செவ்வாய், 26 நவம்பர், 2013

பஞ்சவர்ணத்தின் பட்டுப்புடவை



தில்லி வந்த புதிது....  அப்போது தான் தமிழகத்திலிருந்து வந்திருந்ததால் ஹிந்தி சுத்தமாக தெரியாது! ஆங்கிலமும் ஏதோ கொஞ்சம் பேசத் தெரியும். அவ்வளவு தான். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருக்கும். அலுவலகத்திலிருந்து வீடு வந்தால் படிக்க கிடைப்பது அறை நண்பர் வாங்கும் சில புத்தகங்களும் ஆங்கில நாளிதழும் தான். அப்படி புத்தகங்களில் வந்த கவிதைகளையும், ஆங்கில நாளிதழில் வரும் அரசியல் கார்ட்டூன்களையும் வெட்டி வைப்பது ஒரு பழக்கமாக, பொழுதுபோக்காக இருந்தது.

இந்த பழக்கம் தில்லி வந்து ஏழெட்டு வருடம் வரை தொடர்ந்திருக்கிறது! அப்படி வெட்டி வைத்த எல்லா காகிதங்களையும் ஒரு கோப்பில் சேமித்து வைத்திருந்தேன்.  நேற்று எதையோ தேட எனது புத்தக அல்மாரியைத் துழாவும் போது அப்படி சேமித்த ஒரு கோப்பு கையில் கிடைத்தது.  அதில் இருந்த படங்களையும், சில ஆங்கில கட்டுரைகளையும் படிக்கும்போது ஒருவித மகிழ்ச்சி மனதில்.  அப்படியே மனது பின்னோக்கிச் சென்று அந்த நினைவுகளை அசை போட்டது! நேரமும் மனதும் ஒத்துழைத்தால் அக்கோப்பில் இருந்து சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தேவகவுடா – நரசிம்ம ராவ் ஆகியோர் பிரதமராக இருந்த சமயத்தில் எடுத்த படங்கள் இப்போது பார்த்தாலும் சிரிப்பு தான்! அவற்றை ஸ்கேன் செய்து போடுகிறேன்! இப்போதைக்கு அப்போது ரசித்த, இப்போது படித்த ஒரு கவிதை இங்கே!



என்னைய கேட்டா பஞ்சவர்ணம்தான்
எங்க ஊர்லயே அழகான பொண்ணு

அவ உதடு ரோஜா வர்ணம்
தோலு மஞ்சவர்ணம்
முடி கருப்புவர்ணம்
பல்லு வெள்ளவர்ணம்
காதுமடல் சிவப்புவர்ணம்

பாத்துப்பாத்துதான் பஞ்சவர்ணத்துக்கு
பேரு வச்சாங்களோன்னு நினைப்பேன்.

ஒத்தைக்கையில குச்சிமிட்டாய் வச்சுக்கிட்டு
இன்னோரு கையில பஞ்சவர்ணத்தோட
கையப்புடிச்சுகிட்டு நடக்கறதுன்னா
அடியாத்தி.....  ஒரே சந்தோசந்தா

ஒரு நாள் பஞ்சுவுக்கு
கல்யாணம்னு சொன்னாங்க
அன்னைக்கு பார்க்கணுமே பஞ்சுவ
என்னா அழகு பட்டுப்புடவையில
நாந்தான் தோழிப்பொண்ணு மாதிரி
அவகூடவே இருந்தேன்

அடுத்தமுற ஊருக்கு போனப்ப
பஞ்சவர்ணம் வெள்ளப்புடவ கட்டிகிட்டு
மூளியா இருந்துச்சு. நல்லால்ல
ஏன்னு கேட்டேன்

அவிக பண்ணாடி சாமிகிட்ட
போயிட்டாங்கன்னு அழுதுச்சு

அவிக பண்ணாடி சாமிகிட்ட
பட்டுபுடவ எடுத்துகிட்டா போகணும்
எனக்குந்தா அழுகாச்சி வந்துச்சு

அந்த சாமிய நீங்க பார்த்தா
பஞ்சவர்ணத்தோட பட்டுசேலைய
வாங்கித்தாங்களேன்......

-          க. பிரேமலதா, விளாங்குறிச்சி.....

