வியாழன், 21 ஜனவரி, 2021

வந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி இரண்டு - பத்மநாபன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வந்துட்டாய்ன்யா வந்துட்டான் - பகுதி 1 பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


யாரையும் பழிவாங்க நினைக்காதே…! உன்னை ஏமாற்றியவர்கள், தன் கர்மவினையை அடைந்தே தீருவர்.... நீ அதிர்ஷ்டசாலியாக இருந்தால், அவை உன் கண் முன்னே நிகழும்.


******




தில்லி நண்பர் பத்மநாபன் அவர்களின் ஆக்கத்தில் தீநுண்மி குறித்த அவரது அனுபவம் - சங்கடமான அனுபவமாக இருந்தாலும் சுவைபடக் கூறியிருக்கிறார் - வழமை போலவே! நேற்றைக்கு வெளியிட்ட பதிவின் தொடர்ச்சியாக இன்றைக்கு இரண்டாம் பகுதியைப் பார்க்கலாம் வாருங்கள். 


*****





அடுத்த ஒரு மணிக்கூர்ல ஆம்புலன்ஸ் டிரைவர் போனில்  ஹரியான்வில அட்ரஸ் கேட்டாரு. இதுவேறயா!   ஹிந்தியில கேட்டாலே திக்கி முக்கற நான் ஹரியான்ந்தியில அவருக்கு புரிய வச்ச அஞ்சு நிமிஸத்துல ஒய்ங், ஒய்ங்க்குன்னு ஆம்புலன்ஸ்! எனக்கு ஒரே சந்தேகம்! மூஞ்சியை பாவம் போல நோயாளி மாதிரி வச்சுக்கணுமா, இல்ல வழக்கம்போல சாதாவா வச்சுக்கிடணுமா தெரியல்லையே. சரி! சாதாவாட்டே வச்சுப்போம். ஏதோ பிக்னிக் போற மாதிரி தோளில டிரஸ்ஸ அமுக்கி வச்சுருந்த ஏர்பேக்கை தோளில போட்டுகிட்டு அத்தை வீட்டுக்கு, சே, சத்தர்பூருக்கு கிளம்பியாச்சு.


ஆம்புலன்ஸ் ஒய்ங் ஒய்ங்க்குன்னு சிக்னல கூட மதிக்காம பயங்கர பந்தா காட்டிக்கிட்டு போகுது. போகுது, போகுது போய்க்கிட்டே இருக்குது. அதுக்குள்ள ஆம்புலன்ஸுக்கு உள்ள ஒரு நோட்டம் உடுவமா.


அது ஒரு பழைய ஆம்புலன்ஸ். அப்படியே நாய் புடிக்கிற வண்டி மாதிரிதான் இருந்தது. உள்ளே பேஷன்ட் படுக்கை சூப்பரா தூசியால தூவி வச்சிருந்தது. பின்னே, கொரோனா பேஷன்ட்டுக்கு மலர் தூவியா படுக்கை வச்சுருப்பாங்க. ஆனாலும் ஆம்புலன்ஸ் உள்ளே தூசு படியாம பாத்துருக்கலாம். ஆக்சிஜன் ஸ்டான்டு துருப்பிடிச்சு பரிதாபமா இருந்தது. அந்த ஒய்ங் ஒய்ங் மட்டும் இல்லேன்னா எனக்கு நாய் பிடுச்சுக்கிட்டு போற ஃபீலிங்  வந்திருக்கும். ரொம்பநாளா குப்பையில நின்னுக்கிட்டு இருந்த வண்டியை சைரனை மட்டும் சரி பண்ணி ஓட்டிக் கிட்டு இருக்காங்க போல. ஆனாலும் அந்த ஒய்ங் ஒய்ங் பந்தாவுக்கு ஒண்ணும் கொறவில்ல.


ஒரு மணிக்கூர் நேரத்தில குவாரண்டைன் சென்டர்கிட்ட வந்துட்டோம்போல. டிரைவர் வண்டியை கொஞ்சம் முன்னாலேயே நிறுத்தி போட்டிருந்த ட்ரஸ் மேலேயே  PPE போட்டு அஸ்ட்ரானெட்டு ஆயிட்டாரு. இல்லாட்ட உள்ளே விட மாட்டாங்களாமில்லா. நலலாத்தான்யா பயமுறுத்துறாங்க.  அந்த நேரத்தில மகள் போன் பண்ணி, குவாரண்டைன் சென்டர் போய் சேர்ந்தாச்சா. எப்படி இருக்கு. க்ளீனா இருக்கா, வசதியா இருக்கான்னு கேட்க,  இல்ல மக்களே! போய் போன் பண்ணறேன்னு சொல்லி வச்சுட்டேன்.


