புதன், 27 ஜனவரி, 2021

முகநூலில் - ஆறு வருஷ வரலாறு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


பிரச்சனைக்கு சிறந்த ஆயுதம் பொறுமை தான். பொறுமை அனைத்திற்கும் பதில் தரும்.  அதற்கு கால தாமதம் ஆகலாம்.  ஆனால்… ஒரு போதும் தோற்றுப்போகாது!


******





எல்லாரும் அந்த அக்கவுண்ட் வெச்சிருக்காங்க!! நாமளும் ஏன் ஆரம்பிக்கக்கூடாது?? என்று ஆரம்பிச்சது தான்! முதலில் மடிக்கணினி மூலம் தான் அந்த அக்கவுண்ட்ட ஆப்பரேட் பண்ணினேன்.  அதுக்கப்புறம்  தோசைக்கல் போல ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்கிக் குடுத்தார் என்னவர்..🙂 


அப்புறம் அதிலிருந்தே எல்லாத்தையும் பார்த்தேன்..🙂 முறையாக டைப்பிங் தெரியாது என்றாலும், மடிக்கணினியில் ஓரளவு இரண்டு பக்கத்திற்காவது டைப் செய்து கொண்டிருந்தேன்.. அப்புறம் அந்த தோசைகல்லிலேயே ஒரு விரல் கொண்டே டைப் பண்ண பழகிட்டேன்...🙂


அதுக்கப்புறம் சர்வமும் ஸ்மார்ட் ஃபோன் தான்..🙂 இதோ இப்ப எழுதறேனே இந்த பதிவு கூட ஒரு விரல் டைப்பிங் தான்..🙂


ப்ளாகராக இருந்த நான், முதலில் என் ப்ளாகில் எழுதிய பதிவின் சுட்டிகளைத் தான் அந்த அக்கவுண்ட்டில் கொடுக்க ஆரம்பிச்சேன்..🙂 அப்புறம் கங்கா முழுசா சந்திரமுகியாவே மாறிட்டான்னு தலைவர் சொல்ற மாதிரி முழுசாவே அந்த அக்கவுண்ட் அதாங்க முகப்புத்தக சாகரத்தில் மூழ்கிட்டேன்...🙂


அப்புறம் என்ன?? என் ப்ளாக் கடைய இழுத்து சாத்தி பூட்டியாச்சு..:)) இந்த முகப்புத்தக சாகரத்தில் போட்டத தேடி எடுப்பது கஷ்டம்னு, இங்க கிறுக்கியதையெல்லாம் வாரம் ஒருமுறை இன்னொரு இடத்துல ஃபிக்ஸட் டெபாசிட்ல போட ஆரம்பிச்சோம்..


சிவபெருமான் தன் உடம்புல பாதியை சக்திக்கு தந்த மாதிரி, என்னவர் தன்னோட Blog-ல என்னையும் ஒரு உறுப்பினரா சேர்த்துகிட்டார்..இப்போ அது எங்க குடும்ப ப்ளாகா ஆயிடுச்சு..:)) பெரும்பாலும் என்னோடது செவ்வாயில் அங்கே கதம்ப மாலையாக  பூத்திருக்கும்.


நேத்து தான் மார்க் தம்பி நினைவுபடுத்தினார்! அக்கா! இங்க வந்து நீங்க குப்பை கொட்ட ஆரம்பிச்சு ஆறு வருஷம் ஆச்சு என!! உடனே இந்த வரலாறுலாம் ஞாபகம் வந்துடுச்சு..🙂 அதை பதிவு செய்து வைக்கணும்ல!!! அதான்!


இந்த ஆறு வருஷமா ஏதோ எனக்குத் தெரிந்ததையெல்லாம்  எழுதியிருக்கேன்.. என் மகிழ்ச்சியை உங்களோட எல்லாம் பகிர்ந்திருக்கேன்....இதுவரை லைக்கிய, கமெண்ட் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..


இங்க நான் பகிர்ந்த உணவுகள் எல்லாவற்றுக்கும் நீங்க கொடுத்த ஆதரவால்,  அடுத்த கட்டமாக  புக் போட ஆரம்பிச்சு, அப்புறம் கடை (சேனல்) - ஆதி’ஸ் கிச்சன் - ஆரம்பித்தும் காணொளிகளை பகிர்ந்து  கொண்டிருக்கிறேன். அதற்கும் உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என்று நினைக்கிறேன். கடைசியா சென்ற சனிக்கிழமையன்று காணொளியாக பதிவிட்டது ஒரு புதுவித ஊறுகாய்!  செய்முறை எளிது..உடனடியாக செய்து விடலாம்! எண்ணெய் சேர்க்காதது! என்றும் சொல்லலாம்.  பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன். சுட்டி கீழே!





பச்சை மிளகு மா இஞ்சி ஊறுகாய்!


பதிவு குறித்தும், மேற்கண்ட காணொளி குறித்துமான உங்கள் எண்ணங்களை பின்னூட்டங்கள் வழி பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.  தொடர்ந்து சந்திக்கலாம்.  மீண்டும் சந்திக்கும் வரை...


நட்புடன்


ஆதி வெங்கட்


16 கருத்துகள்:

  1. ஆறு வருஷங்கள் ஆச்சா?  ஆஹா..   வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வறலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!
    வாழ்த்துக்கள் மேடம்.
    புது மின் நூல் பெயர் எந்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலாறு முக்கியம் அமைச்சரே - அதே தான் அரவிந்த்.

      Adhi's Kitchen Recipes - என்பது தான் புதிய மின்னூல் - வெளியாகிவிட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. முகநூல் மட்டுமில்லை... வலைப்பூ கூட நான் பயன்படுத்துகிறேன்... எதுவும் என்னைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எதுவும் என்னைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை...// நல்ல விஷயம் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. படிச்சேன் அங்கேயும், இங்கேயும். இன்றைய வாசகம் இப்போதைய சில இக்கட்டான நிலைமைகளுக்குப் பொருந்தும் வண்ணம் உள்ளது. புதிய மின்னூல் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  5. தொடர்ந்து வாசிக்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி

    வாசகம் அருமை. முதலில் ஆறு வருட சாதனைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வலைப்பூவில் உங்கள் பதிவுகளை நான் எப்போதும் ஆர்வத்துடன் வாசிப்பேன். நானும் கொஞ்ச வருடங்களாக கைப்பேசியில்தான் பதிவுகளை போடுவதும், கருத்திடுவதுமாக இருக்கிறேன். ஆனால்,உங்கள் திறமைகள் வியக்க வைக்கின்றன. மீண்டும் மனமார்ந்த வாழ்த்துகள் பகிர்வினுக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. முகநூலில் 6 வருட ஆட்சி என்று சொல்லுங்க.[[

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நேசன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....