முகப் புத்தகத்தில் நான் – 11
வாடகை தராத
ரூம் பார்ட்னர் – 21 ஆகஸ்ட் 2016
சில
நாட்களாக ஒரு ரூம் பார்ட்னர் என்னுடன் தங்கி இருக்கிறார். தான் மட்டும் தனியாக
தங்கினால் பரவாயில்லை – என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் இன்னும் அவரது சில
நண்பர்களையும் அழைத்து வந்து விடுகிறார். எப்போது வருகிறார் எப்போது போகிறார்
என்பது அவருக்கே வெளிச்சம். நானும்
பரவாயில்லை – நமக்குத் தொந்தரவில்லாதவரை பிரச்சனை வேண்டாம் என்று சும்மா இருந்து
விட்டேன். ஆனால் அவ்வப்போது பேச்சு வார்த்தை நடத்தி, வெளியே அனுப்பிக்
கொண்டிருந்தேன். ஆனால் மீண்டும் மீண்டும் வந்து விடுகிறார்!
எப்ப உள்ளே வருகிறார், எப்படி உள்ளே வருகிறார் என்பது
புரிந்து கொள்ள முடியாத புதிர்....
இருக்கும் எல்லா வழிகளையும் அடைத்து விட்டதாக நான் மமதை கொண்டாலும்
எப்படியோ வந்து விடுகிறார் அந்த ரூம் பார்ட்னர். வேற யாரு எலியார் தான்!
பெரும்பாலான நேரங்களில் வீட்டில் நான் இருப்பதில்லை என்பதால் அவருக்கு இன்னும்
சௌகரியம்! சுதந்திரமாய் எனது வீட்டில் திரிய முடிகிறது அவரால். நடமாட்டம் தெரிந்த போதெல்லாம் நானும் அதனுடன் ஒரு
கபடி போட்டி நடத்தி வெளியே துரத்தி விட்டுக் கொண்டிருந்தேன்.
இன்று பகல் முழுவதும் வீட்டில் இருக்க, இரண்டு பேரை
பார்த்து விட்டேன்... பேச்சு வார்த்தைகளால் பயனில்லை. கொல்ல வேண்டாம் என்று பார்த்தால் ரொம்பவே
ஆட்டம் காட்டுகிறார்... வேறு வழியில்லை –
ஒரு பாயாசத்தைப் போட்டுட வேண்டியது தான்!
தப்பா நினைச்சுடக் கூடாது – 22 ஆகஸ்ட் 2016
அது என்னமோ எனக்குன்னு ஏன் இப்படி எல்லாம் கேட்குதுன்னு
தெரியல! எப்ப வீட்டை விட்டு வெளியே வந்தாலும் நான் காதைப் பொத்திக்கிட்டுப்
போனாலும் விஷயங்கள் தானா வந்து காதுக்குள்ள விழுது! ராஜா காது கழுதைக் காது
தான்..... :)
வீட்டின் வெகு அருகில் Chugh தரம்ஷாலா என்று ஒரு
இடம் இருக்கிறது. தில்லி வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இது போன்ற
தரம்ஷாலாக்களில் தங்குகிறார்கள். அவ்வப்போது தமிழர்களும் இங்கே தங்குவதுண்டு.
பெரும்பாலும் தமிழகத்திலிருந்து தில்லி வரை ரயிலில் வந்து பிறகு இங்கிருந்து
ஆக்ரா, மதுரா, ஹரித்வார், ரிஷிகேஷ், அலஹாபாத், காசி என பத்து பதினைந்து
நாட்களுக்குப் பேருந்தில் பயணம் செய்வார்கள். அவர்களுடன் சமையல் ஆட்களும்
வருவதுண்டு.....
நேற்று வீட்டை விட்டு வெளியே வந்தபோது எனக்கு முன்னர்
வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இரண்டு மறத் தமிழர்கள்.... வேகவேகமாக நடந்து கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்குள் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். நானும் நடந்து கொண்டிருக்கிறேன்.
