எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, August 6, 2016

காமெடி பீஸ்......சில நாட்களுக்கு முன்னர் வலைப்பதிவர் திருமதி அபயா அருணா அவர்கள் “நினைவுகள்எனும் தனது வலைப்பூவில் ஆபீஸ் காமெடிகள்என்ற தலைப்பில் அவர் வங்கியில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் விடுமுறை வேண்டி விண்ணப்பம் கொடுத்தபோது காரணமாக “Marriage of my Knees” என்று எழுதியதையும் அதன் பின் நடந்த கலாட்டாக்களையும் சுவையாக எழுதி இருந்தார்.  அந்தப் பகிர்வு எனது அலுவலகத்தில் இருக்கும் ஒரு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த ஒரு ஊழியரின் நினைவுகளை மீட்க உதவியது......  அது இன்றைய பதிவாக.....

அந்த நபர் உத்திரப் பிரதேசத்தினைச் சேர்ந்தவர் – பட்டதாரி – உத்திரப் பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலத்தில் பட்டம் வாங்குவது வெகு எளிது – பல தேர்வுகளில் புத்தகங்களை வைத்துக் கொண்டே பரீட்சை எழுதுவார்கள் – பிட் அடிப்பது வெகு சாதாரணமான விஷயம்.  அதுவும் இல்லாமல் ஆங்கிலத்தைக் கூட ஹிந்தியில் எழுதும் சிலரைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலானவர்கள் ஹிந்தி வழியாகத்தான் பட்டம் பெறுவார்கள் என்பதால் ஆங்கிலம் தகராறு தான்.

ஒரு நாள் அலுவலகத்திற்குப் புதிதாக வந்தவர், அவரைப் பற்றியும் அவரது தந்தை பற்றியும் விசாரித்தபோது, அவர் சொன்ன பதில் – “I am CISF, Father of UP Police!”  கேட்டவர் ஒரு நிமிடம் அசந்து போய் நின்றார்.  என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை. அதன் பிறகு ஹிந்தியில் விளக்கம் சொல்லச் சொல்லி கேட்க, “அட உனக்கு இங்க்லீஷ் தெரியாதா? என்று கேட்டுவிட்டு, நான் CISF-ல் பணி புரிகிறேன். எனது தந்தை UP Police-ல் பணி புரிகிறார்!என்றார்.

மெட்ரோவில் பயணித்து அலுவலகத்திற்கு வரும் போது ஒரு சிலரை சிவந்த கண்களோடு பார்த்திருக்கிறார். அவர்களிடம் கண்ணில் என்ன பிரச்சனை என்று கேட்க, அவர்கள் Madras  Eye என்பதை மருத்துவ மொழியில் சொல்ல, அதை கேட்டவர் எங்களிடம் சொன்னது மெட்ரோவில் நிறைய பேருக்கு கண்டக்டர் வெயீட்டீஸ்....  எங்களுக்குப் புரியாமல் முழிக்க, திரும்பவும் கண்டக்டர் வெயீட்டீஸ் என்றார்.  மெட்ரோல கண்டக்டர் கிடையாதே, அவர் அதுக்கு விளையாட்டுல வரமாதிரி வெயீட்டீஸ் எல்லாம் சொல்லணும்னு யோசித்துக் கொண்டிருந்தபோது, ஹிந்தியில் கண் வலி என்று சொன்ன பிறகு தான் அவர் சொன்னது Conjunctivitis என்பது புரிந்தது.

ஒரு நாள் காலை வந்தவுடன், முந்தைய தினம் நடந்த ஒரு விஷயத்தினைச் சொன்னார். அவருக்கு இருக்கும் நல்ல குணம், தான் செய்யும் முட்டாள் தனங்களையும் சொல்லி விடுவது தான். பெரும்பாலானவர்கள் முட்டாள்தனம் என்று தெரிந்தால் சொல்லாமல் சமாளித்து விடுவது தானே வழக்கம். இவர் அப்படி அல்ல! சரி முந்தைய நாள் அப்படி என்னதான் செய்தார் சொல்லுங்கப்பு! என்று கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன்.மதுராவில் ஏதோ பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றிருக்கிறார் அவர். வேண்டிய பொருட்களை வாங்கிவிட்டு பர்சில் பார்த்தால் பணம் குறைவாக இருந்திருக்கிறது.  கடைக்காரரிடம் பில் போட்டு வைங்க, இதோ ATM-ல பணம் எடுத்துட்டு வந்துடறேன் என்று சொல்லி Bike-ல் ATM நோக்கி பறந்திருக்கிறார். அங்கு சென்று CARD நுழைத்து, PIN உள்ளீடு செய்து, 5000 ரூபாய் தேவை என உள்ளீடு செய்ய, பணம் வந்தது. ATM-ல் இருந்து அதற்கான ரசீதும் வந்தது. அவசர அவசரமாக ரசீதை மட்டும் எடுத்துக் கொண்டு மீண்டும் Bike-ல் கடை நோக்கி அவசரப் பயணம்!

கடைக்குப் போய் தனது Purse-ஐ பார்த்த பிறகு தான் அவசரத்தில் ரசீதை மட்டும் எடுத்துக் கொண்டு பணம் எடுக்காதது தெரிந்திருக்கிறது. மீண்டும் ஒரு ஓட்டம் ATM-க்கு! அங்கே பணம் இல்லை. சுற்றி முற்றி பார்க்க, யாரும் இல்லை....  பெரும்பாலான ATM போல, அங்கே காவலாளியும் இல்லை. அன்றோ விடுமுறை தினம் என்பதால் Bank விடுமுறை. அடுத்த நாள் சென்று வங்கியில் முறையிட உங்கள் பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்பதைச் சொல்லி CCTV Footage பார்க்க, இவருக்குப் பிறகு வந்தவர் சுலபமாக ஏற்கனவே இருந்த பணத்தினை எடுத்துக் கொண்டு வெளியேறுவது தெரிந்திருக்கிறது. அவர் சாமர்த்தியமாக தனது ATM Card பயன்படுத்தவே இல்லை! பணம் போனது போனது தான்!

