செவ்வாய், 13 அக்டோபர், 2015

சுண்டல் சப்ஜி!





சுண்டல்-னா என்ன? அப்படின்னு நீங்க நிச்சயமா கேள்வி கேட்க மாட்டீங்க! இன்று முதல் நவராத்ரி ஆரம்பம். அதற்குள்ளாகவே எனக்கு சுண்டல் வாங்கிக் கொள்ளவும் கொலு பார்க்க வாங்க என்றும் சில அழைப்புகள் வந்து விட்டன! இப்படி வரும் அழைப்புகள் தவிர, எங்க வீட்டு கொலுவை புகைப்படம் எடுத்துக் கொடுங்க!என்றும் சில அழைப்புகள். :) 

இப்படி நிறைய வீட்டுல ஒரே நாள் போய் சுண்டல் கிடைச்சா, எல்லாத்தையும் அன்னிக்கே தின்னு தீர்க்க முடியாது இல்லையா.  மிஞ்சிப் போய் கொட்டவும் மனசு வராது! பழேத்து பொட்டி [அதாங்க Fridge!] ல வெச்சு சாப்பிட நமக்கு பிடிக்காது. அதான் நவராத்திரி ஒன்பது நாளும் கிடைக்குமே! அப்ப என்ன பண்ணலாம்! அதுக்கு ஒரு வழி இருக்குங்க! அதான் சுண்டல் சப்ஜி!

இதை எப்படி செய்யறதுன்னு எங்க வீட்டு அம்மணி அவங்க பக்கத்துல சில வருடங்கள் முன்னாடி எழுதியதை மீண்டும் இங்கே பார்க்கலாம்!

தேவையானப் பொருட்கள் :-

சுண்டல் ஒன்றிலிருந்து ஒன்றரை கப் (மூன்று நான்கு விதமான பயறுகள் இருந்தால் அதிலும் முக்கியமாக வேர்க்கடலை இருந்தால் நன்றாக இருக்கும்).

பெரிய வெங்காயம் 2
தக்காளி 2
இஞ்சி ஒரு சின்ன துண்டு
பச்சை மிளகாய் 1 (அ) 2
மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்
மல்லித்தூள் 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
உப்பு சிறிதளவு (சுண்டலிலேயே உப்பு இருக்கும் இது க்ரேவிக்கு)
எண்ணெய் தேவையான அளவு

தாளிக்க :-

சீரகம் - சிறிதளவு

செய்முறை :-

வெங்காயத்தை தோலுரித்து நான்காக வெட்டிக் கொள்ளவும். தக்காளியையும் வெட்டிக் கொண்டு, இஞ்சியை சுத்தம் செய்து தோலுரித்துக் கொள்ளவும். மிக்சியில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வதங்கியதும் இதில் சுண்டலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு ஐந்திலிருந்து பத்து நிமிடம் கொதிக்க விட்டால் சுவையான சுண்டல் சப்ஜி சாப்பிட தயார். இது சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற காம்பினேஷன்.

என்ன சுண்டல் Collection-க்காகவே கிளம்பிட்டீங்களா? இது ரொம்ப ஓவர்! நிறைய விதமா கிடைச்சா செய்து பாருங்க சரியா!

நாளை வேறு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்



டிஸ்கி: சுண்டல் படம் http://adupankarai.kamalascorner.com/ தளத்திலிருந்து.


22 கருத்துகள்:

  1. மிஞ்சும் சுண்டலை வைத்து சைடிஸ் செய்யும் முறை நல்ல ஐடியா...ஒரு வேளை நிறைய அழைப்புக்கள் உங்களுக்கு வந்து நிறைய சுண்டல் உங்களுக்கு கிடைத்து சைடிஸ் பண்ணியும் மிஞ்சிவிட்டால் பேசாம மிளகாயை பொடி பொடியாக நறுக்கி தக்காளியையும் மிக சுறு துண்டாக வெட்டி கொத்தமல்லி இலையைஉம் மிக சிறியதாக வெட்டி அந்த சுண்டலோடு கலந்து அப்படியே ஒரு நடை நடந்து டாஸ்மாக் பக்கம் போனா எளிதில் விற்றுவிடலாம்...


    இங்கு சுண்டல் சாப்பிட 2 வீட்டில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. இங்கெல்லாம் ஜஸ்ட் சுண்டல்மட்டும் சாப்பிட கூப்பிட மாட்டாங்க. நல்ல டின்னரும் தருவாங்க அதனால் அவங்க வீக்கெண்ட்லதான் கூப்பிடுவாங்க ஒரே ஒரு குறைதான் சரக்கு தரமாட்டாங்க அதனால என்ன அவங்க வைக்கும் ரசத்தை ஒரு கப் வாங்கி சாப்பிட்டு வந்துடுவேன்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      டாஸ்மாக் தில்லியில் இல்லை :(

      நீக்கு
  2. நவராத்திரி சுண்டல்ல வெங்காயம் சேர்க்க மாட்டோமே.. என்ன செய்ய

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்காயம் - சுண்டலா செய்யும்போது சேர்க்க வேண்டாம்! சப்ஜியா செய்யும் போது சேர்த்துக்கலாம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  3. ஹாஹாஹா, நானும் எழுதினேன், நவரத்தினக் குருமா என்ற பெயரில்! ஆனால் எங்க வீட்டில் இப்படி எல்லாம் ஏமாத்த முடியாது! :P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  4. //http://geetha-sambasivam.blogspot.in/2009/10/blog-post.html//

    நாம எழுதினதோட சுட்டி! அங்கேயும் போணி ஆகணுமில்ல! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவினையும் படிக்கிறேன்....

      தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. நவ ராதிரி சமய சமயோசிதப் பதிவு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  9. படமே ஒன்பது நாள் சுண்டல் சாப்பிட்ட நிறைவை இப்போதே தந்து விட்டது
    முக்கியமான ஓட்டு என்னுது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  10. சப்புக் கொட்ட வைக்கும் சப் ஜி (இதுக்குமா ஜி ?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  11. ஆம் வெங்கட்ஜி இப்படிக் கலெக்ஷன் எல்லாம் .சில சமயம் 4, 5 வீடுகள் என்றால் கலெக்ஷன் நிறைய ஆகிவிடுவதால் ராத்திரி இப்படி உருமாருவது உண்டு..சப்பாத்திக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....