செவ்வாய், 16 ஜூன், 2026

Indoor Games at CGV - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட குஃப்ரி, மதிய உணவு மற்றும் நார்க்கண்டா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



விஜி வெங்கடேஷ் அவர்களது இல்ல வளாகத்தில் நடந்த சில விஷயங்கள் குறித்த பதிவு - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ். 


******


Indoor Games at CGV - முதல் நாள் அனுபவம் - 12.6.2026 :



நான் CGV வந்து இரண்டு வருஷங்கள் ஆகிவிட்டன. இந்த CGV Community-யில் indoor games facility (யும்) இருக்கிறது. ஆனால் நான் இதுவரை போனதில்லை.


நேற்று  சத்சங்கத்திற்கு வந்த தோழிகளிடம் நீங்கள் யார் யார் வருகிறீர்கள் IG (indoor games) விளையாட என்று கேட்டு,  எந்த நாள், எந்த நேரம் அங்கு meet பண்ணுவது என்றும் முடிவெடுத்தோம். 


உடனே இன்று TVP group (தீராத விளையாட்டுப் பெண்கள் group) என்று ஆரம்பித்து மளமளவென உறுப்பினர்களைச் சேர்த்து welcome messages ஐயும் தட்டிவிட்டேன்.


இன்று மாலை 8 pm க்கு Indoor games ஹாலுக்கு முதல் முதலாக வலது கால் வைத்து விஜயம் செய்தேன்.


முதல் முதலாகப் போனதால் குரு வந்தனம், விநாயகர் துதியுடன் ஆரம்பித்தோம். ஏகப்பட்ட பேர் வந்ததால் எந்த game முதலில் யார் யார் விளையாடுவது என்பதைத் தீர்மானம் செய்தோம். இன்று எனக்கு game partner Smt. கிரிஜா.


முதலில் pool game - billiards (அது billiards ஆ snooker ஆ என்பதையும் ஆய்ந்து தெளிந்து) விளையாட பிள்ளையார் சுழி போட்டோம்.எனக்குப் பழைய படங்களில் பணக்கார ஹீரோ ஸ்டைலாக அந்த குச்சியை (cue stick) பந்துகளுக்கு முன்னால் வைத்து குனிந்து கொஞ்.......ச நேரம் (நாம் பொறுமை இழக்கும் அளவுக்கு) aim பண்ணி தட்டி விட சல் சல்லென balls குழிக்குள் விழுவதைப் பார்த்ததிலிருந்து அந்த விளையாட்டின் மேல் ஒரு ஈடுபாடு.


என்ன பெரிய விஷயம், carrom மாதிரிதானே, அங்க striker இங்க stick என்று அலட்சியமாக ஆரம்பித்தேன். பார்த்தால் ஒவ்வொரு பந்தும் (கிட்டத்தட்ட 14) நல்ல கனம்… tennis ball போல😧. stick ஐ சரியாகப் பிடிக்கக் கற்று(!!??) அதை முன்னோக்கி வேகமாக நகர்த்த அது சிறிதும் மனசாட்சியே இல்லாமல் பந்துகளை ஏறெடுத்தும் பார்க்காமல்  வேறு பக்கம் சென்றது😕.


பின்னர் நீள வடிவ billiards  டேபிளின் இரு (side) பக்கமாக நின்றுகொண்டு (holes எங்கள் அருகேதானே இருக்கும்!😊) சர் சர் என்று balls ஐ குழிக்குள் போட்டுத் தள்ளினோம். பின்னர் எங்களை நாங்களே பாராட்டிக் கொண்டு அடுத்த game carrom ஐ ஆரம்பித்தோம்.


மானாவாரியாக powder ஐ carrom போர்டில் அள்ளித் தெளித்ததில் கை வைப்பதற்கு முன் வெண்ணையாக வழுக்கிக் கொண்டு குழிக்குள் விழுந்தது… striker☹️.


Smt. கிரிஜாவாவது நிறைய coins போட்டு சேர்த்து வைத்திருந்தார், minus போட்டால் எடுத்து வைக்க.நான் போட்டதே ஒன்றோ இரண்டோ... அதையும் மன பாரத்தோடு தாரை வார்த்தேன்😞.


ரொம்ப நாட்கள் (மாதங்கள்) கழித்து carrom விளையாடுவதால் சற்றுத் தடுமாற்றம்… அவ்வளவுதான்... மற்றபடி நான் சாம்பியன் range தான் (என்று தப்பாக நினைக்க வேண்டாம்… நாலு தடவைக்கு ஒரு தடவை நானும் ஜெயிப்பதுண்டு (opponent அதான் நம்மளைக் கட்டியவர் - இரக்கப்பட்டு விட்டுக் கொடுத்தால்😊).


