ஞாயிறு, 14 ஜூன், 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி எழுபத்தி ஐந்து - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******



என்னது, நாம வாசிக்கவே ஆரம்பிக்கல அதுக்குள்ள எங்கிருந்தோ ஒரு குழலோசை கேக்குது?


நான்தான் கிருஷ்ணா மாலியோட record போட்டு விட்டேன், உனக்காக.. 


அப்ப நான் வாசிக்கற 

மாதிரி pose குடுத்தா போதுங்கறியா???


போட்டேன்னா!! கேட்டுட்டு அது மாதிரி வாசிக்கறதுக்காக...


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



ஏன் மயில் bro, பட்டாம்பூச்சியோட colour combination பாத்தியா? எத்தனை அழகா இருக்கு இல்ல?


சரிதான்.... ஆனா என்னை மாதிரி multi colour இல்லையே!


ஆனா ஒவ்வொரு பட்டாம்பூச்சியுமே வேற வேற கலர்ல இருக்குமே! நீ பாத்ததில்லையா...


சரி முருகா வேலை எடுத்துண்டு கிளம்பு. மழை வர மாதிரி இருக்கு.... (விட்டா (திருப்)புகழ் பாட ஆரம்பிச்சுடுவான்...😕)


ஓம் ஷண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻


*******



ராதா என்னவோ தான் கிருஷ்ணனோட  ஏகாந்தமா இருக்கறமாதிரி இருக்கா, கண்ணு சொருகிப்போயி? பாவம், இல்ல மயில் bro?


அவன் வாசிப்பு அப்படி! இப்போ நாம இல்லையா.... பாரு  அன்னபக்ஷிகள் கூட இங்கதான் வந்துக்கிட்டிருக்குங்க...


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



என்ன கிருஷ்ணா, எப்பவும் ஆலிலைல படுத்துக்கிட்டுதான இந்த மாதிரி pose குடுப்ப???


ஆமாம்மா, ஆனா நான் இப்ப யோகா கத்துக்கறேன் இல்ல? அதான்... நீயும் பண்ணிப் பாரு easy தான்...


சர்தான்...😕பாத்து! பாதம் சுளிக்கிக்கப் போகுது...


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻



*******



நீ நெனச்சாதிரி எல்லாமே நீலக் கலர்ல இருக்கே தேவி பூ முதற்கொண்டு? இன்னும் என்ன குறை?


நீலக் கல் பதிச்ச ஒரு necklace ம் இருந்தா இன்னும் அம்சமா இருந்திருக்கும் இல்ல நாதா? Its ok. நீலகண்டனா நீங்க பக்கத்துல இருக்கும்போது ஏது குறை?😊 (Necklace விஷயத்த உங்க மனசுல வாங்கிண்டா போதும்...)


ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻



*******



அட நானா இவ்வளவு நல்லா வாசிக்கிறேன்? நம்பவே முடியலையே??


ரொம்ப ஆச்சரியப் படாத கிருஷ்ணா, கண்ணு முழி வெளில வந்துடப் போகுது!

நீ இப்ப கேக்கற flute இசை system லேர்ந்து வருது. நீ lip sync குடுத்துக்கிட்டிருக்க....


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



ஐயா, photo shoot முடிஞ்சவுடனே இந்த வெண்ணை முழுக்க எனக்குத்தான மா?


இல்ல கிருஷ்ணா.pose குடுக்க மட்டும்தான். அத்தனையும் சாப்டா என்னாறது! உனக்கு கொஞ்சம் கொடுத்துட்டு நெய் எடுக்கணும்...


இனிமே என் கண்ல காட்டிட்டு இப்பிடி ஏமாத்தாத...(எங்க போயிடப் போவுது நமக்குத் தெரியாத இடமா...பாத்துக்கலாம்..)


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

14 ஜூன் 2026


3 கருத்துகள்:

  1. ​படங்களையும் வரிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. அம்மா செம டெக்னிக் ...போஸ் கொடுக்கறதுக்குன்னு பானைல வெண்ணை இருக்காப்ல வைச்சுக் கைல கொடுத்திருக்காங்க பாருங்க..!!

    படங்களையும் வரிகளையும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. படங்களையும் வசனங்களையும் ரசித்தோம்.

    "யோகா செய்யப்போய் பாதம் சுளிக்கிக்கப் போறது..." ஹா....ஹா.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....