வியாழன், 27 மார்ச், 2014

9B மாமா......




இது என்ன தலைப்பு? ஆங்கிலத்தில் சொல்வது போல A friend, Philosopher and Guide  தான் இந்த 9B மாமா.  எனக்கு மட்டுமல்ல, நான் முன்பு இருந்த தில்லியின் தில்ஷாத் கார்டன் பகுதியில் இருக்கும் பெரும்பாலான தமிழர்களுக்கும் இவரை இந்த பெயரில் தான் தெரியும். அங்கே இருக்கும் அனைத்து தமிழ் குடும்பங்களிலும் நல்லது, கெட்டது என எந்த நிகழ்வாக இருந்தாலும் முதல் அழைப்பு செல்வது இவருக்காகத் தான் இருக்கும்.

தில்லி வந்து சில வருடங்களிலிருந்தே இவர் எனக்கு நெருங்கிய பழக்கம் – கிட்டத்தட்ட 18 வருடம். பல இக்கட்டான சமயங்களில், நான் முடிவெடுக்கத் தயங்கிய தருணங்களில் எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தவர். என்னுடைய வளர்ச்சியில் அதிகம் சந்தோஷம் அடைந்தவர்களில் இவரும் ஒருவர்.  எனக்கும் அவருக்கும் 45 வருடங்களுக்கு மேல் வயது வித்தியாசம் இருந்தாலும், ஒரு நண்பரைப் போலவே பழகுபவர்.  எந்த நேரத்திலும் மகிழ்ச்சியோடு இருப்பவர்.

சென்னையில் The Hindu நாளிதழில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கே தொழிலாளர் சங்கத்தில் முக்கிய உறுப்பினராக இருந்து பல போராட்டங்களை நடத்தியவர். ஹிந்துவில் போராட்டம் வலுத்து பலரை வேலையிலிருந்து நீக்கினார்கள். அதில் இவரும் ஒருவர்.   அந்த சமயத்தில் தில்லியின் கரோல் பாக் பகுதிக்கு வந்து தங்கி தில்லியில் இருந்த ஒரு நாளிதழான The Patriot-ல் வேலைக்குச் சேர்ந்தவர்.

ஒரு சிலருக்கு பொது சேவை செய்வதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. இந்த விஷயத்தில் இவரை உதாரணமாகச் சொல்லலாம். நாங்கள் இருந்த பகுதியில் ஒரு பிள்ளையார் கோவில் உருவாக முக்கியமான காரணமாக இருந்தவர். எத்தனை முறை தனது வயதினையும் பொருட்படுத்தாது வீடு வீடாகச் சென்று பணம் வசூலித்து ஒரு கோவிலைச் சிறப்பாக கட்டி, அந்த கோவிலை மற்றவர்களுடன் சேர்ந்து நிர்வகித்து வந்தவர்.

எத்தனையோ முறை நேரம் காலம் இல்லாது இவர் வீட்டு தொலைபேசியில் அழைப்பு வரும். ‘மாமா, எங்க வீட்டுல அவருக்கு உடம்பு சரியில்லை, ஆஸ்பத்திரிக்கு போயிட்டு இருக்கோம்”, இல்லை எனில் “எங்கள் வீட்டில் இவர் இறந்து விட்டார்என்று பல சமயங்களில் இவருக்கு அழைப்பு வரும். உடனே எங்களைப் போன்றவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து அவரும் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டுக்கு விரைந்து வருவார்.  இறந்தவரின் உடல் தகனம் வரை இருந்து என்ன செய்ய வேண்டுமெனச் சொல்லி, அனைத்து ஏற்பாடுகளையும் முன் நின்று கவனித்துக் கொள்வார்.

கொஞ்சம் முற்போக்குச் சிந்தனை கொண்டவர்.  பல சமயங்களில் இவருடன் விவாதங்கள் நடத்தினாலும், நம்மை அவர் வழிக்குக் கொண்டு வந்து விடுவார்! எப்போதும் அவர் சொல்லும் ஒரு விஷயம் அவர் வாழ்வில் நடக்கவில்லை! ஒரு வயதிற்குப் பிறகு வாழ்வதில் அர்த்தம் இல்லை. இருக்கும் வரை சுகமாக இருக்க வேண்டும். கொஞ்சம் உடல் நிலை சரியில்லை எனத் தோன்றினாலும், ஒரு வயதிற்கு மேல் இருக்கக் கூடாதுஎன்று சொல்வார்.