Smt. கிரிஜா பிரமாதமாக ஆடி ஜெயித்தார். நடு நடுவே எங்கள் சொந்தக் கதைகளும் மலரும் நினைவுகளாக எங்கள் மனத்தோடு மிக நெருங்கிய மும்பையைச் சுற்றி மலர்ந்தன..


பேச்சில் சுவாரசியம் கூடினால் விளையாடுவதை நிறுத்திவிட்டு கதைப்போம். பிறகு மனமிரங்கி எனக்காக கிரிஜா என் coins சிலதையும் போட்டுக் குடுத்தார்😊😇😁. நன்றி கிரிஜா mam🤗👍🏻🙏🏻. விளையாடி முடித்தபோது ஒரு மணிநேரம் போனதே தெரியவில்லை.


அந்த ஹாலிலிருந்துதான் லைப்ரரி ரூமுக்குப் போகும் வழி இருக்கிறது. அங்கும் உள்ளே நுழைந்து சில books ஐ நோட்டம் விட்டேன்.


ஏகப்பட்ட ஹாரி பாட்டர் books மற்றும் சிறுவர்களுக்கான புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. சுதா மூர்த்தி யின் ஒரு book கண்ணில் பட்டது.


யாரும் இப்போது எந்த லைப்ரரிக்கும் போவதில்லை, புத்தகங்களைப் படிப்பதுமில்லை. (e-books, kindle, Spotify youtube கதை சொல்லிகள் etc etc வந்த பிறகு).யாராலும் ஸ்பரிசிக்கப் படாமல்  அனாதைகளாக புத்தகங்கள்....😒


Physical புத்தகங்களின் காகித வாசனையோடு  அவற்றைப் புரட்டி புக்மார்க் வைத்து படித்ததையே சில சமயம் மகிழ்ந்து திரும்பத் திரும்பப் படித்து அசை போட்ட ஞாபகங்கள் நினைவில் நிழலாடின… அது ஒரு கனாக்காலம்...


IG ரூமிலிருந்து வெளியில் வந்தோம்… தொடர்ந்து alternate days (திங்கள், புதன், வெள்ளி) அங்கு 8 PM க்கு ஒன்று சேர்வது என்று முடிவெடுத்துப் பிரிந்து வீடு நோக்கி நகர்ந்தோம்...


ஆமாம், நிறைய பேர் வந்ததாக எழுதியிருக்கியே யார் யார் வந்தார்கள், Smt கிரிஜாவைத்தவிர என்று நீங்கள் கேட்பது காதில் விழுந்து விட்டது. அந்த விஸ்தாரமான பெரிய IG ஹால் முழுவதும் எங்களுக்கே எங்களுக்குத்தான்🤗 (எங்களிருவருக்கு மட்டுமே😊) 


இன்றிலிருந்து ஆரம்பம் என்பதைத் தெளிவாக குரூப்பில் நான் போடாததால் நாங்கள் இருவர் மட்டும் அந்த ஹாலின் விஶ்தீரணத்தை நன்கு உணர்ந்து அனுபவித்தோம்...


அந்த IG ஹாலின் (1st floor) ஒரு பக்கம் முழுவதும் french windows இருந்ததால் அங்கிருந்து சாலையும் உதயம் dept stores, வெளிச்சங்களை இறைத்துக்கொண்டு செல்லும் சாலையில் விரையும் வாகனங்கள் யாவும் கூட நன்றாகத் தெரிந்தன...👌🏻👌🏻


சுதந்திரமான, நிறைவான சந்தோஷமான ஒரு மணித்துளி இன்று கிடைத்தது… பிரபஞ்சத்திற்கு நன்றிகள் 🙏🏻🙏🏻


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

16 ஜூன் 2026


4 கருத்துகள்:

  1. பில்லியர்ட்ஸ் விளையாட்டு வர்ணனையை ரசித்தேன்.  விளக்குமாறால் பெறுக்கித்தள்ளுவது போல குச்சியால் பந்துகளை தள்ளி விட்டுவிட வேண்டியதுதானே!!

    பதிலளிநீக்கு
  2. //வழுக்கிக் கொண்டு குழிக்குள் விழுந்தது… striker//
    // அதையும் மன பாரத்தோடு தாரை வார்த்தேன்//
    // இரக்கப்பட்டு விட்டுக் கொடுத்தால்//

    கேரம் அனுபவமும் சூப்பர்.  வார்த்தைக்கு வார்த்தை ட்விஸ்ட் வைக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. படிப்பாரின்றி பரிதாபமாகக் 
    காத்திருக்கின்றன
    நூலகத்தில் நூல்கள்.
    தேற்றுவாரின்றி விசும்புகின்றன 
    யாரும் பார்க்காதபோது!

    பதிலளிநீக்கு
  4. விளையாடினால் என்ன, விளையாடாவிட்டால் என்ன, மனநிறைவையும் சந்தோஷத்தையும் இந்த அனுபவம் கொடுத்திருந்தால் நோக்கம் வெற்றிதானே!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....