொஞ்சம் பாத்துக்கச் சொல்லிட்டு உள்ள போனா இப்படித்தான்...🤨) நகருங்க...
ஓம் கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
ஓம் குமாராய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
தான் வாசிச்சு முடிக்கற வரைக்கும் என் தலையில இவன் வெச்சு விட்ட தாமரை கீழ விழாம பாத்துக்கணுமாம்..
கிருஷ்ணா order போட்டிருக்கான். ரொம்ப ஓவராத்தான் போய்கிட்டிருக்கு....
இந்த மயில்கள் தலைல கொண்டை இருக்கறதுனால தப்பிச்சிருச்சுங்க..😒
என்ன சொன்ன பசு செல்லம்?
இல்ல, flute லதான் பிச்சு உதறுவேன்னு பாத்தா வீணைல அதை விட அசத்தறியேன்னு சொன்னேன். என்ன, தலையாட்டி நல்லா ரசிக்க முடியல...😣
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
என்னோட கன்னங்கள் சிவந்து இருக்கறதுக்குக் காரணம் இருக்கு… உங்க கன்னங்களும் சிவந்திருக்கே, எப்படி நாதா?? ஆனா ரொம்ப அழகா இருக்கு (அவர் கோவிச்சுகாம இருக்க என்னவெல்லாம் பிட் போட வேண்டியிருக்கு😟.)
எத்தனை தடவை சொல்லியிருக்கேன் தேவி, உன் ரோஸ் பவுடர் ஐ என் பவுடர் டப்பா பக்கத்துல வெக்காதன்னு… அவசரத்துல கவனிக்கல...
(என் lipstick 💄 இம் அங்கதான் இருந்துதுன்னு தெரிஞ்சுடுத்து...
கேக்க வேண்டாம்… எதுக்கு வம்பு.....🤐)
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
அப்பா, ப்ரணவத்துக்கு நான் அர்த்தம் சொல்லிக் கொடுப்பது இருக்கட்டும், இந்த வழ வழ ன்னு சதா ஊர்ற necklace ஐ வெச்சுக்கிட்டு எப்படிப்பா உன்னால இப்படி அமைதியா தியானத்துல லயிக்க முடியுது? அதை சொல்லிக்கொடு முதல்ல...
அது உனக்குக் கல்யாணம் ஆகும்போது தானா தெரிஞ்சுடும் குமரா… இந்த வழ வழ necklace, மிச்ச இடைஞ்சல் எல்லாம் ஜுஜுபி....
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சரவண பவாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
என்னது, பாதி புத்தகம் படிக்கறதுக்குள்ள தவத்துல ஆழ்ந்துட்டாரு? எப்ப தவம் கலைஞ்சு எழுந்து நான் மீதியைப் படிச்சுக் காட்டி வீணையும் வாசிச்சுக் காட்டறது? என் தலைமுடியும் தாடியும் இன்னும் அரை அடி
வளந்துடும்போல இருக்கே! வஜ்ராசனத்துல வேற தெரியாத்தனமா உக்காந்துட்டேன்...😟
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
22 ஃபிப்ரவரி 2026








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....