ஞாயிறு, 21 டிசம்பர், 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி நாற்பத்தி ஒன்பது - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******


முருகா, IPL பாத்துட்டு படிப்ப கோட்டை விட்டுடாதன்னேன். கேக்கல. இப்ப exam சுமாரா எழுதிட்டு என் காலக் கட்டுண்டு என்ன பிரயோஜனம்? சரி, சரி, Progress report ஐ என்கிட்ட கொண்டுவா திருச்சிற்றம்பலம்னு நானே கையெழுத்து போட்டுத் தரேன்...


I love u pa❤️😘


ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

ஓம் நமோ குமாராய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻


*******



நல்லா பைக் வாகனத்தில் அமர்வது போல் உக்காந்துக்கோ முருகா.. பறக்க சௌகரியமா இருக்கும்...


இரு மயிலண்ணா, பச்சை மயில் வாகனனேன்னு பாடிகிட்டிருக்காங்க என் பக்தர்கள்.... முடிஞ்சதும் கிளம்பலாம்.. நான்  சொல்லும்போது பறந்தா போதும்.. ok? 


(ஹ்ம்ம் பக்தர்கள்ட காட்டற கருணையை என் மேலயும் கொஞ்சம் காட்டலாம்.. எத்தனை நேரம் இப்படியே நிக்கறது.... அவங்க அடுத்து உள்ளம் உருகுதையா ஆரம்பிக்காம இருக்கணும் 😟...)


ஓம் நமோ குமாராய நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



கிருஷ்ணா தன் நெத்திலர்ந்து நெத்திச் சுட்டிய எடுத்து எனக்கு ஒட்டி விட்டிருக்கான். இன்னும் என்னென்ன பாக்கியோ... அரிச்சா கூட நம்மளால எடுத்துக்க முடியாது... ஹ்ம்ம் இதுக்கு ஒரு முடிவு கண்டு பிடிச்சாகணும்.....


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻



*******




ராதா நீ கொஞ்சம் தள்ளி உக்காந்தாதான் நான் வாசிக்க முடியும்.உன் கருவிழிகள்  நாவல் பழம் மாதிரி இருக்கா? அத பாத்துக்கிட்டே இருந்ததுல  flute ல பல்லு பதிஞ்சுடுத்து...


Breakfast அ miss பண்ணிட்டு கதை சொல்லாத கிருஷ்ணா....


ஓம் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



Pose குடுத்தது போதும் சீக்கிரம் வா கணேசா.. தண்ணில ரொம்ப நேரம் நின்னா ஜலதோஷம் பிடிச்சுக்கும்..

அப்புறம் கஷ்டம்....


அதுக்குத்தான் நீ உடனே கஷாயம் போட்டுக் குடுப்பியேம்மா, என்ன கவல? என்ன, கொஞ்சம் மூக்க சிந்தறது கஷ்டம்...


 (அதுசரி,  நீ தும்மினா வீட்டு சாமானெல்லாம் பறந்துடுதே... அதான்..😟)


ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻


*******



அம்மா ஜாக்கிரதையா போயிட்டு வா. முருகனை நான் பத்திரமா பார்த்துக்கிறேன். என்

ரூமுக்குள்ள மட்டும் அவனை போகவேண்டாம்னு சொல்லிவை.போனதடவ நான் விநாயக சதுர்த்திக்கு போயிட்டு வந்து பார்த்தா 4,5 பொம்மை உடைஞ்சிருந்தது, 2,3 காணும், அப்புறம்...


சரி சரி கணேசா மிச்சத்த நான் வந்ததுக்கப்புறம் வச்சுக்கலாம்..சமத்தா இருங்க ரெண்டு பேரும் அப்பாவப் படுத்தாம என்ன?😘


ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ 🙏🏻🙏🏻🙏🏻


*******



சிம்மா சமத்தா இங்க  இரு.இதோ நான் போயிட்டு 10 நாள்ல வந்துடறேன், என்ன?


ஏன் தேவி நானும் வரேனே please..


வேண்டாம் சிம்மா  உன்னால சும்மா இருக்கமுடியாது, வர்றவங்களைப் பாத்து உர்.. ரும்ப.. கண்ணு வேற சிவப்பா இருக்கு.. ஸ்டைல் ஆ பிடரி மயிர வேற பெருசா வளத்து வச்சிருக்க. அப்புறம் என் பக்தர்கள் வரத்துக்கே பயப்படுவாங்க… அதான்..


(அதுக்காக நான் என்ன மியாவ் னா கத்தமுடியும்...🤨)


ஓம் ஶ்ரீ அன்னதாயை நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

21 டிசம்பர் 2025


8 கருத்துகள்:

  1. வாசகம் யதார்த்த வரிகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. IPL வரி சிரிக்க வைதுவிட்டது.

    ஆனால் பாருங்க தந்தைக்கே உபதேசம் செய்தவராக்கும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அவங்க அடுத்து உள்ளம் உருகுதையா ஆரம்பிக்காம இருக்கணும்//

    சிரித்துவிட்டேன் படக் என்று!

