வெள்ளி, 15 நவம்பர், 2013

ஃப்ரூட் சாலட் – 67 – சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் – அம்மா – காதல் மயக்கம்!



இந்த வார செய்தி:



24 வருடங்கள் – இதே நாள் 1989-ஆம் வருடம் நவம்பர் 15-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் இன்று கடைசி முறையாக [இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட அவசியம் இருக்காது என்ற நம்பிக்கையில்!] விளையாட களம் இறங்கி 74 ரன்கள் எடுத்து சற்று முன்னர் Out ஆனார்.

விளையாட்டுத் துறையில் எந்த ஒரு விளையாட்டிலும் இத்தனை வருடங்கள் தொடர்ந்து விளையாடுவது சற்றே கடினமான விஷயம். அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி கிரிக்கெட் விளையாட்டில் பலவிதமான சாதனைகளைப் புரிந்திருக்கும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.....

இந்த முடிவு சில வருடங்களுக்கு முன்னரே எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனும் எண்ணம் என்னைப் போன்ற பலரிடம் இருந்தாலும், தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்! சற்றே நீநீநீநீநீநீநீநீநீநீநீண்ட பயணம் இன்றோடு முடிவடைந்திருக்கிறது. இந்த நீண்ட பயணத்தில் அவரின் சாதனைகளை என்னவென்று சொல்ல!

Breathtaking  என ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு! அது தான் மனதில் வந்தது அவரது சாதனைகளை பார்த்தபோது.... நீங்களும் பாருங்களேன்.

Batting and fielding averages

Mat
Inns
NO
Runs
HS
Ave
BF
SR
100
50
4s
6s
Ct
St
Tests
199
328
33
15847
248*
53.71


51
67

69
115
0
ODIs
463
452
41
18426
200*
44.83
21367
86.23
49
96
2016
195
140
0
T20Is
1
1
0
10
10
10.00
12
83.33
0
0
2
0
1
0
First-class
309
489
51
25322
248*
57.81


81
115


186
0
List A
551
538
55
21999
200*
45.54


60
114


175
0
Twenty20
96
96
11
2797
100*
32.90
2310
121.08
1
16
359
38
28
0
Bowling averages

Mat
Inns
Balls
Runs
Wkts
BBI
BBM
Ave
Econ
SR
4w
5w
10
Tests
199
144
4228
2484
46
3/10
3/14
54.00
3.52
91.9
0
0
0
ODIs
463
270
8054
6850
154
5/32
5/32
44.48
5.10
52.2
4
2
0
T20Is
1
1
15
12
1
1/12
1/12
12.00
4.80
15.0
0
0
0
First-class
309

7593
4376
71
3/10

61.63
3.45
106.9

0
0
List A
551

10230
8478
201
5/32
5/32
42.17
4.97
50.8
4
2
0
Twenty20
96
8
93
123
2
1/12
1/12
61.50
7.93
46.5
0
0
0


கடந்த 24 வருடங்களாக பல சாதனைகளைப் புரிந்திருந்தாலும், பல கோடி ரூபாய்களை சம்பாதித்திருந்தாலும் இன்னும் கிரிக்கெட் விளையாட இவருக்குள் இருக்கும் தாகம் இன்னும் குறையவில்லை என்றே சொல்ல வேண்டும்!

வாழ்த்துகள் சச்சின்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

"அம்மா சாப்பாடு தர்றியா?"
"அம்மா என்னோட விளையாடறியா?"
"அம்மா என்னை தூங்க பண்றியா?"
"அம்மா காலைல சீக்கிரம் எழுப்பி விடு"
"அம்மா இத முடிக்க உதவி பண்றியா?"...
"அம்மா அப்பாகிட்ட கேக்கறியா?""
"அம்மா அவன் அடிச்சிட்டான்"
"அம்மா அவ திட்டிட்டா"
"அம்மா இத எடுக்கலாமா?"
"அம்மா எங்கே போறே?"
"அம்மா தல வலிக்குது"
"அம்மா பாடம் சொல்லித் தர்ரியா"
"அம்மா வெளில கூட்டிடு போறியா"
"அம்மா இத செய்யலாமா?"
"அம்மா அத ஏன் செய்யக் கூடாது?"


இப்படி 1000 கேள்விகள் அம்மாவிடம் கேட்கும் குழந்தைகள் அப்பாவிடம் கேட்கும் ஒரே கேள்வி

"அப்பா அம்மா எங்கே?"


இந்த வார குறுஞ்செய்தி

IF YOU FAIL TO ACHIEVE DREAMS, CHANGE YOUR WAYS NOT YOUR PRINCIPLES – TREE CHANGES THEIR LEAVES NOT ROOTS!”

ரசித்த படம்: 



ரசித்த பாடல்:



புதுமைப் பெண் படத்திலிருந்து நான் ரசித்த ஒரு பாடல் இதோ உங்கள் ரசனைக்கு! காதல் மயக்கம்.... அழகிய கண்கள் துடிக்கும்.....


பாடல் பார்த்து மனது உங்களுக்கும் துடிக்கும்.... காதலில்! :)


ரசித்த விளம்பரம்:

சில மாதங்கள் முன்னர் SAB TV எனும் ஹிந்தி தொலைக்காட்சியில் ஒரு புதிய தொடர் ஆரம்பித்தார்கள். தொடரின் பெயர் TWINKLE BEAUTY PARLOUR. அந்த தொடருக்காக வெளியிட்ட விளம்பரங்களில் ஒன்றை இங்கே பார்க்கலாம்! உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்! 