ஒரு வழியா அந்த கேம்பஸ் உள்ளே போயாச்சு. அது ஒரு பெரிய இருநூறு முன்னூறு ஏக்கருக்கு பிரம்மாண்டமா பரந்து  விரிஞ்ச இடம். ஏதோ ஒரு ஆன்மீக பணிக்கு நேர்ந்து விட்ட இடம். இப்போ கொரானோ குவாரண்டைனா உருமாறி பயன்படுது. குவாரண்டைன் சென்டர் முழுக்க இந்தோ திபத்தியன் பார்டர் போலிஸ் கட்டுப்பாட்டில இருந்தது. எனக்கு என்னமோ பத்து நாளைக்கு உள்ள போற மாதிரியே இருந்தது. சாதகத்துல பத்து நாளு உள்ள இருக்கணும்னு எழுதியிருக்கும் போல.


உள்ள ஒரு பெரிய கட்டடம் முன்னால பெரிய ஷாமியானா போட்டிருந்தது. அங்க ஒரு அம்பது அறுபது பேரு வரிசையா செயர்ல இருந்தாங்க.  ஆம்புலன்ஸ் அஸ்ட்ரானெட்டு என்ன அங்க இறக்கி விட்டுட்டு ஜோதியில கலந்துக்க சொன்னாரு.


சரி. ஒரு மூணு நாலு அஸ்ட்ரானெட்ஸ் சுத்தி சுத்தி வாராங்க. ஒரு அஸ்ட்ரா என் கையப் புடிச்சு விரலில இந்த பல்ஸாக்ஸி மீட்டரை சொருகி 98 ன்னு ஒரு துண்டு சீட்டுல எழுதி கூடவே வெப்பமானியை வச்சு 36.7 ன்னும் எழுதி கொடுத்து, அப்படியே ரத்த அழுத்தத்தையும் பாத்து 80/110 ன்னும் எழுதி கையில கொடுத்தாரு. இந்த கட் ஆஃப்புக்கு டாக்டர் சீட் கிடைக்காது. ஆனா பேஷன்ட் சீட் கிடைச்சது. அந்த துண்டு சீட்டை ஒரு கவுண்டருக்கு உள்ள இருந்த கவுண்டர்மணிகிட்ட கொடுத்தா அட்டையில B2  ஏரியான்னு எழுதி தூக்கிப் போட்டாரு. Authorised untouchability.


அதை எடுத்துக்கிட்டு இன்னொரு கவுண்டருக்கு போகச் சொன்னாங்க. அங்க இருந்தவரு ஒரு டாபர் சயவனப்பிராஷ், ஒரு டாபர் தேன் புட்டி, வைட்டமின் மாத்திரை பட்டை எல்லாம் கொடுத்து கூடவே பச்சைக்கலரு ஜிங்குச்சான்னு இரண்டு செட்டு பைஜாமாவும் மேலங்கியும் கொடுத்தாரு. ஆஹா! சீருடைப் பணியாளரா வேலை பார்க்கணும்கிற ஆசை இப்படி நிறைவேறியிருக்கக் கூடாதுதான். ஆனா ஒரு பெரிய நிம்மதி. பத்து நாளைக்கு துணி துவைக்கிற வேலை மிச்சம். தினசரிவெவ்வேறு நிறத்துல சீருடை கொடுத்தாங்க. ஆனா அந்த பச்சைக் கலரு மட்டும் கொஞ்சம் ஏர்வாடி வாசனை அடிச்சுது.


