செவ்வாய், 14 ஏப்ரல், 2020

ராஜாக்கள் மாநிலம் – மின்புத்தக வெளியீடு


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, வாசிப்பு பற்றிய நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

புத்தகங்கள் மிகவும் ஆபத்தானவை; அவற்றின் மேல், 'கவனம் இது உங்கள் வாழ்வை மாற்றிவிடக் கூடும்' என எச்சரிக்கை வாசகம் பொறிப்பது நல்லது - எலன் எக்ஸ்லே.

சில நாட்களுக்கு முன்னர் இரு மாநிலப் பயணம் என்ற தலைப்பில் குஜராத் மற்றும் தியு பிரதேசங்களுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களைப் பற்றி எழுதிய பயணக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு மின்புத்தகமாக வெளியிட்ட தகவலை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  இந்தப் பதிவு படிக்காதவர்கள் சுட்டி வழி சென்று அங்கே படித்து மேலும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இன்னுமொரு செய்தி.  இந்த இரு மாநிலப் பயணம் கிண்டில் புத்தகத்தினை இன்று மதியம் 12.30 மணியிலிருந்து 18-ஆம் தேதி வரை அமேசான் தளத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஐந்து நாட்களுக்கு மட்டும் இந்த இலவச தரவிறக்கம் செய்யும் வாய்ப்பு.  அமேசான் கணக்கு இருந்தால் கிண்டிலிலோ அலைபேசி/கணினி ஆகியவற்றில் வாசிக்கலாம்.  இன்றைக்கும் இன்னுமொரு மின்புத்தக வெளியீடு பற்றிய தகவலோடு உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். 

முதலிலும் சில பயணக் கட்டுரைகளை தொகுத்து www.freetamilebooks.com தளம் வாயிலாக சில மின்புத்தகங்களும் வெளி வந்ததுண்டு. இதுவரை வெளிவந்த புத்தகங்களின் சுட்டி எனது வலைப்பூவில் வலப் பக்க ஓரத்தில் ”தொகுப்புகள்” என்ற தலைப்பின் கீழே மின்புத்தகங்கள் என்ற ஒரு பக்கம் உண்டு. அந்தப் பக்கத்தினைச் சுட்டினால் இது வரை வெளிவந்த எனது மின்புத்தகங்கள் அனைத்திற்குமான சுட்டிகள் உண்டு. படிக்காதவர்கள் அங்கே எனது மின்னூல்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.  இப்போது இன்னும் ஒரு மின்புத்தகம். அமேசான் தளம் வாயிலாக,  கிண்டில் பதிப்பாக வெளி வந்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்று வந்த அனுபவங்களைத் தொகுத்துராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன்.  புத்தகத்தினை தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே...


கிண்டில் அன்லிமிட்டட் கணக்கு வைத்திருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து படிக்க முடியும். இந்த விடுமுறை நாட்களில் செய்த பணிகளில் இந்த மின்புத்தக தரவேற்றமும் ஒன்று.  இன்னும் இருக்கும் நாட்களில் முடிந்தால் வேறு சில பயணத் தொகுப்புகளும் மின்னூலாக வெளியிடலாம் என்ற எண்ணம் உண்டு.  இந்தக் கட்டுரைகளை மின்புத்தகமாக தரவிறக்கம் செய்து வாசிக்க விரும்புபவர்கள் தங்களது கிண்டிலிலோ அல்லது அலைபேசியிலோ/கணினியிலோ தரவிறக்கம் செய்து வாசிக்க முடியும்.  அமேசானில் கணக்கு வைத்திருந்தால் போதும்.  கிண்டில் அன்லிமிட்டட் கணக்கு இல்லாதவர்கள் பணம் செலுத்தி படிக்க வேண்டியிருக்கும்.  இலவசமாக வெளியிட இங்கே வாய்ப்பில்லை – சில நாட்கள் மட்டும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளும்படிச் செய்யும் Promotions வழிகள் உண்டு. அதை செய்த பிறகும் இங்கே தகவல் தருகிறேன். 

தங்கள் தொடர்ந்த ஆதரவிற்கும் வலைப்பூவை வாசித்து உங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் மிக்க நன்றி.  இந்த மின்புத்தகம் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.  தொடர்ந்து சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

36 கருத்துகள்:

  1. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    புத்தொளி பிறக்கட்டும்..
    புவியெங்கும் வாழட்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமே விளையட்டும்.

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  2. வாசித்தல் பற்றிய அந்த வாசகம் முற்றிலும் உண்மை! :))

    மின் புத்தகங்களுக்கு வாழ்த்துகள் வெங்கட்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    வாசகம் அருமை. அது உண்மையும் கூட.. வாசித்தல் ஆர்வம் என்பது நம் எல்லாவற்றிற்க்கும் சொந்தமான நேரங்களை எளிதாக எடுத்துக் கொள்வது.

    தங்களுடைய மின்னூல் வெளியீட்டுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தகவல்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா ஹரிஹர்ன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  4. புத்தகங்களின் வெளியீடு தொடரட்டும்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி கில்லர்ஜி.