    நெத்திச் சுட்டி புலம்பலும் சிரிக்க வைத்தது. ஃபோட்டோக்கு நல்லா போஸ் கொடு என்று கிச்சா முகத்தைப் பிடித்திருப்பது போல் தோன்றியது!

    ஹலோ ரசிகப் பெருமக்களே! என்று விநாயக் பாப்பா சொல்வது போலத் தோன்றியது! குட்டி பாப்பா அழகு அந்தச் சிரிப்பும்...

    என் பர்த்டேக்கு மக்கள் எல்லாரும் கொழுக்கட்டையா பண்ணிக் கொடுக்கறாங்கன்னு நீ இது வரை பண்ணியே தரலை இந்த முறை மோதகம் கொழுக்கட்டை எல்லாம் பண்ணிக் கொடுத்ததுதான் எனக்கு ஸ்பெஷல்மா...தாங்க்ஸ்!!

    சிம்மா - புன்சிரிப்பு!

    எல்லாமே ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. 1.  ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டா...   ஓம் என்ற மந்திரத்துக்கு பொருள் சொன்னவனுக்கே ஓங்கி வளர்ந்து அறிவுரையா?!!  

    "பார்க்கும்போதெல்லாம் பயங்கரமாய் வளர்ந்து காண்போரை கலவரப்படுத்தாதே கயியிலாயனே...   பணிந்து கேட்கிறேன்..  பயப்படுத்தாமல் பைந்தமிழில் பையனைப்போல் பாசம் காட்டு பரமா.."

    2.  முருகனுக்கருள்வாய் நன்னெஞ்சே...  ஹா  ஹா  ஹா  

    டீக்கடை வாசலில் பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினாப்போல நின்னு பேசிக்கிட்டிருக்கேன்.  முடிஞ்சதும் நீல மயிலேறி நீட்டாக பறந்திடுவேன்..!

    பதிலளிநீக்கு
  5. 3.  இளைய கண்ணனுக்கு இளம் பசுவா...   அரிக்காமல் பார்த்துக் கொள்வான் அரி..ஹரி ஹரி..

    "பசுவும் பரந்தாமனும் கண்ணிமைக்காமல் பார்பபது எதையோ...  பலகாரமா, பசு வெண்ணெயா?"

    4  ப்ரேக்பாஸ்ட்டை பிரேக் பண்ணிட்டாரா கண்ணன்..  அடப்பாவமே.. 

    செவிக்குணவு இல்லாதபோதுதானே வயிற்றுக்கு!

    பதிலளிநீக்கு
  6. 3.  இளைய கண்ணனுக்கு இளம் பசுவா...   அரிக்காமல் பார்த்துக் கொள்வான் அரி..ஹரி ஹரி..

    "பசுவும் பரந்தாமனும் கண்ணிமைக்காமல் பார்பபது எதையோ...  பலகாரமா, பசு வெண்ணெயா?"

    4  ப்ரேக்பாஸ்ட்டை பிரேக் பண்ணிட்டாரா கண்ணன்..  அடப்பாவமே..  செவிக்குணவு இல்லாதபோதுதானே வயிற்றுக்கு!

    "முத்தம் நீ தருவாய் என்று மூச்சு முட்ட நிற்கிறேன்.  முத்தம் உனக்கல்ல உன் குழலுக்கு என்கிறாயே...  இது நியாயமா ராதா?"

    பதிலளிநீக்கு
  7. 4.  "மூக்கு சிந்தறது கஷ்டம்"  ஹா..  ஹா..  ஹா... 
    "நீ தும்மினா வீடு சாமானெல்லாம் பறந்துதுதே.."   ஹா..  ஹா..  ஹா..  

    "அபயஹஸ்தம் காட்டுகிகிறாயா,  'ஹாய்' என்று சொல்கிறாயா?  காலத்துக்கேற்றபடி கருணையும் மாறுகிறது விக்னேஷ்.."

    5.  ஹா..  ஹா..  ஹா..  புகார் விநாயகரா...

    "அம்மா...  மூஞ்சுறுக்கும் மூச்சு முட்டுதாம்.. என்னாலயும் மலை ஏறமுடியலை.  அப்பாவ கேட்டதா .சொல்லும்மா...  அவர் கீழ இறங்கும்போது கண்டுக்கறேன்னு சொல்லு"

    பதிலளிநீக்கு
  8. 6.  பத்துநாள் லீவுல எங்க போறாளாம் பார்வதி?!!

    "சிங்கநடை போட்டு சிகரத்துல ஏறு' ன்னு பாட்டு வருதுங்கறதுக்காக உன்னையும் படையப்பா ரீ ரிலீசுக்கு அழைச்சுக்கிட்டு போ முடியாது புரிஞ்சுக்கோ..."

    எல்லா படங்களையும், வரிகளையும்  ரசித்தேன்.  என் எண்ணங்களையும் எடுத்துரைத்தேன்!  ஹிஹிஹி....

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....