எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, July 19, 2016

ஜெய்க்குட்டிக்காக......கைகளால் கடக்கிறேன்....

எதுவும் கூறவில்லை நான்,
ஜெய்குட்டி
கிழித்துக் கொண்டிருப்பது
எடுத்தெறிந்துவிட முடியாமல்
இதுவரை நான்
பத்திரப்படுத்தி வைத்திருந்தவொரு
பழைய டைரியைத்தான்
என் கண் முன்னே
ஒவ்வொரு தாளாய்
கிழித்துக் கொண்டிருக்கிறான்
மகன் கைகளால் இப்போது
கடந்து கொண்டிருக்கிறேன்
இதுவரை என்னால்
கடக்க முடியாதிருந்தவொரு
கடந்த காலத்தை.....

கதவெண் உதிராத வீடு...

நீண்ட நேரமாய் நிற்கிறேன்
அந்தப்
பூட்டிய வீட்டின்முன்,

என்னை நகரவிட மறுக்கிறது
அக் கதவெண்

ஒரு காகிதத்தை
நான்காய் மடித்து
கடிதமென நீட்டிய ஜெய்குட்டி
அதன் மேல் எழுதியிருந்தது
இந்த எண்ணைத்தான்

பூட்டியே கிடக்கும்
இப்பாழடைந்த வீட்டில்
யாருக்காக எழுதியிருப்பான்
அக்கடிதத்தை

யோசித்தபடியே
நின்று கொண்டிருக்குமென்னைக்
கடந்து பறக்கிறதொரு
சிட்டுக்குருவி
அதன் உடைந்த ஜன்னல்வழி.

கோரிக்கையற்றவனாய்

கோரிக்கை எதுவும் வைக்காமல்
வெளியேறுகிறான்
கோவிலை விட்டு
ஒன்று அவனிடம்
பிரார்த்தனைகள் ஏதும்
இல்லாதிருக்க வேண்டும்
இல்லை
பிரார்த்திக்கும் தேவை ஏதும்
இல்லாதிருக்க வேண்டும்
இல்லையென்றால்
சக தோழனை அவன்
தொந்தரவு செய்யாமல்
சந்திக்க மட்டுமே வந்திருக்க வேண்டும்
அதோ
திரும்பியொரு புன்னகைத்து விட்டு
மீண்டும் நடக்கத் தொடங்குகிறான் ஜெய்குட்டி....


இந்த மூன்று கவிதைகளுமே “ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்கப்படுகிறான்எனும் கவிதைத் தொகுப்பிலிருந்து இங்கே பகிர்ந்திருக்கிறேன்.  அத் தொகுப்பில் எனக்குப் பிடித்த கவிதைகளில் மூன்று இவை.  மற்ற கவிதைகளும் பிடித்தவை தான்... அனைத்து கவிதைகளுமே தனது மகன் ஜெய்குட்டியை மையமாக வைத்து எழுதியவை.  கவிதைத் தொகுப்பு எனக்குக் கிடைத்தது – 24 ஜனவரி 2016. அன்றைக்குத் தான் முதன் முதலாக இத்தொகுப்பின் ஆசிரியர் திரு வைகறை அவர்களை முதல் முறையாகச் சந்திக்கிறேன். அவரது கவிதைகளாலும், வீதி இலக்கியக் கூட்டத்தினை நடத்திய பாங்கிலும் மகிழ்ந்து அமர்ந்திருந்தேன்.  புத்தகமும் கவிதைகளும் மட்டும் இருக்க, கவிஞர் வைகறை சொல்லாமல் கொள்ளாமல், “கதவெண் உதிராத வீடுகவிதையில் உள்ள குருவியைப் போல நம்மை எல்லாம் விட்டு 21 ஏப்ரல் 2016 அன்று எங்கோ பறந்து போய்விட்டார்.

அவரது மகன் ஜெய்குட்டிக்கு கடவுளிடம் பிரார்த்திக்க ஏதுமில்லை என்றாலும் எனக்கு ஒரு பிரார்த்தனை இருக்கிறது – கடவுளிடம் அல்ல!  உங்களிடம்....... 

