எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, August 22, 2016

மதிய உணவு - அசாம் பெண்கள் – ஆர்க்கிட் மலர்கள்.....ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 39

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான Drop Down Menu.....இந்தப் புன்னகை என்ன விலை?


பாலிபாராவிலிருந்து நாங்கள் புறப்பட்டு அப்பர் பலூக்பாங்க் எனும் இடத்தினை நோக்கிப் பயணித்தோம். எங்களது மதிய உணவிற்கான ஏற்பாடுகளை நண்பர் தாமஸ் அப்பர் பலூக்பாங்க் பகுதியில் இருக்கும் அருணாச்சல் அரசாங்கத்தின் Circuit House-ல் ஏற்பாடு செய்திருந்தார்.  காசு கொடுத்து தான் சாப்பாடு... இலவசம் அல்ல! காலையில் காசிரங்காவில் பூரி சாப்பிட்டது. அதன் பிறகு ஒன்றிரண்டு தேநீர் மட்டுமே....  அதனால் அனைவருக்குமே நல்ல பசி. சென்ற பகுதியில் சேர்த்திருந்த படத்தினைப் பார்த்து “பசி முகத்தில் தெரிகிறது!என்று ஸ்ரீராம் எழுதிய கருத்துரை உண்மை தான்! 


சாப்பாடு வந்தாச்சு......


உணவு சாப்பிட்ட Circuit House வாயிலில் நண்பர்களுடன்....

நாங்கள் மதிய உணவிற்கு அப்பர் பலூக்பாங்க் சென்றடைந்த போது மணி 3.15.  காலை 7.30 மணிக்கு சாப்பிட்டது என்பதால் நல்ல பசி! அங்கே சென்று சில நிமிடங்கள் காத்திருக்க, சுடச்சுட சப்பாத்தி, சப்ஜி [சைவம் மற்றும் அசைவம்], சோறு, தால் என அனைத்தும் கொண்டு வைத்தார்கள் அந்த இடத்தின் பணியாளர்கள். எந்த வித பேச்சும் இல்லாது உணவினை எடுத்துக் கொண்டோம். வயிற்றுக்குள் சிறிது உணவு சென்ற பிறகு தான் கொஞ்சம் மனதுக்கும் நிம்மதி கிடைத்தது! உணவு இல்லாமல் இப்படிச் சுற்றுவது கொஞ்சம் கடினமான விஷயம் தான்.


காமேங்க் ஆறு – ஒரு தொலைதூரப் பார்வை...வற்றல் தயாராகிறது!...மகிழ்ச்சியில் ஒரு குழந்தை....

எங்களை அழைத்து வந்த ஓட்டுனர் டோர்ஜி, வேறு இடத்தில் தான் சாப்பிடுவேன் என்று சொல்ல, அவருக்கு காசு கொடுத்து அனுப்பினோம். நாங்கள் உணவு உண்ட பிறகு டோர்ஜி வரும் வரை பக்கத்தில் இருந்த காமேங்க் ஆற்றையும், வேறு சில காட்சிகளையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். Circuit House-ல் இருந்த சில ஊழியர்களின் குழந்தைகளையும் படம் பிடித்துக் கொண்டோம். அங்கே காய்கறி வற்றலும் மிளகாயும் காய வைத்திருந்தார்கள்....  கொஞ்சம் நேரத்திற்குப் பிறகும் டோர்ஜி வராததால், சாலை வழியே நடக்க ஆரம்பித்தோம். சிறிது தூரம் நடந்தபிறகு எங்கள் வாகனம் ஒரு உணவகத்தின் வெளியே நின்றிருக்க, அங்கே சென்று காத்திருந்தோம்.


விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள்...

