செவ்வாய், 12 நவம்பர், 2013

பொற்காசுத் தோட்டத்தில் பெய்த பொன் மழை




தங்க நகைகளின் மீதும் தங்கத்தின் மீதும் யாருக்குத் தான் மோகம் இராது? அந்தக் கால அரசர்களும் பாளையத்துக் காரர்களும் தங்கத்தின் மீது இருந்த மோகத்தாலும், அவர்களது ராஜாங்கத்திற்கு ஒரு பாதுகாப்பாகவும் நிறைய தங்கக் காசுகளையும் வைரம், வைடூரியம் போன்ற விலை மதிப்பில்லாத கற்களையும் சேமிப்பது வழக்கம் தானே….

அப்படி ஒரு பெரிய கஜானா நிறைய பொற்காசுகளை சேமித்து வைத்திருந்தார் மாவீரர் புலித்தேவர். அப்படி சேமித்து வைத்திருப்பது எதிரிகளுக்குத் தெரிந்தால் சும்மா இருப்பார்களா? கஜானாவினை கொள்ளை அடிக்கவும் அந்த ராஜாங்கத்தின் பகுதிகளை தங்கள் கீழே கொண்டு வரவும் அடிக்கடி யுத்தம் நடப்பது வழக்கம் தானேஅப்படி ஒரு முறை மாவீரர் புலித்தேவரின் படையிடம் தோற்று ஓடியவன் தான் மருதநாயகம் என்கிற யூசுஃப் கான்…..

அந்த கஜானாவினை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் மீண்டும் யூசுஃப் கான் ஆங்கிலேயர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு படையெடுத்து வருகிறான்.  அந்த கஜானாவை எப்படிக் காப்பாற்றுகிறார்கள் புலித்தேவரின் கஜானா காப்பாளரான குமர பிள்ளையும், வேல்மணித்தேவரும் என்பதில் ஆரம்பிக்கிறது இந்திரா சௌந்தரராஜன் எழுதிய பொற்காசுத் தோட்டம் எனும் புதினம்.

கி.பி. 1761, மே மாதத்தில் ஒரு நாள்

மேற்கு தொடர்ச்சி மலைக்கூட்டத்தின் நீண்ட நெடிய வரிசையில் குற்றாலத்துக்கு முன்பாக ஒரு இருபது முப்பது மைல் தொலைவில் இருக்கிறது நெற்கட்டும் செவல். நெல்லும் கரும்பும் செழித்துக் கொழித்துக் கிடக்கும் பூமி. கொக்கும், நாரையும் குறுக்கும் நெடுக்கும் பறந்தபடி இருக்கும். சாலையோரத்து புளியமரங்களில் செம்போத்துகள் கிளிக்கூட்டத்தை அமரவிடாதபடி மிரட்டிக் கொண்டிருக்கும். மிக மெல்லிய பாலிதீன் தாளை ஆகாசமளவு விரித்த மாதிரி குற்றாலச் சாரலால் உருவான பனித்துகள்கள் ஊர்முழுக்க மேவிக்கிடக்கும்!”

இப்படி முதல் அத்தியாயத்தில் ஆரம்பிக்கும் கதையின் அடுத்த அத்தியாயத்தில் நம்மை கி.பி. 2000 ஆண்டில் அதே நெற்கட்டும் செவல் கிராமத்திற்கு நாவலாசிரியர் அழைத்து வருகிறார். அரசுத்துறையான அகழ்வாராய்சித் துறையில் பணிபுரியும் அருள்மணி. அவருடைய தந்தை கிராமத்தில் செய்யும் சில காரியங்கள் அவருக்குப் புதிராக இருக்கவே அதைப் பற்றித் துருவித் துருவி விசாரிக்க ஆரம்பிக்கிறார்.

இப்படி அத்தியாயம் மாறி அத்தியாயம் புலித்தேவர் காலத்திற்கும் அருள்மணியின் காலத்திற்கும் புதினத்தினை வாசிக்கும் வாசகர்களை அழைத்துச் செல்கிறார் கதாசிரியர். 

