முகப் புத்தகத்தில் நான் – 10
போதையில்
மிமிக்ரி – 8 ஆகஸ்ட் 2016
நேற்று
இரவு உணவிற்குப் பிறகு ஒரு நடை நடப்பது எனது வழக்கம் – இதனை முன்பும் சொல்லி
இருக்கிறேன். காலார நடப்பது மனதுக்குக் கொஞ்சம் இதம் தருவதோடு, வித்தியாசமான
காட்சிகளைப் பார்க்கவும் வாய்ப்பு தருவதாக அமைந்து விடும். நேற்றும் அப்படி ஒரு
காட்சி!
ஆட்டோ ஓட்டுனராக வாழ்க்கையைத் துவங்கிய கலாபவன் மணி..... நல்லதோர் கலைஞன் இப்போது இல்லை என்பது வருத்தமான விஷயம்.....
மூன்று
ஆட்டோ ஓட்டுனர்கள் – தத்தமது வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி, பேசிக்கொண்டிருந்தார்கள்.
இரண்டு பேர் கேட்டுக் கொண்டிருக்க, ஒரு ஓட்டுனர் மட்டும் பேசிக் கொண்டிருந்தார்.
நிற்கும்போதே தள்ளாட்டம் – குரலிலும் தள்ளாட்டம் – போதையின் பிடியில் இருக்கிறார்
என்பதைப் பார்க்கும்போதே தெரிந்து கொள்ள முடியும்!
ஏதோ
பைரவர் பற்றிய அனுபவத்தினை பேசிக் கொண்டிருந்தார் போலும். நாம வருவது பைரவருக்கு
தூரத்திலே இருந்தே தெரிந்துவிடும். நீங்கள் வருவதை நான் தெரிந்து கொண்டுவிட்டேன்
என்பதைச் சொல்லும் விதமாக அது குரல் கொடுக்கும் என்று சொல்லி, நாய் மாதிரியே விதம்
விதமாக குரைக்க ஆரம்பித்து விட்டார். நடுநடுவே Modulations வேறு!
இவர்
இப்படி மிமிக்ரி செய்து கொண்டிருக்க, எதிர் புற Compound சுவரின்
உட்புறத்திலிருந்து பதில் குரல் – இது உண்மையான நாயின் குரல்! இப்புறத்திலிருந்து
இவரின் பதில்! ஒரே காமெடியாக இருந்தது.
உள்ளே சரக்கு சென்ற பிறகு என்ன செய்கிறோம் என்பதே பலருக்கும்
தெரிவதில்லை! தள்ளாடியபடி வாகனத்தினை
செலுத்தாமல் இருந்தால் சரி! என்ற நினைவுடன் நானும் நகர்ந்தேன்....
பேய் ஜல் – 16 ஆகஸ்ட் 2016
தலைநகர் தில்லி வந்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் நான்கு
மாதங்கள் ஆகிவிட்டது. ஏப்ரல் மாதமே இருபத்தி ஐந்து வருட தில்லி வாழ்க்கை பற்றி
பதிவு எழுத நினைத்து, எழுத முடியாமலே போயிற்று.
சரி விடுங்கள்.... முடிந்து போனதைப் பற்றி எதற்கு பேச வேண்டும்?
தமிழகத்திலிருந்து வரும்போது ஹிந்தி மொழியில் ஒரு
அட்சரம் கூடத் தெரியாது! யார் ஹிந்தியில் பேசினாலும், ஹிந்தி மொழியில் எழுதியதைப்
பார்த்தாலும் முழிமுழியென முழிப்பேன். நான் ஆங்கிலத்தில் பேச, அவர்கள் ஹிந்தியில்
பதில் சொல்ல, ஒரே கலாட்டாவாக இருக்கும்! இப்போது அந்த நாட்களை நினைத்துப்
பார்த்தால் சிரிப்பாக இருந்தாலும், அந்நாட்களில் என் மீதும் இந்த ஊர்க்காரர்கள்
மீதும் அத்தனை கோபம் வரும்!
”ஸ்கூல்ல யாரோ
சொன்னாங்கன்னு ஹிந்தி எதிர்ப்பு, போஸ்ட் ஆஃபீஸ் பலகைல தார் அடிக்கறதுன்னு சுத்தின
இல்லை, அதான் இந்த மாதிரி தில்லில வந்து ஹிந்தி தெரியாம திண்டாடறே” என்று மனசாட்சி வேற, நேரம் தெரியாம கத்தும். இப்படி ஒரு சில மாதங்கள் கழித்து வேறு
வழியின்றி ஹிந்தி பேசக் கற்றுக் கொண்டேன்.
