எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, November 28, 2013

எங்கெங்கும் அம்மா.....தலை நகரிலிருந்து பகுதி – 22

தில்லியில் வருடா வருடம் நடக்கும் கோலாகலமான திருவிழா ஒன்று India International Trade Fair.  எல்லா வருடமும் ஜவஹர் லால் நேரு அவர்களின் பிறந்த நாளான 14 நவம்பர் அன்று துவங்கி, 27 நவம்பர் அன்று முடியும்.  இந்த வருடமும் நடந்தது.  ஒவ்வொரு வருடமும் லட்சக் கணக்கில் கூட்டம் அலை மோதுமிங்கே.  தில்லி வாசிகளுக்கு இதை விட பொழுதுபோக்கு ஒன்றுமில்லையே. அதுவுமில்லாது நமது நாட்டின் எல்லா மாநிலங்களிலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும் வந்திருக்கும் கடைகளில் பல பொருட்களை வாங்க முடியுமே!

தில்லி வாழ்வின் 23 வருடங்களில் பல வருடங்கள் இந்த Trade Fair காண சென்றிருக்கிறேன். ஒவ்வொரு மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது மாநிலத்தின் சிறப்புகளையும், அங்கே கிடைக்கும் பிரதான பொருட்களையும், சுற்றுலாவாக வர இருக்கும் வாய்ப்புகளையும், தங்களது மாநிலத்தில் வியாபாரத்திற்கு இருக்கும் வாய்ப்புகளையும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் விதமாக தங்களது பகுதிகளை அலங்கரிப்பார்கள். ஒவ்வொரு பெரிய மாநிலங்களுக்கும் இங்கே நிரந்தர கட்டிடங்கள் உண்டு – ஒவ்வொரு வருடமும் அவர்களது கட்டிடத்தின் முகப்பிலும் உள்ளேயும் தங்களது மாநிலத்தினைக் கண் முன்னே கொண்டு வரும்படி அழகிய வேலைப்பாடுகளை வருடம் முழுதும் செய்து வைப்பார்கள். ஒவ்வொரு வருடமும் சிறப்பாக செயல்பட்ட/அலங்கரிக்கப்பட்ட மாநிலத்திற்கு சிறப்பு பரிசுகளும் அறிவிப்பார்கள். 

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் அழகிய சிற்பங்களை வடிவமைத்து வைப்பார்கள்.  கேரள மாநிலத்தின் பகுதியிலும் அந்த வருட Trade Fair தரும் Theme பொறுத்து அற்புதமாக வடிவமைப்பார்கள்.  இந்த வருடம் அஸ்ஸாம் மாநிலத்தில் வடிவமைத்திருந்த ஒரு சிற்பம் கீழே.அது போலவே ஒரிஸ்ஸா மாநிலம் கடல் பகுதியைத் தொட்டு இருப்பதால், இங்கே Sand Art மிக பிரபலம்.  Shridhar Dash எனும் ஒரு கலைஞர் மிக அழகாய் பூரி ஜகந்நாத் கோவிலை மணலிலே மிக அழகாய் சிற்பமாக வடித்து வைத்திருந்தார்.  எத்தனை பொறுமை வேண்டும் – கொஞ்சம் தவறினாலும் மீண்டும் முழுவதுமாய் செய்ய வேண்டியிருக்குமே.....  அப்படி செய்திருந்த Sand Art உங்கள் பார்வைக்கு.....மூங்கில் கொண்டு எத்தனை எத்தனை பொருட்களை தயார் செய்து விடுகிறார்கள். பூ ஜாடிகள், முறங்கள், வீட்டினை அலங்கரிக்கும் கிளிக் கூடுகள், அலங்கார விளக்கு Stand போன்ற பொருட்கள், சுவரோவியங்கள் என பலவிதமான பொருட்களை இங்கே பார்க்கவும், வாங்கவும் முடியும்.

ஒவ்வொரு மாநிலமும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களது மாநிலத்தின் பெருமைகளை நிலைநாட்ட நமது மாநிலமும், மேற்கு வங்காளம், ஆந்திரம் போன்ற சில மாநிலங்கள் அந்தந்த மாநிலத்தின் முதல் அமைச்சர் புகழ் பாடிக் கொண்டிருக்கிறது. நமது ஊரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் – எங்கெங்கு காணினும் அம்மா தான். இப்போது அம்மா, ஐயா இருக்கும் போது ஐயா! வேறொன்றும் பெரிதாக செய்து விடுவதில்லை.  ஊரிலிருந்து இங்கே கடை போடும் மக்களும் வெகு சிலரே.

