அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
நாமளும் மஹாதேவன் மாதிரி கண்ணை மூடிக்கிட்டு தியானம் பண்ணிப் பாப்போம்… முடியாதா என்ன? நாமளும்தான் நெத்தில விபூதிப் பட்டை கழுத்துல ருத்ராக்ஷ கொட்டை எல்லாம் போட்டிருக்கோமே...
ஆமா, மூக்குக்கு பக்கத்துல ஒரு ஈ சுத்துதே உள்ள போயிடுச்சுன்னா...☹️
ஹ்ம்ம் நாம தியானம் பண்ணினா மாதிரிதான்...அவரு எங்க நான் எங்க....😒
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
*******
தேவி தங்க நிறத்துல dress பண்ணியிருக்காங்க, கணேசன தங்க tub ல உக்கார வெச்சு
தங்கப் பாத்திரத்தால குளிப்பாட்டறாங்க, எல்லாம் Ok...
ஆனா எனக்கு எதுக்கு golden paint அடிச்சு விடணும்? Photo க்காகவா??? எதையாவது கொறிக்கலாம்னா வாயத்திறக்க முடியல… இழுக்குது...😖 முடியல😩
இரு மூஞ்சூரண்ணா… எனக்கு முடிஞ்சதும் உனக்குத்தான் குளியல்...
ஐ...😇
கெரசின் ல....
🤨
ஓம் கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
ஏன் கிருஷ்ணா ice cream சாப்பிடணும்னா கூட உன் பேரு இருக்கற கடைக்குத்தான் வரணுமா?
இல்ல ராதா, இங்கதான் நான் மாடலிங் பண்றதுக்கு free யா icecream தரான்...கூடவே பின்னாடி நின்னுட்டிருக்காங்களே அவங்களுக்கும் குடுக்கச் சொல்லிடுவேன்...எப்படி?
சூப்பர்… நாம கொஞ்சம் casuals அ வந்திருக்கலாம்..
Ice cream க்கு இந்த டிரஸ் suit ஆகலை... இல்ல?
நமக்கு suit ஆனா போதும் ராதா...
Krishnaaaa.....
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
Vicks போட்டு ஆவி பிடிக்கிறாரோ மகாதேவன்? பின்ன? இருக்கறது பனி மலை, தலையில கங்கை. ஜலதோஷம் பிடிக்காம என்ன பண்ணும்? ஆனா அவர் கழுத்துல இருக்கற எனக்கு 🐍 ஏன் இப்படி தகிக்குது..??? நெத்திக்கண்ணுக்கு பக்கத்துல இருக்கறதாலயோ...ssssss ஆ...😫
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
selfie படம் நல்லா வந்திருச்சாம்.. ரெண்டுத்துக்கும் பெருமை தாங்கல… சிரிப்பு வாய் கொள்ளல!
நாம கூடத்தான் தினம் படம் எடுக்கிறோம், சீறுவோமே தவிர சிரிச்சிருக்கோம்???
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
மகேஷ்வரன் பூவால dress தச்சுப் போட்டுக்கட்டும், வேணாங்கல. பாக்கவும் அருமையா இருக்கு. ஆனா எனக்கும் எதுக்கு??? அதுவும் உடம்புபூரா fevicol தடவி பூவ ஒட்ட வச்சிருக்காரு… ஹ்ம்ம்...
எத்தனை மணிநேரம் ஆத்துல முங்கிக் குளிக்கணுமோ இதெல்லாம் போக!😒
சே சுதந்திரமா உல்லாசமா சொறிஞ்சுக்கக் கூட முடியாது போலிருக்கே! நான் கேட்டேனா...☹️
கவலைப்படாத நந்தி, நல்லா கம்பி பிரஷ் போட்டு உன்னைக் குளிப்பாட்ட ஏற்பாடு பண்றேன்...
(ஐயோ அது வேறயா😫)
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
28 ஜூன் 2026







படங்களையும் வரிகளையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குபிள்ளையார் ஜோ குளிப்பு ரொம்ப ரசித்தேன்
பதிலளிநீக்குஅட! கிச்சா ராதை ஐஸ்க்ரீம் எல்லாம் சாப்பிடத் தொடங்கிட்டாங்களா!! modern ஜோடி போல!
ரெண்டு குட்டீஸ் படங்கள் செம....இந்த ஏஐ என்னெல்லாம் செஞ்சு ரசிக்க வைக்குது!
படங்கள் வரிகள் எல்லாம் ரசித்தேன்
கீதா