ஆனாலும் படிக்கத் தெரியாது. பிறகு
அலுவலகம் மூலமாக ஹிந்தி கற்றுக்கொள்ள அனுப்பி வைத்தார்கள். அதில் தான் எழுதவும், படிக்கவும் கற்றுக்
கொண்டேன்.
அதற்குப் பிறகு தான் பல இடங்களில் சுத்தமான ஹிந்தியில்
எழுதி இருக்கும் பலவற்றைப் படிக்க ஆரம்பித்தேன்! எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பித்து,
சில மாதங்களில் நன்கு படிக்கக் கற்றுக் கொண்டேன். தொடர்ந்து ஹிந்தி படிக்க
வாய்ப்பில்லாததால் இப்போதும் படிக்க முடியும் என்றாலும் சில இடங்களில் திணரும்!
ஹிந்தி படித்த புராணம் சரி, அது என்ன தலைப்பில் பேய் ஜல்? பேய் ஜல் ஜல்னு தான்
வரும்.... எங்களுக்குத் தெரியாதா? என்று கேட்பதற்குள் சொல்லிவிடுகிறேன்!
குடிநீரை இங்கே பீனே கா பானி என்று எழுதுவது
வழக்கம். ஆனால் ஒரு சில இடங்களில் வேறு
மாதிரி எழுதி இருப்பார்கள். நம்ம ஊரில்
காப்பி என்று எழுதுவதற்கு பதில், “கொட்டை வடி நீர்!” என்று சில
கடைகளில் எழுதி இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
அந்த மாதிரி சிலர் இங்கேயும் உண்டு!
ஒரு இடத்தில் குடிநீருக்கு “பேய் ஜல்” என்று சுத்த ஹிந்தியில் எழுதி வைத்திருந்தார்கள்! சாதாரண ஹிந்தியே
தகராறு... இதில் இப்படி எழுதி வச்சா என்னாவது! ஒரு வேளை பைப்பைத் திறந்தால் பேய்
ஜல் ஜல்னு சத்தத்தோட அந்தப் பைப்ல பேய் வருமோன்னு அந்தப் பக்கம் போகாமலேயே
இருந்தேன்!
பேய் ஜல்! மட்டுமல்ல, இப்படி சில ஹிந்தி வார்த்தைகள்
பார்க்கும்போதெல்லாம் சிரிப்பு தான்!
என்ன நண்பர்களே, என்னுடைய சமீபத்திய முகப்புத்தக
இற்றைகளை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
தங்களின் ஆரம்பகால தில்லிநாட்களை ரசித்தேன் ஐயா
பதிலளிநீக்குநன்றி
தம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குரசித்தேன். அது சரி, தில்லியிலிருந்து தமிழகத்துக்கு பணியிட மாறுதல் கிடைக்காதா வெங்கட்?
பதிலளிநீக்குதமிழகத்திற்கு பணியிட மாறுதல் கிடைப்பது கடினம். முயற்சி செய்ததுண்டு. அங்கே காலி இடம் இருக்கும்போது முயற்சிக்க வேண்டும்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஇந்தியாவில் தமிழகம் கேரளா பெங்களுரை தவிர வேறு எங்கும் நான் சென்றதே இல்லை மொழிகாரணமாக செல்ல விருப்பமும் இல்லை மேலைநாடுகளிலாவது காலம் தள்ளிவிடலாம் ஆனால் ஹிந்தி தெரியாமல் வட நாட்டில் காலம் கடத்துவது அவ்வளவு எளிதாக இருக்காது. நீங்கள் எப்படிதான் சமாளித்தீர்களோ? உங்களின் அனுபவம் படிக்க சுவைபட இருந்தது
ஆரம்பத்தில் சில கஷ்டங்கள். மொழி பழகிய பிறகு பிரச்சனை இல்லை. ஹிந்தி தெரிந்திருந்தால் இந்தியாவின் பல மாநிலங்களிலும் சமாளித்து விடலாம்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
பேய் ஜல்!.. வேடிக்கை தான்..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குதமிழகத்தைவிட்டு வெளியே செல்லவேண்டுமானால் ஹிந்தி அவசியம். (இப்போ தமிழகத்திலும் அது அவசியமாக இருக்கிறது. சொன்னா நம்ப மாட்டீங்க.. வட'நாட்டுத் தொழிலாளர்கள்தான் சென்னையில் பெரும்பாலான கடைகளில் வேலை பார்க்கிறாங்க. ஏஜென்ட் மூலமா. நான் மைலாப்பூர் நாதன்ஸ் ஸ்வீட் கடைல ஸ்வீட் வாங்கப்போனா, பொருட்களைக் காண்பிக்கவேண்டி இருந்தது அல்லது ஹிந்திவாலா பேசுவதைப் புரிந்துகொள்ளவேண்டியிருந்தது. இதே