அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும்
வணக்கம். இன்றைக்கு இந்தியாவின் 70-வது
சுதந்திர தினம்.... தலைநகர் தில்லியில்
வழக்கம் போலவே கொண்டாட்டங்கள் – இம்முறை சற்று அதிகமாகவும்..... பொதுவாக
செங்கோட்டையில் மட்டுமே சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இருக்கும். இம்முறை குடியரசு
தினக் கொண்டாட்டங்கள் நடக்கும் ராஜபாட்டையிலும் ”பாரத் பர்வ்” எனும் கொண்டாட்டம்
– பன்னிரெண்டாம் தேதி முதல் பதினெட்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இன்றைக்கு மாலை செல்லும் திட்டம் உண்டு. சென்று
வந்த பிறகு அதைப் பற்றியும் எழுதுகிறேன்.
இந்த நாளில் எனது
மகள் வரைந்த காந்தியின் ஓவியமும், பள்ளியில் படிப்பதற்காக எழுதிய கவிதையும் இங்கே
பகிர்ந்து கொள்கிறேன்.
அன்னை
பாரதம்
பெருமை
மிகு பாரதம்
பலரும்
போராடிக்
கிடைத்தது
சுதந்திரம்....
ரத்தமும்
கண்ணீரும்
வழிந்த்தோ
பலரிடம்....
காந்தியும்
நேருவும்
செய்ததோ
போராட்டம்.
பெற்ற
சுதந்திரத்தைப்
பேணிக்காப்பதே
நமது
மந்திரம்!
வந்தே
மாதரம்!
வந்தே
மாதரம்!
ரோஷ்ணி வெங்கட்.....
அனைவருக்கும்
சுதந்திர தின நல்வாழ்த்துகள்.....
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
கவிதாயினி ரோஷ்ணி..வாழ்க வளர்க
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
நீக்கு“நமது மந்திரம் வந்தே மாதரம்” அருமை அய்யா. இந்த மந்திரத்தில் கட்டுப்பட்டு, எத்தனை கோடி இதயங்கள் துடித்தன! ரோஷ்ணியின் அன்பை -புதுகை வைகறைக்கு நிதி தந்ததில் கண்டேன், ஆற்றலை விடுதலைக் கவிதையில் காண்கிறேன். என்இனிய வாழ்த்துகள். இளைய பாரதம் வாழ்க! வளர்ந்தோங்குக!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.
நீக்குதங்களைப் போன்றவர்களின் வாழ்த்துகள் மகளை மேலும் ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை. மீண்டும் நன்றி!
த.ம.7
நீக்குதமிழ்மண வாக்கிற்கு மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.
நீக்குரோஷ்ணியின் ஓவியமும், கவிதையும்....அருமை...வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!
நீக்குஓவியம் மிகவும் அருமை. கவிதையும் அற்புதம். ரோஷ்ணிக்கு இனிய நல்வாழ்த்துகள் !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில் பிரகாசம் ஜி!
நீக்குரோஷ்ணிக்கு நல்ல மனது ,காந்திஜி ஒல்லியாய் இருப்பது பிடிக்கவில்லை போலிருக்கு .பீம புஷ்டி அல்வா சாப்பிட்டு தெம்பாக இருப்பவரைப் போல் வரைந்துள்ளார் !படம் மற்றும் கவிதைக்கும் வாழ்த்துகள் :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
நீக்குபகவான்ஜி! குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்தைத்தான் விரும்புவார்கள் என்பதை ரோஷ்ணி பிரதிபலித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். காந்தியை ஒல்லியாகப் பார்த்து நாம் பாவம்தான் காட்டினோம்! அவர் அவரை ஆரோக்கியமாக்கி விட்டார் பாருங்கள்! அது அவரது நல்ல மனம்தான் என்றும் புரிந்துகொண்டு மகிழ்வோம்.
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.
நீக்குஇனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள். மகளுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குஎல்லோருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகுழந்தைகளாகவே இருக்கும்போதே சுதந்திரத்தின் பெருமையையும், அதற்குக் காரணமான தலைவர்களையும் அறிமுகப்படுத்திவைப்பது அவர்கள் நல்ல குடிமக்களாக வளரச் செய்யும். இதில் வெங்கட்ஜி (அல்லது கோவை2தில்லி ?) அவர்களின் பங்கு பாராட்டத்தக்கது.
