தில்லி வந்த புதிதில் அலுவலகம் விட்டு வீடு
திரும்பிய பிறகு நிறைய நேரம் கிடைக்கும். சமையல் வேலைகள் இல்லை. உணவு முழுவதுமே
வெளியே தான், அதாவது உணவகங்கள்/DHதாபாக்களில் தான் சாப்பிடுவது வழக்கம். காலியாக இருக்கும் நேரங்களில் நிறைய
புத்தகங்கள் படிப்பது வழக்கம். கதைப் புத்தகங்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் என
பலதும் படிக்கும் பழக்கம் இருந்தது. அறை நண்பர் தமிழ் இதழ்கள் பலவும் வாங்கி ஒரு முறை
பக்கங்களைப் புரட்டிய பின்னர் தூக்கிப் போட்டு விடுவார்!
நான் இப்படி கிடைக்கும் புத்தகங்களை
படிப்பதோடு, அதில் வரும் கவிதைகளில், எனக்குப் பிடித்த கவிதைகளை, எனது டைரிகளில்
எழுதி வைத்துக் கொள்வது ஒரு வழக்கமாக வைத்திருந்தேன். நமக்கோ கவிதை எழுத வராது!
பிடிச்ச கவிதையைப் படிப்பதும், அப்படியே மறந்து விடுவதும் இல்லை. அப்போது டைரியில்
எழுதி வைத்திருந்தேன். இப்போது வலைப்பூவில் “படித்ததில் பிடித்தது” என்ற தலைப்பில் ஃப்ரூட் சாலட் பகுதியிலோ, அல்லது தனிப்பதிவாக எழுதி
வருகிறேன்!
நேற்று
புத்தக அலமாரியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது பழைய டைரி ஒன்று கிடைக்க, சுத்தம்
செய்வதை விட்டு விட்டு, டைரியின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். நிறைய
கவிதைகள் அதில் படித்தேன். சில கவிதைகள் அப்போது பிடித்திருந்தது என்றாலும்,
இப்போது படிக்கும்போது ரசிக்க முடியவில்லை. சில கவிதைகள் இப்போதும் ரசிக்க முடிந்தது!
கிட்டத்தட்ட இருபது, இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் வார இதழ்களில் வந்த
கவிதைகள் அவை....
நான்
இப்போதும் ரசித்த இரண்டு கவிதைகள் இதோ இந்த புதனில் உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன்!
“பெருசு”
அந்தக் கரும்பளபளப்பு
காலம் போட்ட தூசு
திரையைத் தாண்டியும்
தெரிந்தது...
மரமா, கல்லா
கல்மரமா?
அந்த எஃகு உடம்புள்
தோண்டினால்
கத்தாழைச் சோறாய்
ஏதேனும் இருக்குமோ?
ஊர் எல்லையில்
பூவும், பூஜையுமற்று
தனியாய், கருப்பாய்
உட்கார்ந்திருக்கும்
காளியம்மை போல்
துன்பப்படாது, வேலையற்று
மூலையில் சாத்தி வைக்கப்பட்டு.
ஆயுத பூஜைக்கு, துடைத்து
பொட்டிட்டு, மறுபடி
மூலையில் சாத்தி....
இந்த உலக்கையைக்
கட்டிக்கொண்டு மாரடிக்க
யாருக்குச் சக்தியோ
நேரமோ இருக்கிறது?
பெண்ணாக இருந்து பார்...
துள்ளித்திரி, வயசுக்கு வா
அம்மாவுக்குப் பயப்படு
அடிக்கின்ற காற்றுக்கு
தாவணியைச் சரி செய்
கனவு வளர்
விடலைத் தோழனின்
பிடிவாதத்துக்குப் பயந்து
ஒரே ஒரு கடிதம் எழுது
நீ ஆணாக இருந்தாலும்
அரை மணி நேரம்
இளம்பெண்ணாக இருந்து பார்
ஒரு பருவப்பெண்ணின்
பெண்மை உனக்குப் புரியும்.
விழித்திரு வீரிட்டு அழு
தாலாட்டுக்கு ஏங்கு
உற்றாரும் பெற்றாரும்
இல்லை என உணர்
ஈ மொய்க்கக் கிட
கிடத்தப்பட்டிருப்பது
அரசுத் தொட்டில் என்று
அறியாமல்
அந்த வானம் பார்த்துச் சிரி
நீ ஆணாய் இருந்தாலும்
அரை மணி நேரம்
பெண் குழந்தையாக இருந்து பார்”
-
P. ஜோதி
என்ன நண்பர்களே, டைரிக் கவிதைகளில் இரண்டு
மட்டுமே இங்கே கொடுத்திருக்கிறேன்.
பிடித்திருந்தால் டைரிக் கவிதைகள் தொடரலாம்!
மீண்டும் சந்திப்போம்....
வெங்கட்
புது தில்லி.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ரசனை. என்ன காரணமோ, சில சமயங்களில் சில படைப்புகள் நமக்குப் பிடித்துப் போகின்றன.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஇரண்டாவது பிடித்தது. பகிர்விற்கு நன்றி அண்ணா.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.
நீக்குஅப்பவே இப்படி எழுதியிருக்காங்களே சகோ...எப்பதான் விடியும் பெண்களுக்கு...கவிதை நன்று தொடரலாம்..
பதிலளிநீக்குஅப்பவும் எப்பவும் இந்த நிலை..... என்று மாறுமோ?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
தாராளமாகத் தொடரலாம்
பதிலளிநீக்குமிகச் சிறப்பாக இருக்கின்றன
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குஎனக்கும் இம்மாதிரி பிடித்தவற்றை எழுதி வைக்கு வழக்கம் இருந்தது இப்போது இல்லை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்குஇரண்டாவது கவிதை மிகவும் அருமை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குஇரண்டும் அருமை! எழுதியவருக்கும் பகிர்ந்த தங்களுக்கும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.
நீக்குகவிதைக்கு பொருத்தமாய் படமும் அருமை :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
நீக்குசிறப்பான கவிதைகள்! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குரொம்ப நல்லாயிருக்கு அண்ணா...
பதிலளிநீக்குதொடருங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குஇரண்டாவது கவிதை ரொம்பவே பிடித்திருந்தது. டைரிக்கவிதைகளைத் தொடரலாமே ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்கு