வெள்ளி, 9 டிசம்பர், 2016

ஃப்ரூட் சாலட் 186 – மறு நடவு – வாடிய பயிர் – ராஜாவும் பொற்காசுகளும்


இந்த வார செய்தி:

அவிநாசி – அவிநாசி பாளையம் வரையிலான, 31.8 கி.மீ., தூரம் ரோடு, ரூ. 167 கோடி செலவில், தேசிய நெடுஞ்சாலைத்துறையால், அகலப்படுத்தப் படுகிறது. இதற்காக, 1402 மரங்கள் வெட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவற்றில், மறு நடவு செய்வதற்கு சாத்தியமுள்ள மரங்கள் கண்டறியப்பட்டுள்ளன; அவற்றை மறு நடவு செய்ய "வெற்றி' அமைப்பு முன் வந்துள்ளது.

அவ்வகையில், வேம்பு, அரசு, ஆலமரம், புங்கன் என, 450க்கும் மேற்பட்ட மரங்களுக்கு மீண்டும் மறு வாழ்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், தாராபுரம் ரோடு, மண்டபம் பகுதியில் உள்ள, மூன்று பெரிய ஆலமரங்களை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீதம் உள்ள மரங்களையும் நடுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. பெரிய மரங்களிலிருந்து சேகரிக்கப்படும், தாய் மண்ணை உதிராமல் கொண்டு வர வேண்டியிருப்பதால், பெயர்த்து எடுக்கப்படும் மரங்களுக்கு அருகிலேயே நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கோவில் வழி முதல் அவிநாசிபாளையம் வரையில் உள்ள, தனியார் நிலங்கள், அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள் விரும்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என, நேற்று "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

அதை தொடர்ந்து, ஏராளமானவர்கள் இப்பசுமைப்பணியில் இணைந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். பல ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யவும், பள்ளி, கல்லூரி வளாகங்களில் நடவு செய்து தரவும், நீர் விட்டு பராமரித்து கொள்வதாகவும், பலரும் ஆர்வத்தோடு தொடர்பு கொண்டு வருகின்றனர். இத்தகைய வயதான மரங்களை மறுநடவு செய்யும் போது, அதன் இயல்புகளை, மாறாமல் அப்படியே கொண்டு வர முடியும்; ஒரு சில மாதங்களில், அதே வயதுடைய மரம் உருவாகிவிடும். இயற்கை மீது ஆர்வகம் கொண்டுள்ளவர்கள் ஓரணியில் திரண்டு, இதில் இணைந்தால், ஒரேநேரத்தில் அதிகளவு மரக்கன்றுகள் மறு நடவு செய்யும் நிகழ்வாகவும், இது அமையும். இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பமுள்ள தன்னார்வலர்கள், பசுமை அமைப்புகள், பள்ளி, கல்லூரி நிர்வாகள், தனியார் நிறுவனங்கள், 90474 86666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் செய்தி…  நல்லதோர் விஷயம்.  சாலைகள் விரிவுபடுத்தும்போது சாலையோர மரங்களை வெட்டி விறகாக்காமல் இப்படி மறு நடவு செய்ய முன் வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். உங்கள் எல்லோர் சார்பிலும் இந்த வாரப் பூங்கொத்து!

இந்த வார முகப்புத்தக இற்றை:


இந்த வார குறுஞ்செய்தி:

Two things define you. Your patience when you have nothing and your attitude when you have everything…..

நல்லதோர் செய்தி! இது கடைபிடிப்பது கடினம் என்றாலும் கடைபிடித்தால் நல்லது! நண்பர் மது [கஸ்தூரி ரங்கன்] அவர்கள் பகிர்ந்த முகப்புத்தக இற்றையிலிருந்து எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி – நன்றி நண்பரே.….

இந்த வார போஸ்டர்:


கணக்கு – அதுவும் அல்ஜீப்ரா பலருக்கும் கசப்பான விஷயம். இந்த போஸ்டர் இதைத் தான் சொல்கிறது!

இந்த வார கார்ட்டூன்:

மத்தியானம் ஆயிடுச்சு, இன்னும் உங்க Good Morning முடியலையா? இல்லை உங்க மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க? அப்புறம் நான் பூரிக்கட்டையை எடுக்க வேண்டியதா போயிடும் சொல்லிட்டேன்!