வெங்கட்/கோவை2தில்லி! :) இரண்டு பேரில் கோவை2தில்லிக்கு தான் அதிக பங்கு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.
அடடே... சுதந்திர தின நல்வாழ்த்துகள். ரோஷ்ணியின் ஓவியமும் கவிதையும் சூப்பர். பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குகுண்டான காந்தியையும் ரசிக்க முடியுது! இனிய சுதந்திர தின வாழ்த்துகள். மற்றப் பதிவுகளெல்லாம் அப்புறமா! :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிி கீதாம்மா...
நீக்குசுதந்திரதின நல் வாழ்த்துகள். ரோஷ்ணியின் காந்தி அழகு/ அவர் இருந்தபோது இருந்ததை விட. வளரும் போது சுதந்திரமாகச் சிந்திக்கவிடவேண்டும் நம் நாட்டில் வளரும் போது பெரும்பாலும் குறிப்பிட்ட கருத்துகளைத் திணித்தே வளர்ப்பது வழக்கமாகி விட்டது சிந்தனையிலும் சுதந்திரம் வேண்டும் வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்குஇளங்கவிதாயினி ரோஷிணி வெங்கட் அவர்களின் கை வண்ணம் அருமை..
பதிலளிநீக்குமேன்மேலும் வளர்க..
அன்பின் சுதந்திர தின நல்வாழ்த்துகள்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குசுதந்திர தின நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு"பெற்ற சுதந்திரத்தைப்
பேணிக்காப்பதே
நமது மந்திரம்!"
இதுதான் சூப்பர் .
சுதந்திரம் வாங்குவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அதை பேணிக்காப்பது .
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!
நீக்குகாந்தியின் படமும் ரோஷ்ணியின் கவிதையும் அழகு.
பதிலளிநீக்குசுதந்திரதின வாழ்த்துக்கள்!
த ம 5
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.
நீக்குSuper Jee
பதிலளிநீக்குFrom Mobile
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குபடமும் கவிதையும்
பதிலளிநீக்குமிக மிக அற்புதம்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
மிகக் குறிப்பாய்
குழ்ந்தை ரோஷினிக்கு....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குஇன்று பெரியவர்களே (வயதில்) சுதந்திர தினத்தின் சிறப்பை மறந்திருக்கும்போது, இத்திருநாளின் சிறப்பை நினைவு கூர்ந்து வரிகளாய் அமைத்த ரோஷினிக்கு பாராட்டுகள்!!
பதிலளிநீக்குஇன்று எத்தனை பேர் தங்கள் குழந்தைகளிடத்தில் இந்நாளின் சிறப்பையும், சுதந்திரதிற்காக நிகழ்ந்தப் போராட்டங்களையும் சொல்லியிருப்பார்கள்!! அவர்களை நினைக்கும் போது அவமானமாய் இருக்கிறது. நீங்கள் இக்கணக்கில் சேராமல், நல்லதைச் சொல்லி வளர்த்திருப்பீர்கள் போலிருக்கிறது. வாழ்த்துகள்!
இத்திருநாளின் சிறப்பைச் நினைவு கூர்ந்து தத்தம் பிள்ளைகளுக்குச் சொல்லிய அனைத்துப் பெற்றோர்களுக்கும் என் வணக்கங்கள்!!
வாழ்க பாரதம்!!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.
நீக்குபடமும் கவிதையும் சிறப்பு! ரோஷ்ணிக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்கள் மகளின் ஓவியமும், கவிதையும் மிக அழகாக உள்ளது. குழந்தைக்கு என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். தாமதமாக வந்து கருத்திடுவதற்கு மன்னிக்கவும். சூழ்நிலைகளினால் வலைப்பக்கம் அதிகம் வர இயலவில்லை. இனி தங்கள் பதிவுகளையும் தவறாது தொடர்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குபல சமயங்களில் இப்படித்தான் சூழ்நிலை அமைந்து விடுகிறது. முடிந்த போது பதிவுகளைப் படியுங்கள்!
ரோஷினியின் படம் அருமை என்றால் கவிதையிலும் பிரமாதப்படுத்துகிறார். ரோஷினிக்கு எங்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்கு