படித்ததில் பிடித்தது!:

கலைவானர் என்.எஸ்.கே. அவர்களின் நகைச்சுவை உணர்வு அனைவரும் அறிந்ததே. அவரது மதிநுட்பத்தினை இங்கே பாருங்களேன்!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வில்லுப்பாட்டுக் குழுவில் ஒரு பின்பாட்டுக்காரர் இருந்தார். ஒருமுறை காந்தி கதை வில்லுப்பாட்டு நடந்து கொண்டிருந்தது.

அப்போது தண்டி யாத்திரையில் காந்தியின் உப்பு சத்தியாகிரகம் பற்றிய பாட்டை பின்பாட்டுக்காரரைப் பாடச் சொல்ல, அவருக்கு இரண்டாவது வரி மறந்துபோய், "உப்பை எடுத்தார்... உப்பை எடுத்தார்' என்று ஐந்தாறு முறை அதே வரியைப் பாடிக் கொண்டிருந்தார்.

மக்கள் திருதிருவென விழித்தனர். உடனே கலைவாணர், "எவ்வளவோ போராடி உப்பு சத்தியாகிரகம் நடத்திய காந்தி, அங்கு சென்று ஒரே ஒரு தடவை தான் உப்பை எடுத்திருப்பாரா? பல தடவை குனிந்து குனிந்து உப்பை எடுத்திருப்பார். அதனால்தான் நம் பாட்டுக்காரரும் தத்ரூபமாக "உப்பை எடுத்தார்' என பலமுறை பாடிக் காட்டினார்'' என்று போட்டார் ஒரு போடு.

பாடகரின் மறதியை தன் மதிநுட்பத்தால் மாற்றிய கலைவாணருக்கு கைத் தட்டல்கள் குவிந்தன.

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


எனது நேற்றைய பகிர்வு - குழந்தைகள் தினமும் பரிசும்!

32 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் சச்சின்!

    1000 கேள்விகள் அம்மாவிடம் கேட்கும் குழந்தைகள் அப்பாவிடம் கேட்கும் ஒரே கேள்வி

    "அப்பா அம்மா எங்கே?"

    ரசிக்கவைத்தது..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  2. //....பாடகரின் மறதியை தன் மதிநுட்பத்தால் மாற்றிய கலைவாணருக்கு கைத் தட்டல்கள் குவிந்தன.//
    மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்....

      நீக்கு
  3. அனைத்து அருமை. சாதனைத்திலகம் சச்சினுக்கு மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

    //1000 கேள்விகள் அம்மாவிடம் கேட்கும் குழந்தைகள் அப்பாவிடம் கேட்கும் ஒரே கேள்வி
    "அப்பா அம்மா எங்கே?" // ரஸித்தேன் ..... தேன் ..... தேன்.

    விளம்பரம் வித்யாசமாகவே உள்ளது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  4. அத்தனையும் அருமை!
    அம்மா..அம்மாதான். அதற்கு இணையே இல்லை.

    எங்கிருந்து ரசித்தபடம் இப்படி உங்களுக்குக் கிடைக்கிறது...
    அருமை! அழகான ஓவியம். பாடல் பகிர்வும் ரசித்தேன்.

    அனைத்தும் மிகச்சிறப்பு!
    நல்ல பதிவும் பகிர்வும்!.. வாழ்த்துக்கள் சகோதரரே!

    த ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  5. அம்மான்னா சும்மா இல்லைன்னு தெரியுது இற்றையைப் படிக்கும்போது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

      நீக்கு
  6. அனைத்தும் அருமை... கணினி கோளாறு காரணமாக இணையம் வர முடியவில்லை... (நண்பரின் கணினி உதவியால் இந்தக் கருத்துரை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். விரைவில் உங்கள் கணினி சரியாகட்டும்!

      நீக்கு
  7. ஓய்வுக்காலத்தை நல்ல விதமாய் அனுபவிக்க சச்சினுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  8. இந்த விளம்பரம் இங்கேயும் பார்த்திருக்கேன்.

    வந்தியத் தேவனும் பூங்குழலியும் எங்கே கிடைச்சாங்க? கல்கி அட்டைப்படம்? பொன்னியின் செல்வன் முதல் வெளியீடு இல்லைனனுநினைக்கிறேன். வினு படம் வரைஞ்சு எழுபதுகளில் வந்தபோதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

      இந்த படம் எப்போது வந்தது என்பது தெரியாது. ஆனால் என்னவொரு ஓவியம்! ரொம்பவே அழகு இல்லையா!

      நீக்கு
  9. சச்சின் எப்போவோ ரிடையர் ஆகி இருக்கணும். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே.... மேலே ஒரு இடத்தில் நானும் சொல்லியிருக்கேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  10. கலைவாணர் நகைச்சுவை அருமை.
    குழந்தையின் கேள்வியும் அருமை.
    வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்....

      நீக்கு
  11. அனைத்தும் அருமை! இனித்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா....

      நீக்கு
  12. முக நூல் இற்றை சுப்பர்.சச்சின் ஆட்ட புள்ளி விவரங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  13. மிகவும் சுவையாகவும் தரமாகவும் உள்ளது.அருமையானப் பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  14. சச்சின் அவர்களின் சாதனைப்பட்டியலை
    தொகுத்துத் தந்தவிதம்
    ஆழமான பொருள் கொண்ட குறுஞ்செய்தி
    அற்புதமான அப்பாவிடம் கேட்கும் ஒரு கேள்வி
    எனக்கும் பிடித்த அருமையான பாடல்
    புரூட் சாலட் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  15. பதில்கள்
    1. தமிழ் மணம் பன்னிரெண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சத்யா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....