கஜானாவில் இருந்த தங்கக் காசுகளைகளையும் பொக்கிஷங்களையும் காப்பாற்ற ஊரின் எல்லையில் இருக்கும் மயானத்தில் தோண்டிப் புதைக்க எண்ணி அங்கே புதைக்கும்போது அங்கிருந்து ஒரு சண்டிதேவியின் சிலை கிடைக்கிறது. அந்த தேவியின் சிலையைத் தொடுகிறவர்கள் இறந்து போகிறார்கள்.  அப்படியே கஜானாவினைப் புதைக்க வந்த வீரர்களும் குமரப் பிள்ளையும் அவர்கள் பொற்காசுகளை புதைக்க வெட்டிய குழியிலேயே விழுந்து இறந்து போகிறார்கள். வேல்மணித்தேவரும், மயானத்தில் இருந்த வெட்டியான் மட்டுமே பிழைக்கிறார்கள். கஜானாவில் இருந்த தங்கம் புதைக்கப்பட்ட இடம் வெட்டியான் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர் இறக்கும்போது அந்த இடத்தினப் பற்றிய குறிப்பினை ஒரு தகட்டில் பொறித்து சண்டிதேவியின் சிலையின் கீழே வைத்துவிட்டு அதைக் காக்கும் பொறுப்பினை அவரது மகனுக்குக் கொடுத்துவிட்டு தான் இறக்கிறார்.

புலித்தேவர்/வேல்மணித் தேவர் அல்லது அவர்கள் வாரிசுகள் தவிர வேறு யார் வந்தாலும் இந்த கஜானா விஷயம் சொல்லக் கூடாது என்ற சத்தியம் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகிறது.

வேல்மணித்தேவர் வழியாக வந்தவர் தான் அருள்மணி என்ற விஷயத்தினை மெல்ல மெல்ல ஆசிரியர் நமக்குப் புரிய வைக்கிறார். அருள்மணியின் தந்தை அந்த கஜானாவினை தமக்காக எடுத்துக்கொள்ள செய்யும் வேலைகள் அவரை எங்கே கொண்டு விடுகிறது, அந்த கஜானா எடுக்கப்பட்டதா? அதில் இருந்த தங்கம் என்ன ஆனது? என்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் படிக்க வேண்டியது திருமகள் நிலையம் வெளியிட்ட இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் எழுதிய “பொற்காசுத் தோட்டம்புதினத்தினைத் தான்.

இதே புத்தகத்தில் இருக்கும் மற்றொரு கதை தான்பொன் மழை”.  இந்திய நாடு சுதந்திரம் பெற்ற வேளையில் ஒரு ஜமீந்தார் தன்னுடைய சொத்துகளை நாட்டுக்கு விட்டுக் கொடுக்காது சேமித்து வைத்து அதனால் அரசினால் சிறைப்படுத்தப்படுகிறார். ஒரு முறை சிறையிலிருந்து தப்பித்து வெளியே வந்து தீக்குளித்து உயிர் விடுகிறார். அவரது ஜமீன் பகுதியில் இருப்பது முனியன் குன்று. அங்கே சில வருடங்களாக மலை மீது செல்லும் எவரும் திரும்பி வராது இறந்து போகவே அங்கே துப்பறியும் நோக்கத்தோடு செல்கிறார் இளங்கோவன் எனும் இளம் பத்திரிக்கையாளர்.

அங்கே முனியன் குன்றின் மீது யாருக்கும் தெரியாது செல்லும் போது அவருக்கு வினோதமான அனுபவங்கள் கிடைக்கிறது. கூடவே இரண்டு தங்கக் காசுகள் பரிசும்…. முனியன் குன்றில் இருக்கும் காளா முனியின் அருள் இவருக்குக் கிடைத்துவிட்டது என ஊரில் இருக்கும் பூஜாரி கூறி மேலும் பல விஷயங்களைச் சொல்கிறார்.  குன்றின் மேல் இருப்பது நிஜமாகவே முனியா இல்லை வேறு யாராவது மனிதர்களின் சதித்திட்டம் அங்கே நடந்து கொண்டிருக்கிறதா என்று தொடர்ந்து துப்பறிகிறார்.