அட்மிஷன் போட்டாச்சு. பொண்டாட்டிக்கு ஒரு போனைப் போட்டு சொல்லிருவோம்னு போனைப் போட்டா கவரேஜ் இல்லை. MTNL போன் காலை வாரி உட்டுட்டில்லா. நாமளே கவர்ன்மென்டு போனை கைவிடக் கூடாதுன்னு வச்சிருந்தா அது நம்மள கைவிட்டுட்டுல்லா. சென்னையில பொண்டாட்டியும் மகளும் பரதானப் பட்டுக்கிட்டு கெடக்கா, மனுஷனுக்கிட்ட இருந்து போனைக் காணல்லையேன்னு. நான் என்ன செய்ய, இந்த MTNL இப்படி  empty-NL ஆகும்னு எனக்குத் தெரியுமா. பக்கத்துல வேறொரு கவர்ன்மென்டு குவார்டர்ஸ் ஏரியா ஆளுங்க மூணு பேரு சீரியஸா உள்ள சீட்டு விளையாட முடியுமான்னு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருந்தாங்க. அவங்க நாலு பேரு ஃப்ரெண்ட்ஸ்ல ஒருத்தருக்கு ரிஸல்ட் வரல்ல. நாளைக்கு அவரும் கண்டிப்பா வந்துருவார்னு அவங்க ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கிட்டாங்க. அவங்கள்ள ஒருத்தருக்கிட்ட போனை வாங்கி பொண்டாட்டிககு விஷயத்தை சொல்லி network கிடைச்சதும் போன் பண்ணுகேன்னு சொல்லிட்டேன். வாட்ஸ்ஆப் பண்ணக் கூட network  இல்லை. கொரோனா பாசிட்டிவ்னு தெரிஞ்சதும் வந்த டென்ஷனைவிட இந்த டென்ஷன் பெருசாப் போச்சு.


உள்ள போய் B2 ஏரியாவைக் கண்டு பிடிச்சோம். B2 வில் மட்டும் ஒரு நூறு நூத்தம்பது படுக்கை இருக்கும். எல்லாம் அழகான இளம் பச்சைக் கலர்  படுக்கைகள். பயந்த மாதிரி இல்லாம எல்லாமே நல்ல சுத்தமாகவே இருந்தது. அதுல ஒரு நூறு பேரு ஏற்கெனவே நான் இந்த ஏரியாவுக்கு சீனியராக்கும்னு தெனா வெட்டா(டி)யா படுக்கையில இருக்காங்க. நானும் ஒரு நல்ல படுக்கையாப் பார்த்து கொண்டு போன ஏர்பேக்கை வச்சாச்சு. பக்கத்துல ஏற்கனவே இருந்த சீனியர் எங்க சாப்பாடு போடுவாங்க, சோறு முக்கியமுல்லா! எங்க ஒண்ணு ரெண்டு செல்லணும்னுல்லாம் சொல்லி கொடுத்தாரு.


கூடவே கம்பளி, பெட்ஷீட், தலயணையெல்லாம் போய் வாங்கிக்க சொன்னாரு. ஏசி டிரெயின்ல  கொடுக்கற மாதிரி பெட்ஷீட், கம்பளி, தலையணை எல்லாம் வாங்கியாச்சு. நல்லவேளை கம்பளி கொடுத்தாங்க. ஏன்னா பிரம்மாண்டமான ஏசி ஓடிக்கிட்டே இருந்தது.  A1, A2, B1, B2..எல்லாத்திலயும் ஆண்கள் பெண்கள் எல்லோருமா சேர்ந்து ஒரு அறுநூறு பேருகிட்ட இருந்தாங்க. அங்கங்க அஸ்ட்ரானெட்டுங்க சுத்திக்கிட்டு இருந்தாங்க. ஆம்பள அஸ்ட்ராவா பொம்பள அஸ்ட்ராவான்னு கண்டு பிடிக்க முடியல்ல. டாக்டர் யாரு, கம்பவுண்டர் யாரு நர்சு யாரு ஒண்ணும் தெரியல்ல.


எல்லாம் செட்டிலாகி மணியைப் பாத்தால் இராத்திரி எட்டு மணியாச்சு. சாப்பாட்டுக்கு வரச்சொல்லி அறிவிப்பு. நம்ம சீனியர் என்னை கூட்டிக்கிட்டு சாப்பாட்டு வரிசைக்கு வந்தாரு. நல்ல சாப்பாடுதான். ரண்டு அரை இஞ்ச் தடிமனுல சப்பாத்தி, கொஞ்சம் சோறு, கொஞ்சம் முளை விட்ட சிறுபயறு, தால், ஒரு கூட்டு, ஒரு வாயைப்பயம். நல்ல சாப்பாடுதான். ஆனா எனக்குத்தான் அந்த சப்பாத்தியைப் பாத்து அலர்ஜியாப் போச்சு. இரண்டு பெட் தள்ளியிருந்த ஒருவர் இரண்டு ப்ளேட் வாங்கி வந்து தூள் கிளப்புறாரு. நல்ல ருசிச்சு சாப்பிடவும் கொடுப்பினை வேணுமுல்லா. சாப்பிட்டு முடிச்சு திரும்ப பெட்டுக்கு வந்து எவ்வளவு நேரம்தான் சும்மா இருக்கது. நல்லவேளையா உறக்கம் வந்துட்டது.