“நல்ல வேளை ஆட்டோ பிடிச்சு வந்துட்டேன். ஏதோ நான் தண்ணி அடிச்சுட்டு லேட்டா
வந்திருக்கேன்னு யாரும் தப்பா நினைச்சுடக் கூடாதே” என்று ஒருவர்
சொல்ல, மற்றவரும் அதை ஆமோதிக்கிறார்.
கைகளில் சுருட்டி வைத்திருக்கும் காசு தெரிகிறது. நடுவே, மற்றவரிடம் ஒரு கேள்வி – “ஏம்பா, நீ
பாட்டுக்கும் போறீயே, இடம் தெரியுமா?” அதற்கு
மற்றவர் சொன்ன பதில் “தெரியும், தெரியும் வா.....” அதன் பிறகு அவர்கள் வேறு பாதையில்போக, நான் வேறு
பாதையில் சென்றேன். திரும்பி வரும்போது விட்ட இடத்திலேயே மீண்டும் பார்த்தேன். நடை
கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது! தேடிச்
சென்ற இடம் வேறு எதுவும் அல்ல... சாராயக்
கடை தான்! அங்கேயே குடித்து விட்டு, கைகளில் நொறுக்ஸ் பாக்கெட் வைத்துக் கொண்டு
தின்றபடியே நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்....
அப்போதும், “தண்ணி அடிச்சுருக்கேன்னு யாரும் தப்பா
நினைச்சுடக்கூடாது..... நல்லாவா இருக்கும்!” என்றபடியே தள்ளாடிக்கொண்டே நடக்கிறார்கள்!
நடத்துங்க! நடத்துங்க! ஒழுங்கா Chugh தர்ம்ஷாலா போய்ச் சேர்ந்தா சரி!
என்ன நண்பர்களே, என்னுடைய சமீபத்திய முகப்புத்தக
இற்றைகளை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
ஒன்றை ஃபேஸ்புக்கிலேயே படித்தேன். எலியார் தொந்தரவு பற்றி நானும் இரண்டு பதிவுகள் போட நேர்ந்திருக்கிறது!
பதிலளிநீக்கு:))
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குகாசிக்குப் போயும் கரும்ம் தீராதது போன்று அங்கேயும் டாஸ்மாக் பிராஞ்சா. எலியை ஒழிக்க பூனை வளருங்க. பூனைத் தொல்லைக்கு ஒரு இடுகை போட்டபிறகு அதை ஒழிக்கற வழியை அப்புறம் சொல்றேன்
பதிலளிநீக்குதில்லி அரசின் கடை! தமிழக டாஸ்மாக் அல்ல!
நீக்குஆஹா பூனை வேற வளர்க்கணுமா! சரி தான். :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
எலிக்கு இத்தனை களேபரம்.. அடுத்தது என்ன?..
பதிலளிநீக்குஆனாலும் ,
குடிக்கு கூட்டு கிடைத்து விடும் என்பார்கள்..
அவர்கள் ஜோலி அவர்களுக்கு!..
எலிக்கு இத்தனை களேபரம்! :)
நீக்குதங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குவீட்டை மாற்ற முடியாதா?
பதிலளிநீக்குஎலி பிரச்னையாச்சே .
வீட்டை மாற்றுவதா! :)
நீக்குபிரச்சனை தான். சரியாக்கிவிடலாம்....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!
எங்க வீட்டில் பூனை வாடகை கொடுக்காமல் பால்கனி மீது வாஸ்துவிற்காக என் கணவர் அமைத்த loft டினை மெட்டர்னிட்டி வார்ட்டாக மாற்றியது .குட்டிகள் வளர்ந்த பின்னும் அடிக்கடி வந்து போய்க்கொண்டு தான் உள்ளது . வந்தால் டெல்லிக்கு அனுப்பி வைக்கிறேன்
பதிலளிநீக்குபூனை வந்தால் தில்லிக்கு அனுப்பி வைங்க! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!