துணைவியையும், அவரது அன்பு மகன் ஜெய்க்குட்டியையும் விட்டு இளம் வயதிலேயே மறைந்து விட்டார் கவிஞர் வைகறை. அவர்களுக்கு உதவி செய்யும் வகையாக புதுக்கோட்டை வலைப்பதிவர் நண்பர்கள் கணிசமான ஒரு தொகையைச் சேகரித்துத் தரும் முயற்சியில் இருக்கிறார்கள். வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் குறைந்தது ஐந்து லட்சம் ரூபாய் ஆவது கிடைத்தால் திரு வைகறை அவர்களின் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும். முடிந்தவர்கள் உதவியைச் செய்ய வேண்டுகிறேன்.  உதவித் தொகை செலுத்த வேண்டிய வங்கி எண் மற்றும் விவரங்கள் கீழே: -

First Name : MUTHU BASKARAN

Last Name : N

Display Name : MUTHU BASKARAN N and.PON.KARUPPAIAH

Bank : STATE BANK OF INDIA

Branch : PUDUKOTTAI TOWN BRANCH

Account Number : 35154810782

Branch Code : 16320

IFSC Code : SBIN0016320

CIF No. : 80731458645

நிதி அளிப்பவர்கள் vaigaraifamilyfund@gmail.com எனும் மின்னஞ்சலில் தகவல் தெரிவித்தால் நல்லது. நிதி அளிப்பவர்களின் பட்டியல் தொடர்ந்து http://veethimeet.blogspot.com என்ற வலைத்தளத்தில் இணைக்கப்படும்.

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

18 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. கண்டிப்பாக பதிவர்கள் அனைவரும் உதவ வேண்டும் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 3. நிதியை வரும் 31.7.16 அன்று வீதி கூட்டத்தில் முனைவர் அருள்முருகன் அய்யா வருவதால் அன்றே கொடுக்க முடிவு செய்துள்ளோம் சகோ...மனதை பிழியும் வேதனையை தருகிறார் வைகறை...வலைப்பதிவர்கள் நினைத்தால் நிச்சயம் தற்போதுள்ள ரூ1,85,000 ஐ இன்னும் கூடுதலாகத்தர முடியும்...கரம் கொடுத்து உதவுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   Delete
 4. பேஸ்புக்கில் இவரைப்பற்றிப் பல பதிவுகள் படித்தேன். பதிவுகளும் நிறைய பேர் எழுதியிருந்தனர். மிகவும் வருத்தமானா விஷயம். முதியவர்கள் நீண்ட காலம் வாழ்வதும் இவரைப்போல சின்ன வயதுக்காரர்கள் மறைந்துபோவதும் மனதிற்கு வருத்தத்தைக் கொடுக்கின்றன.
  இவரது கவிதைகளில் ஒரு சோகம் உள்ளூர விரவியிருப்பது போலத் தெரிகிறது. இவர் மறைந்த பின் இவரது கவிதைகளைப் படிப்பதாலா என்று தெரியவில்லை. அதுவும் கதவெண் உதிராத வீடு கவிதை மனதினுள் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டது என்று சொல்லலாம். என்னுடைய சொந்த அனுபவங்கள் முட்டி மோதிக் கொண்டு வந்தன மனதில். கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

   Delete
 5. என்னாலான உதவியை செய்த மகிழ்ச்சி எனக்கு இருக்கிறது :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 6. நல்லதொரு கவிஞன்...
  அனைவரும் உதவுவோம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 7. இவரைக் குறித்துப் பல பதிவுகள் படித்தேன். ரொம்பவே வருத்தமாக இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. வருத்தம் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 8. நல்லதொரு பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 9. பயணமே சுவாரஸ்யமே....உங்களோடு பயணித்துக் கொண்டிருக்கின்றோம் இதோ அடுத்த பதிவிற்குத் தொடர...

  ReplyDelete
  Replies
  1. வேறு பதிவில் வர வேண்டிய கருத்துரையோ.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....