அடுத்த நாளு காலையில எனக்கு அஞ்சு மணிக்கெல்லாம் முழிப்பு வந்துட்டு. சரி என்கடன் காலைக்கடன் முடிப்பதேன்னு (டா)ஆய்லெட் காம்ளெக்ஸ்க்கு போனா எனக்கு முன்னாடி கடமையுணர்வோட ஒரு முப்பது நாப்பது பேரு. ஆனா ஒரு நூறு நிரந்தர ஆய்லெட், ஒரு நூறு நூத்தம்பது் தற்காலிக ஆய்லெட்டு, ஒரு நூறு  குளிமுறின்னு ஏற்பாடு இருந்ததுன்னால நல்ல ஆசுவாசமா நாளை ஆரம்பிச்சாச்சு.


அப்படியே திரும்ப பெட்டுக்கு வந்தா ஒரு ஆறுமணிக்கு பப்பரப்பாய்ங்க்ன்னு சத்தத்தோட அறிவிப்பு. இப்போ எல்லோரும் அவங்க அவங்க பெட் பக்கமே யோகா செய்யுங்கன்னு. எங்கயோ இருந்து ஒலிபெருக்கியில இரு கைகளை மேல்  நோக்கி தூக்கவும். இறக்கவும் அப்படி இப்படின்னு சொல்ல சொல்ல, காலியா கிடந்த ஒரு பெட் மேல ஒரு அஸ்ட்ரானெட்டு  செஞ்சு காட்டறாரு. நிறைய பேரு அவரு செய்யறதை பாத்து யோகாவை வச்சு செய்யறாங்க. என்னது, நானா! செஞ்சேன், செஞ்சேன். அய்யரு வூட்டுப் புள்ள ஆத்துல மீன்புடிச்ச மாதிரி நானும் யோகா செஞ்சேன்.


ஒருவழியா யோகா முடிஞ்சு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா ஒரு எட்டு மணிக்கு பிரேக்ஃபாஸ்டு வரிசை ஆரம்பிச்சாச்சு. நிறைய பேரு பெட்டைவிட்டு எழுந்து பிரேக் புடிக்காம ஃபாஸ்டா பிரேக்ஃபாஸ்டு வரிசைக்கு போறங்க. நானும் போய் வரிசையில நின்னாச்சு.


அப்புறம் என்ன ஆச்சு… அடுத்த பகுதியில் சொல்லி முடிச்சுடலாம்!



ரா.இ. பத்மநாபன்

புது தில்லி.

*****


என்ன நண்பர்களே, இன்றைய பதிவின் வழி பகிர்ந்த விஷயங்கள் பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டங்கள் வாயிலாகச் சொல்லுங்களேன்.


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


24 கருத்துகள்:

