அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
பழங்கள் போறுமா கிருஷ்ணா?
இந்த நடைக்கு போறும் பாட்டி.. வெச்சுட்டு வரேன் எங்கேயும் போயிடாத… இல்ல ஒண்ணு பண்ணு கூடையோட என் பின்னாடி வரயா? காலி பண்ணிட்டு கூடைய திருப்பித் தந்திடறேன்… பதிலுக்கு எனக்காக எடுத்து வெச்சிருக்கற வெண்ணையும் தயிரும் தரேன்.. ok வா? இந்த deal நமக்குள்ள இருக்கட்டும். இதெல்லாம் அம்மா விஷுக்கனி வெக்கத்தான்… எனக்காகன்னு நெனச்சுக்காத...
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
என்னது நம்ம கணேசன் கையில எப்பவும் இருக்கற மோதகம் லட்டு எதையும் காணோம்? சிந்தினா ஒரு கை பாக்கலாம்னு வந்தா ஆறு கரத்துலயும் ஒண்ணும் இல்ல? ஒருவேளை இன்னிக்கு ஏதாவது விரத நாளோ? நம்ம boss க்கு விரதமெல்லாம் இருந்து உடம்ப வருத்திக்கற பழக்கமெல்லாம் இல்லையே? ம்ம்? 🤨🤔
ஓம் (G)கம் கணபதயே நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
ஏம்மா, அப்பா அழகா புலித்தோல் shawl போட்டுக்கிட்டிருக்காரே அதையே coat ஆ தச்சுப் போட்டுக்கிட்டிருந்தா super ஆ இருந்திருக்கும் இல்ல? எங்களுக்கும் வாங்கிட்டீன்னா, கைலாச குளிருக்கு இதமா இருக்கும்....
அதுவும் அந்த ரெண்டாவது brooch க்கு நடுவிலிருந்து கங்கை வரமாதிரி அதை வெச்சுக்கிட்டிருக்காரே பிரமாதம் மா…
சும்மா இருங்க கண்ணுகளா.. போட்டோக்காக வழக்கமான necklace 🐍 வேண்டாம்னு என்னோட தோடு necklace, brooch etc குடுத்தேன்.அதுக்கு அவர் சம்மதிச்சு போட்டுக்கிட்டதே பெரிய விஷயம்...
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
கணா கண்ணா அந்த மோதகத்த எங்கிட்ட கொடுத்துட்டு நிம்மதியா தூங்கு.. நீ எழுந்தப்பறம் தரேன்..
அது கைல இருந்தாத்தான் தூக்கமே வருதுப்பா (கன்னுக்குட்டி வேற அத உத்துப் பாத்துக்கிட்டிருக்கு. எதுக்கு வம்பு..) நீ மொதல்ல இந்த விளக்க கொஞ்சம் நகத்துப்பா, relaxed ஆ கால நீட்டிக்கிறேன்...
(அதான.. மோதகத்தப் பத்தி பேசினா divert பண்ணுவான்..)
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
கிருஷ்ணாக்குத்தான் என் பேர்ல எத்தனை பிரியம்? வாஞ்சையா என் தலைல கைய வெச்சுண்டிருக்கான். ஆமா, ரெண்டு கையும் flute வாசிக்கறதுல busy ஆ இருக்கு, அப்புறம் எப்படி??🙄என் ப்ரமையோ?🤔ரொம்ப யோசிச்சா மண்ட சூடாகுது.... வாசிப்ப கவனிப்போம்....
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
அக்ஷய திருதியைக்கு எனக்கு என்ன அருள் செய்யப் போறீங்க வேலவா? அதிகமா வேண்டாம் 100 பவுன் காசும் & 10 கோடி பணமும் போதும் இப்போதைக்கு...
நிறைய தர்மம் செய்யும் மனசத்தான் குடுக்கப்போறேன்..
அப்ப எனக்கு?
குடுக்க ஆரம்பி. தானே கிடைக்கும்...
ஓம் சரவண பவாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
முத்து, நவரத்தின கற்கள் எல்லாம் பதிச்சு நகை, டிரஸ் எல்லாம் அற்புதமா இருக்கு முருகா. நல்லா உறுத்தும்தான். அதனால என்ன, நாம அழகா தெரியணும், அதான குமரா முக்கியம்? ஆமா, வலது கை விரல்ல ஒண்ணு free யா இருக்கே? அம்மா கவனிக்கலயோ? அடடா...
உனக்கு வர வர நக்கல் ஜாஸ்தியாயிடுச்சு மயில் bro. வீட்டுக்கு வா.... வெச்சுக்கறேன்...
ஓம் ஷண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
3 மே 2026








இன்றைய வாசகம் சூப்பர் வாசகம்.
பதிலளிநீக்குகீதா
1. ஹூம் இதுக்கு வெண்ணை கொடுத்திருக்கலாம்! கிச்சாவின் மைன்ட் வாய்ஸ்!
பதிலளிநீக்கு2. மூஞ்சூர் ஆட்டைய போட்டிருச்சோ?
3. சிவலோக ஃபோட்டோகிராஃபர் யாரப்பா!!! கண்ணாடில தெரியறாப்ல
4. நான் தூங்கினாலும் மோதகம் கீழ விழாதுப்பா. நீ கைய எடுப்பா.
7 வலதுகை விரல்ல AI விட்டிருச்சு போல!!
கீதா
இன்றைய வாசகம் ஒரு கவிதை!
பதிலளிநீக்குபடங்களையும் வரிகளையும் ரசித்தேன்.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குபடங்களும்,அதற்கேற்ற வரிகளும் ரசித்து படித்தேன் அருமை.