இந்த வார புகைப்படம்:


வாடிய பயிர்:

நல்ல ஏறு வெயிலில் உரக்கடைக்கு வந்திருந்தவருக்கு மயக்கம் வர, சரிந்து விழுந்திருக்கிறார். மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்த்த பிறகு, உடம்பில் போதிய தெம்பு இல்லை என்று சொல்லி மூன்று பாட்டில் குளுக்கோஸ் ஏற்ற மருத்துவர்கள் சொன்னார்களாம். முதல் பாட்டில் ஏற்றி முடிந்ததும் அவருக்கு நினைவு திரும்பிவிட்டது. எழுந்தவர் என்ன நடந்ததென கேட்டிருக்கிறார். சொல்லியிருக்கிறார்கள். கையிலிருந்து ஒரு டியூப் ஏறிப்போய் பாட்டிலில் சொருகியிருந்ததைப்பார்த்து அதை என்னவென்று கேட்டிருக்கிறார்.

'ஒடம்புல சத்தில்ல அதா குளுக்கோஸ் ஏத்துறாங்க' என்று சொன்னதும். 'இன்னு எவ்ளோ நேரமாகும்', 'ரெண்டு பாட்டலு ஏத்தனும், ராத்திரியாகிரும், காலைல டாக்டர் வரணும், அதுக்கு பெறகுதா வீட்டுக்கு போகலாம்'. 'ஐயய்யோ எம்பருத்திச்செடி என்னாகும், விடுங்க நான் போகணும்' பதறியவரை ஆற்றுப்படுத்தி உடல்நிலையை எடுத்துச்சொன்ன பிறகு அவர் ஒரு யோசனை சொன்னார்.

'டாக்டர கூப்பிடுங்க பில்லக் குடுத்திரலாம்'.

'புரியாத ஆளாயிருக்கீரே, குளுக்கொஸ் ஏறனுமில்ல', 'அதுக்கு ரெண்டு செம்புத்தண்ணி ஒடம்புக்குள்ள போறதுக்கு ரெண்டுநாளா? ஒரு ஏக்கர் தண்ணி பாய்ச்சவே ஒரு மணிநேரந்தா ஆகுது'. 'அதுக்கு', 'குடுங்க ஒரே மடக்குல குடிச்சிட்டு தோட்டத்துக்கு போகணும்'. பக்கதில் படுத்திருந்த நோயாளிகளோட சேர்த்து மருத்துவமனையே குலுங்கி குலுங்கி சிரித்தது..

'அப்பிடியென்னய்யா,தோட்டத்துல இருக்கு பருத்திச்செடிதான', 'செடி பருத்திச்செடிதான், ஆனாக்க கரண்டு மத்தியானக்கரண்டுல்ல' என்றார்..

சோகையாபோன தன்னுடம்பை காட்டிலும், தண்ணிரின்றி வாடும் பருத்திச் செடிக்கு பரிந்து கொண்டு பதறித் துடிக்கிற விவசாயி. அந்தப் பதற்றத்துக்குப் பின்னாடி அவரது குடும்பமும் வாழ்வும் என ஒரு சுயலாபமிருந்தாலும் கூடப் பருத்திச் செடியின் வாட்டம் அவரை வாட்டுகிறது. அதனால் தான் "உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி எனும் விவசாயி கோமணாண்டியாகிறான்". எதைப்பற்றியும் கவலைப்படாதவன் அரசியல் பிழைத்து கோபுரவாசியாகிறான்...

- சீ. இராஜேந்திரன் என்பவரின் முகப்புத்தக இற்றையிலிருந்து…

படித்ததில் பிடித்தது:

ராஜாவும்,ஏழையும்:

ராஜா இரவில் மாறு வேடத்தில் தன் நாட்டில் நகா்வலம் வந்தார். இரண்டு மெய்க் காப்பாா்களும் கூடவே சென்றனா். திடீரென்று கடுமையான மழையும்,காற்றும் அடித்தன. வானம் இருண்டுபோனது. ராஜா காவலாளிகளைவிட்டு வழி தவறிப் போய்விட்டாா். எங்கும் காரிருள், சற்று தொலைவில் சிறு குடிசை தெரிந்தது. அதிலிருந்து லேசான வெளிச்சமும் வந்து கொண்டிருந்தது. ராஜா வேகமாக அதனை நோக்கி நடந்தார். அதற்குள்ளே கந்தல் ஆடை அணிந்த ஒரு மனிதனைத்தவிர யாருமில்லை, ராஜா உள்ளே நுழைந்ததும் அவன் எந்த சலனமும் இல்லாமல் அமா்ந்திருந்தான். மாறுவேடத்தில் இருந்தபோதிலும், அவன் மரியாதை தராமல் அமர்ந்திருந்ததில் ராஜாவுக்கு கொஞ்சம் கோபம் வந்தது.

"ஏம்ப்பா! உன் வீட்டுக்கு வந்திருக்கேன், "நீ மரியாதையே இல்லாம, "ஒரு வணக்கம் கூட சொல்லாம உட்காா்ந்திருக்கியே?” என்றார்.