அந்த நிகழ்வுக்குப் பிறகு ATM செல்வது என்றால் அவருக்கு ஒருவித நடுக்கம் தான்! கூடவே யாரையாவது அழைத்துச் செல்கிறார்! தினம் தினம் இப்படி ஏதாவது செய்து கொண்டே இருப்பதால் அவரை கலாய்ப்பதே பலருக்கும் வேலையாக இருக்கிறது.

அலுவலகத்தில் இடைவிடாத வேலை Tension-களுக்கு நடுவே இப்படியும் சிலர் தேவையாகத் தான் இருக்கிறார்கள் – நமக்கும் கொஞ்சம் Relaxation கொடுக்க!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

28 comments:

 1. ஒரு நபர்வெளியேறி அடுத்தவர் நுழையும் வரை அது பணத்தை நீட்டிக் கொண்டே இருக்காதே..? சில நிமிடத் துளிகளுக்குள் உள்ளிழுத்து விடுமே. இருந்தும் அடுத்தவர் எடுத்திருக்கிறார் எனில், இவர் எத்தனைவிரைவாக வெளியேறியிருக்க வேண்டும்..? ஹா... ஹா... ஹா... பலே ஏமாளி.

  ReplyDelete
  Replies
  1. இப்போதெல்லாம், பல ATM Machines பணத்தை உள்ளே இழுத்துக் கொள்வதில்லை. அதற்கான அறிவிப்பும் வருகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   Delete
 2. ஹா.... ஹா..... ஹா.... ஸ்ட்ரெஸ் ரிலீவர்ஸ்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. மற்றதெல்லாம் ஒருபுறம் இருக்க -

  அவசரத்துக்கு அவருடைய பணம் உதவாமல் - பறி போனது தான் மிகவும் வருத்தம்..

  கவனமாக இருந்திருக்க வேண்டாமோ..

  ReplyDelete
  Replies
  1. வருத்தம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. தொழிற்சாலையில் இரவு ஷிஃப்டில் பணி புரிபவர்கள் சற்று கவனக் குறைவுடன் இருப்பார்கள் லேத் என்னும் கடையும் மெஷினில் பாகங்களை எடுக்கும்முன் ஓரங்கள் கூராக இருக்கக் கூடாது. பகல் ஷிஃப்டில் வேலைக்கு வந்த ஒருவர் இரவில் தயார் செய்ட்ர்ஹ பொருட்களில் ஓரங்கள் சரியாக இல்லை என்பதை லாக் (log) புத்தகத்தில் இப்படி எழுதி இருந்தார் ten pieces checked two pieces made two ok. six pisir every where என்று எழுதினார் நிறையவே தமாஷ்கள் நடக்கும்

  ReplyDelete
  Replies
  1. பிசிர்.... ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 5. இப்படி பலரைப் பார்க்கலாம்....
  பாவம் பணத்தை விட்டுவிட்டாரே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 6. Conjunctivitis நிஜமாகவே சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 8. சற்றே இளைப்பாற..சில வித்தியாச நிகழ்வுகள்.. ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 9. Conjunctivitis கதை ஹஹாஹஹ்...

  வாட்சப்பில் இந்தக் காமெடிகள் வந்தது..சுற்றி வருகிறது என்று நினைக்கின்றேன்...எனது கசின்ஸ் இருவரிடமிருந்தும் சேம்...

  Telegram sent by a Rural branch manager to Zonal office

  "Wife serious, send substitute"

  பாவம் அவர் பணத்தை இழந்தது.....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 10. அப்பாவி நண்பரின் காமெடி செய்கைகள் பரிதாபம் கொள்ள வைக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 11. கடைசியில் இப்படி 'உச்' கொட்ட வைத்துவிட்டாரே !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

   Delete
 12. நண்பர் மறதியால் பணத்தை இழந்தது கேட்டு வருத்தம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 13. இதை போலத்தான், என் ஜோக்காளியிடமும் சில மாதம் முன் ஒருவர் மாட்டிக்கொண்டார்..அவர் செய்தது ,ரூபாயைக் கிழித்து போட்டுவிட்டு ,ரசீதை மட்டும் கொண்டு வந்து விட்டார் :)

  ReplyDelete
  Replies
  1. அடடா.. ரூபாயைக் கிழித்து ரசீது கொண்டு வந்தாரா! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 14. பயிற்சி மருத்வாராக இருக்கும் போது எப்பவும் குறும்பு அதிகம்!
  படித்தவர் படிக்காதவர் யாராக இருந்தாலும் தமிழில் தான் கேள்விகள் கேட்பேன்! தமிழ் தெரியாதவர்கள் கிட்டே ஆங்கிலம். மலயாளம்; கொஞ்சம் தெலுங்கும் உண்டு!

  ஒருவர் உடம்பு வலிக்குது என்றார்!
  எங்கே என்று கேட்டால்...
  Here and there; there and here என்றார்.
  எங்கே சரியாக சொல்லுங்கள் என்று மறுபடியும் கேட்டால்...
  Here and there; there and here and every where!!
  இந்தா வாங்கிக்கோ ஒரு நாளைக்கு மூன்று அனால்ஜின் கொடுத்து அனுப்பி விட்டேன். வேற என்ன செய்வது. கூடம் வேற அள்ளும்!

  ReplyDelete
  Replies
  1. Here and there; there and here and every where! :) ஹா ஹா.... உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நம்பள்கி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....