திங்கள், 16 பிப்ரவரி, 2026

கதம்பம் - மகளின் கைவண்ணம் - AI Caricature - Biotin cookies - பதிவர் சந்திப்பு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


ரோஷ்ணி கார்னர் - மகளின் கைவண்ணம் - 8 ஃபிப்ரவரி 2026 : 


நம்ம வீட்டு டிசைனர் இழை இழையாக கணினியில் நெய்த புடவைகள் இவை! இந்த வாரம் கல்லூரியில் நடைபெற்ற Domain courseல் ஒரு நிபுணரிடம் இருந்து மாணவிகள் எல்லோரும் இந்தக் கலையை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்! 









இவர்கள் கணினியில் நெய்த 100 டிசைன்களும் ஒரு புத்தகமாக பிரிண்ட் செய்யப்பட்டு நெசவாளர்களிடம் அன்பளிப்பாக ஒப்படைக்கப்படும்! இளம் டிசைனர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த டிசைன்களில் விரைவில் ஏதோ ஒரு புடவையை நீங்கள் கடைகளில் காணலாம்!


******


AI Caricature - 13 ஃபிப்ரவரி 2026:



ஆதியும் வெங்கட்டும் அவரவரின் தனித்திறமைகளுடன் புதியதொரு பரிமாணத்தில்...🙂 நாங்களும் இந்த  ஜோதியில்..🙂 அழகா தான் இருக்கு!!


******


Biotin cookies - 14 ஃபிப்ரவரி 2026:



ரொம்ப நாளா பண்ணிப் பார்க்கணும்னு நினைச்சிட்டே இருந்தேன்! நேரமே கிடைப்பதில்லை! இன்னிக்கு கிளாஸை கட் அடிச்சிட்டு செய்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...🙂


சரி! நாம குக்கீஸ் கதைக்கு வருவோம்! கோதுமை மாவுடன், நாட்டுச் சர்க்கரை, நெய் மற்றும் விதைகள் சேர்த்து செய்த ஹெல்தி குக்கீஸ் இது! விதைகள் அதாங்க இந்த வெள்ளரி விதைகள், சூரியகாந்தி விதைகள், பரங்கி விதைகள், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள்! 


சிறுவயதில் அம்மா சமையலுக்கு பரங்கிக்காய் வாங்கி சுத்தம் செய்யும் போது அதிலிருக்கும் விதைகளை வெயிலில் காயப் போட்டு அதை உரித்து சாப்பிட்டிருக்கிறேன்! வெள்ளரி விதைகளை டெல்லியில் கேரட் அல்வா செய்யும் போது பயன்படுத்தி இருக்கிறேன்! ஆளி விதைகளை (Flax seeds) சில வருடங்களாகவே இட்லி மிளகாய்ப் பொடி அரைக்கும் போது எள்ளுடன் சேர்த்து பயன்படுத்தி வருகிறேன்!


இப்போது இணைய உலகில் எதுவும் சாத்தியமே! Trending கலாச்சாரத்தால் எல்லா இடத்திலுமே எல்லாமே கிடைக்கிறது! இம்முறை chia seedsம் கிடைக்கவே அன்றாடம் பருகி வரும் நெல்லிக்காய், கறிவேப்பிலை ஜூஸிலும் அரை ஸ்பூன் சேர்த்து பருகி வருகிறேன்!


இன்று விதைகளைக் கொண்டு குக்கீஸாகவும் செய்து பார்த்துவிட்டேன்! வழக்கம் போல் கண் திட்டத்தில் செய்தது தான்! என்னவரும், மகளும் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள்! இதை விட வேறு என்ன வேண்டும்! இல்லையா?


******


ரேவதி வெங்கட் - பதிவர் சந்திப்பு - 15 ஃபிப்ரவரி 2026:





வெள்ளைக் கோபுரம் பின்புலத்தில் தெரிய ஃபோட்டோ எடுத்து profileல் போட்டுட்டா அப்படியே கண்டுக்காம போய்டுவோமா ராஜி..🙂 


ஃபோன் பண்ணினா 'ப்ளானே இல்லப்பா!' அதான் சொல்ல முடியல! என்றார்!  நாளை காலை சென்னைக்கு கிளம்பறோம்!


சரி! நேரமிருந்தா வாங்கோ! இல்லன்னா நாங்க வந்து பாக்கறோம்! என்றேன்!


அதிகாலையில் வழக்கம் போல் விழிப்பு வந்துவிடவே எழுந்து சற்றுநேரம் படித்துக் கொண்டிருந்தேன்! பிறகு சீக்கிரம் குளித்துத் தயாராகி நம்ம 'தல'யையும் எழுப்பி விட்டு காஃபியை போட்டு கொடுத்து ரெடியாகி ஆச்சு!


வலைப்பூ(blog) காலத்திலிருந்து தொடரும் நட்பு! சென்னையிலும் திருவரங்கத்திலுமாக அவ்வப்போது சந்தித்துக் கொண்டதுண்டு! இந்த பக்கத்து வெங்கட்டும் அந்த பக்கத்து வெங்கட்டும் கூட சகஜமாக பேசிக் கொள்ளும் ரகம் தான்! அடுத்த முறை வந்தா மெசேஜ் பண்ணனும் என்ன! என்ற அன்பான மிரட்டலோடு அங்கிருந்து கிளம்பினோம்!


இன்றைய நாள் இனிய நாள்!

******



இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

16 ஃபிப்ரவரி 2026


3 கருத்துகள்:

  1. வாசகம் அருமை.  ரோஷ்ணியின் கைவண்ணம் மிக் அருமை.  கேரிகேச்சர் படங்களை இங்கும் ரசித்தேன்.  சென்ற வாரம் எங்கள் வீட்டில் மருமகளின் சித்தப்பா, மருமகள் பிறந்த நாளுக்கு ராகி குக்கீஸ்  அனுப்பி இருந்தார்.  நன்றாக இருந்தது.  பதிவர் சந்திப்பு இனிமை.

    பதிலளிநீக்கு
  2. ஓவியத்துக்கும், கணிணியில் இழைஇழையாக டிசைன் செய்வதற்கும் என்ன வேறுபாடு எனக் குறிப்புகள் தந்திருக்கலாம். புடவை டிசைன் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொண்டிருக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  3. வாசகத்தை ரொம்ப ரசித்தேன்!

    ரோஷ்ணியின் டிசைன் கள் சூப்பராக இருக்கு. அதுவும் அந்தக் கோலங்கள் தலைப்பில் சூப்பர்!

    குக்கீஸ் சூப்பரா வந்திருக்கு.

    நானும் செய்வதுண்டு. ஆனால் தித்திப்பு இல்லை. உப்பு குக்கீஸ். வீட்டவருக்குத் தனியா செய்யலாம்னா அவரும் வேண்டாம் என்று சொல்வதால் உப்பு, மிளகு, இன்னும் பிற சுவைக்குச் சேர்த்து அப்பப்ப தோன்றுவதைச் சேர்த்து. மில்லட், கேழ்வரகு மாவு குக்கீஸ்.

    நான் சலாட் செய்யும் போதும் விதைகள், உலர்பருப்புகளைப் பொடித்துச் சேர்த்துவிடுவதுண்டு. ஆளி விதைகளையும் பயன்படுத்துவதுண்டு, பொடிகளில்.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....