நண்பர்களுக்கு, இனிய
காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
ஒரு மனிதனின் அழகானது, அவனது நிறமோ, பணமோ
அல்ல; அவனது அன்பான குணமும், சாந்தமான மனதும் தான் அழகு – அப்துல் கலாம்.
ஊரடங்கு – 1: 7 ஏப்ரல் 2020:
இந்த ஊரடங்கில் சுறுசுறுப்பு குறைந்து விடுமோ என்று நினைக்கிறேன். நிதானமாக எழுந்து வழக்கமான வேலைகளுடன் கூடுதலாக ஏதேனும் ஒரு சுத்தப்படுத்தும் வேலை, சமையல், சாப்பாடு, டீவி என்று பொழுதுகள் கழிகிறது. எதற்காகவும் வெளியே செல்லவில்லை.
அத்திமலைத்தேவன் நான் மூன்றாம் பாகமும், மகள் நான்காம் பாகமும் வாசித்துக் கொண்டிருக்கிறோம். மகள் தன் செல்ஃபோனும், ஹெட்செட்டும் வைப்பதற்கென்று ஒரு ஹோல்டரும் செய்திருக்கிறாள்.
ஒருநாள் மாலை நேர குட்டிப்பசிக்கு
'ஆலு டிக்கி' செய்தேன். எண்ணெய் குறைவாக தோசைக்கல்லில். நன்றாகவே இருந்தது.
புடவை ஓரமடிக்க, உடைகளை ஆல்ட்டர் செய்ய, பழைய நைட்டிகளை தலையணை உறைகளாக மாற்றவென்று சில வேலைகளை ஒதுக்கி வைத்திருக்கிறேன்.
இஸ்திரி செய்ய பையில் போட்டுவைத்த துணிகள் நிறைய இருக்கு. இப்போது இருக்கும் சூழலில் வெளியே கொடுக்க முடியாது என்பதால் நானே செய்யலாம் என்று எடுத்து வைத்திருக்கிறேன்.
இப்படி செய்ய வேண்டிய வேலைகளை நாமே அன்றாடம் பிரித்துக் கொள்ள வேண்டியது தான்.
இதுவும் கடந்து போகும்!
ஊரடங்கு-2
– 8 ஏப்ரல் 2020:
சமையலுக்காக 100 கிராம் மஞ்சள்தூள் தான் கேட்டேன்!!
கடையில் ஸ்டாக் இல்லையாம்!!
எல்லோரும் முன்னாடியே கிலோ கிலோவா வாங்கி சுவரெல்லாம் பெயிண்ட் பண்ணியிருப்பாங்களோ :)
இங்கே எங்கள் தளத்தில் ஒருவர் தன் வீட்டு வாசலிலிருந்து படி இறங்கும் வரை தரை முழுதும் மஞ்சள் கரைசலால் தெளித்து இருக்கிறார்கள்.
நீங்களும் இது போல் ஏதாவது முன்னெச்சரிக்கை செய்துள்ளீர்கள்
என்றால் சொல்லுங்களேன்?
தெரிந்து கொள்கிறேன்.
ஊரடங்கு-3: நேந்திரங்காய் உப்பேரி - 8 ஏப்ரல் 2020
நேந்திரங்கா உப்பேரி!!
நேற்றுத் தோழி ஒருவர் நான்கு நேந்திரங்காய்கள் தந்திருந்தார்.
தண்ணீரில் போட்டு வைத்திருந்தேன். அதை இன்று சிப்ஸாக செய்தாச்சு. உப்புத்தண்ணீர்
தெளித்து தான். இரண்டு நாட்களுக்காவது
மாலை நேர நொறுக்குத் தீனியாக உதவும். தேங்காய் எண்ணெயில் போட்டிருந்தால்
மணமாக இருந்திருக்கும்.
கைவசம் இல்லை.
கோவையில் இருந்தவரை அப்பா அலுவலகத்துக்கு
அருகே "அஞ்சு
முக்கு" என்று
ஒரு இடமுண்டு. இங்கே சுடச்சுட நேந்திரங்கா உப்பேரி எந்நேரமும் தயாராகிக் கொண்டேயிருக்கும். நிறைய வாங்கி சாப்ட்டாச்சு. அந்த சுவை இதில் இருக்காது. ஏனென்றால் அது அப்பா வாங்கித் தந்தது ஆச்சே.
பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க – 16 ஏப்ரல்
2012:
கோவை2தில்லி
வலைப்பூவில் எழுதிக் கொண்டிருந்த போது, 2012-ஆம் வருடம் இதே நாளில் எழுதிய ஒரு பதிவு
– வாசிப்பனுபவமாக இருந்திருக்கிறது. ஒரு வண்ணத்துப் பூச்சியின் கோபம் என்ற தலைப்பிலான
சிறுகதைகள் தொகுப்பினை வாசித்து அது பற்றி எழுதி இருக்கிறேன். இரா. பசுமைக்குமார் என்பவர்
எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து சாந்தா பதிப்பகத்தின் வெளியீடாக வந்த புத்தகம் அது. அந்தப் பதிவினை இதுவரை படிக்காதவர்கள் வசதிக்காக,
அப்பதிவின் சுட்டி கீழே!
ஊரடங்கு-4: – 9 ஏப்ரல் 2020
இன்னிக்கு வெளியில் போக வேண்டிய சூழல். அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றை வாங்க வேண்டியதாக இருந்தது. பக்கத்தில் இருக்கும் கடைக்குச் சென்று வந்தேன். பிஸ்கெட் செக்ஷனே காலியாக இருந்தது. handwash ம்ம்ம்ஹூம்ம்ம். பருப்புப் பொடி, கறிவேப்பிலைப் பொடி, சோம்புப் பொடி கூட இருக்கு. மஞ்சப்பொடி மட்டும் இல்ல :)
அருகில் இருந்த ஆவின் கடையில் பிஸ்கெட்ஸ் இருந்தது. வாங்கிக் கொண்டேன். பால், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் கூட இருக்குங்க என்று கடைக்காரர் சொன்னார். ஐஸ்க்ரீம் என்ற வார்த்தையைக் கேட்டதும் விழுந்துட்டேன்
:) வாங்காமல் வர முடியுமா :)
கடையில் இருந்து திரும்பும் போதே வாசலில் காய்க்காரர் வந்திருந்தார். அவரிடம் கொஞ்சம் வாங்கினேன். வீட்டுக்கு வந்ததும் முதலில் கை, கால்களை சுத்தம் செய்து கொண்டு, அப்படியே குளியலையும் போட்டு கையோடு துணியையும், ஷாப்பிங் செய்த பையையும் துவைத்து விட்டு வந்தேன். பால்கனியில் துணியை உலர்த்தத் துவங்கியதும் வாசலில் ”ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சைச்ச்ச்ச்ச” என்று கூவலைக் கேட்டேன். ஓடிச்சென்று வாங்கி வந்து அதையும் காய்கறிகளையும் மஞ்சள், உப்பு கலந்த நீரில் போட்டு அலசி துணியில் காயவைத்து... வாங்கி வந்த மளிகைப் பொருட்கள் முதல் கதவு கைப்பிடி, பூட்டு சாவி, செல்ஃபோன் என்று எல்லாவற்றையும் டெட்டாலில் நனைத்த ஸ்பான்ஞால் துடைத்து, அப்படியே வீட்டையும் லைசால் கொண்டு துடைத்து… வேலைகள் ஓய்வதில்லை.
அப்பாடாடாடா....
யாருப்பா அது பொழுது போகல. போர் அடிக்கிறது. வெளியில போகாம இருக்க முடியலன்னு சொல்றது :) வீட்டிலயே இருங்க. அரசுக்கு ஒத்துழைப்பு குடுங்க. நமக்காக பாடுபடும் காவல் துறை, மருத்துவத் துறை, துப்புரவு பணியாளர்கள், அரசு ஊழியர்களை நினைத்துப் பாருங்களேன்.
ஊரடங்கு – 5: – 10 ஏப்ரல் 2020
கொரோனா பீதியால் வெயிலின் தாக்கத்தைப் பற்றி யாரும் இங்கு சொல்வதில்லை என்று நினைக்கிறேன். இங்கு மிகுந்த புழுக்கமாகத் தான் இருந்தது. வியர்வையால் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் சோர்வைத் தந்தது. ஆனால் நேற்று முன்தினம் சிறு தூறலும்,நேற்று மழையும் பெய்ததால் திருவரங்கம் குளிர்ந்தது.
