இந்த வார செய்தி:
ஓய்வுபெற்றவர்களின் ஓய்வறியாப் பணியினால் பெயரளவில் மட்டுமே
இருந்த 51.18 ஏக்கர் குளம் மீட்டெடுப்பு: நிலத்தடி நீர்மட்டம் அபரிமிதமாக உயர்வு
நகரமயமாக்கலால்
குளங்கள் பலவும் காணாமல் போய்விட்ட நிலையில், திருநெல்வேலி மாநக ராட்சி எல்லையில் 51.18 ஏக்கர் பரப்பிலான குளத்தை மீட்டெடுத்து, கடந்த 14 ஆண்டுகளாக
மாநகர நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்கத்தினர் பராமரித்து வருகின்றனர்.
தாமிரபரணி
நதிக்கரையில் அமைந்துள்ள திருநெல்வேலி மாநகரில் குளங்கள் ஒவ்வொன்றாக காணாமல்
போய்க்கொண்டு இருக் கின்றன. இருக்கும் குளங்களும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன.
நகரமயமாக்கல் நெருக்கடியில் பாழடைந்த ஒரு குளத்தை மீட்டெடுத்து பராமரிக்கிறது
திருநெல்வேலி மாநகர நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்கம். பாளை யங்கோட்டை என்.ஜி.ஓ.
காலனி யில் 51.18 ஏக்கர்
பரப்பில் உள்ள பெரியகுளம் கடந்த 2002-ம் ஆண்டுக்கு
முன் வரையில் பராமரிப்பின்றி, சீமைக் கருவேல
மரங்கள் ஆக்கிரமிப்பில், தண்ணீர்
பெருகாமல் காட்சியளித்தது. கரைகள் கூட இல்லாமல் குளத் துக்கான அடையாளத்தைத்
தொலைத்திருந்தது.
இப்பகுதியில்
குடியேறிய ஓய்வு பெற்ற அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து, திருநெல்வேலி மாநகராட்சி நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்கத்தை
2002-ல் உருவாக்கினர். இச்சங்கத்தினர்
பெரியகுளத்தை மீட்டு உருவாக்கம் செய்யும் களப்பணியில் இறங்கினர்.
சொந்த நிதியில் பணி
அரசுத்
துறைகளை எதிர்பார்க் காமல் தங்களது சொந்த நிதியில் குளத்தில் கரைகள் அமைத்தல், மரக்கன்றுகளை நடுதல், சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல், நீர்வரத்து கால்வாய்களை சீரமைத் தல் என்று பல்வேறு பணிகளையும் படிப்படியாக
மேற்கொண்டனர். இதற்காக இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரடியாகச் சென்று, துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை உருவாக் கினர்.
பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக இப்பகுதி மக்கள் தாங்களாகவே
முன்வந்து நன்கொடைகளை வழங்கினர். சங்கத்தினர் மற்றும் பொதுமக்களின் சொந்த நிதியில்
ரூ.2.50 லட்சத்தில் குளத்தை புனர மைப்பு
செய்யும் பணிகள் தொடங் கப்பட்டன. ரூ.1000-க்கும் மேல் நன் கொடை வழங்கியவர்களின் பெயர் கள் பொறித்த கல்வெட்டை குளக்
கரையில் நிர்மாணித்தனர். குளத் தில் குப்பை கொட்டக் கூடாது என்பதை வலியுறுத்தும்
அறிவிப்புப் பலகைகளையும் வைத்தனர்.
சோலையானது கரைகள்
கரைகளை
பலப்படுத்திய பின் 2005-ம் ஆண்டில்
அவற்றில் 2 ஆயிரம்
பனங்கொட்டைகளை புதைத்து வைத்தனர். பலர் தங்கள் தாத்தா, பாட்டி பெயர்களில் மரக் கன்றுகளை நடுவதற்கும் சங்கத்தி னர்
ஊக்கம் அளித்தனர். அவர்களின் பெயர்களையும் அதில் எழுதி வைத்தனர். அதன் பயனாக தற்
போது அந்த மரக்கன்றுகள் மரமாக வளர்ந்து வருகின்றன. பனங் கொட்டைகளும் முளைத்து பனை
மரங்களாக வளர்ந்து வருகின் றன. இதனால் குளக்கரைகள் பலப்படுத்தப்பட் டுள்ளன.