அவரைப் போலவே ஒரு பெண் போலீஸ் அதிகாரியும் அங்கே இருந்து கொண்டு துப்பறிகிறார். இருவரும் சேர்ந்து அதைக் கண்டுபிடித்தார்களா? முடிவில் என்ன நடந்தது என்பதை மிகவும் விறுவிறுப்பாகச் சொல்லிக் கொண்டு போகிறார் கதாசிரியர்.

இரண்டு கதைகளைக் கொண்ட இந்தப் புத்தகத்தினை இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே படித்து முடித்து விட்டேன்! அத்தனை விறுவிறுப்பு. புத்தகத்தின் தலைப்பு “பொற்காசுத் தோட்டம்”. நான் படித்த பதிப்பு அக்டோபர் 2000 வருடத்தில் வந்த இரண்டாம் பதிப்பு. அப்போதைய விலை 46 ரூபாய். இப்போது 2010-ஆம் வருட பதிப்பு இணைய தளங்களில் கிடைக்கிறதுவிலை ரூபாய் 85/-.

இரண்டு புத்தகங்களையும் படித்து ரசித்தேன். நான் வாசித்த அனுபவத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பகிர்வு.

என்ன நண்பர்களே ரசித்தீர்களா? வாசிப்பனுபவம் உங்களுக்கும் வேண்டுமெனில் புத்தகத்தினையும் படியுங்களேன்!

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: நேற்று காலை வெளியிட்ட “கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைதொடரின் பகுதி 8 – சன்னிதானம் சபரியைக் கண்டேன்.....என்னைத் தொடர்பவர்களின் பக்கத்தில் வரவில்லை! படிக்காதவர்கள் படிக்க ஏதுவாய் இங்கே அதன் சுட்டி!



28 கருத்துகள்:

  1. சரித்திர காலத்திற்கும் சம காலத்திற்கும் மாற்றி மாற்றி நம்மை அழைத்துச் செல்லும் வகையில் அமைந்த இ.சௌ.ராஜனின் புதினங்கள் அனைத்துமே வெற்றிப் புதினங்கள்! விறுவிறுப்புக்குப் பஞ்சமிராது; படிப்பதை பாதியில் நிறுத்திவிட்டு பிறகு படிக்கலாம் என்று எண்ணவும் விடாது! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு கதைகளுமே நான் மிக ரசித்தவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.....

      உண்மை. விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை!

      நீக்கு
  2. நல்ல பகிர்வு. அப்போ கமல் படமெடுக்க விரும்பிய மருத நாயகம் எனப்படும் யூசுப்கான் கெட்டவனா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”நான் நல்லவனா.... கெட்டவனா.... தெரியலையேப்பா!” :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. விறுவிறுப்பான்ன் விமர்சனப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  4. பழமையும், புதுமையும் கலந்து கட்டி கொடுப்பதில் இந்திரா சௌந்திரராஜனுக்கு நிகர் வேறு யாருமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  7. படு ஸ்பீட்.கதையும் விமர்சனமும். இந்திரா சௌந்தரராஜன் கதைன்னால் கேட்கணுமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா...

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  10. உங்கள் புத்தக விமரிசனம் புத்தகத்தை படிக்கும் ஆவலைத் தூ'ண்டுகிறது . எனக்கும் திரு. ஸ்ரீராம் போல் சந்தேகம் ..மருதநாயகம் நல்லவரா/கெட்டவரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
    2. yusuf khan can't be termed a bad man. He is a product of that era.
      In Indra soundarajan's Sethu Nattu vengai the famous Rani mangammal is the villi against Sethupathi.
      It is power politics like the present . like now then also kings changed alliances and fight with erstwhile friends

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராகுல்.....

      நீக்கு
  11. இந்திராசவுந்திர ராஜனின் கதைகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்....

      நீக்கு
  12. உங்கள் புத்தக விமரிசனம் புத்தகத்தை படிக்கும் ஆவலைத் தூ'ண்டுகிறது. நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  13. வரலாறும் வரலாற்றுத் தொடர்பானவையும் தரும் சுவாரஸ்யமே தனிதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....