முன்னெச்சரிக்கையாக மின்தடை செய்யப்பட்டதால், பொழுது போகாமல் மகள் போரடிக்கிறது அம்மா என்றாள். இதுபோன்ற நாட்களில் நாங்கள் விளையாடிய கண்ணாமூச்சி, குண்டு கத்திரிக்காய்,
களிமண்ணால் சொப்பு சாமான் செய்து அதில் விளையாடியது பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன்.
நான் அப்போது 25 பைசா வாடகைக்கு எடுத்து வாசித்த அம்புலிமாமா, இரும்புக் கை மாயாவி காமிக்ஸ், வாசலில் வாரம் ஒருமுறை வரும் 'ஒண்ணரை ரூபாய் வண்டிக்காரர்'
(இன்றைய எதை எடுத்தாலும் 10 ரூபாய் கடை போல, பெரும்பாலான பொருட்கள் அவரிடம் 1.50 ரூ தான்), சைக்கிளில் ஒரு பெட்டியில் சீரக மிட்டாய், செர்ரி, டூட்டி ஃப்ரூட்டி, சூட மிட்டாய், பெப்பர்மிண்ட் போன்றவற்றை கொண்டு வருபவர்.
அவளும் சுவாரஸ்யமாக எப்படிம்மா அப்படியெல்லாம்
இருந்தீங்க!! ஏதாவது கலாட்டா பண்ணியிருக்கியா என்று கேட்டுக் கொண்டே வந்தாள். ம்ம்ம்:) அவளிடம் சொன்னதை அடுத்த பதிவில் உங்களுக்கு சொல்கிறேன்.
என்ன நண்பர்களே, இந்த
நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப்
பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!
மீண்டும் சந்திப்போம்…
சிந்திப்போம்…
நட்புடன்
நல்லதொரு வாசகம். கதம்பத்தை ரசித்தேன். பேஸ்புக்கிலும் வாசித்திருந்தேன்.
பதிலளிநீக்குவாசகமும், கதம்பம் பகிர்வும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குஇனிய காலை வணக்கம் வெங்கட்.
பதிலளிநீக்குஆதி போஸ்ட் முக நூலில் படித்தேன். நேந்திரங்காய்
பார்க்கவே இனிமை.
ஸ்ரீரங்கம் இன்னும் குளிரட்டும்.
ரோஷ்ணியின் கைவண்ணம் படு ஜோர்.
இனிய காலை வணக்கம் வல்லிம்மா....
நீக்குகதம்பம் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
காலை வணக்கம். கதம்பம் ரசித்தேன் என எழுத்த் தயக்கமா இருக்கு. பொருட்கள் கிடைக்கலை என்ற நிலை மனதை வருத்துகிறது.
பதிலளிநீக்குசிப்ஸ். ஆஹா .... இது ஆர்வத்தைத் தூண்டியதுபோல ஆலு டிக்கி தூண்டவில்லை.
கலைப் பொருட்கள் அருமை.
இனிய காலை வணக்கம் நெல்லைத் தமிழன்.
நீக்குசில பொருட்கள் கிடைப்பதில்லை - இதுவும் கடந்து போகும்.
சிப்ஸ் - நன்றி. டிக்கி எனக்கும் அவ்வளவாக பிடிக்காது.
கலைப்பொருட்களை ரசித்தமைக்கு நன்றி.
ஆலு டிக்கி யா? இன்னாமா அது? எப்படி செய்வது? கொரோனாவுடன் பொழுது இனிமையாகக் கழிகிறது போல?
பதிலளிநீக்குஆலு டிக்கி செய்முறை சுலபம் தான். இணையத்தில் கிடைக்கும் தேடுங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.
தமிழ் வலையுலகை மீண்டும் மணக்கச் செய்யும் ஒரு எண்ணம்...!
பதிலளிநீக்குதமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி...!!
தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய நடவடிக்கை...!!!
