ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 41
இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின்
சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.
பூக்கள் – கொத்திலிருந்து சில
பூக்கள் மட்டும்!
சிங்ஷூ தங்குமிடத்தில் நாள் முழுவதும் பயணம் செய்த
அலுப்பு தீர ஒரு குளியல் முடித்து மற்ற நண்பர்கள் பாட்டிலைத் திறந்து அன்றைய
கணக்கைத் துவக்க, நானும் இன்னுமொரு நண்பரும் சாஃப்ட் ட்ரிங்க்ஸ் அருந்தியபடி அங்கே
இருந்த நபர்களிடம் சுய அறிமுகம் செய்து கொண்டோம். அதில் ஒருவரை மட்டும் எங்கேயோ
பார்த்த மாதிரியே இருந்தது எனக்கு – அதுவும் நன்கு தெரிந்த ஒருவரின் முகச்சாயல்
அவரிடம். ஆனாலும் என்னால் அவரிடம்
நேரடியாக கேட்க முடியவில்லை. முதல் முறை பார்க்கும்போதே இப்படி ஒருவரிடம் கேட்க
முடிவதில்லை.
தங்குமிடத்தில் இருந்த ரோஜா!
அவர் ஒரு பள்ளி ஆசிரியராம். அதுவும் சிங்ஷூவில்
வசிக்கும் பள்ளி ஆசிரியர். சில நிமிடங்கள் பேசியபிறகு அவரவர் பணி செய்யும் இடங்கள்
பற்றியும் சொந்த ஊர் பற்றியும் பேச்சுகள் ஆரம்பித்தன. நானும் பணிபுரியும் இடம் தில்லி எனச் சொல்லி,
அலுவலகத்தினையும் சொன்னவுடன், அந்த ஆசிரியர் அவராகவே என் குழப்பத்தினைத் தீர்த்து
வைத்தார். என்னுடன் பணிபுரிந்த மலையாள நண்பரின் நெருங்கிய உறவினர் அவர். அதனால்
தான் அவர்களிடையே முகச்சாயலில் ஒற்றுமை இருந்திருக்கிறது. நான் பணிபுரியும் இடத்தினைச்
சொன்னவுடன் நண்பரின் பேரைச் சொல்லி, அவரின் நண்பரான உங்களைச் சந்தித்ததில் மிக்க
மகிழ்ச்சி என்று சொல்லி என்னுடன் நிறைய பேசினார்.
ஆசிரியர் வளர்க்கும் டைகர், என்
நண்பருடன்.....
நாங்கள் சந்தித்த சில நாட்களுக்கு முன்னர் தான்,
தில்லியில் வசிக்கும் அந்த நண்பர் இறந்து போனதையும், தன்னால் வர முடியாததையும்
சொல்லி வருத்தப்பட்டதோடு, தனது ஆரம்ப காலங்களில் வேலை இல்லாதிருந்தபோது தில்லியில்
வந்து எனது நண்பர் வீட்டில் தங்கி வேலை தேடியதையும், அவர் செய்த உதவிகளையும்
சொல்லிக் கொண்டிருந்தார். நீங்கள் தில்லி
போனதும், உறவினரின் குடும்பத்திற்கு எனது இரங்கல்களை நிச்சயம் நேரில் சென்று
தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எத்தனையோ தூரத்தில் இப்படி ஒருவரைச்
சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.
தங்குமிடத்திலிருந்து ஒரு காட்சி....
தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க, மற்ற நண்பர்கள்
ஒன்றிரண்டு குப்பிகளை முடித்திருந்தார்கள். அதற்குள் இரவு உணவு தயாராக இருப்பதாக
பணியாட்கள் வந்து சொல்ல, அனைவரும் உணவு உண்பதற்கான அறைக்குச் சென்றோம். அங்கே ஒரு
நீண்ட மேஜையில் உணவு தயாராக இருந்தது. உணவு தயாரித்தவர் வட இந்தியர் தான் என்பதால்
அருணாச்சல உணவுகள் இல்லை! நல்ல வேளை என்று நினைத்துக் கொண்டேன். சோறு, சப்பாத்தி,
தால் தட்கா, மிக்ஸ் வெஜிடபிள், சிக்கன், மீன் வருவல், சாலட், ஊறுகாய், தயிர் என பல
உணவு வகைகள் செய்து வைத்திருக்க, அனைவரும் தேவையானவற்றை போட்டுக் கொண்டு சாப்பிட
ஆரம்பித்தோம்.