உடல் நலம் சரியில்லை எனில் மற்றவர்களுக்கும் அவதி. 70 வயது ஆனவுடன் அனைவரையும் அழைத்து ஒரு சிறப்பான விருந்து கொடுத்து, அவருக்குப் பிடித்த எல்லா உணவு வகைகளையும் தந்து, என்னென்ன விருப்பமோ அதை எல்லாம் நிறைவேற்றி, இரவு தூங்கும்போது அப்படியே இறந்து போகும்படி ஊசியோ, மாத்திரையோ கொடுத்து விடவேண்டும் – அதாவது கருணைக்கொலை செய்து விட வேண்டும்என்று அடிக்கடிச் சொல்வார்.

எப்போது கேட்டாலும் ஐஸ்க்ரீம் சாப்பிட மறுக்காதவர்! ரொம்பவும் பிடித்தது அது தான்! நான் இறந்து விட்டால், எல்லாருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுடா என தனது மகனிடம் சொல்வார்!

கடந்த சில மாதங்களாகவே உடல் நிலை சரியில்லாது இருந்தார். சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் இருந்தவரை பார்த்தபோது ரொம்பவும் அவதிப் பட்டது தெரிந்தது. குளிர் காலத்தில் நான் இறந்தால் மகனுக்கும் கஷ்டம். அதனால் கொஞ்சம் வெயில் வந்துவிட்டால் நல்லது எனச் சொல்லிக் கொண்டிருந்தார். சென்ற 19-ஆம் தேதி காலை அலுவலகத்தில் இருக்கும் போது அவர் மகனின் அழைப்பு – “அப்பா போயிட்டார்டா!” 1925-ஆம் வருடம் பிறந்தவர்...  தனது 89-ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

அலுவகத்திலிருந்து புறப்பட்டு அவர் வீடு சென்று பார்த்தபோது உறங்கிய வண்ணமே இருந்தார். எத்தனையோ பேர்களின் தகனத்திற்கு அவர் ஏற்பாடு செய்திருக்க, இவருக்கு மற்றவர்கள் ஏற்பாடு செய்யும் வேளை வந்துவிட்டது.

இந்த உலகை விட்டு நீங்கிவிட்டாலும், எங்கள் உள்ளங்களிலிருந்து நீங்காத இடத்தினைப் பெற்றுவிட்டார்.

ஒரு சிலரின் இழப்பு நம்மை ரொம்பவே பாதித்து விடுகிறது. அப்படி பாதித்த இழப்புகளில் 9B மாமாவின் இழப்பும் ஒன்று.......

அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனை வேண்டுகிறேன்.......



வெங்கட்
புது தில்லி.

58 கருத்துகள்:

  1. ரொம்ப கவலையான விசயம்...

    அந்த மாமா என்றும் உங்கள் அனைவரின் உள்ளத்திலும்
    உயிருடன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். வருந்தாதீர்கள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  2. நல்ல மனிதரின்... அனைவருக்கும் உதவி செய்யும் பரந்த மனப்பான்மை கொண்டவரின் இழப்பு தாங்க முடியாதது...

    அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. அவரின் ஆன்மா சாந்தியடைய நானும் வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா....

      நீக்கு
  4. ஒரு சிலருக்குத்தான் அந்த நல்ல மனது இருக்கும். 9B மாமா எங்கள் மனதிலும் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார். அவரது ஆத்மா சாந்தியடைய எங்களின் பிரார்த்தணைகளும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்....

      நீக்கு
  5. எத்தனையோ பேரை தினந் தோறும் நாம் சந்தித்தாலும் ஒரு சிலர் நம் மனதில் நீங்கா இடம் பெற்று விடுகிறார்கள். . அவர் உண்மையான பெயரை சொல்லவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      அவரது இயற்பெயர் R.V. RAMACHANDRAN. சொந்த ஊர் தஞ்சையை அடுத்த திருக்காட்டுப்பள்ளி....

