வியாழன், 28 மே, 2026

Plastic உபயோகம் - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


விஜி வெங்கடேஷ் அவர்கள் தரும் சில குறிப்புகள், அனுபவங்கள் குறித்த பதிவு - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ். 


******


Plastic உபயோகம் - 22.05.2026 :



Plastic இன் magical மூன்று வார்த்தைகளே Reduce, Reuse & Recycle தான். 


99% என் handbag இல் 4,5 நல்ல thick ஆன carry bags, துணிப்பைகள் இருக்கும். ஆகவே கடைகளில் வாங்க மாட்டேன் - Reduce..




Roadside கடைகளிலும் யாராவது வாங்க வருபவர்கள் கேட்டாலும் நான் எடுத்துக் கொடுத்து விடுவேன் (கூடவே இலவசமாக அறிவுரை...) Door delivery செய்யும் கடைகளில் கொடுக்கும் பிளாஸ்டிக் கவர்களை அவர்கள் திரும்பப் பெறுவதில்லை. ஆகவே அவற்றை உடனேயே சாமான்களை அகற்றி நன்கு நீவி மடித்து ஒரு அட்டை டப்பாவில் வைத்துவிடுவேன்.


இங்கு எங்கள் கம்யூனிட்டிக்கு வாரமிருமுறை காய்கறிகள் கொண்டு வரும் பெண்மணி பிளாஸ்டிக் covers கொடுப்பதில்லை. அங்கு வாங்க வருபவர்கள் walking போய்விட்டு அப்படியே (கவர் எதுவும் இல்லாமல் - மொபைல் கொண்டு வர முடியும். ஒரு சிறிய பை பாக்கெட்டில் கொள்ளாதா...😕) வந்து bag கேட்பார்கள். அவர் paper etc. வில் சுற்றிக்கொடுப்பார். அதற்காக நான் இப்படி சேர்த்து வைத்த plastic covers ஐ அந்தப் பெண்மணியிடம் கொடுத்து வைத்துவிடுவேன், அப்படி வருபவர்களுக்காக.... இதுபோல் பூ விற்கும் பெண்மணியிடமும் கொடுப்பதுண்டு. Reuse...


கொஞ்சம் thick ஆன Plastic பைகள் கிழிந்தாலும் insulation tape போட்டு ஒட்டி use செய்வேன். அதற்கும் லாயக்கில்லை என்று அது ஆன பின்தான் அவை trash க்குப் போகும் (சேர்த்து தனியாக வைத்து குப்பை எடுப்பவர்களிடம் கொடுத்தால் அவை recycle க்கு போய்விடும்).. Recycle...


Plastic டப்பாவும் அப்படியே. வெளியூர் செல்லும்போது உணவை (நன்கு ஆறவைத்தபின்) அவற்றில் கொண்டு சென்று பின் dispose செய்துவிடலாம். சுமை இல்லை. (எங்கப்பா வாழை இலை வாங்கி வந்து அழகாக சதுரமாக cut செய்து newspaper மேல் வைத்து அதில் மிளகாய்ப்பொடியில் புரட்டிய இட்லிகள் (ஒரு பொட்டலத்தில் 4), பால் விட்டுப் பிசைந்த இஞ்சி பச்சைமிளகாய் தாளித்த தயிர்சாதம், எலுமிச்சை சாதம் (புளியோதரைக்குத் தடா - ரயில் சூட்டுக்கு வயிறு வலிக்குமாம்) இவற்றை அழகாக நூலால் கட்டி மேலே அது என்ன என்று எழுதி விடுவார். perfectionist to the core! இப்போது எங்கே வாழை இலை பொட்டலங்கள்! ஹோட்டலில் order செய்தாலும் plastic டப்பாக்களில்தான் கொடுக்கின்றனர்!)


Trash எடுக்க வருபவர்களுக்கு (மீதமான, நல்ல condition இல் இருக்கும்) உணவை அதில் pack செய்து neat ஆகக் குடுப்பேன். அவர்களுக்கும் வாங்கிக் கொள்ளும்போது ஒரு சந்தோஷம் இருக்கும்..




டப்பாக்கள், அதன் மூடிகள் இரண்டையும் மூடாமல் தனியாக ஒரு பெரிய கவரில் போட்டு வைத்தால் ஜோடி சேர்ப்பது சுலபம்....