உருவாகியது புதிய வலைத்திரட்டி: வலை ஓலை
நமது, வலை ஓலை வலைத்திரட்டியில் பரீட்சார்த்தமாக 31 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
30ஆவது வலைத்தளம்: நினைத்துப் பார்க்கிறேன்
அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம்.
இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு
தமிழில் புதிய சொற்களை அறிமுகப்படுத்த ஓர் வலை அகராதி: சொல்
ஒரே பார்வையில் எமது தளங்கள்:
1. வலை ஓலை
2. எழுத்தாணி
3. சொல்
தங்கள் பதிவு - எமது திரட்டியில்: வலை ஓலை
முக்கிய அறிவித்தல் : தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன். காரணம், பதிவுகள் தானாக இணையும் வகையில், வலை ஓலை வலைத்திரட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தந்த பதிவுகள் உரிய மெனுவில் இணையும் வகையிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
நீங்கள் சரியான மெனுவுக்கான குறிச்சொல்லை தங்கள் பதிவில் இணைத்தால் மட்டுமே தங்கள் பதிவைத் தேடி, எமது வலைத் திரட்டிக்கு வரும் வாசகர்களுக்கு அதனை அடையாளம் காட்டும். ஆகவே, தங்களுக்குப் பிடித்த குறிச்சொற்களை இணைத்துக் கொள்வதோடு நின்று விடாமல், சிரமம் பாராது, எமது மெனுவில் உள்ள குறிச் சொற்களை அவதானித்து அதனையும் உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ளுங்கள்.
அனைவருக்கும் நன்றி!
-வலை ஓலை
தங்களது முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள் சிகரம் பாரதி.
நீக்குஅனைத்தும் சுவாரஸ்யமாக இருந்தது சகோ
பதிலளிநீக்குபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குபல வீட்டு வேலைகளை உருவாக்கி கொள்வதால், நேரம் செல்வதே தெரிவதில்லை ஜி...
பதிலளிநீக்குஇரண்டு வாரங்கள் ஆகப் போகிறது, இன்னும் கொடுத்த பட்டியல் படி மளிகை சாமான்கள் கிடைக்கவில்லை...
ஆமாம் - வேலைகளை உருவாக்கிக் கொண்டால் நேரம் குறைவாகவே இருக்கிறது தனபாலன்.
நீக்குமளிகைப் பொருட்கள் - தட்டுப்பாடு சில இடங்களில் அதிகமாகவே வாங்கி குவித்துள்ள மக்களாலும் உண்டாகி இருக்கிறது - 50 கிலோ கோதுமை மாவு வாங்கும் ஒருவரைக் காண முடிந்தது - சாதாரணமாக 5 கிலோ வாங்குபவர் அவர்! பத்து பேருக்குத் தேவையானதை ஒருவரே வாங்கிச் சென்றால் என்ன ஆவது....
உப்பேரி கொள்ளாம். மஞ்சள் நீர் தெளிக்காமலேயே நல்ல பொன் நிறம். டிக்கிக்கும் கட்லெட்டுக்கும் என்ன வித்தியாசம். Jayakumar
பதிலளிநீக்குஉப்பேரி கொள்ளாம்! எங்கள் வீட்டில் செய்யும்போது பொதுவாக மஞ்சள் நீர் தெளிப்பதில்லை ஜெயக்குமார் சந்திரசேகரன் ஜி.
நீக்குடிக்கி - கட்லெட் - பெரிதாக வித்தியாசமில்லை - ஒன்று தவாவில் வேக வைப்பது. இரண்டாவது பொரித்து எடுப்பது!
கதம்பம் அருமை
பதிலளிநீக்குகதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குநேத்திரங்காய் சிப்ஸ் பார்க்கவே சூப்பரா இருக்கு. ரோஷிணியின் கைவேலைகள் அருமை. வாழ்த்துகள்
பதிலளிநீக்குகதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராஜி.
நீக்குமளிகை பொருட்கள் நாம் கேட்பது கிடைப்பது இல்லை, அவர்கள் கொடுப்பதை வாங்க வேண்டும்.
