வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

ஃப்ரூட் சாலட் 175 – மனைவியின் சடலத்துடன் நடை – ஹெல்மெட் – ரஜினிடா.....


இந்த வார செய்தி:

கிராமத்து இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக தனது வேலையை விட்டது மட்டுமல்லாது தனது சொந்த வீட்டையும் விற்ற ஒரு நாற்பது வயது மனிதர் பற்றிய செய்தி.....  இந்த வாரப் பூங்கொத்து திரு ப்ரஞ்சல் துபே அவர்களுக்கு.  செய்தி படிக்க கீழேயுள்ள சுட்டியைச் சொடுக்கலாம்!


இந்த வார முகப்புத்தக இற்றை:

யார் கண்ணீரையும் நீ துடைக்க வேண்டாம். யாருடைய கண்ணீருக்கும் நீ காரணமாக இருந்து விடாதே.... அதுவே போதும்!

இந்த வார காணொளி:

செத்தாண்டா சேகரு! ஹெல்மெட் போடலை என்று கேட்ட போக்குவரத்து காவல் துறை ஆளின் முகத்தினைப் பாருங்கள்! ஹாஹா....


உசைன் போல்ட் Vs ரஜினிகாந்த்:

வேகம்டா...  வேகம்னா ரஜினிடா....


இந்த வார ஓவியம்:

எனது மகள் வரைந்த ஒரு கிருஷ்ணர் ஓவியம்.... 


இந்த வார சோகம்:தனது மனைவியின் பூவுடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால், பணம் வாங்காமல் கொண்டு செல்ல ஒருவரும் தயாரில்லை என்பதால் நடந்தே தனியொருவனாய் கொண்டு சென்ற காட்சி – ஒடிசாவில்....  சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்த மனிதர்கள்...  காணொளியும், புகைப்படங்களும் எடுத்த மாக்கள்....  என்னவொரு சோகம்..... மரத்துப் போனது மனிதமும், இந்த மாக்களின் மனமும்... இந்த உணர்வினை படம் பிடித்துக் காட்டியது கவிஞர் மகுடேஸ்வரன் அவர்களின் இக்கவிதை....

மனையாள் மாண்டனள்
என்செய்வேன் நான் ?
மார்பு வெடித்து
மடிந்தழுகின்றேன்.

பாடை முடையவும்
தூக்கிச் சுமக்கவும்
நகரில் எனக்கென
யாரோ வருவார் ?

இறந்தோர் வீட்டு
அழுகை கூட
வாழ்வோர் செவிக்கு
இடையூறாகும்.

தனிப்பிணத்தோடு
தவித்தேன் அழுதேன்
பிணவூர்திக்குப்
பணிந்தேன் தொழுதேன்

கைகால் அன்றி
கைப்பொருள் இல்லேன்
காசில்லை எனில்
காணக் கூசுவர்.

பழந்துணிகொண்டு
பிணத்தைச் சுற்றி
தோளில் இருத்திச்
சுமந்து நடந்தனன்.

வாழ்வு சிறக்க
வாழ்கின்றவரே...
இன்றென் முறையெனில்
நாளை உம்முறை.

என் அழுகைக்கு
விலை வைத்தோரே...
நன்று செய்தீர்
நெஞ்சு நிறைந்தீர்

நானும் மகளும்
மனையாள் பிணமும்
நடந்த பாதை
நாட்டுக்கர்ப்பணம்.

இந்த வார குறுஞ்செய்தி:

நன்றாகப் புரிந்து கொண்ட கணவனும் மனைவியும் கத்திரிக்கோல் மாதிரி.... எதிரெதிரே இருப்பாங்க....  ஆனா அவங்களுக்கு நடுவே யார் வந்தாலும் காலி தான்!

படித்ததில் பிடித்தது:மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

18 கருத்துகள்:

 1. சோகத்திலும் பெரிய சோகம் என்னவென்றால் ,மனைவியின் சடலத்தை யாருக்கும் சொல்லாமல் அவர்கொண்டு சென்று விட்டார் என்று மருத்துவமனை நிர்வாகம் சொல்வதுதான் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 2. பதில்கள்
  1. பார்க்கலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   நீக்கு
 3. மனைவியின் உடம்பைச் சுமப்பது என்பது... சோகத்திலும் சோகம்...
  தன் தொலைக்காட்சிக்காக வீடியோ எடுத்த அந்த நிருபருக்குக் கூட மனசாட்சி இல்லையே...

  ரஜினி - உசேன் போல்ட் முகநூலில் பார்த்தேன்....

  ரோஷிணி வரைந்த ஓவியம் முகநூலிலும் ரசித்தேன்... இங்கும்...

  வலி நிறைந்த செய்திகளுடன் நல்ல செய்திகளும் அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரஜினி - உசைன் போல்ட் - நானும் முகநூலில் தான் பார்த்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 4. படித்தேன், தெரிந்து கொண்டேன். ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. வழக்கம் போலவே ஒரு பல்சுவை பதிவு. ரோகிணிக்கு என் ஆசிகள். கிருஷ்ணர் பாவமுடன் வெகு அழகு. ரோகிணிக்கு கார்ட்டூனிஸ்ட் கேஷவ் அவர்களுடைய ப்ளோக் மிக உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். எத்தனை எத்தனை விதமாய் கிருஷ்ணரை கொண்டாடியிருக்கிறார் அவர்!

  http://kamadenu.blogspot.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரோஷ்ணியிடம் உங்கள் வாழ்த்துகளைச் சொல்லி விடுகிறேன். திரு கேஷவ் அவர்களின் ஓவியங்களையும் பார்க்கச் சொல்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Bபந்துஜி!

   நீக்கு
 6. சடலத்தைச் சுமந்த கோலம். செய்தியை முன்னரே படித்தேன். நாம் அவமானப்படவேண்டிய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 7. ரோஷ்ணி வரைந்த ஓவியம் அழகாக இருக்கின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 9. ரோஷ்ணியின் ஓவியம் அசத்தல்! பூவுடலை சுமந்து சென்ற கணவன் நிலையை விவரித்த கவிதை சிறப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....