நிலத்தடிநீர்
பாதுகாப்பு சங்கத் தின் தலைவர் பொறியாளர் டி.சண்முகசுந்தரம், செயலாளர் எஸ்.முத்துசாமி, பொருளாளர் பி.கோபாலகிருஷ்ணன், திட்டச் செயலாளர் என்.காஜாமைதீன் மற் றும் நிர்வாகிகள் ‘தி இந்து’விடம்
கூறியதாவது: கடந்த சில ஆண்டு களுக்கு முன் இக்குளத்தை நிரப்பி, காவலர் குடியிருப்பு கட்டுவதற்கு அரசு முடிவு செய்தது.
மாவட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் அத்திட்டம்
கைவிடப்பட்டது.
நிலத்தடி நீர் உயர்வு
20 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டு மழையின்போது குளம் பெருகியது. இப்பகுதியில்
உள்ள வீடுகளில் இப்போது நிலத்தடி நீர் பிரச்சினையே இல்லை. இந்த குளம் நிரம்பினால் 3 ஆண்டு களுக்காவது இப்பகுதியில் நிலத்தடி நீர் பிரச்சினை
இருக்காது.
மழைக்காலத்தில்
குளத்தில் உடைப்பெடுக்காமல் இருக்கவும், தண்ணீர் வழிந்தோடவும், நீர்வரத்து
கால்வாய்களைச் சீரமைக்கவும் எங்களது சொந்த நிதியில் பணி களை செய்து வருகிறோம்.
பாளை யங்கோட்டை ஊராட்சி ஒன்றி யத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தை, தற்போது தமிழ்நாடு நகர்ப்புற உறுதி செய்த வளர்ச்சி
திட்டத்தின்கீழ் ரூ.2.75 கோடியில்
புதுப்பித்து புனரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.
தற்போது
ஓரளவு தண்ணீருடன் காணப்படும் இந்த குளத்துக்கு, விருந்தினர்களாக பறவைகளும் வந்து செல்கின்றன.
தமிழ் இந்து நாளிதழிலிருந்து.....
இந்த வார முகப்புத்தக இற்றை:
நீ ஒருவன் பின்வாங்குவதால் மற்ற அனைவரையும் காப்பாற்ற
முடியுமென்றால் பின் வாங்குவதில் தவறில்லை.....
இந்த வார காணொளி:
அலைபேசிகளில் மூழ்கிக் கிடக்கும் பலருக்காகவே, இந்த
சேவை துவங்கினால் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.....
இந்த
வார கார்ட்டூன்:
மனைவியின் திட்டமிட்ட சதி!
இந்த வார குறும்படம்:
40 விநாடிகளில் ஒரு பெரிய விஷயம் சொன்ன குறும்படம்
இது. தண்ணீர் சேமிப்போம். பாருங்களேன்.
இந்த வார மகிழ்ச்சி:
ரியோ ஒலிம்பிக் – 2016 – 11 நாட்கள் பதக்கப்
பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை....
இன்று முதல் பதக்கம் – Bronze Medal – சாக்ஷி மலிக் – 58 கிலோ பிரிவில் மல்யுத்தப் போட்டியில்
வென்றிருக்கிறார். அவருக்கு இந்த வாரப்
பூங்கொத்து. இந்தியாவில் இத்தனை கோடி மக்கள் இருந்தாலும், ஒவ்வொரு விளையாட்டுத்
துறையிலும் அரசியலும், சூழ்ச்சிகளும் மலிந்திருக்க, இத்தனை தூரம் சென்று பதக்கம்
வெல்வது என்பது பாராட்டுக்குரியது. சாக்ஷி
மலிக் – மேலும் பல வெற்றிகளை அவர் அடையட்டும்.....
Badminton போட்டியில் பி.வி. சிந்துவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். இன்று மாலை நடக்கப் போகும் போட்டியில் தங்கப் பதக்கத்தை அவர் வெல்ல வாழ்த்துகள்.
Badminton போட்டியில் பி.வி. சிந்துவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். இன்று மாலை நடக்கப் போகும் போட்டியில் தங்கப் பதக்கத்தை அவர் வெல்ல வாழ்த்துகள்.