அங்கும் சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்க, அவர்களையும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.  டோர்ஜி உணவு சாப்பிட்டு வெளியே வர, “அடடா... ஏன் நடந்து வந்தீர்கள், நானே வந்திருப்பேனேஎன்று கவலைப்பட்டார்! எங்களுக்கு நடக்க வேண்டும் என்பதால் தான் நடந்து வந்தோம், கவலை வேண்டாம்என்று சொல்லி, அடுத்த திட்டம் என்ன என்று கேட்க, வழியில் டிபி எனும் இடத்தில் ஆர்க்கிட் மலர்களுக்கான ஒரு தோட்டம் இருக்கிறது அதைப் பார்த்து விட்டு புறப்படலாம் என்று சொன்னார். அரசுத் துறையைச் சேர்ந்த தோட்டம் அது...


ஆர்க்கிட் தோட்டம் அறிவிப்பு....

அங்கே சென்று சேர்ந்தால், வாயிலில் காவலாளி யாருமில்லை – கட்டணம் உண்டு என்று எழுதி இருந்தாலும், கட்டணம் வசூலிக்கவும் யாருமில்லை. சரி வந்தது வந்தோம், உள்ளே நுழைந்து பார்க்கலாம் என உள்ளே சென்று விட்டோம். அந்தச் சாலையில், தோட்டத்தின் உள்ளேயிருந்து சில சிறுமிகளும், அசாம் மாநில இளம்பெண்களும் வந்து கொண்டிருந்தார்கள். நாங்களும் எதிரே நடந்து கொண்டிருந்ததால், அவர்களை புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றியது.  டோர்ஜியின் உதவியை நாடினோம்.


பாரம்பரிய உடையில் அசாமி பெண்கள்...எடுத்த புகைப்படங்களை நான் காண்பித்தபோது...

அசாமி மொழியில் டோர்ஜி அந்தப் பெண்களிடம், உங்கள் பாரம்பரிய உடையில் உங்களை படம் எடுக்க விரும்புகிறார்கள், ஆட்சேபணை இல்லை என்றால் எடுத்துக் கொள்வார்கள் என்று சொல்ல, அவர்களும் பெரிய மனதுடன் சம்மதித்தார்கள். அந்த பெண்களை புகைப்படங்கள் எடுத்து அவர்களிடம் காண்பிக்க அவர்களுக்கும் மகிழ்ச்சி. எங்களுக்கும் பாரம்பரிய உடையில் அசாம் மாநிலப் பெண்களின் புகைப்படங்களை எடுத்துக் கொண்டதில் மகிழ்ச்சி.ஆர்க்கிட் மலர்கள்...

ஆர்க்கிட் தோட்டம் என்று எழுதி இருந்தாலும் சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தது தோட்டம்.  கம்பி வலைகளுக்குள்ளே செடிகளும் ஆர்க்கிட் மலர்களும் இருக்க, சில படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அங்கே படங்கள் எடுத்துக் கொண்ட பிறகு  ஆர்க்கிட் மலர்கள் பற்றிய ஆராய்ச்சி நிலையம் சென்றோம். ஆனால் அங்கே செல்ல முன் அனுமதி பெறவில்லை. மேலும், மாலை நேரம் என்பதால் நிலையமும் மூடி இருந்தது. சரி என்று அங்கிருந்து புறப்பட்டோம்.  இரவிற்குள் நாங்கள் வேறொரு இடத்திற்குச் சென்று சேர வேண்டும் என்பதால் பலூக்பாங்க் பகுதியில் இருக்கும் சில சுற்றுலாத் தலங்களை [கோட்டை – பத்தாம் நூற்றாண்டில் பாலூகா எனும் அரசனால் கட்டப்பட்டது] பார்க்க முடியவில்லை.


இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி தொடர்கிறது பயணம்.....


தொடர்ந்து பயணித்து வழியில் வேறு ஒரு இடத்தில் தேநீரும் சிற்றுண்டியும் எடுத்துக் கொண்டோம் – அதுவும் நண்பரின் ஏற்பாடு தான்.....  அந்த அனுபவங்கள் அடுத்த பகுதியில்!


மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

28 comments:

 1. சிறிய இடங்கள், பெரிய இடங்கள் என்றும், மேலும் திட்டமிட்ட இடங்களோடு, திட்டமிடா திடீரென கண்ணில் படும் புதிய இடங்களையும் விடாமல் பார்த்துச் செல்கிறீர்கள். 'மலர்களின்' படங்கள் அருமை. சுவாரஸ்யம்.