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  5. "புத்தகங்கள் மிகவும் ஆபத்தானவை; அவற்றின் மேல், 'கவனம் இது உங்கள் வாழ்வை மாற்றிவிடக் கூடும்' என எச்சரிக்கை வாசகம் பொறிப்பது நல்லது - எலன் எக்ஸ்லே".... முற்றிலும் உண்மை ... நல்ல பல நூல்கள் பலரை ஏணி மீது ஏற்றி பலருடைய வாழ்வில் மகுடம் சூட்டியுள்ளன ... ஆனால் தவறான கருத்துடைய சில நூல்களோ ஒட்டுமொத்த சமுதாயத்தையும் முட்டாளாகவே வைத்திருப்பதை பார்க்கிறோம் ... உங்களுடைய மின்னூல்கள் அனைத்தையும் படிக்கச் ஆசை ... சுவாசிப்பதைவிட வாசிப்பதே சிறப்பு என்ற கொள்கையுடையவன் நான் ... தங்களுக்கு வாழ்த்துக்கள் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒட்டு மொத்த சமுதாயத்தையும் முட்டாளாகவே வைத்திருப்பதை - உண்மை தான் சிவா.

      தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  6. உங்க புக் இதுக்கு முன்னாடி படிக்கலை. கடைசி கிராமம் டவுன் லோட் பண்ணி இருக்கேன். இதுவும். ரெண்டையும் பத்தி விரிவா எழுதறேன் வெங்கட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில் தான் அமேசான் தளத்தில் வெளியிட ஆரம்பித்திருக்கிறேன் கார்த்திக். முன்னர் freetamilebooks தளத்தில் வெளியிட்டேன்.

      புத்தகங்களை தரவிறக்கம் செய்து கொண்டது அறிந்து மகிழ்ச்சி. உங்கள் தளத்தில் கடைசி கிராமம் பற்றி எழுதியதற்கு நன்றி. ராஜாக்கள் மாநிலம் பற்றியும் எழுதுங்கள்.

      நீக்கு
  7. புத்தகம் download செய்தாச்சு சார்.
    வாசித்துச் சொல்கிரேன்.

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகம் தரவிறக்கம் செய்து கொண்டது அறிந்து மகிழ்ச்சி மஹேஷ். வாசித்து உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

      தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  8. இனிய சித்திரைத்திருநாள் வாழ்த்துகள்...

    தரவிறக்கம் செய்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      தரவிறக்கம் செய்து படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் தனபாலன்.

      நீக்கு
  9. //“ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். //

    வாழ்த்துக்கள் வெங்கட், வாழ்க வளமுடன்.
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி கோமதிம்மா...

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  10. இரு மாநிலங்கள் புத்தகம் வெளியிட்டமைக்கும், இப்போதைய ராஜாக்கள் மாநிலம் புத்தகத்திற்கும் வாழ்த்துகள் வெங்கட்ஜி.

    வாசகம் உண்மை! ரசித்தேன்

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் வெங்கட்ஜி ஆதி ரோஷினி ..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி கீதாஜி...

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  11. வாழ்த்துகள் வெங்கட்.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளும்கூட

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி நெல்லைத் தமிழன்...

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  12. அன்பு வெங்கட்,
    புதுப் புத்தக வெளியீடூக்கு வாழ்த்த்துகள்.
    புத்தகங்களைப் பற்றிய வாசகம் மிக அருமை. புத்தகங்கள் ஊற்றுகளாகவும் இருக்கும்.
    புதைகுழியாக மாறவும் சந்தர்ப்பம் உண்டு.
    இன்னும் அனேக புத்தகங்களை வெளியிட வாழ்த்துகள்.
    இனிய தமிழ்ப் புத்தாண்டுக்கான ஆசிகள். இல்லறம் இனிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி வல்லிம்மா....

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

    தங்கள் மின்னூலை நாம் பதிவிறக்கி படிப்போம் தொடர்ந்தும் தங்கள் பதிவுகளை மின் நூலாக்கி வெளியிடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி யாழ்பாவாணன் ஐயா....

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  14. மின்னூல் வெளியானமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் வெங்கட். வட இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வோர் உங்கள் தளத்திலிருந்து நிறைய உபயோகமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். மின்னூல் இன்னும் வசதி. புத்தக வாசிப்பு குறித்த பொன்மொழி மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வேல்முருகன்.

      நீக்கு
  16. தொடர்ந்து வெளியிடுங்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துக்கள் வெங்கட் சார் ...

    அங்கு தரவிறக்கம் செய்து , வாசித்து, கருத்துக்களையும் பதிந்துவிட்டேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் நிறைந்த நன்றி அனுப்ரேம் ஜி. அமேசான் தளத்திலா? பார்க்கிறேன்.

      நீக்கு
  18. புத்தக வெளியீடு வாழ்த்துகள்.
    பிறந்திருக்கும் புத்தாண்டு உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் சகல நலன்களையும் தரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....