      நீக்கு
  6. 9 பி மாமாவின் ஆத்மா சாந்தியடைய
    பிரார்த்தித்துக் கொள்கிறோம்
    அவரது குடும்பத்தார் உறவினர்கள் நண்பர்கள்
    அனைவருக்கும் அவரது பிரிவினைத் தாங்கிக் கொள்ளும்
    வலுவினை ஆண்டவன் அருள்வானாக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  7. நல்ல மனிதரின் பெயரைச் சொன்னீர்கள் .9b பெயர்க் காரணத்தைக் கூறவில்லையே !
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரின் வீட்டு இலக்கம் அது..... அதை வைத்தே அவருக்கு அப்பெயர்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  8. பொதுநலன் கருதி வாழ்ந்தவர். படிக்கும்போதே மனதில் இடம்பிடித்தவர், பழகியவர்களின் உள்ளத்தில் நீங்காமல் நிச்சயம் இருப்பார். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  9. //அவருக்குப் பிடித்த எல்லா உணவு வகைகளையும் தந்து, என்னென்ன விருப்பமோ அதை எல்லாம் நிறைவேற்றி, இரவு தூங்கும்போது அப்படியே இறந்து போகும்படி ஊசியோ, மாத்திரையோ கொடுத்து விடவேண்டும்//

    என் அலைவரிசையோடு ஒத்துப் போகிறார். பதிவு ஆரம்பித்ததும் முடிவு இதுதான் என தெரிந்து விட்டது. நல்ல ஜாலியா வாழ்ந்த மனுஷன் போயிட்டா நாம துக்கப் பட கூடாது.. மாறா சந்தோஷப் படனும்னு நினைக்கிறேன். அவரும் அதைத்தான் விரும்புவார்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி....

      நீக்கு
  10. //குளிர் காலத்தில் நான் இறந்தால் மகனுக்கும் கஷ்டம். அதனால் கொஞ்சம் வெயில் வந்துவிட்டால் நல்லது எனச் சொல்லிக் கொண்டிருந்தார்.//

    இறப்பில் கூட யாருக்கும் இடைஞ்சல் வரக்கூடாது என - எத்தனை நல்ல உள்ளம்..
    அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  11. அவரின் சில கொள்கைகளையாவது அவரை நீங்கள் நினைவு கொள்வதற்கான சிறந்த வழி...எங்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  12. பாவம், வருத்தமான செய்தி, என்றாலும் அவர் விரும்பியபடியே கொஞ்சம் குளிர் குறைஞ்சதும் இறந்திருக்கார். இது எதுவும் நம் கையில் இல்லை என்றாலும் பகவான் அவருடைய விண்ணப்பத்துக்குச் செவி சாய்த்திருக்கிறார். அவர் குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய உண்மைப் பெயரையே கடைசி வரை சொல்லவே இல்லையே? அல்லது என் கண்களில் படவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முரளிதரன் சொன்ன கருத்துக்கு பதிலில் அவர் பெயர் சொல்லி இருக்கிறேன் - அவர் பெயர் R.V. RAMACHANDRAN. சொந்த ஊர் தஞ்சையை அடுத்த திருக்காட்டுப்பள்ளி....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  13. ஊருக்கு ஒருத்தர் இவரைப் போல் இருப்பதால் தான் வானம் இன்னமும் கருணை காட்டி வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  14. சுதா த்வாரகாநாதன் புது தில்லி27 மார்ச், 2014 அன்று AM 10:20

    மாமாவின் ஆத்மா சாந்தியடைய
    பிரார்த்தித்துக் கொள்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

