புதன், 6 ஜனவரி, 2021

சஹானா இணைய இதழ் புத்தக வாசிப்புப் போட்டி ஜனவரி 2021


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பகிர்வினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


முடிவே இல்லாத போராட்டம் தான் இந்த வாழ்க்கை.  முடியும் வரை போராடு - வென்றுவிடலாம். 


******






அப்பாவி தங்கமணி என்று பதிவுலகத்தில் அறியப்பட்ட திருமதி புவனா கோவிந்த் அவர்கள் தற்போது சஹானா என்ற இணைய இதழை வெளியிட்டு வருவது நீங்கள் அறிந்ததே.  அவரது இணைய இதழில் இந்த ஜனவரி மாதம் மேலும் ஒரு போட்டியை அறிவித்து இருக்கிறார்.  இந்த போட்டி புத்தக வாசிப்பிற்கான போட்டி!  போட்டியில் மொத்தம் பத்து புத்தகங்களை தேர்வு செய்து விமர்சனம் செய்யக் கேட்டிருக்கிறார்.  விமர்சனங்களுக்கு பரிசும் உண்டு.  போட்டி பற்றிய முழு விவரங்களும் கீழே உள்ள சுட்டி வழி தெரிந்து கொள்ளலாம். 


புத்தக வாசிப்புப் போட்டி - ஜனவரி 2021






இந்த வாசிப்புப் போட்டியில் எனது “அந்தமானின் அழகு” மின்னூலும், என் இல்லத்தரசியின் ”லாக்டவுன் ரெசிபீஸ்: ஆதியின் அடுக்களையிலிருந்து” மின்னூலும் சேர்த்திருக்கிறார் திருமதி புவனா கோவிந்த் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இது தவிர மேலும் பத்து மின்னூல்கள் உண்டு.  மின்னூல்களுக்கான விமர்சனம் எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்.  


*****





முகநூலில் “வாசிப்பை நேசிப்போம்” இருக்கும் குழுமம் பற்றி முன்னரே எனது பதிவுகளில் சொல்லி இருக்கிறேன். குழுமத்தில் தொடர்ந்து பல நூல்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறார்கள். அலைபேசி அலப்பறைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பலவும் வந்து புத்தகம் வாசிப்பவர்கள் எண்ணிக்கையைக் கணிசமாக குறைத்திருக்கிறது என்று தோன்றினாலும், இன்னமும் நிறைய பேர் வாசிப்பை மட்டுமே ஸ்வாசிக்கிறார்கள் என்று பார்க்கும்போது மனது மகிழ்ச்சி அடைகிறது.    “வாசிப்பை நேசிப்போம்” குழுவினர் சென்ற வருடம் நடத்திய #Reading_Marathon2020 என்ற தொடர் வாசிப்பு போட்டியில் பங்கு பெறும் விதமாக எனது “ரத்த பூமி” மின்னூலை திரு ராம தேவேந்திரன் அறிமுகம் செய்திருக்கிறார்.  அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி.   திரு ராம தேவேந்திரன் அவர்கள் செய்த அறிமுகம் கீழே!


#Reading_Marathon2020

#RM522

#37/50

கடிதம்/பயணம் 

நூல்          : ரத்த பூமி (குருஷேத்திரம்)

ஆசிரியர்   : வெங்கட் நாகராஜ்

பதிப்பு.       : அமேசான் மின்நூல்


ஆசிரியர்  வெங்கட் நாகராஜ் பல பயண நூல்கள் வெளியிட்டுள்ளார். இந்த ரத்த பூமி (குருஷேத்திரம்) மின் நூலின் மூலமாக நம்மை மீன்டும் ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துசெல்கிறார்.  வாருங்கள் நாமும் பயணிப்போம் .