இத்தனையும் சொல்வது எதற்கென்றால் படிப்பவர்களுக்கு இதில் ஏதாவது tips கிடைக்கலாம் என்றுதான்...😊


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

28 மே 2026


7 கருத்துகள்:

  1. Dispose செய்து விடலாம் என்று சுலபமாக சொல்கிறோம். ஆனால் அவை அழிவதே இல்லை. மண்ணில் விழுந்து மக்காமல் நீரை மண்ணுக்குள் செல்ல விடாமல் தடுக்கிறது. பிளாஸ்டிக் மனிதன் கண்டுபிடித்த எமன்!!

    பதிலளிநீக்கு
  2. வாழை இலை, நியூஸ் பேப்பரில் கட்டும் பார்சல் பற்றி சொல்லி ஏங்க வைத்திருக்கிறீர்கள்.. ""வாழை இலையில் பார்சல் செய்த அந்த நாளும் வந்திடாதா.." (எம் எஸ் எஸ் குரலில் பாடவும்!)

    அப்பாவின் செயல் நேர்த்தியும் மனதில் நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  3. சுவாரஸ்யமான வழக்கங்களை கைக்கொண்டிருக்கிறீர்கள்.  எதையும் வீணாக்க மாட்டீர்கள் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  4. நானும் RRR கொள்கையை தீவிரமாக பின்பற்றுபவள் என்று சொல்லிக் கொள்கிறேன் விஜிக்கா. கேரிபைகள் எங்கள் வீட்டில் 10க்கு மேல் கிடையாது. எங்கு சென்றாலும் கட்டப்பை எடுத்துச் சென்று விடுவோம்! தாம்பூலப் பைகள் என்று நெய்யாத பிளாஸ்டிக் பைகள் தான் நிறைய சேர்ந்து விடும்! அவற்றை அவ்வப்போது பூக்காரருக்கு, சிறு வியாபாரிகளுக்கு என்று கொடுத்து விடுவேன். இல்லையென்றால் கார்ப்பரேஷனிலிருந்து குப்பை எடுக்க வரும் போது தனியே கொடுத்து விடுவேன். எப்படியோ சேர்ந்து விடும் பிளாஸ்டிக் டப்பாக்களையும் பயணங்களுக்கும், பயன்பாட்டுக்கும் வைத்துக் கொண்டது போக பின்பு அகற்றி விடுவேன்!

    நீங்கள் சொல்வது போல் பயணங்களுக்கு என் அப்பாவும் அழகாக உணவுப் பொட்டலங்களை பேக் செய்வார்! உணவின் மணத்தோடு அப்பாவின் வாசமும், ஸ்பரிசமும் சேர்ந்தால் அந்த உணவு அமிர்தமாக தான் இருக்கும். அப்பா எல்லாவற்றிலும் perfectionist.

    பதிலளிநீக்கு
  5. ரெண்டும்கெட்டானாக ஒரு பை வருகிறது(தொட்டால் துணி மாதிரி இருக்கும்) விசேஷங்களில் தாம்பூலம் போட்டுக் கொடுக்க உபயோகிப்பது.அதுவும் பிளாஸ்டிக்குக்குப் பிறந்ததுதானாம். இப்போது எங்களுக்கு door delivery செய்யும் departmental store இல் எங்கள் வீட்டு எண் எழுதி thick plastic பைகள் இரண்டு கொடுத்துவிட்டேன். அதில்தான் எங்கள் பொருட்களை அவர்கள் கொண்டு வரணும்.சாம்சங் எடுத்துக் கொண்டு உடனேயே அதைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன்.plastic கவர்களைப் பார்த்தாலே அலர்ஜி எனக்கு. எத்தனைக்கெத்தனை அவற்றின் பயன்பாடுகள் எளிதாகவும் அதிகமாகவும் ஆகியிருக்கிறது அத்தனைக்கத்தனை கொடிய வியாதி(C) அதிகரித்திருக்கிறது.மும்பையில் எங்கள் society வாட்ச்மேன் டீக்கடையிலிருந்து கொதிக்கக் கொதிக்க plastic கவரில் tea வாங்கி வருவதைப் பார்த்து அவனுக்கு ஒரு flask குடுத்தேன்(plastic coverin அபாயத்தைப் பற்றிச் சொல்லி) அதை உபயோகிக்கிறானா என்று தெரியாது. யார் கழுவுவது! பிற்காலத்தின்அபாயம்.அறியாமலேயே இப்படி இருக்கிறார்கள். ஏன் இன்னும் plastic கவர்களை ban செய்யவில்லை என்று தெரியவில்லை.
    விஜி.