காலை நடைப் பயணத்தின் போது எடுத்த
ஒரு படம்...
ஆறும் ஆற்றின் கரையில்
கட்டிடங்களும்...
ஒரு கழுகுப் பார்வை
என்னைத் தவிர மற்ற அனைவருமே அசைவப் பிரியர்கள்
என்பதால், தால், மிக்ஸ் வெஜிடபிள் பக்கம் அவர்கள் வரவே இல்லை. பொறுமையாக சில
சப்பாத்திகளை, சைவ உணவுகளை சாப்பிட்டு முடிக்க, காலையில் விரைவாக புறப்பட வேண்டும்
என்ற எண்ணத்தோடு, பணியாட்களிடமும் காலையில் சப்பாத்தி, பராட்டா போதும் என்று
சொல்லிவிட்டு உறங்கச் சென்றோம். நாள்
முழுவதும் பயணித்த அலுப்பு தீர நன்கு தூங்கினோம். அடுத்த நாளும் முழுவதும் பயணம்
தான் – நீண்ட நெடிய பாதை – வழியில் வெகு சில ஊர்களே என்பதால் என்ன அனுபவம்
கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்புகளோடு உறங்கினோம்.
மலைப்பாதையிலிருந்து நதியும்
சாலையும்....
அடுத்த நாள் காலை எழுந்து காலைக் கடன்களை முடித்து, தயாராகி
வெளியே வந்தால் மார்ச் மாதத்திலும் குளிர் இருந்தது. தயாராக இருந்த மற்றொரு
நண்பரும் நானுமாக ஒரு நடை சிங்ஷூ கிராமப் பாதைகளில் நடந்தோம். பெரும்பாலான பகுதிகளில் ராணுவத்தினர் இருக்கிறார்கள்.
சிலச் சில வீடுகளில் அந்தக் கிராமத்து மக்களும் உண்டு. அவர்கள் பேசும் மொழி
நமக்குப் புரியாது என்றாலும், நாம் ஹிந்தி பேசினால் புரிந்து கொள்கிறார்கள் –
ஏதாவது கடை திறந்திருந்தால், தேநீர் அருந்தலாம் என்று நண்பர் சொல்ல, அந்த
நேரத்தில் ஒரு கடையும் திறந்திருக்கவில்லை! நீண்ட தூரம் நடந்து சென்று அறைக்குத்
திரும்ப மற்ற நண்பர்கள் தயாராகி காத்திருந்தார்கள்.
சிங்ஷூ நண்பர்களோடு ஒரு
புகைப்படம்....
காலை உணவும் தயாராக இருக்க, சப்பாத்தி, பராட்டா
சாப்பிட்டு, தேநீர் அருந்தினோம். தங்குமிடச் சிப்பந்திகளுக்கு கொடுக்க வேண்டிய
பணம் கொடுத்து, அறைக்கான கட்டணமும் கட்டிய பிறகு அறைக்குத் திரும்பி, எங்கள்
உடமைகளை சரிபார்த்துக் கொண்டோம். முதல் நாள்
எங்களை காசிரங்காவிலிருந்து அழைத்து வந்த ஓட்டுனர் டோர்ஜி, எங்களை சிங்ஷூவில்
விட்ட பிறகு அவரது கிராமத்துக்குச் சென்றுவிட்டார். இன்று வரப் போகும் ஓட்டுனர்
யார் என்று ஏற்பாடு செய்த நபரிடம் கேட்க, இதோ வந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லி
வைக்கவும், வாகனம் வரவும் சரியாக இருந்தது. அடுத்த இரண்டு மூன்று நாட்கள் புதிய
ஓட்டுனருடன் தான் பயணம்!
பயணம்...
நாங்க ரெடி.... நீங்க ரெடியா?
தங்குமிடச் சிப்பந்திகள், மதிய உணவுக்கு சப்பாத்தி கட்டித்
தருகிறோம் என்று மீண்டும் மீண்டும் சொல்ல, வழியில் பார்த்துக் கொள்கிறோம் என
ஜம்பமாக சொல்லி விட்டோம். அது எவ்வளவு தவறான முடிவு என்பது பின்பு தான் புரிந்தது!
அங்கே இருந்த நண்பர்களுக்கு நன்றி சொல்லி, அங்கிருந்து புறப்பட்டோம்.
