புதன், 5 ஜனவரி, 2022

அவரும் நானும் - தொடர் - பகுதி இருபத்தி நான்கு


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

RICHNESS IS NOT ONLY MEASURED BY MONEY; YOU CAN ALSO BE RICH BY YOUR HABITS, VALUES, VISION AND DISCIPLINE.

 

******




 

அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று 

பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு

பகுதி ஒன்பது பகுதி பத்து பகுதி பதினொன்று

பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று பகுதி பதினான்கு

பகுதி பதினைந்து பகுதி பதினாறு பகுதி பதினேழு 

பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது பகுதி இருபது 

பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு 

பகுதி இருபத்தி மூன்று

 

சென்ற பகுதியில் எங்கள் இருவரின் அடுத்தடுத்த கட்ட முன்னேற்றங்களைப் பற்றி எழுதியிருந்தேன். வருடங்களும் ஓடியது! மகளும் வளர்ந்து கொண்டிருந்தாள்! அவளுக்கான மெனக்கெடுதலிலும், எனக்கான நேரத்தை உபயோகமாய் செலவிடுதலிலும் நாட்கள் கடந்து சென்றன. மனதின் ஓரத்தில் ஏக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும் நம்பிக்கையுடன் வாழ்க்கை சென்று தான் கொண்டிருக்கிறது. 

 

அவர்: புவனா! நாம அங்க போனோம் இல்லையா! அப்ப நா உனக்கு...

நான்: எங்க!

அவர்: அதாண்டா! லாஸ்ட் டைம் போனோமே!

நான்: புரியவே இல்ல..!! 

அவர்: நம்ம அங்கே போயிருக்கும் போது நான் உனக்கு கூட சுத்தி  காமிச்சேனேடா!

நான்: நா எங்க அங்க வந்தேன்!

அவர்: ஏய்! விளையாடாதே! நான் உனக்கு காமிச்சேன்!

நான்: சத்தியமா இல்ல! நீங்க யார அங்கே கூட்டிண்டு போனீங்கன்னு தெரியலையே..🙂

அவர்: ஆமாண்டி! என்னோட கேர்ள் ப்ரெண்ட் வந்தா! அவளுக்கு தான் சுத்தி காமிச்சேன்! போறுமா! இப்போக் கூட என்னோட தான் இருக்கா! சரியா!

நான்: அப்பாடா! நான் தப்பிச்சேன்!  ஜாலி!

ஹா..ஹா..ஹா..🙂

_____________________

'பஸ்ல ஏறினா நீ அஞ்சு டிக்கெட் வாங்கணும்னு என் பெரிய மாமா கூட சொல்வார் தெரியுமா.🙂 எல்லாப் பக்கமும் இருக்கறவாள நான் என் மூக்கால இடிப்பேனாம்...🙂

 

யானை தன் தலைல தானே மண்ண வாரி போட்டுக்குமாம்!

 

இவளா எதையாவது ஒளறி எங்கிட்ட மாட்டிக்கறா! அப்புறம் நான் எதையாவது சொல்லிட்டா, என்ன கிண்டல் பண்றதே உனக்கு வேலையா போயிடுத்துன்னு சொல்றா...🙂

 

ஏண்டா செல்லம்! இப்ப நானா அம்மாவ  கிண்டல் பண்ணேன்! இவளே Wanted வண்டில ஏறிடுறா..:)) அப்புறம் என் வாய் சும்மா இருக்கறதில்ல..🙂

 

ஹா..ஹா..ஹா..

________________  

 

சரி! நா இந்த உலகத்துல இல்லன்னா நீங்க எப்படி ஃபீல் பண்ணுவீங்க??

 

நானா??

 

பட்டாசெல்லாம் வெடிச்சு குத்தாட்டம் போடுவேன்...🙂

 

கேட்கிறா பாரு கேள்வி! போய் வேலையப் பாருடி! 

 

இப்படியெல்லாம் அறிவுப்பூர்வமா கேள்வி கேட்கணும்னு ஏன் தோணறது தெரியுமா!!

 

ஏன்!!!

 

ம்ம்ம்! அந்த மெகா சைஸ் மூக்கால...🙂 ரன்வே மூக்கி..:)) ஹா...ஹா..ஹா..

 

_______________ 

 

புரிதலும், நம்பிக்கையும் கொண்டவர்களால் மட்டுமே எதையும் எளிதில் எடுத்துக் கொள்ள முடியும்..🙂 காத்திருந்து கிடைக்கும் சந்தோஷத் தருணங்களால் வாழ்க்கை இனிமையாகிறது.

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

18 கருத்துகள்:

  1. சிறு உரையாடல்களாயிருந்தாலும் அதில் புலப்படும் சிறு ஏக்கம்...   சீக்கிரம் எல்லாம் சரியாக வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை அதன் வழியே சென்று கொண்டிருக்கிறது ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. வாழ்க வளமுடன் நாளும் நலமுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. ம்ம்ம்ம், விரைவில் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதாம்மா.

      நீக்கு
  4. விரைவில் உங்கள் எண்ணம் நிறைவேறட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. ஆதி அண்ட் வெங்கட்ஜி காலை வணக்கம்.

    ஆதி! உரையாடல்கள் சுவாரசியம்...ரசனையானவை

    பதிவிலிருந்து நீங்கள் இருவருமே ரொம்ப மிஸ் பண்றீங்க ஒருவருக்கொருவர் என்று தெரிகிறது. நல்லது விரைவில் நடக்கட்டும்.

    கீதா

    கருத்தை காலையிலிருந்து போட்டு போட்டு ரொபோ செக்யூரிட்டி செக்கிங்க் முடிந்தும்!!!! ஃப்ளைட்ல ஏறவே முடில!!! ஹாஹா இப்பவாச்சும் முடிகிறதா என்று பார்க்கிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதாஜி.

      நீக்கு
  6. இப்போது வந்திருக்கும் என்று நினைக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அன்பின் ஆதி. நியைமை சரியாகி
    எல்லோரும் ஒன்றாக இருக்க இறைவன் அருளவேண்டும்.
    சம்பாஷணைகள் மிக அருமை. ரசம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூழல் சரியாகி விடும் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது வல்லிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. மங்களகரமாக ஆரம்பித்து அருமையாக எழுதி எங்களையும் கொஞ்சம் பழைய நினைவுகளை அசை போட வைத்து வெள்ளிவிழா கொண்டாடுவது போல இருபத்தி ஐந்தாவது பகுதியில் முடித்து இருக்கிறீர்கள் 👍
    உங்கள் நம்பிக்கை விரைவில் நடந்தேற எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐🙏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தத் தொடரின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி நிர்மலா ரங்கராஜன் ஜி. தங்களது நினைவுகளையும் இத்தொடர் மீட்டெடுத்தது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. நல்லதொரு வாசகம். உங்கள் எண்ணம் நிறைவேறட்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி. பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....