என்ன தான் தில்லியில் இருந்தாலும் நம் ஊரிலிருந்து என்ன இங்கே செய்திருக்கிறார்கள் எனப் பார்க்க, ஒவ்வொரு வருடமும் முதலில் செல்வது இங்கே தான். ஒவ்வொரு முறை ஏமாற்றம் தான் மிஞ்சும்.  இந்த வருடமும்  முதலில் சென்றது தமிழகத்தின் அரங்கத்திற்கு தான். நுழைவிலேயே இரண்டு பெண்களின் சிலைகள் – அப்படி ஒன்றும் அழகாகவும் வடிக்கவில்லை.....  இரண்டு பெரிய கைகள் மேலே உலகத்தினை தாங்கி இருக்க, அந்த உலகத்தின் மேல் அம்மா!கடைகளுக்காக ஒதுக்கி இருக்கும் இடங்களை தில்லி வியாபாரிகளுக்கே கொடுத்து விடுகிறார்கள்! இந்த முறை நமது தமிழகத்தின் பொருட்களை வாங்க நினைத்து வந்த ஒரு வட இந்திய பெண்மணி பேசிக் கொண்டிருந்தது! – மதராஸிலிருந்து வந்திருக்கும் பொருட்கள் கிடைக்கும் என நினைத்தால், இங்கே சாந்த்னி சௌக் கடைகளிலிருந்து பர்தாக்களை வைத்திருக்காங்களே!எனக் கிண்டலாக சொல்லி விட்டு, இங்கே இந்தப் பெண்மணியின் படங்கள் தவிர வேறொன்றும் இல்லை என்பதையும் சொல்லிவிட்டு போனார்கள்.....மூன்று வருடங்களுக்கு முன்னால் [2010] தானியங்கள் கொண்டு பொங்கல் பானை செய்திருந்தார்கள். இந்த வருடம் அதே போலவே தானியங்கள் கொண்டு ரதம் செய்திருந்தார்கள். மற்றபடி எல்லா இடங்களிலும் முதல்வர் புகழ், இலவசமாகத் தரும் பொருட்கள் என்பதைப் பற்றிய பிரதாபங்கள் தான். எல்லா வருடம் போலவே ஏமாற்றம் மட்டுமே! இங்கே அம்மா என்றால் மேற்கு வங்காளத்தின் அரங்கில் அக்கா! ஆந்திர மாநிலத்தில் அண்ணவாரு!

இந்த வருடத்தின் முக்கியத்துவம் COIR.....  அதில் செய்த பல பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்திருந்தார்கள். தேங்காய் நார் கொண்டு செய்யும் பொருட்கள் கேரளத்தில் மிக அதிகமாயிற்றே.  அங்கிருந்து கடைகள் போட பலர் வந்திருந்தார்கள். அங்கே ஒரு தூக்கணாங்குருவியின் கூடு கண்ணை ஈர்க்க, அதை புகைப்படம் எடுத்தேன் – எடுக்குமுன்னர் அங்கிருந்த சேச்சியிடம் புகைப்படம் எடுக்கலாமா எனக் கேட்ட பின்னர் தான்! 


கூடவே சில Door Mats வைத்திருந்தார்கள் விற்பனைக்கு – அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு!இப்படி வீட்டு வாசல்ல இருந்தா, யாராவது வீட்டுக்கு மறுக்கா வருவாங்க! :(

மற்ற மாநிலங்களின் அரங்குகளில் எடுத்த புகைப்படங்களும், நாங்கள் சென்ற அன்று கேரள நாள்கொண்டாட்டத்தில் எடுத்த சில புகைப்படங்களும் ஏதாவது ஒரு ஞாயிறில் வெளியிடுகிறேன்.

என்ன நண்பர்களே தலைநகரிலிருந்து பதிவினை ரசித்தீர்களா? மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.
    

