அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
போச்சு போச்சு யாரோ வர்றாங்க... மறைச்சு வை கணேசா.....
நீ ஏதாவது மாயம் பண்ணு கிருஷ்ணா... இல்லன்னா 108 தோப்புக்கரணம் போடவேண்டியிருக்கும்… முடியுமா என்னால???
அடடா... மதுரைக்கே மல்லியா...
ஓம் கணேஷாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
பங்கி jumping பார்த்திருப்பீங்க, இது monkey jumping… பாக்கறீங்களா கிருஷ்ணா?
விளையாடாத ஆஞ்சநேயா… வீட்டுக்கு விடு வண்டிய, அம்மா தேடுவாங்க… (நழுவி தண்ணில விழுந்தா அம்மாட்ட யாரு பாட்டு வாங்கறது...)
ஓம் ஶ்ரீ வாயுபுத்ராய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
சீக்கிரம் நட மயில் bro இன்னிக்கு சூர சம்ஹாரம்.....
என் மேல ஏறிப் போகலாமே முருகா? (எனக்கு பறக்கறதே மறந்துடும் போல இருக்கு....)
அப்புறம் பட்டாம்பூச்சியை ரசிக்க முடியாதே...
(ரொம்ப முக்கியம்...)
வெற்றிவேல் முருகனுக்கு.... அரோகரா🙏🏻🙏🏻🙏🏻
********
உன் வேலை எங்க வேணா வெச்சுக்கோ வேலவா… தப்பில்லை...
ஆனா என் கண்ணுகிட்ட மட்டும் வேணாம்....
இல்ல மயில் bro,
வள்ளி மாதிரி உனக்கும் வேல்விழியான்னு check பண்ணினேன்...
(அபாயமான checking..... அவளை ரசிக்கறதோட நிறுத்தினா தேவலை...)
வெற்றி வேல் முருகனுக்கு.. அரோகரா🙏🏻🙏🏻🙏🏻
********
அப்பாவை கோவில்ல பார்த்தாச்சு. படிலயும் இறங்கியாச்சு.. இனி கீழ இறங்கறியா செல்லம்? அப்புறம் அருள் செய்யலாம்… அம்மாக்கு கை வலிக்குதுல்ல?
சரிம்மா. அப்புறம் நீ இதுமாதிரி ஜரிகை புடவை கட்டிக்கும்போது எனக்கு ஒரு சட்டை போட்டுவிட்டுடு OK? (எல்லாம் நான் சொல்லணும்....😕)
ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ🙏🏻🙏🏻🙏🏻
********
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி.....
போதும் எழுந்திரு ராதா.. இனி ராத்திரி கனவு கண்டுக்கலாம்… Ok?
வந்துட்டியா கிருஷ்ணா? கொஞ்சம் அசந்துட்டேன்...
(எப்ப அசரல..... 😕)
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
ஏன் மயில் bro கணபதி & முருகன் பக்கத்துல இன்னும் கொஞ்சம் இடம் விட்டிருந்தாங்கன்னா நாமளும் தலையைக் காட்டியிருக்கலாம் இல்ல? family போட்டோ complete ஆகியிருக்கும்...
ஹலோ, நானே 🐀 என் boss காலடில பணிவா உக்காந்திருக்கேன்… உங்க size க்கு இந்த ஆசையெல்லாம் ரொம்ப ஓவர் நந்தி bro...
(கீழ உக்காந்தாத்தான கொறிச்சுக்கிட்டே இருக்கமுடியும்! பணிவாம்!.... ஹ்ம்ம்ம்)
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
********
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
29 நவம்பர் 2026








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....