இப்போது படித்தாலும் மனதைத் தொடும் கவிதை.  இப்போதைய பெண்கள் கணவனை இழந்தால் இப்படி வெள்ளைப் புடவை கட்டி மூலையில் உட்கார்ந்து கொள்வதில்லை என்றாலும், சில கிராமங்களில் இன்னும் இக் கொடுமைகள் நடந்தபடியே இருக்கிறது என்பது நினைவுக்கு வந்து உறுத்துகிறது.....

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

48 கருத்துகள்:

  1. ## அவிக பண்ணாடி சாமிகிட்ட
    பட்டுபுடவ எடுத்துகிட்டா போகணும்
    எனக்குந்தா அழுகாச்சி வந்துச்சு## கவிதையின் மொத்த உள்ளுணர்வையும் சொல்லும் வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை.

      நீக்கு
  3. தமிழ்மணம் இணைத்து ஓட்டும் போட்டாச்சு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் மணத்தில் இணைத்து வாக்களித்தமைக்கு நன்றி ஸ்.பை.

      நீக்கு
  4. கவிதை நன்றாயிருக்கிறது. சேமிப்பிலிருந்து அவ்வப்போது பகிருங்கள். சுவாரஸ்யமாய் இருக்கும் போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவ்வப்போது பகிருங்கள்.....// ம்ம்ம்ம். நேரமும் மனதும் ஒத்துழைத்தால்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. என்னென்னவோ நினைவுகள் வந்து ஆட்டி வைக்கின்றன:(

    விதவன் கோலமென்று ஒன்றில்லாதபோது விதவைக்கோலம்(மட்டும்) ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விதவன் கோலமென்று ஒன்றில்லாதபோது....//

      அதானே.... எனக்கு தெரிந்தவர் ஒருவர் அவரது தங்கை கணவனை இழந்தபோது மறுமணத்தினை எதிர்த்தவர், அவரது மனைவி இறந்தபோது ஒரு மாதத்திற்குள் மறு விவாகம் செய்து கொண்டார்! அதிலிருந்து அவரைப் பிடிக்காது போயிற்று!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  6. என்ன இயல்பாக சொல்லி விட்டது கவிதை. பயன்படுத்திய வாரத்தைகளோ எளிமையானவை.கருத்து ரொம்ப வலிமையானது. கலங்க வைத்த கவிதை பகிர்வுக்கு நன்றி நாகராஜ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  10. மிகுந்த சோகம். மனதை உருக்குகின்றது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  11. உங்களது பொக்கிஷம் மிக அருமை, நெகிழ வைத்த கவிதை! tha,ma 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  13. எப்போதும் பெண்களை , தான் புகைத்து முடித்து
    காலடியில் போட்டு நசுக்கும் ஒரு சிகரட்டாகவே
    நினைக்கின்றனர் ஆண்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.....

      நீக்கு
  14. எளிமையான கவிதைக்கு வலிமை அதிகம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்னாச்சி...

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  16. பஞ்சவர்ணம் நல்லதொரு பெயர். கடைசியில் வர்ணத்தை கலைத்துள்ள கவிதை வருத்தமளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  19. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
  20. கவிதை.... மனத்தைக் கலங்க வைத்தது.
    எவ்வளவு சாதாரணமாக சொல்லியிருக்கிறார் இந்த கவிஞர்,,, வாழ்த்துக்கள்.

    நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  21. கவிதையின் கருப்பொருள் சிறப்பு! அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  22. கலக்கல பகிர்வு...
    கவிதை எதார்த்தமாய்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  23. வெட்டி ஒட்டும் பழக்கம் உங்களுக்குமிருந்ததா? இதுபோல் நான் சேகரித்திருந்த என்னுடைய நோட்டுப்புத்தகங்களை எங்கோ தவறவிட்டுவிட்டேன். கவிதை மனத்தைப் புரட்டிப்போட்டுவிட்டது. தோழிப்பெண்ணின் அறியாமை மனம் நெகிழச்செய்கிறது. இப்போது இதுபோல் வெள்ளைப்புடவை கட்டும் வழக்கம் இல்லையென்றாலும் கணவனை இழந்தபெண்கள், குழந்தையில்லாத பெண்கள் போன்றவர்களை பல குடும்பவிழாக்களில் நாசுக்காக ஒதுக்கிவைக்கும் வழக்கம் இன்றும் தொடர்வது வேதனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீத மஞ்சரி.

      நீக்கு
  24. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....