    பதிலளிநீக்கு
  6. ப்ளாஸ்டிக்கைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் நம் வீட்டிலும். பெரும்பாலும் கண்ணாடி பீங்கான் ஜாடிகள் பாட்டில்கள் பொருட்களைப் போட்டு வைக்க.

    சரி நாம் கவனமாக இருக்கலாம் ஆனால் முதலில் அரசு பால் வியாபாரம் தனியார் பால் வியாபாரங்கள் தயிர் வியாபாரம் எல்லாம் ப்ளாஸ்டிக் கவர்கள், டப்பாக்களில்தான். இனிப்புகள். தண்ணீர் குப்பிகள். என்று பல அடுக்கிக் கொண்டே போகலாம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்தப் ப்ளாஸ்டிக்கைப் பிரித்து வாங்கறோம்னு சொல்றாங்க, ஆனால் அவை மீண்டும் மண்ணிற்குதான் செல்கின்றன என்பது மிகவும் வேதனை. அதனால் சுற்றி இருக்கும் உயிரினங்களுக்கும், நிலத்திற்கும் பயிற்களுக்கும் எவ்வளவு கெடுதல்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நான் ஒரு வேளை உணவகத்தில் சாப்பாடு வாங்க வேண்டும் என்றால் வீட்டிலிருந்து என்ன வாங்கப் போகிறோமோ அதற்கு ஏற்ப பாத்திரம் கொண்டு சென்று விடுகிறேன். அவர்களுக்கும் அது சந்தோஷமாக இருக்கிறது. இங்கு ஒரு சில உணவகங்கள் அதை எழுதியும் வைத்திருக்காங்க கொண்டுவந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி என்று.

    நம் வீட்டிலும் இந்த 3 R தான்.

    ஆனால் பெரிய நிறுவனங்களான டாட்டா ஸ்டார் போன்றவையும் கூட இப்ப ஒரு பேக் புடவை போல தொட்டாலெ வழுக்கும்படியான ஒரு கவர் வைக்கிறாங்க ஒரு சில கடைகளில் லூஸாக சாமான் இருக்குமே அளந்து அதில் போட்டுக்கொள்ள. அதுவும் ப்ளாஸ்டிக்கின் மறு உருவம். என்னதான் மைக்ரான் என்று சொல்லப்பட்டிருந்தாலும்.

    பருப்பு வரும் கவர்கள் எல்லாம் ப்ளாஸ்டிக்தான். பண்டு நம்ம சிறு வயதில் பேப்பர் பொட்டலங்கள்தான் ப்ளாஸ்டிக் எங்கிருந்தன? குளியலுக்குக் கூட அலுமினிய வாளி இல்லைனா பித்தளை அண்டா...குண்டான்னு.

    அந்தக்காலம் போல் வாழை இலையில் ஆஹா !!! அதன் ருசியேதனிதான். இப்ப தோப்புகள் அழிந்துவரும் நிலையில் எங்க வாழை இலை? டப்பாக்களில் வெளியூர் செல்லும் போது நீங்க சொன்னாப்ல ஆற வைச்சு எடுத்துக் கொண்டு சென்று விட்டு அப்புறம் தூரப் போட்டுவிடலாம் குப்பைத் தொட்டிகளில் அல்லது குப்பை எடுக்க வருபவர்களில்டம் . இது எப்பவாச்சும்தான். பெரும்பாலும் லைட் வெயிட் எவர்சில்வர் டப்பாக்கள் வைத்திருக்கிறேன் அதில் போட்டுக் கொண்டு போவது இல்லைனா, aluminium foil அதிலும் நல்ல thick வாங்கி வைத்திருப்பதால் அதில் சுருட்டி. அது safeநுதான் சொல்றாங்க.

    ஆனால் அரசு இதில் எவ்வளவு தூரம் தலையிட முடியும் என்று தெரியவில்லை. தடை செய்ய முடியாவிட்டாலும் நிலத்தில் சேர்வதைத் தடுக்கலாம். சிங்கப்பூர் போன்ற நாடுகளியப் போல வெளியில் குப்பை போட்டால் அபராதம் என்ற ரீதியில். ஆனால் அதுவும் முடியுமா?

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....