ஞாயிறு, 3 ஜனவரி, 2021

லோலா - பிலிப்பைன்ஸ் விளம்பரம்/குறும்படம்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறில் மீண்டும் ஒரு குறும்படம்/விளம்பரப் படத்துடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.  இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கும் விளம்பரம்/குறும்படம் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து.  


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல! அமைவதை அழகாய் மாற்றுவதே வாழ்க்கை


******



நான் இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கும் குறும்படம்… விளம்பரம் என்று கூட சொல்லலாம் - பிலிப்பைன்ஸ் மொழியில் - சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு Mother’s Day சமயத்தில் வெளியிடப்பட்ட படம்.  Nestle கம்பெனி நீங்கள் அறிந்த ஒன்றே. அவர்களது Nido என்கிற ஒரு பானத்திற்கான விளம்பரம் இது.  லோலா என்கிற பிலிப்பைன்ஸ் வார்த்தைக்கு ஆங்கில வார்த்தை Grand Mother - பாட்டிம்மா! ரொம்பவே கண்டிப்பானவர் என்று தோன்றினாலும் அவர் காட்டும் பாசம்! மனதைத் தொடும் விளம்பரம் இது! Different Times Same Love! எனும் Tagline உடன் இருக்கும் இந்த விளம்பரத்தினை நீங்களும் பார்த்து ரசிக்கலாமே!

 

காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம்! அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்! 

 

For our Lolas!

 

நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம்/விளம்பரம் உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

 

நட்புடன் 

 

 

 

வெங்கட் நாகராஜ் 

புது தில்லி

16 கருத்துகள்:

  1. குறும்படத்தை ரசித்தேன்.  வாசகம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் வெங்கட். சில பல காரணங்களால்
    வலைப்பூக்களுக்கு வர முடியவில்லை.
    இந்த ஞாயிறு பதிவு அருமை.
    அப்படியே சாப்பிடுவேனே மாம்மீ'
    நினைவுக்கு வந்தது. பாட்டிகள் இல்லாமல்
    உலகம் ஓடாது. நல்ல நடிப்பு. நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் வல்லிம்மா.

      முடிந்த போது வலைப்பக்கம் வாருங்கள். அவசரம் ஏதுமில்லை.

      பாட்டிகள் இல்லாமல் உலகம் ஓடாது - உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நல்ல விளம்பரம்/குறும்படம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம்/குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கடைசி பெஞ்ச்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ரசித்தேன் ஜி குறும்படத்தை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. குறும்படத்தைப் பின்னர் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது குறும்படம் பாருங்கள் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....