  ReplyDelete
  Replies
  1. பயணத்தில் பார்க்காமல் விட்டுப்போன இடங்கள் உண்டு. :) ”மலர்களை” ரசித்தமைக்கு நன்றி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. படங்களும் செய்திகளும் அருமை
  தொடருங்கள் ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. நல்ல கண்கவர் போட்டோக்கள். அந்த ஊர்ப் பெண்களும் நம்ம ஊர்ப்பெண்கள் மாதிரிதான் இருக்கிறார்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

   Delete
 4. ஹைய்யோ! அந்தப்பெண்கள்தான் எவ்வளவு அழகாக இருக்காங்க! பாரம்பரிய உடை புடவைதான் போல. கட்டிய விதம் வேறமாதிரி. தனியா ஒரு துப்பட்டா!!!!

  ஆர்க்கிட்......... ப்ச்.... அரசு 'இயந்திரம்' :-(

  ReplyDelete
  Replies
  1. புடவை கட்டும் விதம் கொஞ்சம் வித்தியாசம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 5. பாரம்பரிய உடையில் இந்தியாவின் பன்முகத்தன்மை தெரிகிறது. முதல் படத்தில் உள்ள குழந்தை, மேக்கப் இல்லாமல் என்னை ஏன் போட்டோ பிடிக்கறீங்கன்னு உங்களைக் கேட்கிறமாதிரி இருக்கு. வெஜ் நான் வெஜ் அட்ஜஸ்ட் பண்ணற மனநிலை இல்லைனா இங்கெல்லாம் போவது கடினம்

  ReplyDelete
  Replies
  1. //வெஜ் நான் வெஜ் அட்ஜஸ்ட் பண்ணற மனநிலை இல்லைனா இங்கெல்லாம் போவது கடினம்//

   உண்மை. பெரும்பாலான வட கிழக்கு மாநிலங்களில் இந்த நிலை தான். சில வட மாநிலங்களிலும் இப்படித்தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 6. எங்கள் பிளாக் 'இந்தப் புன்னகை என்ன விலை' க்கு உங்களின் எதிர்ப்பாட்டா முதல் படம் ?இருந்தாலும் அருமை !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 7. இடையிடையே கிடைக்கும் நேரத்தைகூட வீணாக்காமல் புகைப்படங்கள் எடுப்பது, செய்திகளை சேகரிப்பது என்ற தங்களின் பாணி அசத்தல். பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 8. வணக்கம்
  ஐயா
  படங்களும் தகவலும் நன்று படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 9. மலர்களும் புகைப்படங்களும் அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.

   Delete
 10. குழந்தைகளும் மலர்களும் அழகு என்றால்.... பாரம்பரிய உடையில் அசாம் பெண்கள் ஆஹா என்ன அழகு...

  தொடர்ந்து வருகிறேன் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 11. அசாமியப் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 12. வணக்கம் சகோதரரே

  அழகிய படங்கள்! அழகியவிடங்கள்! பயணத்தில் பசி வந்து உணவு ஏதும் கிடைக்காவிட்டாலும், சற்று தாமதமானலும் சிரமந்தான்! குழந்தைகளும் மலர்களும் மிக அழகு! பயணம் சுவாரஸ்யமாக தொடர்கிறது. நானும் தாமதமாகத்தான் தொடர்கிறேன். இருந்தும் தொடர்ந்து வந்து விடுவேன் என நம்புகிறேன்.நன்றி!

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 13. ஆர்கிட் மலர்கள் அழகு! தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 14. புகைப்படங்கள் அழகு! அந்தப் பெண்கள் உட்பட. உடை கொஞ்சம் தமிழகத்து நாட்டுப்புற உடை முறையும் கலந்திருப்பது போல் இருக்கிறது..அருமை ஜி. எத்தனை இடங்கள் சென்றிருக்கின்றீர்கள். அருமையான பயணம்...நாங்களும் நிறைய தெரிந்து கொள்கின்றோம் ஜி. தொடர்ந்து உங்களுடன் பயணிக்கின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....