எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, August 21, 2016

ரகுராஜ்பூர் – அசத்தும் ஓவியங்கள்


 யானை மேல் புல்லாங்குழல் வாசிக்கும் கண்ணன்
ஆனால் யானையைக்கூர்ந்து கவனியுங்கள்.....

வெள்ளிக்கிழமை அன்று உலக ஒளிப்பட தினம் – 2016 – புகைப்படங்கள் என்ற தலைப்பில் உலக ஒளிப்பட தினம் பற்றிய பத்து தகவல்களும் நான் எடுத்த பத்து புகைப்படங்களும் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  அட நீங்க அந்தப் பதிவை படிக்கலையா/பார்க்கலையா?  ஒரு நடை பார்த்துட்டு வந்துடுங்க! அந்தப் பதிவில் ஒரு ஓவியத்தின் படத்தினைச் சேர்த்திருந்தேன். ரகுராஜ்பூர் ஓவியங்கள் மிகவும் புகழ்வாய்ந்தவை.  பல நூற்றாண்டுகளாக அங்கே ஓவியம் வரைவது மிகவும் பிரபலமான ஒன்று.  பட்டசித்ரா என அழைக்கப்படும் ஓவியங்கள், இயற்கை வண்ணங்களைக் கொண்டு வரையப்படுபவை. 


பூரியிலிருந்து ரகுராஜ்பூர்....
வரைபடம்: இணையத்திலிருந்து...

ரகுராஜ்பூரில் வரையப்படும் பட்டசித்ரா ஓவியங்கள், ஒரு சிறிய துணியில் அல்லது காய்ந்த பனை ஓலையில் வரையப்படும் ஓவியங்கள்.  முதலில் துணியின் மீது சாக் மற்றும் பசை கலந்து தடவி அந்த துணியை படம் வரைவதற்கு ஏற்ப தயார் செய்வார்கள்.  அதன் மேல் வண்ணமயமான ஓவியங்களை – பெரும்பாலும் கடவுளர்களின் ஓவியங்கள், அல்லது இதிகாசக் காட்சிகள் ஆகியவற்றை வரைகிறார்கள்.  பூக்கள், மரங்கள், மிருகங்கள் ஆகியவற்றையும் வரைந்து அழகு சேர்க்கிறார்கள்.  ஒவ்வொரு ஓவியத்திலும் நுணுக்கமான வேலைப்பாடுகளைப் பார்க்க முடியும்.

கிராமத்து வீடொன்றின் சுவரோவியம்....

டஸ்ஸர் சில்க் என அழைக்கப்படும் துணிகளில், குறிப்பாக சம்பல்பூரி புடவைகளில் பட்டசித்ரா ஓவியங்களை வரைந்து தருவதும் உண்டு. சின்னச் சின்ன டஸ்ஸர் சில்க் துணிகளில் பூரி ஜகன்னாத் ஓவியங்களை வரைந்து விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.  பார்க்கும் அத்தனை ஓவியங்களையும் வாங்கி விடலாம் என்று தோன்றும் வண்ணம் வரைந்து இருப்பது அவர்களது தனித்திறமை!

பொன்னால் அலங்கரிக்கப்பட்ட ஓவியம்

ஒவ்வொரு ஓவியம் வரைவதற்கும் பல மணி நேரங்கள் பிடிக்கும் – அத்தனை நுணுக்கமான ஓவியங்கள் அவை. ஒடிசா மாநிலத்தின் பூரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் ரகுராஜ்பூர். இந்த கிராமத்தில் தான் பல ஓவியர்கள் தங்களது ஓவியங்களை வரைவதும், அவற்றை விற்பதை தங்களது வாழ்வாதாரமாகச் செய்கிறார்கள். பட்டசித்ரா ஓவியங்கள் தவிர, பனைஓலை, கற்கள், மரம் ஆகியவற்றிலும் ஓவியங்கள் வரைகிறார்கள், பேப்பர் கூழ் பொம்மைகள், முகமூடிகள், கொட்டைப்பாக்கு ஓவியங்கள் ஆகியவையும் இங்கே பிரபலம்.