புறப்படுவதற்கு முன்னர் அனைவரும் சேர்ந்து சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்ட
பிறகு, சிங்ஷூவிலிருந்து தவாங் நோக்கிய பயணம் துவங்கியது.... பயணத்தில் சந்தித்த விஷயங்கள், பார்த்த
காட்சிகள், கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்......
மீண்டும் சந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
அருமையான பயணக்கட்டுரை. வாழ்த்துகள் வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராகவன் சித்தப்பா...
நீக்குநானும் தொடர்ந்து வருகிறேன்... அல்லது நாங்களும் தொடர்ந்து வருகிறோம்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குமீண்டும் சந்திக்கலாம் சகோ..
பதிலளிநீக்குசந்திப்போம்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
தொடர்கிறேன் ஐயா
பதிலளிநீக்குநன்றி
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குபயணச்சித்தர் சாலப் பொருத்தம்
பதிலளிநீக்குதம +
இந்தப் பெயரைக் கேட்கும் போது கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது மது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது!
அருமையான பயணப் பதிவு.
பதிலளிநீக்குத ம 5
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.
நீக்குஅழகான இடங்கள்...சூப்பர்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!
நீக்குSuper
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஅழகான படங்கள்.. தங்களின் வர்ணனை அருமை..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குதொடர்கிறேன். பயணக்கட்டுரை ஆவலைத் தூண்டும் விதமாகச் செல்கிறது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குகழுகுப் பார்வைப் புகைப்படம் நல்ல இருக்குங்க!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.
நீக்குபடங்கள் அழகு...
பதிலளிநீக்குபயணக் கட்டுரை ரொம்ப அருமை...
தொடர்கிறோம் அண்ணா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குஉடன் பயணித்து வருகிறேன்! சுவாரஸ்யமாய்! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குகோர்வையாகச் சொல்லிச் செல்லும் விதம் ரசிக்க வைக்கிறது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்குநட்பு என்பதானது அறிமுகமாக இல்லாவிட்டாலும் மனதில் எதையோ உண்டுபண்ணிவிடுகிறதே. உங்களின் அனுபவங்களில் நட்பினை அறிமுகப்படுத்தும் முறையும் வித்தியாசமாக உள்ளது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குபயணப்பதிவு மிகவும் சுவாரஸ்யம்! உங்களோடு சேர்ந்து பயணிப்பது போலவே இருக்கிறது!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குபுதிய ஓட்டுனரின் பண்பை அறியத்தொடர்கின்றேன்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.
நீக்குசிங்ஷூவிலும் மலையாள நண்பர் ,நாயர்கள் இல்லாத இடமே இல்லைபோலிருக்கே :)
பதிலளிநீக்குஎங்கும் நிறைந்திருப்பவர்கள்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபயணமும் படங்களும் அருமை. அழகாக வர்ணித்து பொறுமையாய் விளக்கி சொல்லும் விதத்தில் தங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை! அதனாலேயே தங்களின் பயணக்கட்டுரை படிக்கும் போது தங்களுடன் நாங்களும் பயணம் மேற்கொள்வது போன்ற திருப்தி ஏற்படுகின்றது.
தொடருங்கள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குநாங்களும் ரெடிதான் தங்களைத் தொடர்ந்து கொண்டிருப்பதில்...
பதிலளிநீக்குவெங்கட்ஜி நீங்கள் குறிப்பிட்டிருக்கின்றீர்களே நெடுந்தூரப் பயணம்....இடையில் சில கிராமங்களே உணவு எப்படியோ என்றெல்லாம்...இருந்தும் சப்பாத்தியை எடுத்துச் செல்லாமல் விட்டுவிட்டீர்களே...!!!! ஆனால் அதுவும் ஒரு அனுபவம் தான் இல்லையா...பல அனுபவங்கள் நமக்கு நல்ல பாடங்கள் கற்றுத் தருகின்றனதான் இல்லையா....உங்கள் பயணங்கள் அனைத்துமே அருமையாக நீங்கள் சொல்லும் விதமும் அப்படி இருப்பதால் சுவாரஸ்யமும், வாசிக்கும் ஆர்வமும், நாமும் செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்படுகிறது என்பது மிகையல்ல வெங்கட் ஜி!!! தொடர்கின்றோம்
பல சமயங்களில் இப்படித்தான் சொல்பேச்சு கேட்பதில்லை! :) அதுவும் அனுபவம் தருமே.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!