பதிலுக்கு அவன், "நீ தான் என் வீட்டுக்குள்ள அடைக்கலமா நுழைஞ்சிருக்க. உனக்கு நான் எதுக்கு வணக்கம் சொல்லணும்"? என்றான்.

ராஜாவால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் எப்பொழுதும் நகா்வலம் போகையில் ஒரு பொற்காசு மூட்டையும் உடன் வைத்திருப்பாா். அதை அவனிடம் பிறித்துகாட்டி விட்டு, "பாா்த்தாயா? நான் எவ்வளவு பெரியவன் என்பதை? இப்ப எனக்கு வணக்கம் சொல்வாயா?” என்றார் அவனும் பதிலுக்கு, "ஒரு ஏழை பக்கத்திலிருந்தும் ஒரு மூட்டை பொற்காசை நீயே வச்சிருக்கியே, உனக்கு எப்படி வணக்கம் சொல்வது என்றான்!”

ராஜா கோபமாய் ஒரு பொற்காசை அதில் இருந்து எடுத்து அவனிடம் வீசி,
இப்ப வணக்கம் சொல்வாயா?” என்றார். காசைத் தொடாமல் அவன் சொன்னான், "ஒரு மூட்டைக்காசை வச்சுகிட்டு அற்பமா ஒத்தக்காசை வீசுறியே, உனக்கா வணக்கம் சொல்வேன்?”

அரசா் இன்னும் உக்ரமானார். பாதி மூட்டையை அவனருகே பிரித்துக்கொட்டிவிட்டுக் கோட்டாா். "என்னிடம் இருந்ததில் சரிபாதியைக் கொடுத்திட்டேன்.இப்பவாவது வணக்கம் சொல்வாயா?"

மெல்லிய புன்னகையுடன் அவன் சொன்னான், “உங்கிட்ட இருக்கிற அளவுக்கு இப்ப என்னிடமும் இருக்கே! இப்ப நீயும், நானும் சமமாயிட்டோமே. சரிசமமா இருக்கிற உன்னை எதுக்கு நான் மதிக்கனும்?”

ராஜாவுக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது. மிச்சமிருந்த அறைமூட்டையையும் அவனிடத்தில் வீசிவிட்டாா். "இருந்த எல்லாத்தையுமே கொடுத்திட்டேன் இப்பவாவது வணக்கம் சொல்” என்றார். அவன் சிரித்துக் கொண்டே சொன்னான் "இப்ப உங்கிட்ட ஒன்றுமே இல்லை.
ஆனா எங்கிட்ட ஒரு மூட்டை தங்கமிருக்கு, "இப்ப நீ தான் எனக்கு வணக்கம் சொல்லனும்?” என்றான். ராஜா வாயடைத்து போனார்.

குறிப்பு: என்னதான் அள்ளிக்கொடுத்தாலும் மனித இதயம் திருப்திப்படுவதில்லை, நிரந்தரமான மரியாதை என்பது பணத்தைக் கொண்டு வாங்கும் பெருளுமில்லை. உண்மையான அன்பைப் பிறருக்கு கொடு. அதுவே பலமடங்காக உனக்குத் திரும்பக் கிடைக்கும். "பணம்" மட்டும் என்றும் ஜெயித்ததாக சரித்தரம் இல்லை. இதற்கு மயங்காதவர்கள் இக் கலியுகத்திலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாா்கள்.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

16 கருத்துகள்:

  1. விவசாயி யோசிக்கவும், நெகிழவும் வைத்தார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  4. மரங்களை மறு நடவு செய்வது அருமையான விஷயம்! விவசாயி, ராஜா குட்டிக்கதைகள் அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  5. பணம் என்னடா பணம் ,குணம் தானடா நிரந்தரம்னு பாடத் தோன்றுகிறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  7. படித்ததில் பிடித்ததை எங்கேயோ வாசித்த நினைவு....நல்ல கதை..

    முகப்புத்தக இற்றையிலிருந்து, வாடிய பயிர் வரை அனைத்துமே அருமை. ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்ததில் பிடித்தது - இணையத்தில் நீங்களும் வாசித்திருக்கலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!.

      நீக்கு
  8. உண்மையான அன்பைப் பிறருக்கு கொடு. அதுவே பலமடங்காக உனக்குத் திரும்பக் கிடைக்கும். "பணம்" மட்டும் என்றும் ஜெயித்ததாக சரித்தரம் இல்லை. இதற்கு மயங்காதவர்கள் இக் கலியுகத்திலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாா்கள்.//

    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....