ஆனைமுகத்தான்.....

ஒடிசா மாநிலத்தில் இருக்கும் பூரி ஜகன்னாத் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக இங்கேயும் ஒரு முறை சென்று வாருங்கள். கோவிலிலிருந்து புவனேஷ்வர் செல்லும் நெடுஞ்சாலை வழியே சென்றால் 15 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ரகுராஜ்பூர் கிராமம் இருக்கிறது. கிராமத்தின் இரு முக்கிய சாலைகள் முழுவதும் ஓவியர்கள் தங்கள் வீடுகள்/கடைகளை வைத்திருக்கிறார்கள். அங்கேயே ஓவியங்கள் வரைகிறார்கள். வரைந்த ஓவியங்களை விற்கிறார்கள். வீடுகளின் வெளிச்சுவர்களிலும் அழகிய ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறார்கள்.


நுணுக்கமான ஓவியம் என்பதால் கொஞ்சம் விலை அதிகமாகத் தான் இருக்கும். என்றாலும் அவர்களோடு பேசி, விலை குறைக்கச் சொல்லலாம். கட்டுப்படியானால் தருவார்கள். அதற்கென்று அடிமட்ட விலை சொன்னால் தரமாட்டார்கள்! வாங்கவில்லை என்றாலும், ஓவியங்களைப் பார்ப்பதற்காகவேனும் நிச்சயம் அங்கே சென்று வாருங்கள்.

என்ன நண்பர்களே, ரகுராஜ்பூர் அசத்தும் ஓவியங்களை நீங்கள் பார்ப்பதற்கு வசதியாக, நான் எடுத்த புகைப்படங்களை ரசித்தீர்களா?  பின்னூட்டத்தில் சொல்லுங்கள்....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

32 comments:

 1. ரசனைதான். சுவாரஸ்யமான தகவல்கள். அழகிய ஓவியங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. ஆஹா... என்ன அழகான ஓவியங்கள்...
  பகிர்வுக்கு நன்றி அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 3. ஓவியங்களை ரசித்தோம். மிகவும் அழகாக இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பரிமாணம், கலை நேர்த்தி, ரசனையுடன். பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 4. அத்தனையும் அசத்தல்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலரின் நினைவுகள்.