பதிலளிநீக்குபிஸ்கட், பிரட் ,ரஸ்க் எல்லாம் கிடையாது கடையில்.
வாசகம் நன்றாக இருக்கிறது.
ஆதியின் கதம்ப நிகழ்ச்சிகள் முகநூலில் படித்தேன்.
ரோஷ்ணியின் கைவேலைகள் அற்புதம்.
மஞ்சள் வேப்பிலை, உப்பு கரைத்த கரைசலை வாசலில், வீட்டில் தெளிக்க சொல்லி வாட்ஸப் செய்திகள் வந்தது .(கிருமி நாசினி வேப்பிலை, மஞ்சள் )அதனால் எல்லோரும் மஞ்சள், உப்பை வாங்கி சென்று இருப்பார்கள், அப்புறம் காய், கனிகளை உப்பு, மஞ்சள் தண்ணீரில் நீராட்டி எடுப்பதாலும் அவை காலி ஆகி இருக்கும்.
கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...
நீக்குஉப்பேரி மனம் கவர்ந்தது.
பதிலளிநீக்குஉப்பேரி மனம் கவர்ந்தது - நன்றி கோமதிம்மா...
நீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குசெமையான மெனு
பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கஸ்தூரி ரெங்கன்.
நீக்குவாசகம் அருமை வழக்கம் போல்.
பதிலளிநீக்குஆதி உப்பேரி சூப்பரா இருக்கு. இங்கு காயாக கிடைக்கலை. ஆனா நேந்திரன் பழம் கிடைக்குது. பழம்பொரி செஞ்சேன் போன வாரம்.
ஊரடங்குநாலும் வீட்டில் வேலை சரியா இருக்கு. இங்கு ஒரு கேரளக் கடை அப்புறம் இந்த ஊர்க்காரரின் கடை இரண்டிலும் எல்லாமுமே கிடைக்கிறது. வேண்டும் என்றால் மட்டுமே வெளியில் அல்லாமல் போவதே இல்லை. வீட்டு வாசலிலே பெரும்பாலும் காய் வந்துவிடுகிறது. கடைக்குச் செல்லும் அவசியம் இல்லை. கடைக்குப் போனால் மாஸ்க்/அல்லது துணியால் கவர் போடாமல் உள்ளே அனுமதிப்பதில்லை. உள்ளே 3 பேர் தான் அனுமதி. கடையில் சைசைப் பொருத்து. உள்ளே சென்றவர்கள் பில் போட்டு வந்தபின் அடுத்தவர் உள்ளே போகலாம்.
இங்கும் கடைக்குப் போவதாக இருந்தால் அன்று போய் வந்ததும்தான் குளியல். கூடவே பைகள் எல்லாம் துவைத்துப் போட்டு விடுவது. மொபைல் ஃபோனை துடைப்பது என்றுதான்...நார்மலாகவே பைகளைத் துவைத்துவிடுவது. இல்ல கூடுதல் இந்த மொபைலை எல்லாம் துடைப்பது ஹா ஹா ஹா
கீதா
வாசகம், பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஆலு டிக்கியும் நல்லாருக்கு.
நீக்குரோஷ்னி கலக்கல்தான். அதுவும் பேப்பர் சுருட்டி ஃப்ளவர்வேஸ் செமையா இருக்கு.
ரோஷ்னி ராக்ஸ்!
அனைத்தும் ரசித்தேன் ஆதி
கீதா
ஆலு டிக்கி :) மகிழ்ச்சி.
நீக்குபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
அருமையான தொகுப்பு
பதிலளிநீக்குதொகுப்பு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்குமகளின் கைவண்ணங்கள் அழகு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநாங்களும் மரக்கறி வாங்கி வந்தால் குளியல்,தோயல்தான்.இதுவும் விரைவில் கடந்தால் நலமே.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குநல்ல கதம்பம்...
பதிலளிநீக்குநேரம் போக வில்லை என்று யாராவது கூறினால் எனக்கு வியப்பாக இருக்கிறது... ஏனென்றால் எனக்கு நேரம் போதவில்லை, நாள் முழுவதும் ஏதோ ஒரு காரியம் எனக்காக காத்துக் கொண்டே இருக்கிறது..
கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.
நீக்கு