சனி, 30 மே, 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி எழுபத்தி மூன்று - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட ஊர் சுத்தி - அடுத்த பயணம் - முன்னுரை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******



ஆஹா எல்லாமே rose கலர்ல super ஆ அம்சமா இருக்கு பாக்க. மகாதேவர் கழுத்து & இடுப்பு ருத்ராக்ஷ மாலை மட்டும் சாயம் முக்கல போல இருக்கு.... ஆமா, இந்த நாகாபரணம்

🐍  எப்படி rose கலர்ல...🤔 


உஷ்ஷ்.... என்ன நந்தி bro? கொம்புக்கு பூசலாம் எனக்கு பூசக்கூடாதோ... சட்டய உரிச்சுப் போட்டா ஆச்சு....


ஹி...ஹி… அதான!

அழகா இருக்கீங்க snake...😬 (கொஞ்சம் தள்ளியே நிப்போம்....😟)


 ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻


*******



ஏம்மா, கணேசனப் பாரு, கண்ணு அப்படியே சொருகிப்போயி 

ரசிச்சு சாப்பிட்டுண்டிருக்கான், பக்கத்துலயே போக முடியாது… at least அவன் வாகனத்துக்கு குடுத்ததுல பாதி கூட எனக்குக்  கிடையாதா?? (ஓர வஞ்சனையா இருக்கே...😕)


இரு ஷண்முகா உனக்குத் தனியா வெச்சிருக்கேன், தரேன். அவனுக்கு இதுவே போறாது.. பாவம்... வாகனமும் அவனைச் சுமக்கணுமில்ல? அதான்..


ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻


*******



என்னை மாதிரியே காம்பினேஷன்ல உடை உடுத்திக்கிட்டா ஆச்சா? கொண்டை இல்லையே? அதுதான  அழகே!😏


என்ன முணுமுணுக்கற மயில் bro? 


இடுப்புல கையும்  வேலைப் பிடிச்சிக்கிட்டிருக்கிற அழகும், அலை அலையாய் கூந்தலும்... ஆஹா.... கொள்ளை அழகு… கந்தா..🥰ஆமா அம்மா உங்களுக்கு என்ன hair oil use பண்றாங்க??... (Divert பண்ணுவோம்...😕)


ஓம் ஷண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻


*******



சரி சரி வெண்ணையை கடைஞ்சுண்டிருக்கேன். முடிச்சிட்டு கண்டிப்பா தருவேன்....

அதுக்குத்தான??😘


சே சே, உன்னைக் கொஞ்சக் கூடாதாம்மா??? (நீ குடுக்கலைன்னா எனக்கு எடுத்துக்கத் தெரியாது, இல்ல???)


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



கிருஷ்ணா எவ்வளவு அழகா தன் தாமரைப் பாதத்து விரலை வாயில் வெச்சுண்டு சிரிச்சுண்டு ஆலிலைல மிதந்து போறான் பாத்தியா? நாமும் வேணா ஆத்துல இறங்கி  அவனோடயே அவனை ரசிச்சுக்கிட்டு போகலாமா?


எதுக்கு? நம்ம கொம்பு பட்டு இலை கிழியறதுக்கா? மரியாதையா இங்கிருந்து ரசிக்கறதோட நிறுத்திக்கோ… ok?🤨


(சே ஒரு தாமரை இலையாவாவது பிறந்திருக்கலாம்😒...)


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



வாசனை பூ கிடைக்கலென்னா விட வேண்டியதுதான, இந்த ஜெவந்தி மாலை தேவையா இந்த வெயிலுக்கு? என் dress கலருக்கு பொருத்தமா இருக்காம்...பெரும தாங்கல...

அம்மா, இன்னும் எத்தனை நேரம் நான் இப்படி balance பண்ண வேண்டியிருக்கும்,  ம்ம்ம்?🤨

(சமத்து குழந்த ஒண்ணு அகப்பட்டுதுனா போச்சு.....😕)


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



புலி, மயில் bro, மூணு தேவிகளும் கருணை பொழியற முகத்தோட எப்படி அருள் பண்றாங்க இல்ல? அதுவும் லக்ஷ்மி தேவிக்கு காசு குடுத்து மாளல.. குடம் overflow ஆகுது பாருங்க... 🤭


ஆமா அன்னம் sister. அப்படியே கீழ பாத்தே வியந்துக்கிட்டிரு… அவங்க பின்னால பாக்காத ok? உனக்குக் கொஞ்சம் பயந்த சுபாவம் இல்ல?


ஓம் தேவ்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

30 மே 2026


2 கருத்துகள்:

  1. வண்ணமிகு படங்களை பார்த்து மனதில் எழுந்த எண்ண வரிகளை ரசித்தேன், புன்னகைத்தேன்.

    பதிலளிநீக்கு
  2. ரோஸ் கலர் நிஜமாகவே மனதைக் கவர்கிறது எனக்குப் பிடித்த கலரும் கூட!

    ஹாஹாஹா அதானே வெயிலுக்கு எதுக்கு ஜெவ்வந்தி மாலை காம்பு உறுத்தாதோ?!!!

    படங்களும் வரிகளும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....