செவ்வாய், 7 ஜூன், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி முப்பத்தி ஐந்து – மாபெரும் சாப்பாட்டு போட்டி!!!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

உணவின் சுவை உப்பிலும் உறைப்பிலும் இருப்பதை விட பகிர்வதில் அதிகமிருக்கிறது.   

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே! 


பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே! 


பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!


பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!


பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!


பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!


பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 


பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!


பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!


பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 


பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!


பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 


பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 


பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!


பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 


பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 


பகுதி முப்பத்தி நான்கு இங்கே! 

 


யாரிவள்! பகுதி முப்பத்தி ஐந்து - மாபெரும் சாப்பாட்டு போட்டி



படம் இணையத்திலிருந்து… நன்றி ஓவியர் மாருதி

 

மாலை நேரத்தில் ஒருநாள் நல்ல மழை பெய்து ஓய்ந்து போயிருந்த நேரம். சில்லென்று சுகமான சூழல்! இரவு உணவுக்காக உருளைக்கிழங்குடன்  பச்சை பட்டாணி சேர்த்து பூரிக்கு தொட்டுக் கொள்ள கிழங்காக அம்மா செய்திருந்தாள். இன்னும் பூரிக்கு மாவெல்லாம் பிசையலை!

 

எந்நேரமும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு க்ரவுண்டிலேயே இருக்கும் குட்டித்தம்பியும் மழையின் காரணத்தால் அன்று வீட்டிலிருந்தான். அம்மா பசிக்குதும்மா! சூடா சாப்பிட ஏதாவது பண்ணிக் கொடேன்! என்றான். 

 

ரெண்டு பேரும் மசால் தோசை சாப்பிடறேளா? பண்ணித் தரேன்! என்றார் அம்மா. ராத்திரிக்காக பண்ணின கிழங்கு இருக்கு! நல்லவேளை தோச மாவும் இருக்கு! இப்படியே அடுக்களையிலேயே உக்காண்டுக்கோங்கோ! என்றாள்.

 

அந்த சின்னஞ்சிறிய அடுக்களையில் திரி ஸ்டவ்வுடன் அம்மா உட்கார, அம்மாவின் இருபுறமும் இவளும் தம்பியும் உட்கார்ந்து கொள்ள போட்டி ஆரம்பமானது. போட்டியில் பலநூறு ஐயிட்டங்கள் அல்ல! போட்டியில் பங்கு பெறுவோரும் பலரும் அல்ல! அம்மா சுடச்சுட மசால் தோசையாக வார்த்து மாற்றி மாற்றி இருவருக்கும் போட்டுக் கொண்டே வர, எவ்வளவு உள்ளே சென்றது என்றே தெரியவில்லை! 

 

அம்மா! நா எவ்வளவு சாப்பிட்டிருப்பேன்?? 

 

அம்மா! நா தான அதிகமா சாப்பிட்டேன்! இவனால முடியாது!

 

அம்மா! நான் தாம்மா ஜெயிச்சேன்! இவ தான் சாப்பிடவே மாட்டா! ஸ்கூலுக்கு குடுக்கிற லஞ்ச் பாக்ஸ அப்படியே கொண்டு வருவா!

 

அம்மா! ஸ்கர்ட் ரொம்ப டைட்டா இருக்கும்மா! லூஸ் பண்ணிக்கட்டுமா! என்று இருவரும் அம்மாவிடம் கேள்விக்கணைகளை கேட்டவாறு சண்டையும் போட்டுக் கொண்டு  சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்..🙂

 

வேணுங்கிறத நன்னா சாப்பிடுங்கோளேண்டா! கணக்கு என்ன வேண்டிக் கெடக்கு! இதப் போய் யாருக்கும் பிரஸ்தாபிச்சுண்டு இருக்க வேண்டாம்! சத்தமில்லாம சாப்பிடுங்கோ! ராத்திரிக்கு வேணும்னா ரெண்டு வாய் மோர்சாதம் சாப்ட்டு படுங்கோ! இல்லன்னா வேண்டாம்! சரியா!

 

இருக்கிறது சுண்டக்கா மாதிரி ரெண்டு பேர்! எப்பப் பாரு சண்ட! 

 

அவன் தான் சின்னப்பையன்னு விட்டுட்டுப் போறாளா! 

 

டேய்! நீயும் லேசுபட்டவன் இல்லடா! அதான்! வெளில போய் விளையாடறல்ல! அப்புறம் அவள ஏண்டா சீண்டற!

 

அடிச்சுக்கோங்கோ! அப்பா வரட்டும்! இன்னிக்கு இதுக்கு ஒரு வழி பண்றேனா இல்லையான்னு பாரு! 

 

என்று சொல்லி தோசைத் திருப்பியை எடுப்பதற்குள் இருவரும் திசைக்கொருவராக ஓடி விடுவார்கள்..🙂

 

இப்படியாக அன்றைய மாலைப் பொழுது இனிமையாக கடந்திருக்கும்.

 

இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த சுட்டிப்பெண்! தொடர்ந்து பார்க்கலாம்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

16 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான காட்சி. சகோதரச் சண்டை, அம்மாவின் அன்பு...இனிமையான நினைவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமையான நினைவுகள் குறித்த இந்தப் பதிவு குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம். நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. சில நினைவுகள் மறக்க முடியாதவையே நெல்லைத் தமிழன். நன்றி.

      நீக்கு
  3. சுவாரஸ்யமான நிகழ்வுகள் தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. இனிய குடும்பக் கதை! இப்பொழுதெல்லாம் இம்மாதிரிக் கதைகளை விகடன் குமுதம் கல்கியில் பார்க்கவே முடிவதில்லை. இணையம் வந்ததால் அல்லவா ஆதி வெங்கட்டை நாம் ரசிக்கமுடிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையல்ல நிஜம். சிறு வயது நினைவுகளை தொடராக எழுதி வருகிறார். பதிவு குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி இராய செல்லப்பா ஐயா.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரி

    இன்றைய அன்பு வாசகம் அருமை. பதிவும் அம்மாவின் அன்பினால் உருவாக்கப்பட்ட விதம் அருமை. இரு குழந்தைகள் இருந்தால் வீட்டில் எப்போதும் இந்த மாதிரி அன்புச் சண்டைகள்தாம். அதை சமாளிப்பதற்கே அம்மாவின் பொழுதுகள் பறந்து விடும். அருமையான நினைவுகள். அதற்கான ஓவியர் மாருதி அவர்களின் படமும் பொருத்தமாக அமைந்திருந்தது. அதையும் மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு குறித்த தங்கள் விரிவான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. பதிவு வழி பகிர்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. மிக அருமையான இனிய நினைவுகள்.
    பொருத்தமான படம்.

    வாசகம் மிக அருமை. பதிவுக்கு பொருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு, வாசகம் மற்றும் படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....