ஞாயிறு, 24 மே, 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி எழுபத்தி இரண்டு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******



சரி போட்டி போட்டுண்டு ரெண்டு பேரும் என் இடுப்புல ஏறியாச்சு இல்ல? இப்ப இறங்குங்க chellams… போதும்.. நான் கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன்...


அம்மா சொல்றாங்க இல்ல? பாவம்… இறங்கு கணேசா...


ஹலோ… அது உனக்கும் applicable தான் குமரா...


ஓம் தேவ்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



எதுக்கு இப்படி சிரமப்பட்டு  பூ பறிக்கிறீங்க ரெண்டு பேரும்? பாத்து, கணேசா...


இல்ல, எங்க இத்தனை நேரம் காணோம்னு  அம்மா எங்களைக் கேட்டா இன்னிக்கி அன்னையர் தினம் இல்லையா உனக்காகத் தேடி இந்த பூவ பறிச்சிண்டு வந்தோம்மா னு சொல்லத்தான்… நீயும்அதையே maintain பண்ணு மயில் bro...


(அப்ப இல்லையா...🤔)


ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



என்ன தேவி அலங்காரம் எல்லாம் தூள் பறக்குது? என்ன விசேஷம்?

ஒரு கல்யாணத்துக்குப் போறேன் நாதா....

அப்படியா? நீ simple ஆ போனாலே ஆளை அசறடிக்கற மாதிரி இருப்பியே...பாத்து! மணமகளை விட அலங்காரம் கொஞ்சம் கம்மியாவே இருக்கட்டும்....பூ சரியா வெச்சு விட்டிருக்கேனா...

ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻?


*******



வடிவேலன் என் மேல உக்காந்து பார்த்திருப்பீங்க, பறந்து பார்த்திருப்பீங்க.. தன் பக்கத்துல என்னை உக்கார வெச்சிருக்கிறதையும் பார்த்திருப்பீங்க... ஆனா என் மேல இப்படி balance பண்ணி நிக்கறதப் பார்த்திருக்கீங்களா? இதுல balance பண்ணி நிக்கிறது அவன் மட்டுமில்ல.....☹️கடைசி ஆளு காவடி தூக்கிக்கிட்டு போற வரைக்கும் நிற்பார் போல இருக்கு....😟பக்தி ஜாஸ்தியானாலும் கஷ்டம்தான்...😒

ஓம் ஷண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻


*******



சுத்திவர ஏகப்பட்ட மயில் இருக்குங்கறதுக்காக தலையில பத்தாதுன்னு flute ல வேற மயிலிறக சொருகி வச்சிருக்கான் கிருஷ்ணா! நல்ல வேளை என் தல தப்பிச்சுது....😕


என்ன ராதா அப்பிடி பாக்கற??


அற்புதமா வாசிக்கற கிருஷ்ணா. அதோட உன் டிரஸ் sense அபாரம்.....😊 (இடுப்புலயும் அதே பச்சை...🦚)


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻



*******



என்னைச் சுத்திச் சுத்தி வந்து இப்பிடி க்வாக் க்வாக் னு சத்தம் போட்டீங்கன்னா என் வீணைலர்ந்துதான் அப்படி சத்தம் வருதோன்னு தோணுது.... silence please...

(நானே யார் தொந்திரவும் வேண்டாம்னு இப்பிடி தனியா வந்து practice பண்ணிக்கிட்டிருக்கேன், இதுக வேற....☹️)


ஓம் விநாயகாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻



*******



நான் ஒருத்தன் இங்க மெனக்கெட்டு தோகை விரிச்சுக்கிட்டு நிக்கறேன், அதை மறைக்கற மாதிரி நின்னுக்கிட்டு பின்னாடி தாமரைப் பூவோட எதுக்கு அந்தப் பக்கம் திரும்பி பாத்துக்கிட்டிருக்க வேலவா?


தொண தொணன்னு பேசாத மயில் bro, எதிர்க்க பாரு, போட்டோக்கு pose குடுத்துக்கிட்டிருக்கேன்....


சரி சரி.....முதுகு அரிக்கப் போகுதேன்னு சொன்னேன்.... எனக்கென்ன..😏


ஓம் முருகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

24 மே 2026

10 கருத்துகள்:

  1. இன்றைய வாசகம் யோசிக்க வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  2. படங்களும் வரிகளும் நன்று.

    என்னாச்சு? இன்று இரண்டு படங்கள்தானா? மற்ற இடங்களில் புள்ளி புள்ளியாக இருக்கின்றதே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம். தற்போது சரி செய்து வெளியிட்டு இருக்கிறேன். பயணத்தில் இருந்ததால் இந்தக் குழப்பம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  3. இன்று இரண்டு படங்கள்தானா?  இல்லை ஏதும் தவறுதலாக விட்டுப் போயிருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம். தற்போது சரி செய்து வெளியிட்டு இருக்கிறேன். பயணத்தில் இருந்ததால் இந்தக் குழப்பம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
    2. விட்டுப் போன படங்களையும் அதற்கான வழிகளையும் படித்து ரசித்து சிரித்தேன்

      நீக்கு
    3. தயவுசெய்து வரிகள் என்று படிக்கவும்!!

      நீக்கு
  4. எனக்கு 7 படங்களும் தெரிகின்றனவே...
    விஜி.

    பதிலளிநீக்கு
  5. வாசகமும் படமும் மிக அருமை.
    அனைத்து படங்களும் வாசகமும் அருமை.பார்வதி தேவி தன் இரு குழந்தைகளையும் கைகளில் ஏந்தி மலர்ந்த முகத்தோடு இருக்கும் படமும் அதன் வாசகமும் அருமை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....