உங்க பார்ட்னர் உங்களுக்கு மட்டுமல்ல. பலருக்கும் பார்ட்னர். எங்கும் அவரது தொந்தரவே. என்ன செய்வது?
பதிலளிநீக்குபலருக்கும் பார்ட்னர்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
ஃபேஸ் புக் பக்கம் வருவது எப்பவாவதுதான் பதிவு யெஸ் எப்போதும்
பதிலளிநீக்குநான் அப்பப்ப கொஞ்சம் எட்டிப்பார்த்துட்டு வருவேன்! :) சில சமயங்களில் இப்படி எழுதுவதுண்டு! எனக்கும் வலைப்பதிவு தான் முதல் சாய்ஸ்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
OK Jee
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
எல்லாம் விதி.... என்னதான் செய்வது.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் த ரூபன்.
நீக்குஆகா ...
பதிலளிநீக்குதமிழர்கள் தங்கள் தொண்டை அங்கும் தொடர்கிறார்களா ?
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.
நீக்குதம +
பதிலளிநீக்குதமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி மது.
நீக்குஎங்க வீட்டுல பெரிய ரூம் பார்ட்னர் அதாங்க பெருச்சாளி அடிக்கடி விஜயம் பண்றாரு! என்ன செய்யறதுன்னு புரியலை!
பதிலளிநீக்குஅடடா... பெருச்சாளி என்றால் இன்னும் தொல்லை அதிகமாச்சே...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
இந்தப் பதிவை ஏற்கெனவே படிச்சேன் போல! எலியாரால் எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவங்கள் இன்னமும் அதிகம். நானும் பதிவே எழுதி இருக்கேன். :) மிச்சப்பதிவுகள் பின்னர் படிக்கணும்.
பதிலளிநீக்குஇந்தப் பதிவு இதுக்கு முன்னாடி எழுதலையே.... :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
via FB :D or via google+
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்குhttp://sivamgss.blogspot.in/2014/10/blog-post_5.html இது ஒரு சின்ன விளக்கம் மட்டுமே. எலிகள் குடித்தனம் நடத்திக் குழந்தைகள் பெற்றுக்கொண்டு சீரோடும், சிறப்போடும் வாழ்ந்த கதையெல்லாம் பதிவாக்கி இருக்கேன். :)
பதிலளிநீக்குஓ.. உங்கள் அனுபவங்களையும் படிக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
எலிகளின் அட்டகாசம் தாங்காது! எங்கள் வீட்டில் அதுவும் தோட்டத்துடன் இருப்பதால் அதிகம்..பெரியவர்கள் சிறியவர்கள் நண்டு சிண்டுகள் என்று....
பதிலளிநீக்குகீதா: இப்போதுள்ள ஃப்ளாட்டில் இல்லவே இல்லை. ஆனால் முன்பு இருந்த வீட்டிலெல்லாம் நிறைய உண்டு. அதை விரட்டும் வைபவம் எல்லாம் தனிக்கதை. பதிவு ஒன்று முன்பே எழுதி பாதி இருக்கிறது. வெங்கட்ஜி ஒரு பூனையை வைத்துக் கொண்டால் டாம் அண்ட் ஜெர்ரி என்று தொடர் கூட நீங்கள் எழுதலாம் எடுக்கலாம்....ஹிஹிஹிஹி...
ஆஹா.... உங்கள் அனுபவங்களையும் எழுதுங்கள். டாம் அண்ட் ஜெர்ரி தொடர்! ஆஹா எடுத்தால் ஆயிற்று!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
வாடகை தராத ரூம் பார்ட்னரை முகநூலில் வாசித்தேன்...
பதிலளிநீக்குஎங்க வீட்ல ஒரு குருஷேத்திர யுத்தமே நடத்தி டப்பர்வேர் டப்பாக்களை எல்லாம் துவம்சம் பண்ணியிருக்காங்க...
போனவாரம்தான் போய் பார்த்து நொந்து போயி... வீட்டைக் கிளீன் செய்து விட்டு வந்தார்கள்...
அடடா.... கஷ்டம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.