வியாழன், 21 ஏப்ரல், 2022

ஆதங்கம் - அண்ணாமலை பல்கலைக் கழகம் - பகுதி ஒன்று - சுப்ரமணியன்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய மாலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவையும் இன்று காலை வெளியிட்ட ருபின் பாஸ் பதிவைனையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த பதிவினை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

யாரையும் வெறுப்பது கூடாது. அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். தனித்து வாழாதீர்கள். மனம் விட்டு பிறரிடம் பழகுங்கள்.

 

******

 

சற்றே இடைவெளிக்குப் பிறகு நண்பர் சுப்ரமணியன் அவர்கள் எழுதும் ஒரு பதிவு - அவர் படித்த அண்ணாமலை பல்கலைக் கழகம் தொடர்பான பதிவு - இரண்டு பகுதிகளாக வெளிவரும் என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன் - வெங்கட் நாகராஜ். ஓவர் டு சுப்பு அண்ணாச்சி!

 

*****





அன்பு நண்பர்களே, மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன். காரணம் அதே வேலைச் சுமை தான். ஏப்ரல் 2021-இல் பணிமூப்பு அடைந்த தினம் எனது அலுவலகத்தில் நான், அதிகாரி மற்றும் ஒரு கடைநிலை ஊழியர் மட்டுமே இருந்தோம்.  காரணம் அதே தான் - தீநுண்மியின் இரண்டாம் அலை தலைவிரித்துக் கொண்டிருந்த சமயம்மிகப்பல நண்பர்களை இழந்த கொடுமையான காலம்.  சாதாரணமாக தலைநகர் தில்லியின் மத்திய அரசு ஊழியர்களின் பணிமூப்பு தினத்தன்று மூன்று முக்கிய நிகழ்வுகள் நடக்கும்! 



  1. மூப்படைபவர் தெரிந்த அனைவரிடமும் விடைபெறும் நிகழ்வு. 
  2. மூப்படைபவருக்கு அமைச்சக சக ஊழியர்கள் அளிக்கும் வெகுமதியுடன் கூடிய விருந்தோம்பல். 
  3. மூப்படைபவரின் குடும்ப உறுப்பினர்களை அலுவலகம் (அமைச்சகம்) அழைத்தல்.

 

இது மூன்றும் எனக்கு நிகழ கொடுத்து வைக்கவில்லை. எனதுடன் பணிபுரிந்த ஒரு அதிகாரி அச்சமயம் மருத்துவமனையில் (அதே தீநுண்மி தான் காரணம்) இருந்ததால் என்னை ஒரு வருடத்திற்கு ஆலோசகராக (அதாங்க Consultant) பணியமர்த்தி விட்டார் எங்கள் அதிகாரி. எவ்வளவோ மறுத்தும் கட்டாயப்படுத்தி விட்டார். இங்கே (தலைநகரில்) பெரும்பாலும் அரசுப் பணிமூப்பு பெற்றவர்கள் தில்ல்யிலேயே தங்க வேண்டியிருந்தால் இத்தகைய ஆலோசகராக ஏதேனும் ஒரு அமைச்சகத்தில் சேர்ந்து விடுவார்கள். எந்தப் பணியில் இருந்தாலும் ஆலோசகர் என்றே அழைக்கப்படுவார்கள். அதே வேலை செய்ய வேண்டியிருக்கும் என்றாலும் எந்த வித படிகளோ (Allowances) சலுகைகளோ இருக்காது என்பதைத் தவிர அரைச் சம்பளம் தான் கிடைக்கும். சரி சரி அதிக தொல்லை கொடுக்காமல் (Build up கொடுக்காமல்) விஷயத்திற்கு வா என்று சொல்லும் உங்கள் உள்ளக் குமுறல் (அதாவது Mind Voice) கேட்கிறது . 

 

சமீபத்தில் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission - UGC) ஒரு சுற்றறிக்கை வெளியிட்டு இருக்கிறது.  அதன்படி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளமையால் யாரும் அங்கே பட்ட வகுப்புகளில் (Through Distance Education) சேர வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதைக் கண்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். என்னுடைய ஆதங்கத்தினை பகிரவே இந்தப் பதிவு. இது ஒரு பொது விஷய பதிவாக ஏற்றுக் கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்.  இந்தியாவில் கல்விமாநிலப் பட்டியலில் விடப்பட்டுதால், பல்வேறு மாநிலங்களில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள், கல்லூரிகளில், அது அதே மாநிலமோ அல்லது வேறு மாநிலமோ, சேர்வதற்கு பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. 

