அனைத்து நண்பர்களுக்கும்
இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
காரணம்
இல்லாமல் யார் மீதும் காதல் வருவதில்லை… ஆனால் அந்த காரணம் தான் யாருக்கும் புரிவதில்லை.
கடந்த வாரத்தில் பார்த்த ஒரு குறும்படம் பற்றிய தகவலோடு
இந்த ஞாயிறில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த வாரம் ஒரு தமிழ் குறும்படம்! உங்களில் சிலர்
பார்த்திருக்கலாம். சற்றேறக்குறைய 29 நிமிடங்கள்
ஓடக் கூடிய குறும்படம் – ஆர்.வி. சரண் இயக்கத்தில். விக்னேஷ்குமார் என்பவர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தினை நீங்கள் பார்ப்பதற்கு முன்னர் சில வார்த்தைகள்.
இளைஞன் ஒருவன் தனது வாழ்க்கையில் முன்னேறத் துடித்துக்
கொண்டிருக்கிறார். தனது அப்பா-அம்மாவின் 25-ஆவது வருட திருமண நாளுக்கு நல்லதொரு பரிசு
தர நினைக்கிறார். அந்த நேரத்தில் தான் தனது அப்பா, திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு
மாதத்திற்கு முன்னர் எழுதிய கடிதம் – வந்து சேராத கடிதம் – பற்றி தெரிந்து கொள்கிறார். ஹிமாச்சலப் பிரதேசத்தின் கடைசி தபால் நிலையமான ஹிக்கிம்
என்ற இடத்திலிருந்து கடிதம் அனுப்புகிறார். அதற்குள் அங்கே நிலச்சரிவு ஏற்படுகிறது. அவர் எழுதிய அந்த காதல் கடிதம் வந்து சேரவே இல்லை!
இதனைத் தெரிந்து கொண்ட அந்த இளைஞன், தில்லியில் வேலைக்கு நேர்காணல் என வீட்டில் சொல்லி
விட்டு, நண்பர்கள் உதவியுடன் ஹிக்கிம் நோக்கி பயணிக்கிறார். இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் – ஹிமாச்சலப்
பிரதேசத்தின் மலைப்பகுதிகளுக்கு இப்படி பயணம் செய்வது ஒரு ஸ்வாரஸ்ய அனுபவம். அங்கே
செல்ல முடியாதவர்கள் இந்தக் குறும்படத்தின் வழி அங்கே பயணம் செய்த அனுபவம் பெற முடியும்
– அழகாக படம் பிடித்து இருக்கிறார்கள் படக் குழுவினர். கடினமான பாதையில் பயணித்து அங்கே
சென்று கடிதத்தினை கண்டு பிடிக்க முடிந்ததா? இல்லையா என்பதை படத்தினை பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.
காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று
தான் பார்க்க வேண்டும் என வரலாம். அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன்.
அங்கேயும் சென்று பார்க்கலாம்!
ஒரு சில விஷயங்கள் சினிமாவுக்கு மட்டுமே ஒத்து வரும் என்று
தோன்றினாலும் (உதவி செய்யும் மந்திரியின் காரியதரிசி ஒரு உதாரணம்!) படம் நன்றாக எடுத்திருக்கிறார்கள். நல்லதொரு குறும்படம். நண்பர்களே, கால் நூற்றாண்டு காதல் என்ற தலைப்பில் வெளிவந்த இந்தக்
குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? இந்தக் குறும்படம் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
வாசகத்தில் உண்மை இருக்கிறது! என்னைப் போன்ற குறும்படம் பார்க்கா ரசிகர்களுக்காக முழுக்கதையையும் சொல்லி இருக்கலாம். :))
பதிலளிநீக்குகதையே குறுகியது தானே?
நீக்குகுறும்படம் பார்க்காத ரசிகர்களுக்காக... ஹாஹா... உங்களுக்கு தனியாக அனுப்புகிறேன் ஸ்ரீராம்!
நீக்குஆமாம் கதையே குறுகியது தான் சிகரம் பாரதி.
நீக்குகாரணம் புரிந்தாலும்
பதிலளிநீக்குகாதல் மட்டும் புரிவதே இல்லை...
