எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, August 7, 2016

ரசித்த பூக்களும் சில பொன்மொழிகளும்....


சென்ற வாரத்தில் நாளைய பாரதம் பகுதியில் நான் எடுத்த குழந்தைகளின் படங்களைப் பகிர்ந்து கொண்டேன். இந்த வாரத்தில் பூக்களின் படங்கள். சென்ற வாரத்தினைப் போலவே இந்த வாரமும் நான் எடுத்த பூக்களின் படங்களோடு எனக்குப் பிடித்த சில பொன்மொழிகளும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் மலைவாசஸ்தலங்களில் ஒன்றான DHதரம்ஷாலா மற்றும் அதன் அருகே உள்ள சில இடங்களுக்குச் சென்றபோது எடுத்த படங்கள் இவை.  இதோ பூக்களின் படங்களும் ரசித்த பொன்மொழிகளும் உங்கள் பார்வைக்கும் ரசனைக்கும்.....


பூ-1: மஞ்சள் நிற சரக்கொன்றை பூக்களை பார்த்திருக்கலாம்.  இவை அதே மாதிரி இப்பூக்களும் மரத்தில் பூப்பவை – நிறத்தில் மட்டும் மாற்றம்!

பூக்களின் நறுமணம் காற்று அடிக்கும் திசையில் மட்டுமே பரவும். மனிதனின் நற்குணமும் நற்செயல்களும் எல்லா திசைகளிலும் பரவும் – சாணக்யா.....


பூ-2:  அப்போது தான் செடிகளுக்கு தண்ணீர் விட்டுப் போயிருந்தார் பூந்தோட்டப் பணியாளர் என்பதற்குச் சாட்சியாய் இந்த மலரில் தண்ணீர் திவலைகள்!

நீங்கள் இங்கே இருக்கப் போவது மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே....  அவசரம் வேண்டாம். கவலைகளும் வேண்டாம்.  பாதையில் மலர்ந்திருக்கும் பூக்களின் நறுமணத்தை நிச்சயம் முகருங்கள் - Walter Hagen.

 பூ-3:  கொத்தாய், கெத்தாய் பூக்கள்....  அதன் வண்ணம் தான் என்னை மிகவும் கவர்ந்தது....

பார்க்க நினைப்பவர்களுக்காகவே நிச்சயம் பூக்கள் காத்திருக்கின்றன – Henri Matisse.

 பூ-4ராஜா மகள்.... ரோஜா மகள்.....

நான் இறந்த பிறகு எனக்கு மலர் வளையம் அனுப்பாதீர்கள்...  என்னை உங்களுக்குப் பிடித்திருந்தால், நான் உயிருடன் இருக்கும் போதே மலர்களை அனுப்பி வையுங்கள் – Brian Clough.

பூ-5:  இதுவும் பூவோ?

நம்பிக்கை - பூக்கள் இல்லாமலே தேன் எடுக்கத் தெரிந்த தேனீ – Robert Green Ingersoll.


பூ-6:  பூவின் சிரிப்பு....

பூக்கள் – பூமியின் சிரிப்பு.... – Ralph Waldo Emerson.


பூ-7:  மனதைத் தொட்ட பூவோ....

உங்கள் மனதை எரிமலையாக வைத்திருந்தால் பூக்கள் எப்படி மலரும் – Khalil Gibran.


பூ-8:  வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று....

நீங்கள் எல்லாப் பூக்களையும் பிய்த்துப் போட்டாலும், வசந்த காலம் வருவதைத் தடுக்க முடியாது  – Pablo Neruda.


பூ-9:  பூக்களும் மனிதனும்....

பூக்களுக்கு சூரியோதயம் எப்படியோ, புன்னகையும் மனிதனுக்கு அப்படியே.... இது சின்ன விஷயமாகத் தெரியலாம்.... வாழ்க்கைப் பாதையில் அவை செய்யும் நன்மைகள் யோசிக்கமுடியாதவை  – Joseph Addison.


பூ-10:  மஞ்சள் மகிமை....

கோவில் மணியோசை நின்றுவிட்டது..... ஆனாலும் அந்த மணியோசை பூக்களில் இருந்து வருவதை இன்னும் கேட்க முடிகிறது – Matsuo Basho.


பூ-11:  பூக்களும் கோபமும்....

பூந்தோட்டப் பாதையில் கோபத்துடன் நடக்கும்போது, பூக்களின் வாசத்தை நுகர்ந்து, அவற்றின் பலவித வண்ணங்களைக் கண்டபின்னும், நிச்சயமாய் உங்களால் தொடர்ந்து கோபத்துடன் இருக்க முடியாது. வாழ்க்கையின் கவித்துவத்தை, அதன் அழகை ஆதரிப்போம் – Jonas Mekas.


பூ-12:  பூக்களும் புத்தகங்களும்....

என் தோட்டத்தில் சில பூக்களுடனும், சில படங்கள் மற்றும் புத்தகங்களுடன் பொறாமையின்றி நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் – Lope de Vega.

என்ன நண்பர்களே, இந்த வாரத்தில் நான் பகிர்ந்து கொண்ட பூக்கள், பொன்மொழிகள் ஆகியவற்றை ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்...

மீண்டும் நாளை சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

26 comments:

 1. அழகழகான பூக்கள்..
  காணக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 2. மலரும் மணமுமாய்
  படங்களும் பொன்மொழிகளும்

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 3. வாவ்! அழகான மனதைக் கொள்ளை கொள்ளும் அழகு! பொன்மொழிகள் அட்டகாசம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 4. பூக்கள் படம் எப்போதுமே அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 5. புதிய பூவிது பூத்தது என்று பாடிக் கொண்டே உங்கள் பதிவைப் படித்தேன்; ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 6. அழகான பூக்கள் அர்த்தமுள்ள பொன்மொழிகளுடன் ரசிக்க வைத்தன! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 7. மிக அழகான பூக்கள். படம் பிடித்த விதமும் வெகு அழகு. அதைவிட
  நீங்கள் கொடுத்திருக்கும் பொன்மொழிகள் இன்னும் பிரமாதம். கலீல் கிப்ரானின்
  மொழிகள் இன்னும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 8. அழகழகான பூக்கள் ! பொன்மொழிகளும் கவர்ந்தன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

   Delete
 9. பூப்பூவாய் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம்பூ பூவிலே சிறந்த பூ சிரிப்பூ. படங்கள் பொன்மொழிகள் ரசித்தேன். நன்றி.

  சுதா த்வாரகாநாதன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 10. மலர்கள் எல்லாம் மிக அழகு.
  பொன்மொழிகள் எல்லாம் அருமை.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 11. பூக்கள் அழகுதான் அதிலும் மலர்களின் ராணி ரோஜா கொள்ளை அழகு. நம்பிக்கையைப் பற்றிய வாசகம் கவர்ந்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 12. பூக்களும் பொன்மொழிகளும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 13. பூக்கள் பேசும் வார்த்தைகள் மென்மைதான் படங்கள் கொள்ளை அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷைலஜா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....