கதைதான் அடையார் ஆனந்தபவன் இன்னபிற கடைகளில். கேட்டா, தமிழ் இளைஞர்கள் வேலைக்கு வருவதில்லை. வந்தாலும் அப்போ அப்போ பங்க் அடிக்கறாங்க. வட'நாட்டுத் தொழிலாளர்களைப் பிழிஞ்சு வேலைவாங்கலாம். ஒருத்தன் போனா, ஏஜென்டே இன்னொருத்தனை அனுப்சுருவான் என்றார்கள்). எனக்கு ஹிந்தி தெரியவில்லையே என்று மிகவும் வருத்தம்தான். ஹிந்தி, மலையாளம் தெரிந்தால் இந்தியர்கள் எங்கேயும் பிழைத்துக்கொள்ளலாம். (இதில் கொடுமை என்னவென்றால், நான் வேலைபார்க்கும் நிறுவனத்தில், அரேபியர்கள் ஹிந்தியில் என்னிடம் பேசும்போது ('நான் இந்தியன் என்பதால்), அவர்களுக்கு தமிழன் வேறு இந்தியன் வேறு என்று புரியவைக்கவேண்டியதாக இருக்கிறது)
பதிலளிநீக்குமுதல் நிகழ்ச்சிக்கு ஏன் 'ராஜா காது கழுதைக்காது' என்று தலைப்பிடவில்லை?
நானும் இப்படி பல கடைகளில் வேலை செய்யும் வட இந்தியர்களைப் பார்த்தால் அவர்களிடம் அவர்களது மொழியிலேயே பேசுவதுண்டு. நிறைய பேர் இருக்கிறார்கள். சென்னையில் மட்டுமல்ல, தமிழகம், கேரளம் என அனைத்து மாநிலங்களிலும் இவர்கள், குறிப்பாக பீஹார் மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள்.
நீக்குமுதல் நிகழ்ச்சி - ராஜா காது கழுதைக் காது :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
வட இந்தியர்கள் பலரும் மதராசிகள் நன்கு இந்தி படித்து இருப்பார்கள் என்றும் தெரியாதது போல் நடிப்பார்கள் என்று கூறுவதை வட இந்திய ரயில் பயணங்களில் கேட்டிருக்கிறேன்
பதிலளிநீக்குசிலர் அப்படியும் உண்டு. முகத்தினைப் பார்த்தாலே தமிழர் என்று தெரியும், ஆனாலும் ஹிந்தியில் தான் பேசுவார்கள். :(
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
சுவாரஸ்யமான அனுபவங்கள்! இப்பவாவது பேய் ஜல் குடிக்கிறீங்களா ஜி!
பதிலளிநீக்குஎப்பவும் பேய் ஜல் தான் குடிக்கிறேன்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
குடிகாரன் பேச்சை இன்னும்கொஞ்ச நேரம் நீங்க ரசித்து இருக்கலாம் ,பல சுவாரசியமான தகவல் அப்போதுதான் அவர்கள் வாயில் இருந்து வரும் :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குஉண்மைதான் ஜி மொழிகள் பழகுவதும் ஒரு அழகிய கலையே...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குபேய் ஜல்... ஹா...ஹா...
பதிலளிநீக்குஎனக்கு ஹிந்தி ஓரளவு புரிந்தாலும் பேச வருவதில்லை....
இங்க அரபி, ஹிந்தி எதில் எதிராளி பேசினாலும் நம்ம பதில் ஆங்கிலத்தில்தான்...
ஹிந்தி - அப்படி ஒன்றும் கடினமான மொழி அல்ல. தொடர்ந்து பேசுங்கள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
உண்மைதான் ஜி ஹிந்தி தெரிந்தால் எந்த மாநிலத்திலும் பிழைத்துக் கொள்ளலாம்தான். கேரளத்தில் கூட ஹிந்தி தெரிந்தால் ஓரளவு சமாளித்துவிடலாம் தான்..தமிழ்நாட்டில், கேரளத்தில் இப்போது நிறைய ஹிந்திக்காரார்கள் குறிப்பாக தினக்க்கூலி வேலையாட்கள் பிஹார், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வந்திருக்கிறார்கள். தமிழ் கடைகளில் கூட தமிழில் பேசி வாங்க முடிவதில்லை.
பதிலளிநீக்குபேய் ஜல் என்பது ஒரு வேளை பே ஜல்....(Pay water) என்பதை அப்படி எழுதியிருப்பார்களோ...
பே ஜல் அல்ல! பேய் ஜல் தான்.... குடிநீர்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!