   Delete
 5. ஓவியங்கள் அருமை. அதுவும் அந்தப் பெண் ஓவியம் நன்றாக இருந்தது. உங்களுக்கு ஓவிய ரசனை இருப்பதால்தான் உங்கள் பெண்ணுக்கு வரையும் ஆர்வம் இருக்கிறது என்று தோன்றுகிறது. சில ஓவியங்கள், வட இந்தியப் பாரம்பர்யம் (நம் தஞ்சை பாரம்பர்யம் போன்று) கொண்டு காட்சியளிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 6. அற்புதமான ஓவியங்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 7. நம்ம ஊர் தஞ்சாவூர் ஓவியங்களை நினைவு படுத்துகிறது :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 8. ரகுராஜ்பூர் என்றதும் யாரோ ஓவியர் என்றே நினைத்தேன் இந்த ஓவியங்களைப் பார்க்கும் போது ஜெய்ப்பூரில் துணியில் வரைந்த அழகான ஓவியங்கள் நினைவுக்கு வந்தது இரண்டு மூன்று ஓவியங்களை வாங்கி அவற்றை எங்களுக்கு வைத்துக் கொள்ளாமல் பரிசாய்க் கொடுத்திருந்தோம் ஆனால் அவற்றை ப் பெற்றவர்களுக்கு ரசிக்கத் தெரியவில்லை. இப்போது தேடினாலும் பார்க்க முடிவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. என்னால் இவற்றைப் பராமரிப்பது கடினம் என்பதால் நான் வாங்கவில்லை. மதுராவில் இருந்து ஒரு ஓவியம் - துணியில் வரைந்தது தான் - வாங்கி வந்து அதை ஃப்ரேம் செய்து வைத்திருக்கிறேன். என்னுடன் வந்த நண்பர்கள் வாங்கி மற்ற நண்பர்களுக்கு பரிசளித்தார்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 9. துணியில் வரையப்பட்ட அழகான ஓவியங்களை -
  பதிவில் வழங்கி சிறப்பித்தமைக்கு மகிழ்ச்சி..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 10. ஓவியங்கள் அனைத்தும் மிக அழகு! அதுவும் அந்த ஆனை முகத்தான் ஓவியம் மிக அழகு! ஓவியங்கள் வரைவதை விடவும் அவைகளுக்கு எத்தனை அழகாய் பொறுமையாய் நுணுக்கமாய், நேர்த்தியாய் பார்டர் கட்டியிருப்பது மிகப்பெரிய திறமைக்கு சான்றுகள்! இவைகளை நேரில் பார்த்து ரசிப்பதற்கு நீங்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. உண்மை. ஓவியங்களும் அதற்கு பார்டரும் மிகவும் பொறுமையாக வரைகிறார்கள். ஒவ்வொரு ஓவியமும் வரைவதற்கு நாட்கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். முடிந்தால் நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள்.... சிறந்த ஓவியரான உங்களால் இன்னும் அதிகமாய் ரசிக்க முடியும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 11. இங்குள்ள ஓவியங்கள் புகைப்படத்தில் பார்ப்பதற்கே இவ்வளவு அழகாக இருக்கிறதே நேரில் பார்த்தால் இன்னும் அற்புதமாக இருக்குமென்று தோன்றுகிறது. இத்தகு நுணுக்கமான ஓவியங்களைப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. பட்டசித்ரா ஓவியங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு, அவை துணியில் வரையப்படும் என்று; ஆனால் இவ்வளவு நுணுக்கமாக இருக்குமென்று எதிர்பார்க்கவில்லை. இதுபோன்ற கலைகள் மென்மேலும் தொடர்ந்து வளர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்.

  நல்ல தகவல், பகிர்ந்தமைக்கு நன்றி வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.

   Delete
 12. ஓவியங்கள் அற்புதம். நேரில் சென்று பார்க்க ஆசை. எப்போது முடிகிறது என்று பார்க்கலாம்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது சென்று வாருங்கள்.... வருடம் ஒரு முறை இங்கே வசந்த் உத்சவ் என்ற பெயரில் விழாக்கள் நடக்கும். அந்த சமயத்தில் நிறைய கடைகள் இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இமா....

   Delete
 13. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 14. எத்துனை நுணுக்கம்....அழகு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 15. கண்ணைக் கவரும் வண்ணத்தில் ஓவியங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்! தகவல்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 16. ஜி வட இந்திய மாநிலங்களில் பொதுவாக இயற்கை வண்ணங்களில் தான் படங்கள் வரைகிறார்கள் இல்லையா...பட்டச்சித்ரா போன்று வர்லி பெயிண்டிங்க் பழங்குடி மக்கள் வீட்டு மண் சுவர்களில் அரிசி மாவு கொண்டு வரைவதுண்டு என்று வாசித்ததும் உண்டு. பார்த்ததும் உண்டு...மதுபானி, முகலாய சித்திரங்கள், மைசூர் ஓவியங்கள், துணிகளில் பத்திக் ஓவியங்கள் என்று நிறைய உண்டு இல்லையா...நான் ஒரு சில பார்த்தது உண்டு. ஒரு சில கற்றுக் கொண்டதும் உண்டு ஆனால் செய்வதில்லை மிகவும் நேரம் பிடிப்பது மட்டுமல்ல நம் பட்ஜெட்டிற்கு ஒத்துவருவதில்லை என்பதாலும்....

  அருமையான படங்கள் கலைநயம்.....பகிர்விற்கு மிக்க நன்றி ஜி

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மதுபனி ஓவியங்கள் பற்றியும் ஒரு பகிர்வு எனது பக்கத்தில் முன்பு வெளியிட்டு இருக்கிறேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....