காதல் மட்டும் புரிவதே இல்லை - ஹாஹா... உண்மை தான் துரை செல்வராஜூ ஜி.
நீக்குஅன்பின் வெங்கட்..
பதிலளிநீக்குதங்களது பதிவுகளுக்கு வரமுடிவதில்லை...
இணையப் பிரச்னை....
காணொளி பிறகு தான் பார்க்க வேண்டும்....
வாழ்க நலம்..
இணையப் பிரச்சனை - பரவாயில்லை துரை செல்வராஜூ ஐயா. முடிந்த போது வாருங்கள்.
நீக்குvaasakam arumai sir.
பதிலளிநீக்குshort film paarkala parthittiu solluren sir.
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மஹேஷ். குறும்படம் பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.
நீக்குபாத்துடலாம் . அங்கு தனியாக பிரச்சனை ஒன்றும் இல்லையே ??
பதிலளிநீக்குபடம் பற்றிய உங்கள் பதிவும் பார்த்தேன் கார்த்திக். சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.
நீக்குஇங்கே ஒன்றும் பிரச்சனை இல்லை கார்த்திக். இன்றைக்குக் கூட அலுவலகம் சென்று மாலை தான் திரும்பினேன். எல்லாம் நலமே.
//அந்த காரணம் தான் யாருக்கும் புரிவதில்லை//
பதிலளிநீக்குவாழ்க்கையும் இப்படித்தானே ஜி
குறும்படம் பார்க்கிறேன்.
வாழ்க்கையும் இப்படித் தான் கில்லர்ஜி.
நீக்குகுறும்படம் முடிந்த போது பாருங்கள்.
சுவாரஸ்யம் ....குறும்படம் பார்க்கும் ஆவல் வருகிறது ,....
பதிலளிநீக்குகுறும்படம் முடிந்தால் பாருங்கள் அனுப்ரேம் ஜி.
நீக்குபயணத்தில் அந்த பாலம்... ஆஹா...!
பதிலளிநீக்குபையனின் பரிசு சிறப்பு...
நடித்தவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்...
அப்புறம்... மகன் எழுதிய கடிதம் என்னிடம் இருக்கிறது ஜி...!
குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குமகன் எழுதிய கடிதம் - ஆஹா... மகிழ்ச்சி - அதுவும் ஒரு பொக்கிஷம் தான்.
பாதி படம் பார்த்துவிட்டேன் ஐயா
பதிலளிநீக்குஅந்தப் பையன் பைக்கில் செல்லும்பொழுது தண்ணீர் குறுக்கிடுகிறது அல்லவா, அந்தப் பைக்கை தண்ணீரில் இறக்கியபோது, என் இணயமும் நனைந்துவிட்டதுபோல் சுற்றத் தொடங்கிவிட்டது.
சுற்றிக் கொண்டே இருக்கிறது
மீண்டும் முயற்சி செய்து பார்க்கிறேன் ஐயா
பார்த்தவரை படம் அருமை
இதுபோன்று ஒரு பயணம் செய்ய வேணடும் என மனம் ஏங்குகிறது
முடிந்த போது மீதி படமும் பார்த்து விடுங்கள் கரந்தை ஜெயக்குமார் ஐயா. இது போன்ற பயணம் உங்களுக்கும் விரைவில் அமையட்டும் ஐயா.
நீக்குஅருமை. குறும்படத்தை பார்க்க இப்போது நேரமில்லை. நாளை பார்க்கிறேன். இந்த மாதிரியான வித்தியாசமான விடயங்கள் உங்கள் கண்ணுக்கு மட்டும் தான் படுகிறதோ என்னவோ?
பதிலளிநீக்குமேலும், இந்த பதிவை குறும்படம் மற்றும் பொழுது போக்கு என வகைப்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
முடிந்த போது குறும்படம் பாருங்கள் சிகரம் பாரதி. வித்தியாசமான விஷயங்கள் - :) தேடுங்கள் நிறையவே கிடைக்கும் சிகரம் பாரதி.
நீக்குகுறும்படங்கள் என ஏற்கனவே சேர்த்திருக்கிறேன்.
வலை ஓலை - வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
வாசகம் அருமை.
