திங்கள், 3 ஜனவரி, 2022

அவரும் நானும் - தொடர் - பகுதி இருபத்தி இரண்டு


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

OUR DESTINY IS NOT CREATED BY THE SHOES WE WEAR…. BUT BY THE STEPS WE TAKE.

 

******



 

அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று 

பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு

பகுதி ஒன்பது பகுதி பத்து பகுதி பதினொன்று

பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று பகுதி பதினான்கு

பகுதி பதினைந்து பகுதி பதினாறு பகுதி பதினேழு 

பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது பகுதி இருபது 

பகுதி இருபத்தி ஒன்று

 

சென்ற பகுதியில் எங்களின் திருவரங்க வாசத்தின் போது அவ்வப்போது விடுமுறை கிடைத்து 'அவர்' இங்கு வரும் நாட்களில் நிகழும் சம்பவங்களை பகிர்ந்து கொண்டிருந்தேன். உரையாடலாக பகிரும் போது  வாசிப்பவர்களுக்கு சுவாரசியத்தைத் தரும் என்ற எண்ணத்தோடு இந்தப் பகுதியிலும் அப்படியே பகிர்ந்து கொள்கிறேன்.

 

அவர்: காய் கட் பண்ணனுமா??

 

நான்: ஆமாம்!

 

அவர்: சரி! எடுத்துக் குடு! 

 

அப்படியே அந்த சாப்பிங் போர்ட், கத்தி, பீலர், நறுக்கினதை போட ஒரு தட்டு, வேஸ்ட் போடற டஸ்ட் பின், காய்கறி அலம்ப ஒரு பாத்திரத்துல தண்ணி.....!!

 

நான்: இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா??

 

அவர்: தேவைப்பட்டா கேட்கறேன்! அப்படியே சூடா ஒரு வாய் காஃபியும் குடுத்துடு..🙂

 

நான்: இதுக்கு நானே பண்ணிக்கலாம் போல இருக்கே..!

 

அவர்: நீயே பண்ணிக்கறியா! ஒனக்கு ஒத்தாசை பண்ணலாமேன்னு நினைச்சேன்..! வேணாங்கிற...! சரி! விடு!

 

நா போய் கொஞ்ச நேரம் கட்டய சாய்க்கட்டுமா..:!!!

 

நான்: அடடா! தெரியாம ஒளறிட்டேன்..! தயவு செய்து கட் பண்ணித் தாங்கோ! சரியா!...:)) 

 

ஹா..ஹா..ஹா..

______________________

 

நான்: பாத்திரம் எல்லாம் இருக்கட்டும்! அப்புறமா நா தேய்ச்சுக்கிறேனே!

 

அவர்: ஏன்! நா ஒழுங்கா தேய்க்கலயா!

 

நான்: அதில்ல! அம்மா பார்த்தா என் புள்ளய பாத்திரம் தேய்க்க வுட்டுட்டாளேன்னு நினைச்சுப்பா!

 

அவர்: வேணும்னா! எங்கம்மாவுக்கும் தேச்சு குடுத்துட்டு வரவா!!...🙂

 

(ஹா..ஹா..ஹா..)

 

டெல்லி நாட்களைப் பற்றி சற்று பேசிக் கொண்டிருந்தோம். 

 

நான்: அங்க நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்படியிருக்கா?? 

 

நான்: நாம ரெண்டு பேரும் ஒருநாள் பூரா தூங்கிண்டே இருந்தோம்! ஞாபகம் இருக்கா! சாப்பிடுவோம்! தூங்குவோம்! யாருமே  நம்ம டிஸ்டர்ப் பண்ணல! சான்ஸே இல்ல..🙂

 

இங்க அப்படியெல்லாம் இல்ல..! ஏன் இன்னும் கோலம் போடல! ஏன் இன்னைக்கு துணி தோச்சு போடலன்னு வரிசையா கேள்விகள்...🙂

 

அவர்: ம்ம்ம்...! எதையும் காதுல வாங்கிக்காதம்மா! உன்னால என்ன முடியுமோ! எப்ப முடியுமோ பண்ணு! அது போதும்!

 

நான்: ம்ம்ம்.

 

நான்: அங்கெல்லாம் பக்கத்துல யார் இருக்கான்னே தெரியாது!  இங்க அக்கம் பக்கத்து வீட்டுக்காரா எல்லாம் நீங்க எனக்கு ஒத்தாச பண்றதப் பார்த்தா ஏதாவது வம்பு பேசுவா!

 

அவர்: யார் பேசுவா! எல்லா வீட்டுலயும் என்ன மாதிரி ஒரு அடிமை சிக்கிட்டு இருப்பான்! அவன் தன்னோட வேலைய யார் பார்த்தாலும் பரவாயில்லன்னு பண்ணிண்டு தான் இருப்பான்...:))

 

நான்: (முறைத்துக் கொண்டே) இப்ப என்ன சொல்ல வரீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா!  

 

இந்த தடவ ஆறு மாசம் கழிச்சு தான வந்திருக்கீங்க! அதுவரைக்கும் நான் என்ன பாத்திரமே தேய்க்காமயா வெச்சிருந்தேன்??

 

அவர்: சரிடி! சரிடி! கோபத்துல மூக்கு, கன்னம் எல்லாம் பிங்க்கா மாறிடுத்து பாரு! இதுல அந்த பூனக் கண்ணால வேற முறைக்கிறியா! பயமா இருக்கு...:))

போய் வேற வேலையப் பாருடி!

 

என் பொண்டாட்டிக்கு நா வேலை பண்ணித் தர்றத பத்தி யார் என்ன சொல்ல முடியும்...:))

 

இப்படியாக ஒவ்வொரு முறையும் ஏதேனும் கலாட்டாக்களுடன் தான் நாட்கள் நகரும். பின்பு இதையெல்லாம் மனதில் அசைபோட்டுக் கொண்டே அடுத்த சில மாதங்கள் நகரும்..🙂 அவர் ஊருக்கு கிளம்பும் நாளில் கண்ணீர் ததும்பும் என் கண்கள்!!

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

12 கருத்துகள்:

  1. உரையாடல்கள் புன்னகைக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க தனபாலன் சகோ.

      நீக்கு
  3. மகிழ்ச்சியான நினைவலைகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க கில்லர்ஜி சார்.

      நீக்கு
  4. காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!

    சுவாரசியமான உரையாடல்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....