புதன், 18 பிப்ரவரி, 2026

CG Verdant சத்சங்கம் - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அலங்காரவல்லி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


விஜி வெங்கடேஷ் அவர்களது இல்ல வளாகத்தில் சமீபத்தில் நடந்த சத்சங்க நிகழ்வு குறித்த அனுபவங்களை இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ். 


******


CG Verdant சத்சங்கம் - 12-02-26:



சிவன் பாடலுடன்சத்சங்கம் அழகாய்த் துவங்கியது;


திரு.ஜெயராமின் ஆன்மீக அனுபவ உரையும் மெல்லத் தொடங்கியது;


திருப்பதி பாலாஜியும் ஷீரடி சாய்பாபாவும் போட்டி போட்டனர்..


சிறப்பு தரிசனம் கொடுத்து அவரை  ஆசிர்வதித்தனர்.. 


அதை விட அதிசயம் அவர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம்.. 


அவர் விவரிக்க விவரிக்க ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றது மனம்..


பேரருளுக்குக் காரணம் பூர்வ ஜென்மம்; 


அதில் அவர் செய்த கணக்கிலடங்கா புண்ணியம்🙏🏻


நினைத்தாலே நடுக்கம் தரும் பிணி வந்தது...


அவன் தாள் பணிய அருள்நிதி குவிந்தது..


பிணியை அது வேரோடு ஒழித்தது..


பக்தியெனும் பயிர் மேலும் செழித்தது;


பிணி பீடித்தது மொத்தம் மூன்று முறை!😢


இறைவன் மொத்தமாய் அதை அழித்ததும் மூன்று முறை!🙏🏻🙏🏻🙏🏻


அவன் அருளிருக்க ஏது குறை?


அற்புதங்கள் பலவற்றைப் படித்திருந்தோம்..


இன்று காதாரக் கேட்கையில் களிப்படைந்தோம்.


பக்தியும் நம்பிக்கையும் கடவுள்மேல் வைக்க;


செய்யாததையும் செய்யும் அது பலர் வியக்க..


கண்முன் தெரிந்தது அதன் சான்று...


மூடநம்பிக்கை என்போரின் வாதத்தை வென்று...


அவர் சொன்னதின் சாராம்சம்:


கடவுள் தாள் பணி; 

நீக்குவான் அவன் (பிறவிப்)பிணி;


உணவே மருந்து;

இதை நீ நினைவில் நிறுத்து;


இயற்கை அளித்த செல்வங்கள் இலை, காய், பூ, பழம்;


அவற்றை முறையாய் உண்ண சிறக்கும் உடல்நலம்;


மஞ்சள் பாலுடன் சேர பல பிணி போக்கும்;


தவறாமல் அருந்திட நம் உயிர் காக்கும்;


இயற்கை மருத்துவத்தில் இல்லாததே இல்லை;


ஆனால் அதை நம்புவோர் நம்மிடையே யாருமில்லை;


உன்னில் நம்பிக்கை வை;

அது வழிகாட்டும், அதையே செய்;


கடவுள் சங்கு சக்கரம் திரிசூலத்துடன் வருவதில்லை;


சாமானிய உருவெடுப்பான்; நமக்குத் தெரிவதில்லை..


கண்ணுக்குத் தெரியாத அருள்;

பிரார்த்தனையே அதன் பொருள்;


எதையும் எதிர்பார்த்து அது நிகழ்வதில்லை..


அது நிகழ்த்தாத அற்புதம் எதுவுமே இல்லை;


நன்றிகள் பல்லாயிரம் திரு ஜெயராமுக்கு;


நல்லறிவு புகட்டிய நல்ல  மனிதருக்கு🙏🏻🙏🏻🙏🏻


வாழிய பல்லாண்டு பல்லாண்டு

ஆயுள், ஆரோக்கிய சகல வளத்தோடு💐💐💐💐


நன்றிகள், வணக்கத்தோடு,


நட்புடன்


விஜி வெங்கடேஷ் 🙏🏻🙏🏻🙏🏻


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

18 ஃபிப்ரவரி 2026


2 கருத்துகள்:

  1. நிகழ்ந்ததை அழகாக எடுத்து கொடுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....