இந்த வார நற்செய்தி:
அடுத்தவர்களோ ஒப்பீடு செய்தே நம் மகிழ்ச்சியை
இழக்கிறோம். இந்த செய்தி சொல்லும் அருமையானதோர் காணொளி. பாருங்களேன்!
படித்ததில் பிடித்தது:
தையல்கடையில் ஒருமுறை ஊசியும், கத்திரிக்கோலும் பேசிக்கொண்டன...
கத்திரி ஊசியை பார்த்து நீயும், நானும் சேர்ந்துதான் துணிகளை தைப்பதற்க்கு உதவியாக
இருக்கிறோம் ....
ஆனால் தையலர் உன்னை மட்டும் தன் சட்டையில் இதயத்துக்கு
பக்கத்தில் வைத்திருக்கிறாரே ஏன் ? என கேட்டது...
அதற்கு ஊசி கத்திரியை பார்த்து நாம் இருவரும்
துணிதைக்க உதவியாக இருந்தாலும்... நீ ஒன்றாக இருந்ததை இரண்டாக வெட்டி
விடுகிறாய்... ஆனால் நான் இரண்டாக இருந்ததை ஒன்றாக இணைக்கிறேன்... அதனால்தான் என்னை இதயத்தின்
பக்கத்தில் சொருகி வைத்துள்ளார் என்றது ....
#ஒற்றுமை_உயர்வுதரும்
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
அருமையான தகவல்கள் வெங்கட்.
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்தப்பா.....
அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஎல்லா தகவல்களும் பயனுள்ளவைதான். மனைவியின் திட்டமிட்ட சதி - உண்மைதான். எனக்கும் ஞாபகமறதிதான்.
பதிலளிநீக்குஎனக்கும் இந்த ஞாபக மறதி உண்டு - குறிப்பாக பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றை மறந்துவிடுவேன்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!
அனைத்துமே அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குசாலட் சுவைத்தோம். எப்போதும் போல அருமை.
பதிலளிநீக்குதிருநெல்வேலி மாநகர நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்கத்துக்கு நம் அனைவரின் சார்பாக இந்த வார பூங்கொத்து.
சுதா த்வாரகாநாதன்
சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!
அனைத்து செய்திகளும் மிகவும் அருமை....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!
நீக்குஅருமை அண்ணா...
பதிலளிநீக்குகாணொளிகள் அருமை...
ஊசி கத்திரி சூப்பர்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குமனைவியின் திட்டமிட்ட சதி ஹஹஹஹ் ரசித்தோம்..காணொளி, நற்செய்தி அனைத்தும் ரசித்தோம் ஜி..ஊசியும் கத்தரிக்கோலும் நல்ல மெசேஜ்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குஅருமை...அருமை....சகோ
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!
நீக்குகாணொளியில் ...சூப்பர் ஐடியாவை ரசித்தேன் :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
நீக்குஅனைத்து செய்திகளும், காணொளிகளும் அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குமுதல் செய்தி பாராட்டுக்குரியது! அனைத்தும் அருமை! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநிலத்தடி நீர்வளம் காக்க செயல்பட்டவர்களுக்கு பாராட்டுக்கள். முகப்புத்தக இற்றை வாக்கியங்கள் அருமை. காணொளியின் சேவை மகத்தானது. அவசியமானது கூட... குறும்படம் தண்ணீரின் மதிப்பை உணர வைக்கிறது. போட்டிகளின் மகிழ்ச்சிக்கு வாழ்த்துக்கள். அடுத்தவரை ஒப்பிட்டு பார்த்துதான் நமக்கென்று கிடைக்கும் சந்தோசத்தை தொலைக்கிறோம் என்பதை புரிய வைக்கிறது நற்செய்தி. ஒற்றுமையின் உயர்வை கூறிய படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது. மொத்தத்தில் பழக்கலவை இனித்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குசொந்த நிதியில் குளங்களைப் பாதுகாத்து, நிலத்தடி நீர்வளம் உயரக் காரணமான அனைத்துப் பெரியவர்களுக்கும் வணக்கங்கள். இந்த வார கார்ட்டூன் அல்டிமேட்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.
பதிலளிநீக்குஎதைச் சொல்ல எதை விட ...? எல்லாமே அருமை . ஒவ்வொன்றிலும் ஒரு சேதி. மிகவும் ரசித்தேன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்கு