  1. எம்டிஎன் எல்;டாய்லெட் பிரயோகங்கள் சரளம்!  ஆமாம், ஏ ஸி போடக்கூடாது என்றுதானே சொல்வார்கள்?  இன்னும் பரவும் என்பார்களே..   எப்படி போட்டிருந்தார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஸி போடக்கூடாது என்று சிலர் சொன்னாலும், சில இடங்களில் போட்டே இருக்கிறார்கள் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பட்ட கஷ்டத்தை பாசிடிவ் மனதோடு பகிர்ந்துள்ளார். பூரண நலம் பெற்றார் என்று நம்புகிறேன் அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்ட கஷ்டத்தை பாசிட்டிவாகவே எழுதி இருப்பதும் நல்லது தானே. தற்போது அவர் பூரண நலம் கிரேஸ்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அய்யரு வூட்டுப் புள்ள ஆத்துல மீன்புடிச்ச மாதிரி நானும் யோகா செஞ்சேன்.....அப்பப்பா எதிர்கொண்ட நிகழ்வுகளைப் பார்க்கும்போது அனைவருக்கும் இது பாடம் எனக் கொள்ளவேண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்குமான பாடம் தான் இது முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. முழு நலம் பெற்ற வரிகளைப் படிக்கக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று இந்தத் தொடரின் கடைசி பகுதி வெளியிட்டு இருக்கிறேன் ஜனா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. செமயா எழுதியிருக்காரு.... எதையும் நகைச்சுவையோட எழுதவே பெரிய திறமை வேணும். சேட்டைக்காரன் மாதிரியே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எதையும் நகைச்சுவையோட எழுதவே பெரிய திறமை வேணும்// - உண்மை தான் நெல்லைத் தமிழன். அனைவருக்கும் இது வசப்படுவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஆக்சிஜன் மற்ற விவரங்களைப் பார்த்ததும், பிக்னிக்தான் போயிருக்காரு நமக்கு நிலைமையைச் சொல்ல, என்று தோன்றியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிக்னிக் - ஹாஹா... அதீத டென்ஷனில் தான் இருந்தார் அவர்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. நடந்த துயரத்தை விவரித்த விதம் திகைப்பையும் தருகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திகைப்பான விஷயங்கள் தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அடுத்த பகுதில எப்படி முடிக்கறது? என்ன என்ன தந்தாங்க, எப்படி இரண்டு மூன்று நாட்கள் பொழுது போனது, பத்திரிகை கொடுத்தாங்களா...இதெல்லாம் சுருக்குனு சொல்ல வச்சிடாதீங்க. நல்லா கேட்டு வாங்கிப் போடுங்க.

    ஆனாலும் கொரோனா பேஷண்ட், ஆம்பள அஸ்டிராவா இல்லை பொம்பளை அஸ்டிராவான்னு நோட்டம் விடுறது அவங்க வீட்டம்மாவுக்கெல்லாம் தெரியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்பள அஸ்டிராவா இல்லை பொம்பளை அஸ்டிராவான்னு நோட்டம் விடுறது வீட்டம்மாவுக்கு தெரியுமா - ஹாஹா... நல்ல கேள்வி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. இன்று தொடரின் கடைசி பகுதி வெளிவந்து விட்டது அப்பாவி தங்கமணி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. வேதனையைக்கூட ரசிப்பதற்கு பெரிய மனம் வேண்டும்.

    கொரோனா பயமே குறைந்து விட்டது அவ்வளவு நகைப்பு பதிவில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதனையைக்கூட ரசிப்பதற்கும் பெரிய மனம் வேண்டும் - உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  11. பரவாயில்லை. லஞ்சம் இல்லாமல் காரியம் நடக்கிறதே. தமிழ்நாட்டில் ஆம்புலன்ஸ் டிரைவர் நடத்துனர் இருவரும் ஆளுக்கு 200 ரூபாய் வாங்கினர். அதே போல் டெஸ்டுக்கு 3000 ரூபாய் வாங்கினர். இது எனது மைத்துனரின் கதை.

    இந்த MTNL இப்படி  empty-NL ஆகும்னு எனக்குத் தெரியுமா. கிவாஜவுக்கு தம்பி?

    A1, A2, B1, B2..எல்லாத்திலயும் ஆண்கள் பெண்கள் எல்லோருமா சேர்ந்து ஒரு அறுநூறு பேருகிட்ட இருந்தாங்க. A C compartment? 
    அய்யரு வூட்டுப் புள்ள ஆத்துல மீன்புடிச்ச

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகப் பெரிய, 10000 படுக்கைகள் கொண்ட தற்காலிக வசதி அந்த இடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  12. அண்ணாச்சி அண்ணாச்சி தான். என்ன ஒரு நகைச்சுவையான பதிவு. துன்பத்தையும் இன்பமாக பகிர்வது மிகவும் கடினமான ஒன்று. இவரோ அனாயசமாக கையாண்டு இருக்கிறார். அடுத்த பதிவை இன்னும் ஒரு இரண்டு நாட்கள் தள்ளி போடவும். முதலிரண்டு பதிவுகளை படித்து சிரித்து சிரித்து மாளவில்லை. மூன்றாம் பதிவையும் உடனே போட்டா உள்ளே இருக்கும் பார்ட் எல்லாம் வெளியே வந்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாச்சியின் நகைச்சுவை உணர்வு நீங்களும் அறிந்த ஒன்று தானே ஸ்ரீபதி அண்ணாச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....