போரில் மடிந்த பல வீரர்கள், குதிரைகள், யானைகள் என எண்ணிலடங்கா உயிரினங்கள்  சிந்திய இரத்தத்தின் காரணமாக இந்த ஊரின் பூமியின் மண்ணின் நிறமே சிவப்பாக இருக்கும் என்று சொல்வதுண்டு. இப்போது அத்தனை சிவப்பாக இல்லை என்றாலும் மண்ணின் நிறம் மாறுபட்டே இருக்கிறது. இந்த ரத்த பூமியாம் குருக்ஷேத்திரத்திற்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களை, இந்த மின்னூல் வழி பார்க்க இருக்கிறோம். குருக்ஷேத்திரத்தில் பார்க்க வேண்டிய சிறப்பான இடங்கள் பல உண்டு – கீதோபதேசம் நடந்த இடம், Bபீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருந்த இடம், Bபிரம்மசரோவர், ஸ்தானேஷ்வர் கோவில், காளி கோவில், கல்பனா சாவ்லா கோளரங்கம் என பல இடங்கள் இங்கே உண்டு. சமீபத்தில் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் Bபிரம்ம சரோவரின் அருகே ஒரு சிறப்பான வெங்கடாஜலபதி கோவிலும் அமைத்திருக்கிறார்கள்.

ரத்த பூமி – குருக்ஷேத்திரம், Bபிரம்ம சரோவர், சர்வேஷ்வர் மகாதேவ், Bபீஷ்ம குண்ட், ஜ்யோதிசர், கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம், ஷேக் சஹேலியின் கல்லறை, ஸ்தானேஷ்வர் கோவிலும் குருத்வாராவும், ஹர்ஷ் கா டிலா, ரத்த பூமியில் பார்க்க வேண்டிய இடங்கள், குருக்ஷேத்திரத்தில் திருப்பதி பாலாஜி கோவில்... என பல பகுதியாக நம்மை இந்த அற்புதமான மற்றும் புராதன இடத்திற்க்கு நம்மை அழைத்து செல்காறார்.

 

இந்த மின்நூலில் வழியாக நாம் காணவேண்டிய ஏராளமான இடங்களை நம் வீட்டிற்கே வந்துள்ளது . தனது அனுபவங்களை பகிரும் போது அந்த அனுபவங்களை படிப்பவர்களை தன் கூடவே அழைத்துசெல்லும் அருமையான மொழிநடையில் ஒவ்வொரு பயணகட்டுரையும் கொடுப்பதில் நண்பருக்கு நிகர் நண்பரே!!  என நம்மையும் கூடவே அழைத்து செல்லும் விதமே மிக அழகு !!! நன்றி - ராம தேவேந்திரன்.


*****


வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழுவில் எனது மின்னூலை அறிமுகம் செய்திருக்கும் திரு ராம தேவேந்திரன் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ”ரத்த பூமி” மின்னூலை அமேசான் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் – கிண்டில் அன்லிமிட்டட் கணக்கு இருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்கள் ரூபாய் 70/- செலுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே செல்லலாம்! 


இன்றைய பதிவு வழி உங்களுடன் சில தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. பதிவு பற்றிய உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்! நாளை மீண்டும் வேறோரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்,



வெங்கட் நாகராஜ்

புது தில்லி.





16 கருத்துகள்:

  1. போட்டியில் உங்கள் புத்தகங்கள் வாகை சூட வாழ்த்துகள்.  விமர்சனமும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனங்களுக்கான போட்டி தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சார்.
    இரு போட்டிகளும் வாசிப்பவர்களை ஒன்று திறட்டும் சிறந்த அறிவியக்கச் செயல்பாட்டை செய்வது மகிழ்ச்சி.
    தங்களின் மூன்று நூல்கள் இடம்பெற்றதும் மிக்க மகிழ்ச்சி.
    நாங்களும் அதில் பங்கேற்கிறோம்.
    அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்புப் போட்டி நல்ல விஷயம் தான் அரவிந்த். இப்படியான குழுக்கள் முகநூலில் இயங்குவது நல்லதொரு விஷயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. "சஹானா" வாசிப்புப் போட்டி பற்றிய பதிவுக்கு நன்றிகள். வாசிப்பை நேசிப்போம் குழுவில் விமர்சனம் பார்த்தேன், நல்ல அறிமுகம்.நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி.

      நீக்கு
  4. மின்னூல் விமர்சனம் அருமை... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்புப் போட்டி நடத்துவது நன்று. தங்கள் இருவரின் படைப்புகள் அதில் இடம்பெற்றது மகிழ்ச்சி. வாசிக்கிறேன்.

      நீக்கு
    2. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. வாசிப்புப் போட்டி நடத்துவது நல்ல விஷயம் தான் கயல் இராமசாமி மேடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராம. தேவேந்திரன் ஜி.

      நீக்கு
  6. விமரிசனம் நன்றாக உள்ளது. போட்டியில் உங்கள் நூல்கள் வெற்றி பெறவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....