      நீக்கு
  15. குளிர் காலத்தில் நான் இறந்தால் மகனுக்கும் கஷ்டம். அதனால் கொஞ்சம் வெயில் வந்துவிட்டால் நல்லது எனச் சொல்லிக் கொண்டிருந்தார்
    >>
    நல்ல ஆத்மா! முழுப் பரிட்சை லீவுல அதும் ஞாயித்துக்கிழமைல செத்துப்போய்டனும்ன்னு என் அப்பா சொல்வார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  16. எல்லோருக்கும் உதவும் குணம், இறப்பு எப்படி இருக்க வேண்டும் யாரையும் கஷ்டப்படுத்தாமல் இறக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள நல்ல ஆன்மா சாந்தி அடைய என் பிராத்தனைகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  17. 9B மாமாவின் ஆத்மா சாந்தி அடையும் அவரைப் பற்றி நீங்கள் எழுதியதைப் படிக்கும் போது நான் எழுதி இருந்த செய்யாத குற்றம் என்ற பதிவு நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  18. தங்களது மன வேதனை புரிகிறது சகோதரா கவலை வேண்டாம் இறந்தவரின்
    ஆன்மா சாந்தி பெற நாமும் பிரார்த்திப்போம் .பகிர்வுக்கு மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  19. மிகவும் நல்ல மனிதர் என்று தெரிகிறது. எங்கள் அஞ்சலிகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  20. 9B மாமாவின் இழப்பு பற்றிய உன் அனுபவங்களை படித்து முடித்ததும் மிகவும் வேதனை அடைந்தேன். முன்பொரு சமயம்  நானும் என் அலுவலக நண்பரும் நீ இருந்த தில்ஷாத் பகுதிக்கு வந்திருந்த போது அந்த பிள்ளையார் கோவிலுக்கு வந்திருக்கிறோம் .அப்போதே நீ என்னிடம் இந்த மாதிரி பொது சேவைகளை செய்வதை பற்றி சொல்லி இருக்கிறாய் .அவரின் இழப்பு ஈடு செய்ய இயலாது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி சித்தப்பா....

      நீக்கு
  21. ரா.ஈ. பத்மநாபன்27 மார்ச், 2014 அன்று PM 1:36

    9B மாமா ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். உங்கள் பதிவு அந்த நல்ல ஆத்மாவுக்கு நல்லதொரு சமர்ப்பணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  22. இவர் போன்றோரின் இழப்பு ஒரு வெற்றிடம் ஏற்படுத்தவே செய்யும்.
    தம11

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன் ஐயா.

      நீக்கு
  23. நான் இறந்து விட்டால், எல்லாருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுடா//

    கேள்விப் படும் எங்க அனுதாபமும் இரங்கலும் உட்பட பழகிய பலரது அன்புமாக அந்த நல்ல ஆன்மா பரிபூரண சாந்தி அடையும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  24. இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
  25. படித்து முடித்ததும் மனதில் நின்று விட்டார் 9பி மாமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

      முதல் முறை பார்க்கும்போது ஒரு ஸ்னேக பாவத்துடன் பேசும் அவர் எல்லோர் மனதிலும் இருப்பவர்....

      நீக்கு
  26. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  27. 9B மாமா என்ற R.V. ராமச்சந்திரன் அவர்களது ஆன்மா சாந்தி அடையட்டும்! அவரது ஊர் திருக்காட்டுப்பள்ளி என்றதும் அவர் போட்டோவை சிறந்த போட்டோகிராபரான வெங்கட்நாகராஜ் போடாமல் விட்டு விட்டாரே என்ற வருத்தம் வந்தது. ஏனெனில் திருக்காட்டுபள்ளிக்கு அருகில்தான் என் அம்மாவின் ஊர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரின் படம் என்னிடம் இல்லை.... தேடிப் பார்த்தேன்! :(

      இனிமேல் தான் அவர் மகனிடம் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  28. 9B மாமா பற்றிப் படிக்கையில் திரு பாரதி மணி அவர்களின் நினைவு வந்தது. அவர்தானோ இவர் என்று நினைத்தேன். நான் நினைத்தது தவறு என்று பிறகு புரிந்தது. திரு பாரதி மணி அவர்கள் என்னை மன்னிப்பாராக!
    இதோ திரு பாரதி மணி அவர்களின் கட்டுரை : http://wp.me/pTWRs-RK

    9B மாமாவின் ஆத்மா சாந்தியடையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

      திரு பாரதி மணி அவர்களின் கட்டுரை படித்தேன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....