 

இன்றைய தில்லி நிலவரப் படி, தில்லி பல்கலைக் கழகத்தின் கீழ் 64 கல்லூரிகளில் இளங்கலை படிப்பிற்கு மொத்தம் 69544 இடங்கள் உண்டு. விண்ணப்பங்களோ 2 லட்சத்திற்கும் மேல் வருவது வழக்கம். ஆகையால் முதல் பட்டியலில் Cut Off மதிப்பெண்கள் 100% ஆகவே இருக்கும்! இது அடுத்தடுத்த நிலைகளில் பின்னங்களாக (Decimal) குறைந்து உயர்ந்த பட்சமாய் வெளியிடப்படும் ஐந்தாம் பட்டியலில் மதிப்பெண்கள் Cut Off 90-களில் முடியும்.  ஆக தில்லியில் எந்த கல்லூரியில் சேர வேண்டுமென்றால் குறைந்த பட்சம் 90% மதிப்பெண்கள் பள்ளி இறுதி வகுப்பில் பெற்றிருக்க வேண்டும்.  பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சிக்கான 35% முதல் 90% வரை பெற்றவர்களின் நிலை?

 

நான் 1977-இல் பள்ளி முடித்தபோது தமிழகத்தில் 11 + 1 + 3 முறை (11 வரை பள்ளி, பின்னர் ஒரு வருடம் PUC [Pre University Course] முடிவாக மூன்று வருடம் இளங்கலை படிப்பு. இது பல மாநிலங்களில் 10 + 1 வருடம் Intermediate + 3 வருடம் கல்லூரி என இருந்தது.  பின்னர் இந்தியா முழுவதும் 10 + 2 + 3 முறை அமலுக்கு வந்தது. பள்ளிகளில் மேலும் 1) மாநில கல்வி வாரியம் (State Board), மத்திய பள்ளி கல்வி வாரியம் (CBSE), இடைநிலைக் கல்வி வாரியம் (Intermediate Education System) மற்றும் அயல்நாடு வாழ் மக்களின் குழந்தைகளுக்கான ICSE (Indian Certificate of Secondary Education)  இவையனைத்தும் பள்ளிப்படிப்புகளே! ஸ்ஸப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே! இப்படி பல வழிகளில் ஒன்றில் படித்து இளங்கலைப் படிப்பிற்கு வந்தால், அம்மாடியோவ்! அரசு பல்கலைக் கழகம் (Government University), சுய ஆட்சிமை/தன்னாட்சி கல்லூரி (Autonomous College), மருவு பல்கலைக்கழகம் (Deemed University) (இது தற்போதைய UGC சட்டப்படி Deemed to be University என அழைக்கப்படுகிறது). 

 

இது தவிர விவசாயப் பல்கலைக்கழகங்கள், பொறியியல்/தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், மருத்துவப் பல்கலைக்கழகங்கள், இந்திய அறிவியல் கழகம் (Indian institute of Science), இந்திய தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology), இந்திய மேலான்மைக் கழகம் (Indian Institute of Management) - யம்மாடியோவ் முடியல! - கல்லூரிகள் சார்ந்த பல்கலைக்கழகங்களின் கல்விக் குழுக்கள் பாடத் திட்டத்தை வடிவமைத்து UGC ஒப்புதல் பெற்று நடத்தும். என்னடா இவன் நெம்ப டீடெய்லா பாடம் நடத்துறானே என்கிறீர்களா? வருகிறேன் விஷயத்திற்கு - அது அடுத்த பகுதியில்!

 

நட்புடன்

 

சுப்ரமணியன்

******

 

பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே!  விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

6 கருத்துகள்:

  1. //ஓவர் டு ப்ரேம்!//

    ???

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இன்னும் விசயத்திற்கு வரவில்லை... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. ஆஹா இந்தப் பதிவும் மாலையில் வந்ததால் மிஸ் செய்திருக்கிறேன். 2 வது பார்த்து இங்கு ஓடி வந்தேன்.

    சுப்பு அண்ணாச்சி! முதலில் உங்கள் எழுத்து ரசனையான எழுத்து!

    அடுத்து விஷ்யம் - சிபிஎஸ்ஸி, அந்தந்த மாநில அரசுப் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், ஐ சி எஸ் ஸி....இன்னும் பல...என்று பல சிலபஸ் உள்ள பள்ளிகள்...நீங்கள் சொல்லியிருப்பது போல் இது அத்தனையும் கல்லூரியில் குவியும் போது தொல்லைகள் பல. என் வீட்டில் கல்வித்துறை என்பதால் அங்குள்ள ஊழல்கள் எல்லாமே அத்துப்படி. அதனால் பல பாதிப்புகளும் எங்களுக்கு உண்டு.

    கருத்தில் சொன்னதுண்டு அல்லாமல் பதிவில் அதிகம் பேசியதில்லை. அண்ணாமலை பல்கலைக்கழகம் பத்தி சொல்ல்யிருக்கீங்க..வேறு பல பல்கலைகளும் வேறு வகையில் உண்டு.

    அடுத்த பகுதிக்குப் போகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....