பதிலளிநீக்கு//ஹிமாச்சலப் பிரதேசத்தின் மலைப்பகுதிகளுக்கு இப்படி பயணம் செய்வது ஒரு ஸ்வாரஸ்ய அனுபவம்.//
ஆமாம், கொஞ்சம் பயம் கலந்த இனிய பயணம்.
காணொளி குறுபடம் மிக அருமை.
நடிந்தவர்கள் எல்லாம் மிகை இல்லாமல் அருமையாக நடித்து இருக்கிறார்.
ரயில் சிநேகம் ரயிலுடன் நின்று விடாமல் தொடருவது மிக அருமை.
நன்றி வெங்கட்.
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...
நீக்குபயம் கலந்த இனிய பயணம் - ஆமாம்மா... சில பயணங்கள் அங்கே சென்று வந்ததுண்டு.
குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நல்ல குறும்பட அறிமுகம். சினிமா போலவே ரசித்து எடுத்திருக்கிறார்கள்
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை - நன்றி முரளிதரன்.
நீக்குகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீங்களே சொன்னபிறகு குறும்படம் பார்க்காமல் இருப்பேனா ... பார்த்திட்டேன் .... "பார்த்துக்கொண்டிருக்கும் உறவைவிட காத்துக்கொண்டிருக்கும் உறவுக்குத்தான் காதல் அதிகம்" ... உண்மைதான் .... அந்தக்காலத்தில் காதலிப்பதில் எவ்வளவு "ரிஸ்க்" உள்ளது பார்த்தீர்களா? ... ஆனால் இந்தகால காதல் அப்படியல்ல ரிஸ்க்கெல்லாம் வெறும் ரஸ்க் சாப்புடுற மாதிரி மிக எளிதாக இருப்பதால்தான் "ரஸ்க்" போல உப்புசப்பில்லாமல் "சப்" பென்று இருக்கிறது ... சரிதானே? ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
பதிலளிநீக்குபடம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிவா.
நீக்குபடம் அட்டகாசம் ஜி. அதுவும் ஹிமாச்சல் வாவ்! என்ன அழகு பயணம். ஹிமாச்சல் அழகு சொல்லவே வேண்டாம். நாமளும் இப்படி போனா எவ்வளவு நல்லாருக்கும்னு எண்ண வைத்தது. பசங்க ரொம்பவே கஷ்டப்பட்டுத்தான் அங்கெல்லாம் போய் எடுத்துருக்காங்க. அதுக்கே பாராட்டலாம்.
பதிலளிநீக்குகடைசியில் சுபத்துடன் முடிகிறது. நல்லா எடுத்துருக்காங்க. எல்லாரும் நல்லா நடிச்சிருக்காங்க.
கீதா
குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. ஹிமாச்சலப் பிரதேசத்தின் அழகை சிறப்பாகவே படம் பிடித்து இருக்கிறார்கள்.
நீக்குகடைசியில் சுபம் - அது தான் பிடித்திருக்கிறது எனக்கும்.
அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குதாமதமாக வருகிறேன். இனிய வாசகம். மிக இனிய குறும்படம் .மேஜர் சுந்தரராஜன் மகன்
நடிப்பில் உசத்திதான். கொஞ்சம் மேக் அப் போட்டு நடித்திருக்கலாம்.
மகன், கூட வந்த பயணி, காதலி, தோழன் அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.
இது போல ஒரு கரு மனதில் தோன்றி. அத்தனை தூரம் சென்று
படம் பிடிக்கவே தனித்திறமை வேண்டும். படத்தின் நடுவே வரும் பாடல் மிகப் பிரமாதம்.
அன்பு வெங்கட் இத்தனை நல்ல குறும்படத்தைப் பார்த்தது மகா திருப்தி.
அன்பு வாழட்டும். அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.
நன்றி வெங்கட்.
காலை வணக்கம் வல்லிம்மா...
நீக்குவாசகம், குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
மேஜர் சுந்தரராஜன் மகன் - இது எனக்கு தகவல்!
அன்பு வாழட்டும். அது தான் எப்போதும் தேவை.
அருமையான ஒரு குறும்படம்
பதிலளிநீக்குநன்றி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்கு