40 comments:

 1. ரசிக்கவைக்கும் பகிர்வுகள்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி

   Delete
  2. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 2. கண்காட்சி என்பது எதற்கு என்பதை அறியாத
  மண்டூகங்கள் அரசியல் செல்வாக்கின் காரணமாக
  டெல்லியில் பதவியினைப் பெற்றால் இப்படித்தானே
  கண்காட்சி இருக்க முடியும் ?
  எல்லாம் அசிங்க மயம் எனக் கூடச் சொல்லலாமோ

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 3. கிடைக்கும் வாய்ப்பை ஏன் வீணடிக்கிறார்களோ நம் அரசு அதிகாரிகள் ?
  படங்கள் அருமை !
  த .ம.+1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 4. இதான்..... கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தத் தெரியாத கூட்டம்:( எத்தனை அழகான பொருட்களை சந்தைப்படுத்தலாம்... ப்ச்..என்னவோ போங்க:(

  சண்டிகரிலும் ஒரு முறை இந்தியக் கைவினைப்பொருட்கள் கண்காட்சிக்குப்போனால்....... தமிழகப் பகுதியில் ஒரு தஞ்சாவூர் பெயிண்டிங் ஸ்டால் மட்டும்தான்.!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.....

   Delete
 5. வாய் கிழியப் பேசுபவர்களிடம் காரியமே இருக்காது என்பது புரியாதா? :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 8. ஆக மொத்ததில் தமிழகத்தில் என்ன நடக்குதுன்னு வெட்ட வெளிச்சமாக் காட்டியிருக்காங்க. அதான்.. எந்நேரமும் அம்மா/ஐயா புகழ் பாடுதலைத் தவிர வேற ஒண்ணும் நடக்கறதில்லைன்னு..

  தமிழகம் தேங்கிக்கிட்டே போகுது :-(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 9. Nall vaippu nazhuvivittadhu. Amma namam vazhga !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 10. தமிழ்நாடு அரங்கிற்கு 1.50 லட்சம் பேர் விஜயம் செய்தார்கள் - செய்தி.

  1.49 லட்சம் பேர் நொந்து கந்தலாகி வெளியே வந்தார்கள் - இது செய்தியல்ல. விஜயம் செய்தோரின் விதி.

  ReplyDelete
  Replies
  1. விஜயம் செய்து நொந்தவர்களின் பட்டியலில் நம்ம இருவருக்கும் முதலிடம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 11. மணல் சிற்பம் பிரமாதம்.

  மதுரை கலெக்டர் சகாயத்தை கோ ஆப்டெக்ஸ் துறையில் போட்டவுடன் அத்துறை வீறு கொண்டெழுந்த்தே, அது போல நல்ல அதிகாரிகளை இதற்குப் பொறுப்பாகப் போட்டால் போதும். மதராஸ் துறையும் அங்கே துளிர்க்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்...

   Delete
 12. OH . NO. NOT YOU AGAIN இது நகைச்சுவை வெளிபாடா. ? அருமையான புகைப் படங்கள் Venkat's Photography -மிளிருகின்றன, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 13. எல்லாமே அருமை. பாராட்டுக்கள் ஜி.

  தூக்கணாங்குருவியின் கூடு சூபரோ சூப்பர்! ;)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 14. நம்ம பார்லிமென்ட் வாசல்லே அடுத்த வருஷம் எம்.பி.கூட்டம் கடைசி யா முடியும்போது இந்த மாதிரி டோர் மேட் ஒரு 534 வாங்கி போட்டா
  ஒரு சிம்பாலிக்கா
  நல்லா இருக்கும்லே.


  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. அட நல்ல ஐடியா தான்.. :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா....

   Delete
 15. போகாத எங்களுக்கும் சுற்றிக்காட்டிட்டீங்க.. அதென்னவோ வருசத்துல இந்தமாசம் மட்டும் எக்கச்சக்க பிசியாக்கிவிட்டுரும்..நீங்க பல..நாங்க சில வருடங்கள் தான் நாங்க போயிருக்கோம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நீங்க இப்ப ரொம்பவே பிசி போல இருக்கு. வலைப்பக்கம் பார்த்தே ரொம்ப நாளாச்சு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

   Delete
 16. பூரி ஜகந்நாத் கோவில் மணல் சிற்பம் அழகு. படங்கள் எல்லாம் அழகாய் இருக்கிறது.நாங்களும் இரண்டு தடவை Trade Fair பார்த்து இருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 17. படித்து மனம் நொந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா....

   Delete
 18. அகில இந்திய பொருட்காட்சியைப் பற்றிய தகவல்களையும் படங்களையும் நன்கு ரசிக்கும் வண்ணம் தந்ததற்கு நன்றி! மூங்கிலால் ஆன கைவினைப் பொருட்கள் பார்க்கப் பார்க்க பரவசம். தூக்கணாங்குருவிக் கூடு தூங்கக் கண்டேன் மரத்திலே என்று பாட வைத்து விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 19. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....