ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஐம்பத்தி ஆறு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு - 225 பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******



நான் போட்ட கோலத்துக்கு பக்கத்துல உக்காந்துகிட்டு என்ன பண்ற முருகா...


அதை fine tune பண்றேம்மா… இதை அப்படியே photo எடுத்து உன் status ல போட்டுக்கோ… நிறைய likes வரும்...


ரொம்ப முக்கியம்.. எதுவாயிருந்தாலும்

கோலத்தக் கலைக்காம  செய்… (photo, status likes.. இதுதான் ஓடிக்கிட்டிருக்கு...🙁)


ஓம் சரவண பவாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



கிருஷ்ணா, நானும் உன்னை மாதிரி வஜ்ராசனத்துல தான் உக்காந்திருக்கேன். அதுக்கு என்ன இத்தனை சிரிப்பு!


உக்காந்திருக்க, ஆனா கைய தொடை மேல இப்படி வெச்சுக்கலையே… அதான்... 


சர்தான் உனக்குக் கூடத்தான் என்னோடது மாதிரி அழகா கொம்பு இல்ல.. நான் சிரிக்கறேனா...


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



நான் நாபிக் கமலத்திலேர்ந்து சப்தமெழுப்பி flute வாசிக்கறதுனால இடுப்பு belt அப்பப்போ லூசாயிடுது... இப்போ கவலையில்ல.... Thanks ராதா...


சரி சரி வாசிக்கறதுல concentrate பண்ணு கிருஷ்ணா...


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



நம்ம உருவம் கண்ணாடி மாதிரி இருக்கற தரைல எவ்வளவு அழகா பிரதிபலிக்கிறது பாரு கிருஷ்ணா...


ஆமா ராதா, இத ரசிச்சுக்கிட்டே flute க்கு பதிலா சப்பாத்தி குழவி கொண்டு வந்துட்ட… பரவாயில்ல.. doesn't matter...

அப்புறம் flute கொண்டு வா...


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



ராதா கையில என்ன happy new year poster புதுசா? நமக்கு சித்திரை ஒண்ணுதான புது வருஷப் பிறப்பு? 


நேத்து கொண்டாட்டத்துல யாரோ கீழ போட்டுட்டுப் போனத கன்னுக்குட்டி கவ்விக்கிட்டு வந்து போட்டுது கிருஷ்ணா, எடுத்துப் பார்த்தேன், என் கைல இதைப் பாக்கறவங்க எல்லாம் சந்தோஷமா திருப்பி அதையே எனக்கு சொல்றாங்க.... எப்படியோ எல்லாரும் சந்தோஷமா இருந்தா நல்லதுதான கிருஷ்ணா...


பரவாயில்லையே ராதா, நல்லாவே யோசிக்கற, super👏🏻👏🏻


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



பொற்காசுகள் வெச்சிருக்கற பானை ஓட்டை இல்லாததா கொண்டுவரக்கூடாதா லக்ஷ்மி? பாரு இறைச்சுக்கிட்டே வந்திருக்க.. தெர்மோகோல் தாமரை மேல நின்னா காசு விழற சத்தம் கேக்காதுன்னு அதுமேல நிக்கிறியா? Good👍🏻நானும்..


ஆமா நாதா (பின்ன? தங்கத் தாமரை மகளே வா வெளியே ன்னு நீங்க பாடுவீங்கன்னா???) 


ஓம் விஷ்ணுவே நமஹ 🙏🏻🙏🏻🙏🏻

ஓம் விஷ்ணுபதின்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



இரவு, கரு நீல வெல்வெட் நிற வானம், இதுல நீயும் அதே கலர்ல dress போட்டுக்கிட்டு வந்தா எப்படி கிருஷ்ணா உன்னைக் கண்டுபிடிக்கிறது?  நல்ல வேளை கிரீடம்,முத்து மாலைகள் இருந்ததோ தெரிஞ்சுது...


ஏன், என் கலருக்கு இந்த dress நல்லா இல்லன்னு direct ஆ சொல்ல வேண்டியதுதான... இரவு வானம்னு சுத்தற...


சே சே என்ன கிருஷ்ணா? உன்னைச் சொல்லுவேனா??(எப்படி சொன்னாலும் sixer அடிக்கறானே...)


 ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

8 ஃபிப்ரவரி 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....