எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, August 5, 2016

ஃப்ரூட் சாலட் 172 – பிறந்த நாள் இப்படியும் கொண்டாடலாம் – ஓவியம் – குழந்தையாக இரு...இந்த வார செய்தி:

சென்னை OMR சாலையில் இருக்கும் Traffic Constable திரு குமார். சாலையில் அவர் பணிபுரியும் போது அவரைப் பார்க்கும் எல்லோருக்கும் அவரைப் பிடித்திருக்கிறது. அவர் பற்றிய காணொளி தான் இந்த வார செய்தி!  பாருங்களேன்.

திரு குமார் அவர்களுக்கு இந்த வாரப் பூங்கொத்து!இந்த வார முகப்புத்தக இற்றை:ஒரு லுங்கிக்குக் கூட ஆண்களால தனியா விளம்பரம் பண்ண முடியல...

பெண்கள் இல்லாம என்னத்த சாதித்து விடுவீர்கள் நீங்கள்?

இந்த வார குறும்படம்:

நாமும் பிறந்த நாளை இப்படிக் கொண்டாடலாம்....  மனதைத் தொட்ட குறும்படம். பாருங்களேன்!இந்த வார குறுஞ்செய்தி:

Don’t confuse my personality with my attitude….  My personality is who I am, my attitude depends on who you are…..

இந்த வார ஓவியம்:

என் மகள் வரைந்த ஓவியம் ஒன்று இந்த மாத கோகுலத்தில் பிரசுரம் ஆகியிருக்கிறது.  அந்த ஓவியம் இதோ....
இந்த வார ரசித்த பாடல்:

நண்பர் மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் அவர்களின் ஃபேஸ்புக்கில் பார்த்து ரசித்த பாடல்.... மலையாளப் பாடல் ஒன்று. கேளுங்களேன்!படித்ததில் பிடித்தது:

குழந்தையாக இரு....

குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.

"என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை" என்றார்.

புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்...

"ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின. உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.

அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான். அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.

இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை. நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது. *உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு. உலகம் உனக்கு சொர்க்கமாகும்*" என்றார் குரு.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

22 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 2. எல்லாமே அருமை....
  ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள் அண்ணா...
  முகநூலிலே பார்த்தேன்... இன்னும் வளரட்டும்...

  அந்த போலீஸ்காரர் குறித்த வீடியோ இப்போ முகநூலில் ரொம்ப பிரபலம ஆயாச்சு...
  அவரை வாழ்த்துவோம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 3. முதலில் ரோஷிணிக் குட்டிக்கு வாழ்த்துகள்! படம் நன்றாக இருக்கிறது. நல்ல ஓவியராக வருவார்!

  ஓஎம் ஆர் சாலை போலீஸ் அவருக்கு வாழ்த்துகள். எப்படி என் கண்ணில் படாமல் போனார். ஓ எம் ஆரில் எந்தப் பகுதி தெரியவில்லை...பூங்கொத்து அவருக்கு..

  இற்றை புன்னகையை வரவழைத்தது...என்றாலும் இது போன்ற ஆண்கள் பொருட்கள் விளம்பரங்களுக்குப் பெண்கள் வருவது சில சமயம் எரிச்சலை ஏற்படுத்தும்...

  குறும்படம் ......மனதைத் தொட்டது.

  பாடள் ஏற்கனவே கேட்டு ரசித்ததுண்டு மீண்டும் இங்கு...

  ப பி பிடித்தது...நல்ல கதை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 4. இந்த வார ஃப்ரூட் சாலட் மிக அருமை.
  Traffic Constable திரு குமார் அவர்களை பற்றி முக நூலில் பார்த்தேன். அற்புதமாய் வழி நடத்துகிறார் அவருக்கு வாழ்த்துக்கள். குறும்படம் மிக அருமை. கண்ணன் பாடல் இசை அமைப்பவர், பாடுபவர் இருவரும் காட்டும் முக பாவங்கள் அருமை , பாடல் இனிமை. பாடல் பகிர்வுக்கு மாதவன் அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி. கண்ணன் பிறப்புக்கு அனைவரும் விரும்பி கேட்பார்கள். படித்ததில் பிடித்தது அருமை.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 5. ரோஷ்ணியின் ஓவியம் அருமை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 6. எல்லாமே ரசிக்க வைத்தது குறிப்பாக பிறந்தநாள் காணொளி வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 7. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. அனைத்தையும் ரசித்தேன். அதிலும் கடைசியாக குழந்தையாக இரு சிறப்பாக இருந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 9. பூங்கொத்துக்கு பொருத்தமானவர் தான் குமார் ஜி :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 10. செய்யும் பணியை மனமகிழ்ந்து செய்யும் குமார் போற்றுதலுக்கு உரியவர்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 11. ரோஷ்ணிக்கு எனது வாழ்த்துக்கள்! சிறப்பான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி! கோகுலம் இதழின் ஈ மெயில் முகவரி கிடைக்குமா?

  ReplyDelete
  Replies
  1. கோகுலம் இதழின் மின்னஞ்சல் முகவரி உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....